PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்யாமந்தக மணி கதை.
ராமாயணம் தெரிந்தால் ஜாம்பவானை தெரியும். ராம ராவண யுத்தத்தில் ராம லக்ஷ்மண ஸைன்யத்தில் தளபதி. ”ஹனுமா, உன்னால் பறக்கமுடியும்டா, உடனே பற’ என்று ஹநுமானுக்கு ஊக்கமளித்தவர். ஹனுமனை அனுப்பி ”பறந்து போய் சஞ்சீவி மூலிகை சீக்ரம் கொண்டு வா” என்று சொல்லி ராம லக்ஷ்மணர் களை மயக்கத்திலிருந்து காத்தவர்.
அதே ஜாம்பவான் துவாபர யுகத்தில் ராமனே கிருஷ்ண னாக வந்தபோது அவரோடு மோதினவர். கிருஷ்ணன் யார் என்று தெரிந்ததும் ‘ஸ்யமந்தகமணி”யை கொடுத் து, கூடவே தனது பெண் ஜாம்பவதியையும் கன்னிகா தானம் செய்து கொடுத்தவர்.
”ஸ்யமந்தமணி உபாக்யானம்’ கேள்விப்பட்டதுண்டா? அது பாகவதத்தில் ஒரு கதை என்றாவது தெரியுமா? அது தெரிந்தாலும், ஸ்யமந்தக மணி பற்றிய கதை தெரியுமா? . தெரியாதவர்களுக்கு அந்தக் கதையை நான் சொல்லப்போவதில்லை. மஹா பெரியவாளே அதை சொல்கிறார். கேட்கவேண்டாமா? கொஞ்சம் சுருக்கி தருகிறேன். அவ்வளவு தான். வீட்டில் சும்மா சும்மா, வெட்டியாக பொழுது போக்குவதை விட நல்ல பொழுதாக அது கழிய இது ஒரு வழி இல்லையா?
பெரியவா ஆரம்பித்துவிட்டார் கேளுங்கள், இல்லை, படியுங்கள் :
+++++
”ஸம்ஸ்க்ரிதத்தில் ”ஆக்யானம்” னால் ‘ கதை. ”உப ஆக்யானம்” என்றால் உப கதை, ஒன்றிலிருந்து கிடைக் கும் இன்னொரு கிளைக்கதை. குட்டிக் கதை. மஹா பாரதத்திழலும் ராமாயணத்திலும் அருமையான குட்டிக்கதைகள் அருமையாக ஏராளமா இருக்கு.
பெரிசாக ஒரு கதையை ஒரு இதிஹாசமோ, புராணமோ சொல்லிக் கொண்டு போகும்போது அதில் கிளைக் கதை யாக ஏதாவது ஒன்று வருவது தான் ‘உபாக்யானம். ‘மெயின்’ கதையின் பாத்ரங்கள் ஸம்பந்தப்படாமல் முழுக்க வேறு பாத்ரங்களைப் பற்றியே உபாக்யானங் கள் வருவதுமுண்டு. மஹாபாரதத்தில் இப்படித்தான் பஞ்சபாண்டவர் ஸம்பந்தமேயில்லாத நளோபாக் யானம் சாவித்ரி சத்யவான் கதை போல பல கிளைக் கதைகள் வருகின்றன. இப்படியில்லாமல் ‘மெயின்’ கதையின் பாத்ரங்களுடைய ஸம்பந்தமுடையதாக மெயின் கதையிலிருந்து எடுக்கமுடியாத அதன் ஒரு பிரிவாகவே, அங்கமாகவே, ஆனாலும் ஒரு தனிக் கதாம்ச முள்ளதாக, அதாவது கழித்துக் கட்டமுடியாத கிளைகளாக உள்ள உபாக்யானங்களும் உண்டு.
ஸ்யமந்தகமணி உபாக்யானம் பாகவதத்தில் இப்படித் தான் part and parcel – ஆக இருக்கிறது. ஸ்யமந்தகம் என்ற தெய்விகமான மணியை மையமாக வைத்து ஸாக்ஷாத் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவுக்கே ஏற்பட்ட பெரிய அப வாதம், அதைப் போக்கிக் கொள்ள அவர் பாடுபட்டது இவற்றை இந்தக் கதை சொல்கிறது.
இதே கதை விஷ்ணு புராணத்திலும் வருகிறது. கொஞ் சம் மாறுதலோடு ஸ்காந்தத்திலும் வருகிறது; அதில் நந்தி கேச்வரருக்கும் ஸநத்குமாரருக்கும் நடந்த ஸம்வாத ரூபமாக (ஸம்பாஷணை உருவில்) வருகிறது. இந்த ஸ்காந்தக் கதையில்தான் விக்நேச்வரர் ஸமாசாரம் வருகிறது. நான் (மஹா பெரியவா) சொல்லப் போவது ஸநத்கமாரருக்கு நந்திகேச்வரர் சொன்ன இந்தக் கதைதான். அங்கங்கே பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றின் version-களையும் கொஞ்சம் அவியல் பண்ணிக் கொள்வேன்.
