
பத்ம புராணம். – நங்கநல்லூர் J K SIVAN
நைமிசாரண்ய ரிஷிகளுக்கு கொண்டாட்டம். சூதர் அற்புதமாக அல்லவோ பத்ம புராணத்தை அவர்களுக்கு விளக்குகிறார். புத்தகங்கள் இல்லாத காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு சொல்வதன் மூலம் பலரை விஷயங்கள் கிரந்தங்கள் தப்பில்லாமல் தொடர்ந்து ஸ்லோகங்களாக நமக்கு அச்சிடும் வரை கிடைத்து தான் கர்ண பரம்பரை கதைகள், கர்ணனின் வாழ்க்கை சரித்திரம் இல்லை. காரணம் என்றால் காது. கர்ணனுக்கு அந்த பெயர் வந்ததே அவன் காதில் குண்டலத்தோடு பிறந்ததால். கிராமத்தில் குறைகளை நிறைகளை காதர் கேட்டு தப்புகளை திருத்தி தண்டனை கொடுத்து நேர்மையாக ஆட்சி புரிவதால் தான் கிராம அதிகாரி ”கர்ணம் ”என்று பதவி வகித்தார்.
”புலஸ்திய மஹாகரிஷி ஸ்ரீமந் நாராயணன் எதற்கு வாமன அவதாரம் எடுத்தார் என்பதை சொல்லுங்கள் என்று பீஷ்மர் கேட்க புலஸ்தியர் தொடர்கிறார்;
” சத்யயோகத்தில் ஒரு சமயம் தேவாசுர யுத்தத்தில் அசுரர்கள் தேவர்களை தோற்கடித்து விண்ணுலகத்திலி ருந்து விரட்டி விட்டார்கள். மஹாபலி இந்திரபதவியில் அமர்ந்தான். நிறைய தான தர்மங்கள் புரிந்து பெருமை பெற்றான். தன்னுடைய அதிகாரங்கள் பலம் அதிகரிக்க மிகப் பெரிய யாகம் ஒன்று புரிந்தான். அதில் எண்ணற்ற பிராமணர்களுக்கு அவர்கள் வேண்டிய தான தர்மங்கள் புரிந்தான். தேவர்கள் விரட்டப்பட்டநிலையில் இந்திரன் மற்ற தேவர்களோடு பிரம்மாவிடம் முறையிட விஷயம் ஸ்ரீமந் நாராயணன் காதுக்கு எட்ட அவர் காஷ்யபர் அதிதி தம்பதிகளுக்கு புத்ரனாகி ஒரு குள்ள பிராமணனாக மஹாபலி யாகத்தில் தானம் கேட்க புறப்படுகிறார்.
(ஸ்ரீமந் நாராயணனின் வாமநவதாரம் பற்றி ஸ்ரீமத் நாராயணீயத்தில் 31வது தசக ஸ்லோகங்கள் சாரம் சொல்கிறேன். நான் ஏற்கனவே எழுதி உங்களுக்கு தந்தது தான் இது.
ஸ்ரீமந் நாராயணீயம் எத்தனையோ உன்னத விஷயங்களை தனக்குள் கொண்ட ஒரு புண்ய ஸ்தோத்ரம். அதில் இல்லாத வேதாந்த கருத்துக்கள் கிடையாது. கை மேல் பலனளிக்கும் ஒரு மருந்து. எண்ணற்ற ஹிந்து பக்தர்கள் இதை அறிந்ததால் இன்றும் தனித்தோ கூட்டாகவோ பாராயணங்கள் நடைபெற்று வருகிறது. நாராயணீயம் சர்வ வியாதி, சகல ரோக நிவாரணி.
முற்றிய புற்று நோயால் வாடிய ஒரு பெண்மணி மஹா பெரியவரை காஞ்சி மடத்தில் கண்டு தனது துன்பத்தை குறைகளை சொல்லி அழுதார்.
”நீ நாராயணீய பாராயணம் பண்ணு சரியாயிடும். நாராயணன் பார்த்துப் பார்”. அது தான் மஹா பெரியவா உபதேசம். அவள் அப்படியே பக்தி ஸ்ரத்தையாக பாராயணம் செய்த பலன் புற்றுநோய் காணாமல் போய்விட்டது. நாம் வாழ்வதே கடவுள் நம்பிக்கையில் தான்.
