
சந்தியா வந்தனம் – நங்கநல்லூர் JK SIVAN
நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருப்பது ஆச்சர்யம் தான். நான் மூன்று வேளையும் சந்தியாவந்தனம் செய்கிறேன் சார் என்று என்னிடம் சமீபத்தில் பலரைக் கேட்டபோது சொன்னார்கள். அவர்களில் அநேகருக்கு மந்திரம் அர்த்தம் தெரியவில்லை. தேடினால் இன்னும் அநேக விஷயங்கள் புலப்படும். புரிந்து கொண்டு செய்யும் காரியங்கள் மேலும் நமக்கு தூண்டுதலைத் தரும் என்பதைத் தவிர ஆத்ம திருப்தியும் அளிக்கும்.
பிராமணன் சந்தியாவந்தனம் பண்ணுவது எங்கோ இருக்கிற எந்த கடவுளையோ திருப்தி படுத்த இல்லை.
ஆத்மாவை சுத்தப்படுத்தி தீயவையை மனதிலிருந்து நீக்குவதற்காக. ஒவ்வொரு வினாடியும் பகவானை நினைக்கவேண்டும். சந்தியாவந்தனம் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயத்தின் முன், மத்தியானம் உச்சிக்கு முன், சாயந்திரம் அஸ்தமனத்துக்கு முன் பண்ணவேண்டியது. உண்மையான ஆத்மாவைத்தான் கடவுள் விரும்புகிறார்.
ஸந்த்யாவந்தன காயத்ரி மந்திரம் யஜுர்வேதத்தில்(36/3) வருகிறது.
சந்த்யாவந்தனம் செய்வது எப்படி?
1. ஆசமனம் (Āchamanam)
2. ப்ராணாயாமம் (Prāṇāyāmaḥ)
ॐ भूः ॐ भुवः ॐ सुवः ॐ महः ॐ जनः ॐ तपः ॐ सत्यम्।
ॐ तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्।
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம்,ஓம் தத் சவிதுர் வரேண்யம் பகோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்
பரம்பொருளின், பரமாத்மாவின், திவ்ய ஒளியை தியானிக்கிறோம்; எங்கள் புத்தியைக் களங்கமின்றி வளரச் செய்ய வேண்டும் என்று பிரார்த்திப்பது.
3. சங்கல்பம் (Sankalpam)
நாள், திதி, யோக, கரணம், நக்ஷத்திரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு, இன்று சந்த்யாவந்தனம் செய்வதை உறுதி செய்வது.
அஸ்மிந் ப்ரஹ்மணே த்விதீய பரார்தே… (இன்றைய காலத்திலே, இந்த நாளிலே, இந்த வேளையில், இந்த இடத்தில், நான் சந்த்யாவந்தனம் செய்கிறேன்…)
4. அர்க்ய பிரதானம் (Argya Pradhānam) ॐ भास्कराय नमः। ॐ मित्राय नमः। ॐ पूष्णे नमः। ஓம் பாஸ்கராய நம:! ஓம் மித்ராய நம:! ஓம் பூஷ்ணே நம:!
(சூரியனுக்கு, உலகத்துக்கு ஒளி யூட்டுபவனுக்கு நமஸ்காரம்)
5. காயத்ரி ஜபம் (Gāyatrī Japam) மந்த்ரமும் அர்த்தமும் மேலே சொன்னபடி.
6. உபஸ்தானம் (Upasthānam)
ॐ आदित्याय च सोमाय च मङ्गलाय बुधाय च। गुरु शुक्र शनिभ्यश्च राहवे केतवे नमः।
ஓம் ஆதித்யாய ச சோமாய ச மங்களாய புதாய ச குரு சுக்ர சனிப்யச ராகவே கேதவே நம:
(சூரியன், சந்திரன், செவ்வாய், புத்தன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரகங்களை வணங்குகிறேன்.)
7. சூர்ய நமஸ்காரம் (Sūrya Namaskāram)
சூரிய தேவனை நமஸ்காரம் செய்து, நமஸ்கார மந்திரங்களை சொல்Vல வேண்டும்.
8. புனராசமனம் (Punar āchamanam)
மீண்டும் ஆசசமனம் செய்து களங்கங்களை நீக்கி, தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் காலை, மதியம், மாலை சந்த்யாவந்தனம் செய்வது முக்கியம்.
Devi Gayatri
ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॥ Om Bhuur-Bhuvah Svah Tat-Savitur-Varennyam
Bhargo Devasya Dhiimahi Dhiyo Yo Nah Pracodayaat ||
1: ஓம் பூ லோக (Earth), புவர் லோக (அந்தரிக்ஷம் , மத்யம ஆகாசம், ) ஸுவர்லோக (ஆகாசம், விண், தெய்வீக மனம்),
2: தத் ஸவிதுர் r (சாவித்ரி, சூரியனின் தெய்வாம்சம்)
3: அந்த தெய்வீக ஒளியை தியானம் செய்கிறேன். என் ஆன்மீக புத்தியை அது பிரகாசிக்க செய்யட்டும். தெய்வீக உணர்வை எழுப்பட்டும். வேதம், அதன் ஆறு அங்கங்கள், பாதம், கிரமம் எல்லாம் பசுவின் வாயில் உள்ளது. ஹரியும் கேசவனும் பசுவின் கொம்புகளில் உறைகிறார்கள். ஸ்கந்தன் அதன் வயிற்றில் உள்ளான்.• அதன் சிரசில் ப்ரம்மா. அதன் நெற்றியில் சங்கரன். கொம்பின் நுனியில் இந்திரன்.அதன் காதுகளில் அஸ்வினி தேவர்கள்.பசுவின் கண்களில் சூரியனும் சந்திரனும். பற்களில் கருடன். நாக்கில் ஸரஸ்வதி . அதன் பின்புறத்தில் சகல புண்ய க்ஷேத்ரங்களும். அதன் கோமியத்தில் கங்கை. அதன் சருமத்தின் மெல்லிய நாளங்களில் சகல ரிஷிகளும். முகத்தின் பின்புறம் யமன். வலது பக்கம் குபேரனும் வருணனும்.
நடு முதுகில் கந்தர்வர்கள். பசுவின் பின்பாக குளம்புகளில் விண்ணுலக தேவலோக தேவதைகள். கோமியத்திலும் சாணியிலும் லக்ஷ்மி தேவி. அதன் கால்களின் முனையில் விண்ணுலக தேவர்கள். அதிகப சப்தத்தில் பிரஜாபதி. நான்கு பால் சுரக்கும் காம்புகளில் நான்கு சமுத்திரங்கள். இதெல்லாம் பத்ம புராணம் சொல்வது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



