
விக்ரமாதித்தன் வேதாள கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி சந்நியாசியான கதை
சில பழங்கதைகளை சொல்லும்போது ஏற்கனவே சொன்ன விஷயம் நடு நடுவே வரத்தான் செய்கிறது.
அதை வெட்டி விட்டு தொடரலாமென்றால் கதை ஜோடனையின் அழகு, கோர்வை பின்னமாகிவிடுகிறது. மனதுக்கு வருத்தமாகிறது. சரி, இருந்து விட்டு போகட்டும் என்பதால், பழசை சுருக்கமாக சொல்லி கதையை மேலே ஓட்டிக்கொண்டு போக வேண்டிய நிலை அமைகிறது.
தேவலோகத்து அமராவதிப் பட்டணத்துக்கு ஓப்பான ஐஸ்வர்ய நகரம் கன்யாபுரி யின் ராஜா பர்த்ருஹரி. பராக்ரமசாலி. பல ராஜாக்களை சிறைப்பிடித்து வைத்திருந்ததால் பல ராணிகள் பர்த்ருஹரியிடம் வந்து காலில் விழுந்து ராஜாக்களுக்கு உயிர் பிச்சை வேண்டினார்கள். அவன் தம்பி விக்ரமாதித்தன். பலே கெட்டிக்காரன். பர்த்ருஹரி கலைஞன். அழகை ரசிப்பவன். முன்னூற்று அறுபது அழகிகளை கல்யாணம் பண்ணிக்கொண்டவன். அவனது அந்தப்புரம் ஒரு பெரிய கலைக்கூடம். இருந்தும் அப்பாவுக்கு மரண காலத்தில் கொடுத்த சத்ய வாக்குப்படி அவனுக்கு பிள்ளைகள் இல்லை. அவன் மனைவிகளில் அதி அழகி ஒருவள். அனங்கசேனை. எல்லோரையும் விட அவள் மேல் அவனுக்கு பிரேமை.
காலமாவது பிறருக்கு உதவியாயிருப்பவன் எவ்வளவோ மேலானவன். உயர்ந்த குணங்களை உடையவன் சிறிது காலம் ஜீவித்திருந்தாலும் அவன் வாழ்வு புரணமானதாகிறது. பரந்த அறிவு. ஆண்மை,உயர்பதவி, நேர்மை போன்ற குணங்களுடையவன், கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தாலும், அவன் வாழ்வு மற்றவர்களுக்கு நல்ல பலன் தரும். மற்றவர்களின் சந்தோஷமே தன் சந்தோஷமாகக் கொண்டவன் நேர்மையாளன்.
தலைவன். ஒருவன் தன்னுடைய குலம், நடத்தை, குணம் ஆகியவற்றால் பலனைக் கொடுக்காவிட்டால், அவன் பிறப்பு ப்ரயோஜனமில்லாதது.” இப்படி நினைத்த பிராமணன் பழத்தைச் சாப்பி\டாமல் ராஜா பர்த்ருஹரி தான் சிறந்தவன் அவனிடம் கொடுப்போம் என்றும் இளமையோடு அந்த நல்ல ராஜா ஆளட்டும். எல்லோருக்கும் நல்லது என்று ராஜாவிடம் சென்றான்.
தங்களுக்குச் சர்வ மங்களங்களையும் அளிப்பார்களாக!. இந்தாருங்கள் இந்த தெய்வீக பழத்தை சாப்பிடுங் கள்”
நான் வெகுகாலம் இருந்து அதற்குள் அவள் இறப்பதை நான் எப்படி சகிப்பேன்.
”இந்தா அநங்கசேனை, என் ப்ரியே, இந்த அபூர்வ சக்திவாய்ந்த மாதுளம் பழம். இதை நீ சாப்பிட்டால் ,மரணமின்றி என்றும் இளமையாக வாழலாமாம்! இதைச் சாப்பிடு!” என்று அவளிடம் பர்த்ருஹரி பழத்தை கொடுத்தான்.
விசித்திரமானது. சாட்டையில்லாப் பம்பரம்போல் அலாதியாக ஆடக்கூடியது ஆசைப் பொம்மலாட்டம்! கலா ரசிகையான ராஜபத்தினியின் உயர்தரமான பண்பாடுகளும், மென்மையான அன்பு மொழிகளும் முரடனான குதிரைப் பாகனின் ஆசைக்குப் போதவில்லை! அவனைப்போல் கீழ்த்தரமான கொச்சை வார்த்தைகள் பேசக்கூடிய பணிப்பெண் மேலே தான் அவனுக்கு கவர்ச்சி. அவளிடம் அந்த பழத்தை கொடுத்து, “என் அன்பே! இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உடல் கட்டுத் தளராமல் வாலிபத்துடன் இருப்பாயாம் இதை சாப்பிடு” என்று சொல்ல மாதுளம் பழத்தை வாங்கிக்கொண்ட அந்த பணிப்பெண் தன் ஆசை நாயகனான மாட்டுக் கொட்டிலில் சாணம் முதலிய கழிவுப் பொருள்களைக் கூட்டி எறியும் ஒருவனிடம் தன்
கொடுக்க அவன் தன்னோடு வேலை செய்யும் ஒரு சாணி யை எடுத்து சுத்தம் செய்யும் ஒரு வேலைக்கார பெண்ணிடம் கொடுத்துவிட்டான்.
