
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN”கர்ப்ப வாசம் ” -காஞ்சி மஹா பெரியவா பற்றி யாராவது ஏதாவது பேசினால் அது ஏதோ ஒரு அற்புத நிகழ்ச்சி யாகத்தான் இருக்கும் என்பது தான் நமது அனுபவம். பேசும் தெய்வம் அதிசயங்கள் நிகழ்த்துவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. ஒரு கேள்வி கேட்கிறேன். மஹா பெரியவா கர்ப்பவாசம் அனுபவித்த சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?. அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர் எந்த விளம்பரமும் செய்ததில்லை. எதையும் வெளிப்படையாக பிறர் அறிய வேண்டும் என்பதற்காக எதையும் செய்ததில்லை. அது அவரது இயல்பான செயல்.
31.5.25 காஞ்சிபுரம் அருகில் இருக்கும் தேனம்பாக்கம் என்ற கிராமத்துக்கு சென்று அங்கே உள்ள பிரம்மபுரீஸ்வரர் எனும் சிவ ஸ்தலத்தை தரிசிக்க போகிறோம். ப்ரம்ம புரீஸ்வரர் சுயம்பு லிங்கம் . மஹா பெரியவா இந்த சிவாலயத்துக்கு அடிக்கடி வருவார். அங்கே வரும் பக்தர்களுக்கு பிரம்மபுரீஸ் வரரைத் தவிர மஹா பெரியவா அனுக்ரஹமும் சேர்ந்து கிடைக்கும். நான் தேனம்பாக்கம் சென்றிருக்கிறேன். ஆனால் மஹா பெரியவா அங்கே வாசம் செய்யும் சமயம் செல்லும் பாக்யம் கிடைக்காதது என் துரதிர்ஷ்டம்.
ஒரு குழந்தை தாயின் கருவறையில் பத்து மாதங்கள் தங்கி, பின் ஜனனமாவது தான் உலக வழக்கம். அதே போல, மஹா பெரியவா இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு சிறிய இருந்த குடிலுக்குள் பத்து மாதம் தங்கி அனுஷ்டானங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு, இருந்த காலத்தில் ஒருநாள் கூட, அந்தக் குடிலை விட்டு அவர் வெளியே வந்ததே இல்லை. இது பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. உள்ளே இருந்த காலத்தில், அவர் என்ன செய்தார்?இதுவும் ரஹஸ்யம் தான்.சூரியவெளிச்சத்தைக் கூட பார்க்காமல் அவர் இவ்வாறு ஓரிடத்தில் தங்கி இருக்க என்ன அவசியம்? இது இன்றும் ஒரு புரியாத புதிர் .ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, சிசு வெளியுலகைப் பார்க்க முயாதே.அதுபோல், மஹா பெரியவாளும் பத்து மாதம் அங்கு தங்கி வெளிவராமல் இருந்ததால் இந்த கால கட்டம் தான் “கர்ப்பவாசம்’ எனப்படுகிறது.அந்த சிறிய அறைக்கு ஒரு சின்ன மாடப்பிறை இருந்தது. அந்த துவாரத்தின் வழியாக பிக்ஷை ஏற்றுக் கொள்வார்.அதை திறந்து வெளியே பார்த்தால் எதிர் சுவற்றில் ஒரு சின்ன கல் பிள்ளையார் விக்ரஹம் தெரியும். அந்த பிள்ளையாரை அடிக்கடி நமஸ்கரிப்பார்.அந்த அறையை ஒட்டி ஒரு கிணறு. அதில் தான் பெரியவா ஜலம் இறைத்து ஸ்னானம் பண்ணுவார்.கிணற்றுக்கு அந்தப் பக்கம் தான் அவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். பெரியவா கிணற்றுக்கு இந்த பக்கம் அறைக்குள். நடுவே கிணறு. அந்த பக்கம் பக்தர்கள். இந்திரா காந்தி , மற்றும் பெரிய பெரிய அரசாங்க அதிகாரிகள் கூட அப்படி கிணற்றுக்கு பக்கம் நின்று தான் அறைக்குள் இருந்த பெரியவாளை தரிசித்தார்கள் .கிணற்றுக்கு அருகிலேயே ஒரு சிமெண்ட் தொட்டி. அதில் ஜலம் நிரப்பி வைப்பார்கள் அதை தான். மஹா பெரியவா ஸ்னானத்துக்கு உபயோகிப்பார்.