குட்டியூண்டு ப்ராமண பிரம்மச்சாரியாக ஒருவன் தனக்கு முன் தானம் வாங்க வந்து ஒளி வீசி நின்றதைப் பார்த்த மஹாபலி சக்கரவர்த்தி ரொம்ப ஆனந்தமடைந்தான். உன்னை ஒரு குட்டி தெய்வமாக எதிரில் கண்டான். இரு கை கூப்பி குனிந்து உன் முகத்தருகே முகம் வைத்து ” ப்ரம்மச்சாரியே, உனக்கு என்னப்பா வேண்டும். கேள். வீடு வாசல் வேண்டுமா, ஆகாராதிகள் வேண்டுமா, பணம் காசு வேண்டுமா, வஸ்திரங்கள் வேண்டுமா, யானை குதிரை பசு வேண்டுமா, நீ எதை வேண்டுமானாலும் கேள். அவற்றை தந்து உன்னை திருப்தி படுத்துகிறேன்.” என்றான் மஹாபலி.
நாராயணா, உனக்கு சிரிப்பு வந்ததா அப்போது? பார்க்குமிடமெங்கும் நிறைந்த உன்னிடம், எல்லாவற் றையும் உருவாக்கிய உன்னிடமே உனக்கு எது வேண்டும் ” நான் தருகிறேன்” என்கிறான் மஹா பலி . அவன் அவ்வளவு செல்வந்தனா? நீ காருண்யமூர்த்தி அல்லவா? அவன் கர்வத்தை ஆணவத்தை அடக்க அல்லவோ வந்தவன். நடித்தாய்.
” ஆஹா, எவ்வளவு பெரிய மனசு உங்களுக்கு மஹாராஜா, மஹாபலி சக்ரவர்த்தி, உங்கள் வம்சமே கொடுத்து சிவந்த கரங்கள் கொண்டது. எனக்கு எதுவுமே வேண்டாம் ராஜா, மூன்றே மூன்று என் காலடி அளவு மண் தந்தாயானால் அதுவே போதும்”
மஹாபலி ”ஹா ஹா” என்று அட்டகாசமாக சிரித்தான்.
‘என்ன குட்டி ப்ராமணரே , இப்படி இருக்கிறீர்? என்னிடம் வந்து யாசிக்கும்போது வெறும் மூன்று அடி மண்ணா கேட்பது? நான் இந்த மூவுலகத்துக்கும் அதிபதி, என்னிடம் என்ன கேட்க வேண்டும் என்று கூட தெரியாதவராக எதையோ யாசிக்கிறீரே? ஆள் தான் பார்த்தால் குழந்தையாக இருக்கிறீர் என்றால் உமது எண்ணங்களும் குழந்தைத் தனமாக இருக்கிறதே!’ என் அந்தஸ்துக்கு ஏற்றபடி இந்த உலகையே கேளும், தருகிறேன்”, என்று பெருமிதத்தால் பேசினான். இந்த பெருமிதம் தான் அவனால் நீ கேட்ட மூன்றடி மண் கூட கொடுக்க முடியாமல் செய்து விட்டது. அவனைச் சிறைப்பட வைத்தது.
குருவாயூரப்பா, நீ வாமனனாக அப்போது மஹாபலிக்கு கொடுத்த பதில் உனக்கு நினைவிருக் கிறதா? உன்னருளால் எனக்கு ஞாபகம் இருக்கிறது? சொல்கிறேன் கேள்.
”அரசே, ரொம்ப சந்தோஷம் உங்கள் தாராள மனதுக்கு. நான் மகிழ்கிறேன். ஆனால் ஒரு மூன்றடி மண்ணி லேயே திருப்தி அடையாமல் ஒருவன் நீங்கள் கொடுக்கும் இந்த பூமியையே தானமாக பெற்றால் அதால் திருப்தியா அடையப்போகிறான்? ஆசைக்கு அளவேது ராஜா ? பிரபஞ்சமே பெற்றாலும் அப்பவும் ஏதாவது ஒரு தேவை அவனுக்கு இருந்து கொண்டு தான் இருக்கும்.”