அங்கசேனையை வரவழைத்த பர்த்ருஹரி ”நீ நான் கொடுத்த பழத்தை சாப்பிட்டாயா. உண்மையை சொல்”
”நான் சாப்பிடவில்லை, பிரபோ!”தயங்கி தயங்கி உண்மையை சொன்னாள் அநங்கசேனை .
வெளிப்பட்டன.
ஆடவன் கொள்ளும் அபிமானம் வீண்தான். வில்போன்ற புருவங்களுடைய பெண்கள் உள்ளத்தில் மன்மதன் தான் விரும்பியதையே செய்வான். பெண்களின் எண்ணங்களையும் செயல்களையும் ஒருவராலும் அறியமுடியாது. பெண்களின் சித்தம், மனிதனுடைய பாக்கியம், அதிக மழை, மழையின்மை – ஆகிய இவைகளை தெய்வத்தாலேயே தடுக்க முடியாது என்பார்கள். அவ்விதமிருக்க கேவலம் சாதாரண
மனிதனால் என்ன செய்யமுடியும்? மேலும், பெண்களின் சஞ்சலம் நிறைந்த உள்ளத்தைக் கவருவதைவி ட, ஒருவன் காட்டிலே புலி யைப் பிடித்து விடலாம்; ஆகாயத்தில் பறக்கும் பறவையைப் பிடித்து விடலாம்; தண்ணீரின் நடுவே நீந்தும் மீனைக் கூட அவன் சுலபத்தில் பிடித்து விடலாம் என்பார்கள்.
தத்துவஞானியை, சுகம், துக்கம், வெற்றி, தோல்வி, வாழ்வு, மணம். ஆகியவற்றை நன்கு பிரித்துக் காட்டக்
கூடியவனுமான அறிவாளியையே பெண்களின் நடத்தைகள் கெடுத்து விடும். கெளரவம், உயர்பதவி, போற்றக்கூடிய தன்மை வாய்த்த குணங்களை உடையவர்களாயிருந்தும், பெண்கள் ஒரு காரணமுமின்றி தாங்களாகவே ஆசைப்பேோதையின் காரணமாகத் துரோகத்தின் சேற்றிலே இறங்குகிறார்கள் .துறவறத்தைவிட அதிகப் பாக்கியம் அளிப்பது வேறு எதுவுமில்லை: அறிவைவிடப் பேரின்பம் எதுவும் கிடையாது: திருமாலைத் தவிர காப்பாற்றுவோரும் இல்லை. சம்சாரத்தைக் காட்டிலும் பெரும் எதிரி வேறு கிடையாது.”
உள்ளாக்குவதால் தனக்கு ஒன்றும் பிரயோஜனமில்லை என்பதை அறிந்தான். தம்பி விக்கிரமாதித்தனிடம்
ராஜ்ய பாரத்தை ஓப்புவித்துவிட்டான். கடைசியாக அவன் துறவியாகித் தவம் செய்யக் காட்டிற்குச் சென்றான்.
ராஜா பர்த்ருஹரி 300 அற்புத ஸ்லோகங்களை எழுதி இருக்கிறான் அதில் வைராக்கிய சதகம் 100, நீதி சாரம் 100 சிருங்கார சதகம் 100. சிலவற்றை உங்களுக்கு அற்புதமான சமஸ்க்ரித ஸ்லோகங்கள் உங்களுக்கு ஏற்கனவே பல ஸ்லோகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மீண்டும் பதிவிடுகிறேன்.. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். ராஜா பர்த்ருஹரி தான் பட்டினத்தாரின் சிஷ்யன் பத்திரகிரியார். பத்திரகிரியார் புலம்பல் அற்புதமான பெரிய ரெண்டு வரி பாடல்கள் அதையும் வெளியிட்டிருந்தாலும் மீண்டும் பதிவிடுகிறேன். சரி ஒரு முக்கியமான கேள்வி? அந்த பழம் கடைசியில் என்னாச்சு? யார் சாப்பிட்டா? யாருமே சாப்பிடலையா? அப்படீன்னா எங்கே போச்சு? தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