प्रौढीकरोति विदुषां नवसूक्तिधाटी- चूताटवीषु बुधकोकिललाल्यमानम् । माध्वीरसं परिमलं च निरर्गलं ते कामाक्षि वीक्षणविलासवसन्तलक्ष्मीः ॥
ப்ரௌடீ⁴கரோதி விது³ஷாம் நவஸூக்திதா⁴டீ- சூதாடவீஷு பு³த⁴கோகிலலால்யமானம் ।
மாத்⁴வீரஸம் பரிமலம் ச நிரர்க³ளம் தே காமாக்ஷி வீக்ஷணவிலாஸவஸந்தலக்ஷ்மீ: ॥ 89 ॥
இது கடாக்ஷ சதகத்துல 89வது ஸ்லோகம்.
ஹே காமாக்ஷி! ‘ நீ ‘வீக்ஷண விலாஸ வஸந்த லக்ஷ்மீ:’ அப்டீன்னு சொல்றார். அதாவது ‘கடாக்ஷத்தினுடைய அழகு’ என்ற வசந்த கால லக்ஷ்மி. வசந்தம் வந்தவுடனே எங்கும் ஒரு சந்தோஷம், அழகு மிளிர்றது இல்லையா!
அந்த வசந்த லக்ஷ்மி வந்தவுடன், ‘விது³ஷாம் நவஸூக்தி தா⁴டீ’ – வித்வான்களுடைய புதிதான வாக்கு என்ற ‘சூதாடவீஷூ’ – ‘ஏக சூத பதேஹே’ னு சொல்ற மாதிரி ‘சூத:’னா மாமரம்னு நமக்கு தெரியும். ‘சூதாடவீ’- ‘அடவி’ – என்றால் காடு, மாந்தோப்பு. அதாவது, கவிகளுடைய வாக்கு என்ற மாந்தோப்பு”.
அம்பாளுடைய கடாக்ஷத்தை வசந்தத்தின் வரவாகவும், வித்வான்கள் வாக்கில் உண்டான புதிய கவிதைகள் என்ற மாந்தோப்பு.
அந்த மாந்தோப்பு – ‘பு³த⁴ கோகில லால்யமானம்’. புத்திமான்கள் என்ற ‘கோகிலம்’ , குயில்கள். மாந்தோப்புக்கு எப்ப நிறைய குயில்கள் வரும்னா, எப்ப பூக்களில் தேனும், பழங்கள்ல இனிமையும் நிரம்பியி ருக்கும் போது தான் வரும்.
அப்படி புத்திமான்கள் என்ற ரசிகர்களான குயில்கள் விரும்பும் ‘லால்யமானம்’ – அவாள்லாம் மெச்சக்கூடிய, ‘மாத்⁴வீரசம்’ – தேனை போன்ற ‘பரிமளம்’ – நல்ல வாசனையும் கூடியதான ‘நிரர்க³ளம்’ – எந்த தங்குதடை இல்லாமல் அந்த வித்வான்களுடைய கவிதை என்ற மாந்தோப்பு, பூக்களையும் பழங்களையும் ‘ப்ரௌடி⁴ கரோதி’ – நிறைய வெளிப்படுத்துகிறது.
அதாவது அம்பாளோட கடாக்ஷம் என்ற வசந்த லக்ஷ்மி வந்தவுடனே, வித்வான்களுடைய புதிய வாக்கு என்ற மாந்தோப்பில், ரசிகர்கள் என்ற குயில்கள் கொண்டாடக் கூடிய, வாசனையுள்ளதும் தேனுடைய பெருக்கும் கொண்ட பழங்கள் தங்கு தடையின்றி நிறைய வரது. நிறைய பூ பூக்கறது. நிறைய பழங்கள் வெளிப் படுகிறது.
இந்த வாக்கே ஒரு மாந்தோப்பாகவும், அது ரொம்ப இனிமையானதாகவும், ரொம்ப வாசனையுள்ளதாகவும், தங்கு தடையில்லாமல் பெருகுவதாகவும் சொல்லும் போது, வாக்குக்கு எங்க வாசனை? அப்டின்னு எனக்கு அடிக்கடி தோணும்.. இந்த கவி நிறைய இடத்துல இப்படி சொல்றார். நிறைய கவிகளும் அப்படி சொல்றா.. அதுக்கப்புறம் தோணித்து.. என்னிக்கோ, எதோ யுகத் துல, வால்மிகியால பண்ணின ராமாயணத்தை, இன்னிக்கு எடுத்து படிக்கும்போது கூட அந்த காட்சிகள் எல்லாம் கண்முன்னாடி ஓடறதே! வாசனைக்கு என்ன விசேஷம்னா, அந்த வாசனை நமக்கு பழைய ஞாபகம் எல்லாம் உண்டுபண்ணும்.
