RATHA SAPTHAMI J K SIVAN

ரத சப்தமி  –நங்கநல்லூர் J K SIVAN  

4.2.25  அன்று  ரத சப்தமி.  ரதம்  என்றால் தேர். சப்தமி என்றால் ஏழாவது நாள். சூரியன் பிறந்தநாள் என்றும்  அவன் என்று உலகை  தனது  ஏழு வண்ண கதிர்களால் பிரகாசிக்கச் செய்தானோ அந்த நாள் என்றும் கொண்டாடுகிறார்கள்.    சூரியன் தேரில் பூட்டிய ஏழு குதிரைகளும் மந்த்ர  சப்தங்களான  சந்தஸ்கள்என்று சொல்வார்கள். அவை  வேத சப்தங்களை சொல்ல உபயோகிக்கும் மீட்டர்கள் . அவை  காயத்ரி, த்ருஷ்டுப், அனுஷ்டுப்,  ப்ருஹதி,  பங்க்தி, உஷ்ணிக், ஜகதி என்பவை.  இதனால் மந்த்ரங்கள் உச்சரிக்கப்படும்போது கேட்க பக்தி ரசம் பொங்கும். அதைப்  பற்றி  சில விஷயங்கள். காஸ்யப ரிஷி மனைவி அதிதி பூரண கர்ப்பிணி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது வாசலில்  கதவை தட்டி  யாரோ ஒரு பிராமணன்  ”பவதி பிக்ஷாந் தேஹி”  – பசிக்கு  உணவு கேட்கிறான்.

” இரு கொண்டு வருகிறேன்”
அதிதி மெதுவாக நடக்க முடியாமல் நடந்து, கணவருக்கு உணவு பரிமாறி விட்டு,  பிறகு  தனக்கு என்று வைத்திருந்த  ஆகாரத்தை  கொண்டுபோய்  வாசலில் பிராமணனுக்கு பிக்ஷை அளித்தாள் .

”ஏன்  இவ்வளவு நேரம் என்னைக்  காக்க வைத்தாய்?  என்னை  அவமதித்து  உதாசீனம் பண்ணிய   உனக்கு இதோ என் சாபம்.   ”உன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து போகட்டும்”.   கோபமாக  சாபமிட்ட பிராமணன் போய்விட்டான். அழுது கொண்டே  அதிதி திரும்பி  உள்ளே வந்து  காஸ்யபரிடம் விஷயம் சொல்கிறாள்.

‘அதிதி,  ‘ இதற்கெல்லாம் வருந்தாதே,  அவன் சாபம் பலிக்காது.  அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன்  நமக்கு கிடைப்பான்”  என்றார் காஸ்யபர்.

ரிஷி சொல்லியது போல  பிரகாசமான ஒளி வீசும்  சூரியன் அவர்களுக்கு  மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் ஏழாவது  திதி சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சூரியனின் தேர்  வடக்கு நோக்கி  பயணிக்கும் நாள் ரத சப்தமி. எல்லோருக்கும்  மறந்து போன ஒரு நாள்.

அன்று ஏழு எருக்கம் இலைகளை (தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டு) வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம்.   தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.  மின்சாரம் எப்படி தாமிரக்  கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்க  இலை வழியே இழுக்கப்பட்டு வேகமாக  நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்று நம்பிக்கை.

ரத  சப்தமி அன்று  குளிக்கும் போது சொல்கிற ஸ்லோகம்:
‘ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு  தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம் வ்யபோஹய !’  

மந்திரம்   ஸ்லோகம் தெரியாவிட்டால் தப்பில்லை.  “ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று காலை  சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங் கினாலே சந்தோஷப்படுவான்.   ஆதிகாலம் முதலே  சூரிய வழிபாடு நமக்கு உண்டு.

குளித்தபின் வீட்டில் சூரிய ஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை அளிப்பார்கள். சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை. நைவேத்தியத்தில் கோதுமை  கலந்த பக்ஷணம் இருப்பது உத்தமம்.  செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் சூரியனுக்கு அர்ச்சனை செய்வது விசேஷம்.  சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம்  சாற்றி வழிபட் டால்   பாபம் விலகும். 

முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.
.
இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.  ரத  சப்தமி  தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கிறது புராணம். நமது முன்னோர்கள் இப்படி செய்து பலன் அடைந்தவர்கள்.

தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா பிரமாதமாக  நடக்கும்.  ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி விழா  வெகு சிறப்பு.

ரத சப்தமி அன்று  சூரியன்  ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி, குறிப்பாக வடகிழக்கு திசையில் திருப்பி பயணிக்கும் நாளாகும்.  இனி வெயிலுக்கு பஞ்சமில்லை,இளநீர்,  நுங்கு, ஐஸ்  தேடப்போகிறோம்.  கிராமங்களில் ஒவ்வொருவர் கையிலும் பனை ஓலை விசிறி இருக்கும். தர்பூசணி முலாம் பழ  ஜூஸ் எங்கும் விற்பார்கள். வீடுகளில் சிலர்  நீர் மோர்  தண்ணீர்பந்தல் வைத்து உதவுவார்கள்.
சூரிய தேவனின் தேரோட்டி அருணன்.  சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் தான்  ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில். VIBGYOR . ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்கள் . சூரிய  ரதத்தின்  12 சக்கரங்கள் பன்னி ரெண்டு  ராசிகள். சூரியனின்  வீடு சிம்ம ராசி.  சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திரு ழா சூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியை யும் பெறும் விழா. இன்றும் ரத சப்தமியை கொண்டாடும் பக்தர்கள் அநேகர்  இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.  

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;