THIRUPPALLI EZHUCHCHI 4 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி. 4-  நங்கநல்லூர்  J K  SIVAN
மணிவாசகர்

மார்கழி 24
மணிவாசகர் மட்டுமல்ல நம் எல்லோர்  வாழ்க்கையிலும் நம்மோடு விளையாட ஈஸ்வரன்  காத்திருக்கிறான். நாம் விளையாட முன்வராவிட்டால் அவன் எப்படி விளையாடுவான்?  ஏக்கமாக  இவன் எப்போது நம்மிடம் வருவான் என்று காத்திருக்கிறான்.  நமக்கு  இறைவனின் ஆனந்த சோதனை  பழக்கமில்லையே  அதனால்  அதிசயங்கள் நமக்கு நிகழ்வதில்லை.
மணிவாசகரின் வாழ்க்கையில்  ஈசன் எவ்வாறு விளையாடி அவரை தடுத்தாட்கொண்டான் என்பது ஒரு அதிசயம்.
பாண்டியன் அவரை அழைத்தான்.
 ”வாதவூரரே,  நான் யாரிடம் இந்த வேலையை கொடுக்கலாம் என்று ரொம்ப  யோசித்தபோது நீர் தான் சரியானவர். புத்திமான், விஷயமெல்லாம் அறிந்தவர் என்று தீர்மானித்தேன்.  இந்த மூட்டைகளில் நிறைய  பொற்காசுகள் உள்ளது.  எடுத்துச் சென்று நல்ல குதிரைகளாக  தேர்வு செய்து நமது படையை பலப்படுத்த சிறந்த குதிரைகளை வாங்கி வாரும்” என்றான். வாதவூரர் பொற்காசுகளுடன் புறப்பட்டு  இரவு நேரத்தில்  திருப்பெருந்துறை அடைகிறார். இரவு பயணம் உகந்தகள்ல ஆகவே அந்த ஊரிலேயே  தங்குக்கிறார்.
 மறுநாள் விடிகாலை தூக்கம் வராமல் வெளியே வருகிறார். மனதில் ஏதோ ஒரு  உந்தல்…  பார்ப்பவர்களை எல்லாம் கேட்கிறார்.”இங்கே  ஏதேனும் சிவாலயம் பக்கத்தில் இருக்கிறதா?  யாரேனும்  யோகிகள், முனிவர்கள் குருமார்கள்  இருக்கிறார்களா?”
 குதிரை தேடுவதற்கு பதில் குருவைத் தேட வைக்கிறான்  ஆத்மநாதன். தானே  வயோதிக ப்ராமண குருவாக  அவருக்கு ஞானம் போதிக்கிறான்.  வாதவூரர் தன்னை முற்றிலும் மறந்த நிலையில் தம்மிடம்   இருந்த பொற்காசுகளை  திருப்பெருந்துறை சிவாலயம் புனருத்தாரணம் செய்ய பயன்படுத்தி அங்கேயே  சதா தியானத்திலும்  சிவ சிந்தனையிலும்  உலகை மறக்கிறார்.   மாதக்கணக்கில் நாள் சென்றதால்  பாண்டியன் ஆட்கள் அவரை  அடைந்து  அவர் குதிரை தேடி வந்ததை நினைவூட்ட

”நீங்கள் திரும்பி செல்லுங்கள், ராஜாவிடம் சொல்லுங்கள், குதிரைகள் சீக்கிரம் ஒரு மாத காலத்தில் வந்து சேரும்” .
ஏதோ ஒரு இயந்திரம்  போல் பதிலளித்தார் மணிவாசகர்.  குதிரை வாங்கக்  கொண்டுவந்த பொற்காசுகள் தான்  திருப் பெருந்துறை சிவாலய கோபுரமாகிவிட்டதே. எங்கேயிருந்து எப்படி குதிரைகள் வரப்போகிறது? ஏதோ ஒரு மயக்கத்தில் பதில் சொல்லிவிட்டார்.
 அந்த கோவில் தான் இப்போது  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1100 வருஷ ஆவுடையார்  கோவில்.  நமக்குத்  திருவாசகம் தந்த க்ஷேத்ரம்.