“ஓ! அந்த ஊர்ல போயிருந்தபோது, அங்க இந்த வாச னை வந்ததே!” அப்டின்னு தோணும்.. அப்ப நடந்த தெல்லாம் ஞாபகம் வரும். அந்த மாதிரி இந்த வால்மிகியின் வாக்கு, வ்யாசருடைய ஸூக்தி, இதெல் லாம் படிக்கும் போது, அந்த காட்சி நடந்த இடத்துக்கு நம்பள அந்த smells, sights, sounds கூட்டிண்டு போகும்.. அந்த மாதிரி அந்த காட்சிகள், அந்த சத்தங் கள், அங்க இருக்ககூடிய சாப்பாட்டை பத்தி வர்ணிச்சா, அதோட வாசனைகள் எல்லாமே நமக்கு வரும் அளவிற்கு ரொம்ப சக்தி வாய்ந்ததாக சில கவிகளோட வாக்கு இருக்கு.
ரிஷிகளின் கருத்துக்கோ, அவாளுடைய வாக்குக்கோ மாறுதலா ஜனங்கள் ரசனைக்காக எதையும் பேச மாட்டா. தர்மத்திலேர்ந்து சலிக்காம இருக்கறது தான் first goal ஆக இருக்கும். அதுக்காக தான் ரிஷிகள் வாக்கை எடுக்கறது. அது வெறுமே வேடிக்கை பேச்சு பேசறது இல்லையே.. ஒவ்வொருத்தர் சொல்லும் போது, அவாளோட குரல் இனிமையா, தபஸா அல்லது வாழ்கை அனுபவமா இப்படி எல்லாமா சேர்ந்து அவாளோட வார்த்தைல வெளிவரும் போது ஒரு புதுமையான கவிதை மாதிரி இருக்கு. கேட்கறத்துக்கு ஆனந்தமா இருக்கு.
க்ருஷ்ணர் பூஜை பண்ணின கணபதிங்கறது ஸ்காந்த புராணத்துல வர்றது. பாகவதத்துல அது வரலை. . இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை, பிள்ளையார் சதுர்த்தியன்னிக்கு படிக்கணும்.
ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை படிச்சாலோ கேட்டாலோ மனசுல ஒரு தெளிவும் சந்தோஷமும் ஏற்படும். அபவாதம் போகும். அபவாதம் என்பது பண்ணாத தப்புக்கு ஏற்படற நிந்தை. Public figureஆ இருந்தா ஜனங்க மத்தில ஏற்படும். Privateஆவே யாராவது நம்பளை தப்பா நினைச்சா கூட, அந்த ஒரு person ரொம்ப importantஆ இருந்தா அது நம்ப மனசை வாட்டறது இல்லையா?. அந்த மாதிரி யாரும் நம்பள தப்பா நினைக்க கூடாது அப்டிங்கறதுக்காகவும் இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை படிக்கலாம். இதுல நிறைய நீதிகள் இருக்கு. முக்கியமா பணம், பெண், பேராசை, மோகம் இருந்தா அது எவ்வளவு தூரம் மனசை கெடுக்கும்ங்றது இந்த கதைல வர்றது.
யாதவ குலத்துல சத்ராஜித் ன்னு ஒரு ப்ரபு. அவனுக்கு சூர்ய பகவான் கொடுத்தது சியாமந்தக மணி.
சத்ராஜித் சூர்யபகவானை உபாசனை பண்ண சூரியன் “உனக்கு என்ன வேண்டும்?” னு கேட்டார்.
”நீங்க போட்டுண்டிருக்கற ஸ்யமந்தமணி எனக்கு வேணும்!”
“ஆஹா!”எடுத்துக்கோ. ஆனா இதை போட்டுண் டிருந்தா, உடம்புலயும் மனசுலயும் எப்பவுமே சுத்தியாக இருக்கணும். அப்படி இருந்தா தினம் எட்டு பாரம் தங்கம் கொடுக்கும். அந்த மணி இருக்கும் இடம் ரொம்ப சுபிக்ஷமாக இருக்கும். ஆனா அசுத்தி ஏற்பட்டால் விபரீதம் விளையும்!”
ஸ்யாமந்தகமணியை சத்ராஜித்துக்கு கொடுத்துட்டு சூரியன் போய்ட்டார்.