கிணற்றை ஒட்டி ஒரு மரப்படி . அதன் மேல் ஏறி உச்சியிலிருந்து காஞ்சி ஆலய கோபுரங்களின் தரிசனம் பெறுவார். கோபுர தரிசனம் கோடி புண்யம் என்கிறோமே.மஹா பெரியவா ஏன், எதற்காக இவ்வளவு அரிய தவத்தை அந்த சிறிய இருட்டறையில் பத்து மாத காலம் மேற்கொண்டார்?உலகத்திற்கு என்ன நன்மை கருதி இதை அனுஷ்டித்தார்?இதற்கு விடை மஹா பெரியவாளுக்கும் அவர் தினமும் பூஜித்த திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரருக்கும் மட்டுமே தெரியும் . மஹா பெரியவா கர்ப்பவாசம் அனுபவித்த கோயில் என்பதால், குழந்தை இல்லாதவர்கள் தேனம்பாக்கத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபடலாம். லோக க்ஷேமத்துக்காக மஹா பெரியவா அரும் பெரும் கோரிக்கைகளை ஈஸ்வரன் முன் வைத்தே இங்கே கர்ப்பவாசம் செய்திருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இங்கே கன்னியர் நல்ல வரன் வேண்டியும், ஊனமுற்ற குழந்தைகள் தங்கள் எதிர் காலம் சிறக்கவும் பூஜை செய்து வரலாம். பலன் கைமேல் கிடைக்கும் என்று உறுதியான நம்பிக்கை. இறைவனால் ஆகாத காரியமும் உண்டோ!
ஆனையாம்பட்டி தண்டபாணி என்ற ஜலதரங்க வித்வான் 1984ல் பெரியவா மேலே சொன்ன தேனம் பாக்கம் சிறு அறையில் தங்கி கிணற்றுக்கு அப்புறம் இருந்து தரிசனம் கொடுத்து வந்த கால\ கட்டத் தில் தரிசனம் பெற விரும்பினார். தண்டபாணிக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால் அவரால் வர முடியவில்லை. அவர் தம்பி தனது அண்ணா உடல் நிலை குறித்து பெரியவாளிடம் ஆசி கேட்க வந்திருந்தார்.தம்பியும் வித்துவான். ரேடியோவில் வாய்ப் பாட்டு, வயலின் வித்வான். இவர்களின் தகப்பனார்
சுப்பையர் மைசூர் அரண்மனையின் ஆஸ்தான வித்வான். தம்பி ஸ்ரீ கணேசன் தண்டபாணியின் உடல் நிலை குறித்து பெரியவாளிடம் கேட்டபோது, பெரியவா காஷ்ட மௌனத்தில் இருந்தார். ஜாடையில் அவர் சொன்னது; ”நீயே ஜலதரங்கம் வாசியேன்’ ‘பெரியவா எனக்கு ஜலதரங்கம் வாசிக்கத் தெரியாதே” மஹா பெரியவா ஜாடையாகா ” ட்ரை பண்ணு, நீயும் நீ வாசிப்பே ”
கணேசன் அங்கேயே ஜலதரங்கம் வாசிக்க முயன்றார். என்ன ஆச்சர்யம்! இதற்கு முன் வாசித்ததேயில்லை என்றாலும் மஹா பெரியவா முன்னால் அவரால் தங்கு தடையின்றி ஜலதரங்கம் வாசிக்க முடிந்தது அவரால்! தன் அண்ணாவுக்குப் பக்க வாத்யமாக வயலின் வாசிப்பது தவிர இந்த வாத்யம் பற்றிய சிறிதளவும் தெரியாத திரு கணேசன் அன்று அங்கு வாசித்தது அவர் அரங்கேற்றமாக அமைந்தது! அன்று தொடங்கி பல நிகழ்ச்சிகளில் வாசித்ததோடல்லாமல் ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான வித்வானாகும் பாக்கியமும் கிட்டியது. மஹா பெரியவா அருளிருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது நிரூபணமாகியது.
இந்த நிகழ்ச்சி நடந்து சரியாக பதினைந்து நாட்களில் ஸ்ரீ தண்டபாணி இறைவனடி சேர்ந்தார். அதை முக்காலமும் உணர்ந்த மஹா பெரியவா அவர் தம்பியை தண்டபாணியின் வாரிசாக இசை உலகில் ப்ரக்யாதி அடையுமாறு செய்தது திரு கணேசன் பெற்ற பெரும் பாக்கியம்!
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