திருப்பெருந்துறை சிவனான ஆத்ம நாதர்   கோவிலில் கொடி மரம்,  பலி பீடம், நந்தி இல்லை கர்ப்ப கிரஹத்தில் லிங்கம் இல்லை. லிங்கமற்ற ஆவுடையார் மட்டும் தான். ஏதோ பூதங்கள் வந்து பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள், சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியதாக ஒரு தகவல். சிறந்த சிற்பக் கலைகள்  நிறைந்த பொக்கிஷம்.  வாழ்வில் ஒரு தரமாவது தரிசிக்க வேண்டிய புனித  ஆலயம்.இந்த ஆலய மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கல் சங்கிலி அற்புதமாக செதுக்கப் பட்டு உயரத்தில் தூங்குவதால் நமது விஷமக்  கைகள் படாமல் காப்பாற்றப்  பட்டிருக்கிறது.  

 ஒருமாத காலம் பொறுத்த பின்னும்   குதிரைகள் வந்து சேராததால் அரிமர்த்தன பாண்டியன்  மணிவாசகரை சிறையில்  அடைத்தான்.   கொடுமைப்  படுத்தினான். மணி வாசகர்  மனம் ஆத்மநாதர் மேலேயே  இருந்ததால், சிவன்   அவருக்காக பரிந்து நரிகளை பரிகளாக்கி அனுப்பினான்,  பாண்டியன் வாதவூரரை சுடும்  வைகை மணலில் வாட்டி வதைத்து
 நிற்க வைத்தபோது பரமேஸ்வரன்  வைகையில்  வெள்ளம் பெருக்கெடுக்க வைத்தான். பாண்டியன்   சொக்கேசனின்
 திருவிளை யாடல்களைப்  புரிந்து கொண்டான்.  வாதவூரர் கால்களில்  விழுந்து அடிமையானான் .

இந்த அற்புத  ஊருக்கு  மஹா பெரியவா  வந்து தங்கினார்.  ஆலயத்தின் அற்புத  சிலைகளின் நேர்த்தியை,  சிற்பக்கலை அழகைக்கண்டு  ரசித்து வியந்தார். இந்த  ஆலய நிர்வாக பராமரிப்பு திருவாடுதுறை  ஆதீன தம்பிரான் மேற்பார்வையில் உள்ளது.  தினமும்  ஆத்ம நாதர், யோகாம்பிகை, மாணிக்க வாசகர், குருந்த மர தரிசனம் செய்து மகிழ்ந்தார்  மஹா பெரியவா.
மஹா பெரியவா  தங்கியிருந்த காலத்தில் மிகவும் உழைத்து  ஸ்வாமிகளுக்கும் மடத்திற் கும் சேவை செய்தவர் நெய்க்குப்பை ஏகாம்பர சேர்வைக்காரர்.   அவரை  இன்னொரு மணி வாசகர் என்று சொல்லலாம். அவ்வளவு சிவ பக்தி, பெரியவாளிடம்  பாசம்,  பக்தி, மரியாதை.
ஆவுடையார் கோவிலில்  சாதுர்மாஸ்யம் முடிந்து  மஹா பெரியவாளின்   விஜய யாத்திரை துவங்கியது.  திருவாடுதுறை ஆதீனம், மடாதிபதி, அதிகாரிகள்  மற்றும்  ஆன்மீகத்தொண்டர்கள்  குவிந்தனர்.  மஹா பெரியவாளுக்கு  பிக்ஷா வந்தனம் அளித்தனர்.
ஆத்மநாதர் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் ஆதி  கயிலாயநாதருக்கு ஒரு தனிக் கோயில். வாதவூராருக்கு ஆத்மநாதன் ப்ராமணராக  குரு உபதேசம் செய்த இடம்.  இக்கோயில் மாணிக்கவாசகர் காலத்துக்கு முன்பே உள்ளது. ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். இப்போது அந்த ஊர் வடக்கூர் (வடக்களூர் என்றும், ஆவுடையார்கோயில் உள்ள இடத்தைக் தெற்கூர் என்றும் சொல்கிறார்கள்.
ஆத்மநாதன்  கிழ பிராமணனாக உருவெடுத்து 300 பிராமண வீட்டு குழந்தைகளுக்கு வேதம் சாஸ்திரம் எல்லாம் சொல்லி கொடுத்து பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து ஒரு பாடசாலை நிறுவினார். பிராமணர்கள் வீட்டிலிருந்து தினமும் புழுங் கலரிசி பாகற்காய் முளைக்கீரை சமைத்து கிழ பிராமணருக்கு உணவு தந்தனர்.
 ஒருநாள் கிழ பிராமண வாத்தியாரை காணோம். சிஷ்ய பிள்ளைகள் தேடினர், வருந்தினார். குழந்தைகளோடு விளை யாடிய கிழவர் தீடீரென மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அன்று ராத்திரி எல்லா சிஷ்ய பிள்ளைகள் கனவிலும் ” திருப்பெருந்துறை ஈஸ்வரன் நான் தான் உங்கள் கிழ வாத்யாராக வந்து கற்பித்தேன்.நீங்கள் கொடுத்த உணவை விரும்பி உண்டேன் ‘ என்றதால் இன்றும் அங்கே புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் சமையல் அன்னம் தான் நைவேத்தியம்.  பிள்ளையார் பெயர் ஸ்ரீ வித்யாகணபதி.
பின்னால் துண்டகன் என்ற முரட்டு மந்திரி ஒருவனுக்கு இந்த கிராமத்தின் மேல் ஆசை உண்டாகி பிராமணர்களை விரட்டி விட்டு சொந்தமாக்கி கொண்டான். ”ஆத்மநாதா, நீயே கதி என்று எல்லா பிராமணர்களும் வேண்ட ஒரு வயதான முதியவர் திருப்பெருந்துறைக்கு வருகிறார்.
”இந்த ஊர் எனக்கல்லவோ சொந்தம். அதற்கு ஆதாரமான பட்டயம் என்னிடம் அல்லவோ இருக்கிறது ” என்கிறார்  முதியவர்.   அவரை வரை பாண்டிய மன்னனிடம் அழைத்து செல்கிறார்கள்.
”யார் நீர் ? உமக்கு இங்கே என்ன வேலை?-என்கிறான் பாண்டியன்.
‘நான் தில்லையை சேர்ந்தவன். என் பெயர் பரமசுவாமி,’
”உமக்கு இந்த சிவபுரம் ஊர் சொந்தமென்று ஏதோ ஆதாரம் இருப்பதாக  சொல்கிறீரே அதைக்காட்டும்” என்கிறான் பாண்டியன்.
ரெண்டு பட்டயங்களை காட்டுகிறார் முதியவர். அதில் நிலத்தின் அளவு எல்லைகள்  காட்டப்படுகிறது.  இங்கே எவ்வளவு வெட்டினாலும் நீர் வராது என்று அரசன் சொன்ன , ஈஸான திசை மேட்டு நிலத்தில் இதோ பார்  என்று   சிவபுரத்தில் நீர் வரவழைக்கிறார். அனைத்துத்  தீர்த்தங்களையும் அங்கே வரவழைக்கிறார், திருப்தி அடைந்த பாண்டியன் துண்டகனை தண்டிக்கிறான். அவனிடமிருந்து ஊர் மீட்கப்படுகிறது.