மஹாபலி ”ஆமாம். வாஸ்தவம் ” என்று தலையசைத்தான். நீ கேட்ட மூன்றடி மண்ணை தானமாகத் தருவதற்கு தீர்த்த பாத்திரம் எடுத்தான். தாரை வார்த்து தருவது இது தான். நீ அப்போது ஒரு நாடகம் ஆடினாயே நினைவிருக்கிறதா?.
நீ மஹாபலியை சோதிக்க விரும்பினாய். அவன் பெருமையை உலகுக்கு காட்ட விரும்பினாய். ஆகவே அருகே நின்ற அசுரகுரு சுக்ராச்சாரியார் மனதில் ஒரு எண்ணத்தை விதைத்தாய். அது வேலை செய்தது. சுக்ராச்சாரியார் குறுக்கிட்டு
”அரசே,கொடுக்காதீர்கள், கொடுக்காதீர்கள், வேண்டாம் . இந்த ப்ராமண சிறுவன் சாதாரணன் அல்ல, ஸ்ரீமன் நாராயணன், மஹா விஷ்ணு , எல்லாவற்றையுமே எடுத்துச் சென்றுவிடுபவன் ” என்று சொல்லி மஹாபலியை தடுக்க வைத்தாய்.
குருவாயூரப்பா, மஹாபலி இன்றும் சிரஞ்சிவியாக ஏன் இருக்கிறான் தெரியுமா? அவன் குணத்தால். நேர்மையால். சுக்ராச்சாரியார் தடுத்தும் மஹாபலி என்ன சொன்னான்?
”குருநாதா, நீங்கள் சொல்வது போல் இந்த சிறுவன் மஹா விஷ்ணுவாக இருந்தால் அது எனக்கு ஆச்சர்ய மோ, அதிர்ச்சியோ தராது. பெருமையைத் தான் தரும். மஹா விஷ்ணுவே என்னிடம் வந்து யாசகம் கேட்டார் என்ற அளவுக்கு எனக்கு சந்தோஷத்தை தரும். கேட்டவருக்கு கேட்டதெல்லாம் தந்தான் மஹாபலி என்ற பெருமை தரும்.
மஹாபலியின் தீர்த்த பாத்திரத்தை அவன் மனைவி விந்த்யாவளி எடுத்து அவன் கையில் தீர்த்தம் விட்டாள் மஹாபலி உனக்கு நீ கேட்ட மூன்றடி மண் எடுத்துக் கொள் என்று தாரை வார்த்தான் . அப்போது ஆச்சர் யமாக நடந்த விஷயத்தை சொல்லட்டுமா?
குருவாயூரப்பா, விண்ணவர்கள் யாவரும் மலர் மாரி பொழிந்தார்கள். மஹாபலியை பாராட்டி னார்கள். தன்னிடமிருந்ததை எல்லாம் தானம் செய்துவிட்டானே. எல்லோரும் பிரமிக்க நீ ஆகாசத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்தாய்.
ப்ரம்ம லோகத்தில் விண்ணை அளந்த உன் ஒரு பாதம் தெரிந்தது. ப்ரம்மா அதற்கு பாத பூஜை செய்தார். அந்த பாதாபிஷேக ஜலம் பிரபஞ்சத்தை தூய்மைப் படுத்தியது. பூமியில் கங்கையாக ஓடியது. தேவர்கள் கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் எல்லோரும் ஆடினார்கள் பாடினார்கள். உன் பக்தன் ஜாம்பவான் பக்தியில் பாடிக்கொண்டு ஆனந்தமாக ஆடிக்கொண்டு உலகைச் சுற்றி வந்தான்.
அசுரர்கள் இதை ஏற்பார்களா, கோபத்தோடு, அவர்கள் தலைவன் மஹாபலி இல்லாமலேயே தேவர்களோடு போரிட்டார்கள். தோல்வியடைந்தார்கள். அசுரர்களுக்கு நீ கால தேவன், காலாத்மா, என்று உணர்த்தினாய். இது வரை அவர்கள் வென்றதே உன் கருணையால் என்று புரியவைத்தாய். எல்லோரையும் பாதாளத்திற்கு அனுப்பி வைத்தாய்.