சத்ராஜித் அதை போட்டுண்டு, அவனே ஒரு சூரியன் மாதிரி ஜொலிச்சுண்டு உக்ரசேன மஹாராஜாவுடைய சபைக்கு வரான். வந்தவுடனே எல்லாரும் “ஆஹா!” ங்க றா அப்போ க்ருஷ்ண பகவான் சொல்றார்,
“இது ரொம்ப அபூர்வமான ரத்னமாக இருக்கு. நிறைய தங்கம் கொடுக்கறது. இதை நீ உக்ரசேன மஹாராஜா கிட்ட குடு. ‘ரத்னஹாரி ராஜா’ ன்னு உயர்ந்த வஸ்துக் கள் எல்லாம் ராஜாகிட்ட தான் இருக்கணும். நீ ஒரு ப்ரபு. உன் கிட்ட ராஜாவை விட ஜாஸ்தியான more valuable வஸ்து இருந்தா ஜனங்களுக்கு யார் ராஜா என சந்தேகம் வந்துடும். அதனால அதை ராஜாக்கு குடு!” னு கிருஷ் ணன் சஜஸ்ட் பண்றார்.
சத்ராஜித்துக்கு அதுல இஷ்டம் இல்லை. ”ஆகட்டும் பார்க்கலாம்”னு சொல்லிட்டு போய்டறான். உள்ளூர அவனுக்கு ரொம்ப பதட்டம். ”இந்த க்ருஷ்ணர் ரொம்ப பலசாலி. “முஷ்டிகாசூர சாணூர மல்லயுத்த விஷாரதாய நம:” அப்டின்னு நாமாவளி இருக்கே. “மல்லர்களையும் யுத்தத்துல வதம் பண்ணினவன்”. அவனுடைய ஆசைக் கு மாறுதலாக நான் ஸ்யாமந்தக மணியை வச்சிண்டி ருந்தா என்ன பண்ணுவானோ?” ன்னு பயம். அவன் தம்பி ப்ரசேனஜித்திடம் கொடுத்து, “நீ இந்த ஸ்யாமந் தக மணியை பத்ரமா வச்சுக்கோ”னு குடுத்துடறான்.
ப்ரசேனஜித் அதைப் போட்டுண்டு காட்டுக்கு போகும் போது ஒரு இடத்தில் அசூசி ஆய்டறது. அவனால கை கால் அலம்ப முடியல. அந்த நேரத்துல ஒரு சிங்கம் வந்து, “இந்த மணி நன்னா இருக்கே!”னு, அவனை ஒரு அறை அறைஞ்சு, கொன்னு போட்டுட்டு மணியை கவ்விண்டு போய்டறது.
இதை ஜாம்பவான் பாக்கறார். ஜாம்பவான் வாமன அவதாரத்தின் போதே, வாமன மூர்த்திக்கு மத்தளம் கொட்டிண்டு ப்ரதக்ஷிணம் பண்ணி கைங்கர்யம் பண்ணினவர். ராமவதாரத்துல கேட்கவே வேண்டாம். நிறைய கைங்கர்யம் பண்ணினார். அதே ஜாம்பவான் ராமபக்தர். அவர் சிரஞ்சீவி. அதனால இன்னமும் உயிரோட இருக்கார். அவர் இப்போ இந்த க்ருஷ்ணா வதாரத்திலயும் உபகாரம் பண்ணப்போறார்.
ஆகவே சிங்கம் ரொம்ப பளபளன்னு ரத்னத்தை எடுத்துண்டு வரதை பார்த்தவுடன் அதை ஒரு அறை விட்டார். அது செத்து விழுந்துடறது. ஜாம்பவான் அந்த மணியை எடுத்துண்டு போய் அவர்க்கு வயசான காலத்துல ஒரு குழந்தை இருக்கு. ஜாம்பவதி என்கிற பொண்ணு. அவள் தம்பியாகிய அந்த குழந்தையோட தொட்டிலுக்கு மேல ஜாம்பவான் ஸ்யாமந்தக மணியை கட்டினதாலே அந்த குஹையே ரொம்ப சூரிய தேஜஸ் ஆகிடறது.
ப்ரேசனஜித் காட்டுக்கு போனவன் எங்கே காணோம்?னு சத்ராஜித் தேடறான். அவன் ஏற்கனவே ஒருத்தர் கிட்ட, “உங்கிட்ட மட்டும் சொல்றேன். என்ன ஆச்சு தெரியுமோல்லியோ”னு ஆரம்பிச்சு, “நான் இந்த மணி யை வச்சிருந்தேன்..சூர்ய பகவான் அதை எனக்கு கொடுத் தார்னு. அதை க்ருஷ்ணன் கேட்டான். நான் இல்லைன்னுட்டேன்! என் தம்பிகிட்ட கொடுத்தேன். என் தம்பி காட்டுக்கு போனவன் போயே போய்ட்டான். ஆளையும் காணோம்! மணியையும் காணோம்! என் மனசிலே அதை இந்த க்ருஷ்ணன் தான் என் தம்பியை கொன்னுட்டு எடுத்திருப்பான் னு படறது. கிருஷ்ணனுக் கு சின்ன வயசுல இருந்தே வெண்ணை திருடற பழக்கம் நிறையஉண்டே! நீ இதை யார்கிட்டயும் சொல்லாதே!” னு வேறே சொன்னான். அந்த மனுஷன் இந்த கதையை ஊர்லே நாடு நகரம் பூரா எல்லாரிடமும் பரப்பிட்டான். குணம் இருப்பவர்கள் கிட்ட தோஷத்தை பேசறது ஜனங்களுக்கு பால் பாயசம் சாப்டற மாதிரி! இல்லை யா?” இப்படி எல்லாரும் பேசி பேசி, க்ருஷ்ணருக்கு அபவாதம் வந்துடறது.
