

ஒரு முக்ய விஷயம்.
நங்கநல்லூர் J K SIVAN
ரத்த அழுத்தம், BLOOD PRESSURE, மன அழுத்தம் DEPRESSION ரெண்டும் வேறே வேறே என்றாலும் கெட்டவர்கள் ரெண்டு பேர் ஒன்று சேர்வதைப் போல் ஒன்றோடொன்று சேர்ந்து கொள்ளும் போது தான் சகல உபத்ரவமும் நம்மை வந்தடைகிறது. கொஞ்சம் புரியவைக்கிறேன்.
ரத்த அழுத்தம் என்பது இதயம் ரத்தத்தை உடலின் பாகங்களுக்கு பம்ப் செய்யும் போது, ரத்தம் நரம்புகளின் சுவரில் ஏற்படுத்தும் அழுத்தம் (pressure) ஆகும். லப் டப் எனும் systoclic (Systolic Pressure): உயர்ந்த அழுத்தம், குறைந்த அழுத்தம் என இருவகை. ரெண்டுமே அதிகம் இருக்க கூடாது.
diastolic Pressure):ஓய்வில் இருக்கும்போது உண்டாகும் குறைந்த அழுத்தம்.
இடது கையை நீட்டி ஒரு பிளாஸ்டிக் பையை சுற்றி காற்றடித்து கண்டுபிடித்து 120/80 mmHg (மில்லி மீட்டர் மெர்க்குரி) என்று சொன்னால் எல்லாம் சராசரியாக நல்லபடியாக இருக்கிறது என்று அர்த்தம். மற்றபடி மெர்குரி கீழ்க்கண்டவாறு காட்டினால் நாம் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும்.
Stage 1 Hypertension: 130–139 / 80–89 mmHg
Stage 2 Hypertension: ≥140 / ≥90 mmHg
Severe: ≥180 / ≥120 mmHg (அதிக ஆபத்தான நிலை)
ரத்த அழுத்தம் உப்பு அதிகம் சாப்பிடுவதால், மன அழுத்தத்தால், தேகப்பயிற்சி இல்லாத சோம்பேறி வாழ்க்கையால், புகை பிடிப்பதால், நிறைய குடிப்பதால் உண்டாகிறது. நீரிழிவு நோயாலும் உண்டாகும்.
இது தவிர இரத்தக்கொதிப்பு, மருந்துகளின் பக்க விளைவு,கர்ப்பம் முதலியவற்றாலும் ரத்த அழுத்தம் உண்டாகும்.
ரத்த அழுத்தம் ஒரு சத்தமில்லாமல் கொல்லும் நோய் (Silent Killer). நீண்ட காலம் கட்டுப்பாடின்றி இருந்தால் இதயநோய், கிட்னி பாதிப்பு, அடிமை நரம்பு பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.
மன அழுத்தம்; மன அழுத்தம் (Stress) என்பது ஒருவரின் உடம்பை, உடல்நிலையை மனசு தாக்கும் சமாசாரம். இது பல காரணங்களால் ஏற்படக்கூடும். ஆளுக்கு ஆள் இந்த அனுபவம் மாறுபடும். நம்முடைய சக்திக்கு மீறி ஏதோ ஒரு எண்ணம் நம் மனதை புரட்டி எடுக்கும்போது மனா நிம்மதி குலைகிறது. இதுவே மன அழுத்தம். அதனால் விளையும் உளைச்சல் உடம்பை , உடல் நிலையை, உணர்ச்சியை, நமது நடத்தையை பாதிக் கும். நம்மால் இதை செய்ய முடியவில்லையே என்ற தன்னம்பிக்கை இல்லாத கையாலாகாத நிலை, வேலையில் அதிகாரிகளிடம் பயம், வேலை போய் விடுமோ எனும் பயம், அதனால் நேரும் அவஸ்தை, குடும்ப பிரச்சனைகள், கணவன் மனைவி மோதல்கள். பிள்ளை பெண் பற்றிய கவலை, அநேகருக்கு பண பிரச்னை. விவரம் புரியா கவலை.தூக்க மின்மை,
இதனால் விளையும் உடல் நிலை பாதிப்பு ரொம்ப கெடுதல் விளைவிக்கும். ஆசாமி, சோர்ந்திருப்பான், தூங்கமாட்டான், உண்பதில் ஆர்வம் இல்லை, தனிமை விரும்புவான். உடல் நலம் பாதிக்கப்படும். யாருடனும் பேச, பழக மாட்டான். பயத்தில் துடிப்பான்.
இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
”என்னால் முடியும் தம்பி” என்ற மனோ திடம் , தன்னம்பிக்கையை , வளர்த்துக் கொள்ளவேண்டும். சுறுசுறுப்பானவர்கள், பாசிட்டிவ் எண்ணங்களை கொண்டவர்களோடு பழகவேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். பிரச்னைகள் எதுவந்தாலும் சுலபமாக சந்திக்க முடியும் என்ற தைர்யம் நெஞ்சில் தோன்ற வேண்டும். கவலை அப்போது பறந்து விடும்.
கீதை யை அர்த்தம் புரிந்து கொண்டு படியுங்கள். இப்படிப்பட்ட நிலையில் இருந்தபோது தான் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்லிக்கொடுத்த உபதேசம் கீதை. அதில் நமது பிரச்னைகளுக்கும் விடை இருக்கிறது ஸார் .
மனதில் நேர்மறை எண்ணங்களுக்கும், பக்திக்கும், தைர்யத்துக்கும், அன்புக்கும் மட்டுமே இடம் இருக்க வேண்டும். காயத்ரி மந்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை தினமும் தியானம் செய்வது மனதுக்கு ரொம்ப நல்லது. பலம், உரம், கொடுக்கும்.
நமது வருமானத்தில் வாழ பழகவேண்டும். சக்திக்கு மீறி கடன் வாங்க தேவையில்லை. முடிந்த அளவு நல்ல புஷ்டியான பதார்த்தங்களை உண்ணவேண்டும். கீரை, பழங்கள், பச்சை காய்கறிகள் பெரிதும் மனதுக்கும் உடலுக்கும் உதவுபவை. தேவையற்ற சாமானங்களை விரும்பவோ, வாங்கவோ வேண்டாம்.
இது தவிர இன்னும் பயிற்சிகள் நிறைய இருக்கிறது. முதலில் இதை பழகவே சிலருக்கு பல நாளாகும், மாதங்களாகும், சிலருக்கு வருஷங்களாகுமே
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