நாராயணா, வாதபுரீஸ்வரா, இந்த மூவுலகும் ஈரடியால் அழிந்துவிட்ட நீ, சகலமும் இழந்த மஹாபலியை எதிரே வருணன்கயிற்றால் கட்டி அடிமையாக நிற்கவைக்க, ”மஹாபலி, நீ
மூன்று உலகுக்கும் அதிபதி என்கிறாயே, ஈரடியில் எல்லாமே அடங்கியபின் நான் கேட்ட மூன்றாவது அடி மண் எங்கே, கொடு? ” என்று கேட்டாய்.
ப்ரபோ, நான் எல்லாம் இழந்தவன். நான் மட்டுமே இருக்கிறேன். என் சிரத்தை மூன்றாவது அடியாக பாவித்து ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறேன்”என்றான். அவனருகே பிரஹலாதன் நின்று கொண்டிருந்தான். அவன் உன் பக்தன் அல்லவா? மனதார உன்னை பிரார்த்தித்தான்.
கிருஷ்ணா, நீ மஹாபலியிடம் அப்போது ‘மஹாபலி, நான் இப்படி செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா? உன் கர்வம், ஆணவம் அடங்குவதற்கு. அஹங்காரம் எவரையும் அழித்துவிடும் என்று உணர்த்துவதற்கு. நீ நல்லவன். அசுரர்களின் அதிபதி. எத்தனையோ நற் காரியங்கள் செய்தவன். வேண்டியதை எல்லாம் அதனால் அடைந்தவன். உனக்கு விண்ணுலகை விட, ஒரு சிறந்த பெரிய உலகம் அமைக்கிறேன். அதை நீ ஆண்டு கொண்டு சுகமாக இரு. தக்க நேரம் வந்தபோது நீ என்னை வந்தடைவாய்”.
+++
புலஸ்தியர் ஒரு முறை நாரதரிடம் ”முனி புங்கவா, ஸ்ரீமந் நாராயணனின் ஆசீர்வாதங்களை பெற தகுதியானவர்கள் யார்? என கேட்டபோது ”எவர் பிராமணர்களை அழைத்து உபசரித்து திருப்தியாக தானம் வழங்குகிறார்களோ அவர்களே” என்கிறார். நாராயணன் சொல்லும் பிராமணர்கள் வேத சாஸ்திரங்களை நன்குணர்ந்து நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்து, தேவ, ரிஷி, பித்ருக்கடன்களை விடாமல்
செய்து எளிமையாக சாதுக்களாக பிறருக்கு கல்வி ஞானம் அளிப்பவர்களை.
காயத்ரி மந்திரம் விசேஷமானது 24 அக்ஷரங்கள் கொண்டது. ஒவ்வொரு அக்ஷரமும் ஒரு தெய்வம். அக்னி யை உச்சாடனம் செயது ஸ்வாஹா என்று முடியும் மந்த்ரங்களை கொண்டது. 108 காயத்ரி மந்திரம் சொல்பவனுக்கு பாபம் தோலையும். காயத்ரி மந்த்ர 24 அக்ஷரங்களும் குறிப்பிடும் தேவதைகள் ; அக்னி, வாயு, சூர்யன்,ஆகாசம், யமன், வருணன்,பிரஹஸ்பதி, பர்ஜன்யா, இந்திரன்,கந்தர்வ, பூஷன், மித்ரன்,த்வஷ்டா, வசு , மாடுதகணங்கள், சோமன், ஆங்கிரஸ் ,விஸ்வதேவா, அஷ்வினிகுமாரர்கள், சர்வ தேவர்கள், ருத்ரன், ப்ரம்மா, விஷ்ணு. ஜபம் பண்ணுகிறவன் மனதில் நியாசம் பண்ணும்போது உடலில் பல பாகங்களில் காயத்ரியை உணரவேண்டும்.
ஓம் பூ; ஹ்ரிதயத்தில், ஓம் புவ : சிரத்தில், ஓம் ஸுவ; சிகையில் , ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்; உடம்பின் எல்லா அங்கங்களிலும், பர்கோதேவஸ்ய தீமஹி ; ரெண்டு கண்களிலும், ஓம் தியோயோன ப்ரசாதயாத்; ரெண்டு கரங்களிலும்.
காயத்ரி மந்திரம் சொல்வது நான்கு வேத சாரத்தின் பலன் தரும். முக்தி தரும் காயத்ரி மந்திரம் தெரியாத பிராமணன் பிராமணனாக கருதப்பட மாட்டான் என்கிறார் புலஸ்தியர்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