க்ருஷ்ணர் பார்த்தார் “என்னடா இது? நம்ப மேலே இப்படி ஒரு அபவாதம். சரி ஸ்யாமந்த மணிக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும்”னு தீர்மானிச்சு ஒரு படை யை கூட்டிண்டு ப்ரசேனஜித் எங்கே போனான்னு கண்டுபிடிச்சு அங்க போறார். போய் பார்த்தால் அந்த ப்ரசேனஜித், அவன் குதிரை எல்லாம் அடிபட்டு செத்து கிடக்கான். அவன் கழுத்திலே ஸ்யாமந்தக மணியை காணோம். கொஞ்ச தூரம் போனா ஒரு சிங்கம் அடி பட்டு செத்து கிடக்கு. அங்கயும் மணியை காணோம். அப்டியே தேடிண்டே ஜாம்பவன் பாதச் சுவடு பாத்துண் டே அவர் இருக்கிற குஹைக்கு போறார்..
“குஹைக்குள்ள போய் பாக்கறேன்”னு சொன்னவுடன் ஜனங்கள் எல்லாம் வெயிட் பண்றா. குஹேக்குள்ள
போன கிருஷ்ணன் ஜாம்பவானோட இருபத்தோரு நாள் யுத்தம் பண்றார்! அதனால வெளில காத்துண்டி ருந் த ஜனங்க எல்லாம் நாலஞ்சு நாள்ல திரும்பி ஊருக்கு வந்துடறா. “
ஜனங்களோட நன்றி உணர்ச்சி அவ்வளவு தான்!”
ஏற்கனவே கோவர்த்தன கிரியை தூக்கி மக்களை எல்லாம் மழைலேர்ந்து காப்பாத்தினது போல பல உபகாரங்கள் பண்ணின க்ருஷ்ணரையே அபவாதம் பேசின ஜனங்கள்! குஹேக்குள்ள போன கிருஷ்ண னைக் காணோம் ஏதோ மிருகம் கொன்னுருக்கும் னு ஊருக்கு பயத்திலே திரும்பி வந்துடறா. குஹேக்குள்ளே கிருஷ்ணன் ஜாம்பவதியை பாக்கறார். அவளுக்கு க்ருஷ்ணர் மேல ப்ரேமை வந்துடறது. அவள் இதுமாதிரி “எங்க அப்பா ஜாம்பவான் வயசான காலத்துல தன் செல்லப்பிள்ளைக்கு இந்த மணியை வச்சுண்டிருக்கார். இதை எடுக்க வேண்டாம்” னு கேட்டுக்கறா. க்ருஷ்ணர் “நான் அந்த மணிக்காக தான் வந்திருக்கேன்”னு சொன்னவுடன், “வேண்டாம். நீங்க போய்டுங்கோ. உங்களுக்கு எதாவது ஆபத்து வரும்னு பயமா இருக்கு” அப்டின்னு சொன்னாளாம். க்ருஷ்ணர் அவளை சமாதானப்படுத்தி “பயப்படாதே! அந்த மணியை மீட்டுண்டு தான் நான் போகணும்”னு சொல்லிட்டு, தன் சங்கை எடுத்து பூம்பூம்ன்னு ஊதறார்.
அது கேட்டு ஜாம்பவான் வந்தப்பறம் ரெண்டு பேரும் கட்டி புரண்டு யுத்தம் பண்றா. அந்த ஜாம்பவான் குத்து எல்லாம், க்ருஷ்ணருக்கு பூமாலையால பூஜை பண்ற மாதிரி இருந்ததாம். ஜாம்பவான் “ராமா ராமா” னு சொல்லி குத்தினாலும் இவருக்கு எதுவும் ஆகாததை பார்த்த ஜாம்பவான், “என்னடா இது! நாம இப்படி குத்தியும் வந்தவனுக்கு ஒண்ணுமே ஆகலியே! நமக்கு எலும்பெல்லாம் நொறுங்கறது ஒரு அடி கொடுத்தாக் கூட!” என யோசிக்கையில, க்ருஷ்ணர் அடுத்த லீலை பண்ணனுமே! அதனால தான் யாருங்கிறதை புரிய வைக்கிறார்.
கண் திறந்து பார்த்தவுடனே, கோதண்டராமராக எப்படி ராமாவதாரத்தில தர்சனம் பண்ணினாரோ அதே மாதிரி, கோதண்டராமரா மார்பில மான் தோல், இடுப்புல மரவுரியோட, ஜடாபாரத்தோட ஜாம்ப வானுக்கு குஹையிலே காட்சி கொடுக்கறார்.
ஜாம்பவான் பார்த்துட்டு
“ஆஹா! உங்களை அடிச்சுட்டேனே! ராமா!” ன்னு வருந்தறார்.
“ஜாம்பவான், இருக்கட்டும். இந்த ஸ்யாமந்தக மணியை நான் எடுத்துண்டு போகணும். இதை காமிச்சா தான் என் மேலே இருக்கிற அபவாதம் போகும்”ங்கறார்.
“உங்களுக்கில்லாததா! எடுத்துக்கோங்கோ” னு அந்த மணியையும் கொடுத்து ஜாம்பவதி என்ற கன்யா ரத்னத்தையும் கிருஷ்ணருக்கு கன்னிகாதானம் பண்ணி கொடுக்கறார் ஜாம்பவான்.
ஊர் ஜனங்க சொன்னதை கேட்டு கிருஷ்ணனுடைய அம்மா அப்பா, யசோதை, நந்தகோபர் இன்னும் எல்லா ஜனங்களும் துர்காதேவி கிட்ட பூஜை பண்ணி வேண்டி ண் டிருக்கா!” அப்படின்னு பாகவதத்துல வர்றது.
அந்த மாதிரி வேண்டிண்டவுடனே க்ருஷ்ணர் அந்த ஸ்யமந்தக ரத்னத்தோடு, ஜாம்பவதி என்ற கன்யா ரத்னத்தோடு திரும்பி வந்துடறார்.
“ப⁴யாத் த்ராதும் தா³தும் ப²லமபி ச வாஞ்சா²ஸமதி⁴கம்” அப்டிங்கற ஸௌந்தர்யலஹரியை quote பண்ணி, நாம நினைச்சதுக்கு மேல வரங்களை தரக்கூடிய அம்பாள் கிட்ட, “க்ருஷ்ணர் திரும்ப வரணும்”னு தான் அவா வேண்டிண்டா. இங்க “க்ருஷ்ணனும் வந்தான்! ஸ்யமந்தக மணியும் திருப்பி கிடைச்சது! அதோட ஜாம்ப வதிங்கர கன்னிகையும் கிடைச்சா க்ருஷ்ண ருக்கு!”
நடந்ததெல்லாம் எடுத்துச் சொல்லி ஸ்யாமந்தக மணியை க்ருஷ்ணன் சத்ராஜித் கிட்ட திருப்பி கொடுத்த போது சத்ராஜித்க்கு ரொம்ப வெட்கமா போய்டறது, உங்க மேலே இப்படி தப்பா அபவாதம் சொல்லிட்டேனே இனிமே நான் இந்த ஊர்ல இருக்க ணும் னா எதாவது பெரிய இடத்து சம்பந்தம் பண்ணிக் கணும்”னு நினைச்சிண்டு, பூமாதேவியின் அவதார மான தன் பொண்ணு சத்யபாமாவை, க்ருஷ்ணருக்கு கல்யாணம் பண்ணிகொடுக்கறான் சத்யாஜித்.
கிருஷ்ணன் சத்யபாமா கல்யாணத்துக்கப்பரம் சத்யாஜித் ‘கிருஷ்ணா இந்த ஸ்யமந்தக மணியை நீயே வச்சுக்கோ ”ன்னு கொடுக்கறான்.
” இல்ல இல்ல! நீங்களே வச்சுக்கோங்கோ! இது உங்க ளுக் கு சூர்ய பகவான் கொடுத்தது” ன்னு அதை கிருஷ்ணன் திருப்பி கொடுத்துடறார்.
சத்யபாமா மேல அக்ரூரர், க்ருதவர்மா, சததன்வா என்கிற மூணு பேருக்கு ஆசை. சத்ராஜித்கிட்ட பெண் கேட்டுண்டிருக்கா. “இதோ அதோ!”னு சத்யாஜித் காலம் தள்ளிண்டிருந்த சமயத்திலே இப்படி க்ருஷ்ணருக்கு அவளை மனைவியா கொடுத்தவுடனே, இந்த மூணு பேருக்கும் பொறாமை. “ இந்த ஸ்யா மந்தக மணி மேல இந்த மூணு பேரும் ஆசை பட்டுண்டு, சததன்வா என்கிற போக்கிரியை கிருஷ்ணனுக்கு எதிரா கிளப்பி விடறா”
அப்போ க்ருஷ்ணர் ஹஸ்தினாபுரம் போயிருக்கார். அரக்கு மாளிகையில் பாண்டவர் எல்லாம் எரிஞ்சு போய்ட்டானு கேள்விபட்டு துக்கம் விசாரிக்கறதுக்காக த்ருதராஷ்ட்ரரையும், பீஷ்ம த்ரோணாதிகளை பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போயிருக்கார். அவர்க்கு தெரியும் தான் காப்பாத்திட்டோம் பாண்டவர்களை எல்லாம் என்று. இருந்தாலும் அவர் போறார்.
அந்த நேரத்தில, இந்த சததன்வா சத்ராஜித்தை வதம் பண்ணி, இந்த மணியை எடுத்துண்டு ஓடறான். சத்யபாமா ஹஸ்தினாபுரத்துக்கு வந்து, தன் அப்பா சமாச்சாரத்தை சொல்லி அழுதவுடன், க்ருஷ்ணர் ரொம்ப கோபத்தோடு தேரில ஏறி சததன்வாவை துறத்தறார். அவனுடைய குதிரை ரொம்ப களைச்சு போய் விழுந்து இறந்துடறது. கீழ இறங்கி அவன் ஓடறான். அப்ப க்ருஷ்ணர் தானும் கீழ இறங்கி அவன் பின்னாடி ஓடறார். சததன்வாவை வதம் பண்றார்.
இதற்கு நடுல இந்த சததன்வா என்ன பண்றான் தெரியுமா? அந்த மணியை அக்ரூரர் வீட்டுல போட்டுட்டு ஓடறான். சததன்வாவை வதம் பண்ணிட்டி அவன் உடம்பை பார்க்கும் போது அந்த மணி இல்லை. இதை எல்லாம் பலராமர் பார்த்துண்டிருக்கார். அவர்க்கே க்ருஷ்ணர் மேல சந்தேகம் வர்றது. “நீ திருடன் டா! நீ எதோ திரஸ்க்ருணி பண்ணி மறைச்சுடற! இந்த மணியை நீ தான் எங்கயோ வச்சிருக்க”னு சொல்லிட்டு, மிதிலாபுரிக்கு விதேக தேசத்துக்கு போய்டறார் கோச்சிண்டு.
கிருஷ்ணன் ஊருக்கு திரும்பி வந்தா ஜனங்கள் எல்லாம் திரும்பவும் க்ருஷ்ணர் மேல சந்தேக பேச்சு பேசறா. க்ருஷ்ணருக்கு வருத்தமா இருக்கு. “என்னடா இது! நாம ஒண்ணுமே பண்ணலியே. இப்படி செய்யாத குற்றத்து க்கு நம்ப மேல அபவாதம் வந்துண்டே இருக்கே!”னு யோசிச்ச போது நாரதபகவான் வந்து சொல்றாராம்.
“கிருஷ்ணா ஒரு வாட்டி நீ நாலாம் பிறை சந்திரனை பார்த்தாய். சந்திரலோகத்துக்கு கணபதி போயிருந் தார். அப்போ எல்லார்க்கும் கணபதியை பார்த்தா ரொம்ப ஆனந்தம். ஆனா இந்த சந்திரனுக்கு சிரிப்பா வந்ததாம். “இவ்ளொ குள்ள குள்ள கால். பெரிய தொப்பை வயறு. யானை மூஞ்சி!” அப்டீன்னு சிரிக்க றான் பிள்ளையாரை பார்த்து . எல்லாருக்கும் பிள்ளை யாரொட ரூபம் ஆனந்தத்தை கொடுக்கும் போது இதை பார்த்த சந்திரன் மட்டும் சிரிக்கிறான். ஏன்னா, அவனுக் கு தான் ரொம்ப அழகு அப்டின்னு ஒரு எண்ணம். எல்லாரும் “சந்திரன் போல முகம்” அப்டின்னு தானே வர்ணிக்கறா. அதனால அவனுக்கு தான் ரொம்ப அழகுங்க றதால கணபதியை பார்த்து சிரிச்சானாம்.
பிள்ளையாருக்கு கோபம் வந்து “இனிமே உன்னை ஒருத்தரும் ஏறெடுத்து பாக்க மாட்டா. உன்னை பார்த்தா அபவாதம் வரும்” ன்னு சபிச்சுடறார். அதனால அவன் பயந்து போய் கடலுக்குள்ள ஒளிஞ்சுக்கறான். ஓஷதிகள் எதுவும் வளரலை. எல்லாருக்கும் ரொம்ப வருத்தமா இருக்கு.அதனால எல்லாரும் வந்து பிள்ளையாரை பார்த்து வேண்டிக்கறா. சந்திரனும் வந்து நமஸ்காரம் பண்ணி வேண்டிக்கறான். உடனே கணபதி சமாதானம் ஆகி, “சரி. நாலாம் பிறை சந்திரனை பார்த்தால் மட்டும் அபவாதம் வரும். அதுவும் கணபதி பூஜை பண்ணினா சரியா போய்டும்” என்று வரம் அளிக்கிறார்.
இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை யார் படிக்கறாளோ அவாளுக்கும் அபவாதம் போய்டும்”
நாரதபகவான் கிருஷ்ணன் கிட்டே “நீங்க இது மாதிரி நான்காம் பிறை பார்த்ததால, நாய் படாத பாடு! உங்க ளுக்கு அபவாதம் வந்திருக்கு”னு சொல்லி “இது மாதிரி கணபதி பூஜை பண்ணுங்கோ” னு சொல்ல, க்ருஷ்ணரும் கணபதி பூஜை பண்ணினார். அதுக்கப்பறம் அவருக்கு மனசு தெளிவாயிடுத்து.
அக்ரூரர் என்ன பண்ணினார்னா, அவர் அவ்வளவு பெரிய பக்தர் இந்த வைரத்தை க்ருஷ்ணர் கிட்ட கொடுக்க வேண்டாமோ வைரம்ங்கறது மனசுல வைர்யத்தை ஏற்படுத்திடறது. அதனால இந்த ஸ்யமந்தகமணி அவருக்கு கெட்ட புத்தியை கொடுத்துடறது. அதை எடுத்துண்டு காசிக்கு ஓடி போய்டறார். காசி க்ஷேத்ரத்தில இருக்கும் போது, அவருக்கு நல்ல புத்தி வரது. நிறைய கோவில்கள் எல்லாம் கட்டறார். நிறைய திருப்பணி எல்லாம் பண்றார். அந்த மணி கொடுக்கற தங்கத்திலேர்ந்து நிறைய நல்ல காரியங்கள் எல்லாம் பண்றார். சுபிக்ஷமா இருக்கு காசி.
இதை கேள்விபட்டதும் க்ருஷ்ணருக்கு புரிஞ்சுடறது. க்ருஷ்ணர் காசிக்கு போய் அவரை பார்த்து, “உங்ககிட்ட தான் அந்த மணி இருக்கு என்பது எனக்கு தெரியும். எங்க அண்ணாவே என்னை சந்தேகப்படறார். அதனால நீங்க திரும்ப த்வாரகைக்கு வாங்கோ. அங்க ரொம்ப துர்பிக்ஷம் வந்துடுத்து. அதனால நீங்க அங்க வாங்கோ. என் மேல இருக்கற அபவாதத்தை சரிபண்ணினா போதும் . நீங்களே அந்த மணியை வச்சுக்கோங்கோ!”னு சொன்னதும், அவரும் நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேட்டுண்டு த்வாரகைக்கு வரார். அங்கும் திரும்பவும் சுபிக்ஷம் ஏற்பட்டது. க்ருஷ்ணர் மேல இருந்த அபவாதம் போய்டுத்து அப்டிங்கறது தான் ஸ்யாமந்தக மணி உபாக்யானம்.
“சித்தி விநாயகம் அனிஷம்”ங்கற பாட்டில, “ரௌஹி னேயா நுஜார்சிதம்” அப்டின்னு வரும். “ரோஹிணியோட பிள்ளை பலராமனுடைய தம்பியான க்ருஷ்ணனால் பூஜிக்கப்பட்டவரே” ன்னு கணபதி மேல பாடறார் முத்துஸ்வாமி தீக்ஷிதர். வேற எப்படியாவது பாடியிருக்கலாமேனா இந்த ரோஹிணிங்கற வார்த்தையை கேட்டவுடனே, “ரோஹிணியினுடைய கணவனான சந்திரன். அவனுக்கு ஏற்பட்ட சாபம். அதோட நிவர்த்தி. அந்த சந்திரனை பார்த்ததால க்ருஷ்ணருக்கு ஏற்பட்ட அபவாதம். கணபதி பூஜை பண்ணினதால அதோட நிவர்த்தி!” இது எல்லாமே ஞாபகம் வரும்ங்கறதுக்காக “ரௌஹினேயா நுஜார்சிதம்”ன்னு பாடிருக்கார் ”
ஜாம்பவான் குஹையில போன போது, அந்த ஜாம்பவதி அந்த குழந்தைக்கிட்ட ஒரு ஸ்லோகம் சொல்றா.
सिंह: प्रसेनमवधीत् सिंहो जाम्बवता हत:। सुकुमारक मा रोदी: तव एषस्स्यमन्तक:।।
ஸிம்ஹ: ப்ரஸேனமவதீ4த் ஸிம்ஹோ ஜாம்ப3வதா ஹத: | ஸுகுமாரக மாரோதி3: தவ ஏஷஸ்ஸ்யமந்தக: ||
சியாமந்தக மணி உபாக்யானத்தை முழுக்க படிக்க முடியலைனா பரவாயில்லை. இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொன்னாலே அபவாதம் போகும்.”
++
இந்த மா திரி கதைகள் எதோ ஒரு யுகத்துல நடந்திருந்தா கூட, இன்னிக்கு படிக்கும் போது நமக்கு ஒரு சந்தோஷத்தையும், அது மூலமா பாடத்தையும் கொடுக்கிறது. அதுவும் மஹா பெரியவா அந்த கதை சொல்ற ஸ்டைல் நீதி வியாக்யானம். அபூர்வம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;