”இந்த நிலத்தை பிராமணர்கள் சமூகம் பாதுகாக்கட்டும். எனக்கு 300ல் ஒரு பங்கு வருமானம் கோவிலுக்கு இறையிலியாக சேரட்டும்” என்ற கிழவர் காணாமல் போகிறார். அப்போது தான் கிழவராக வந்தது ஆத்மநாத சுவாமி என்று பாண்டியனும் மற்றவர்களும் அறிகிறார்கள்.

தீர்த்தம் : சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம்.

இனி   திருப்பள்ளியெழுச்சி  4வது பாடல்:
பாடல் எண் : 04
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!
பாடல் விளக்கம்‬:

திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற ஆத்மநாத ப்ரபு ,  அடியேனையும் அடிமை கொண்டு, இனிய அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசையை எழுப்பும் வீணை  வாசிப்பவர்கள்,  யாழினை   ஒலிப்பவர்களையும் உடையவரே,  அதோ  ஒரு பக்கத்தில், வேதங்களோடு உம்மை   ஸ்தோத்திரம் பண்ணுகிறவர்கள்  ஒருபுறம். நெருக்கமாக  தொடுக்கப்பட்ட வாசமிகு வண்ண மலர்களால் ஆன மாலைகளை   கைகளில்  ஏந்தியவர்கள் ஒரு பக்கம்,   சிரமேற் கரம் குவித்து வணங்குபவர்கள்,  ஹரஹர மகாதேவா,  ஓம்  நமச்சிவாயர், என்று  வணங்குபவர்கள் ஒருபுறம் ,  பக்தி கண்ணீராக ததும்பி, தளும்பி வழிய  நிற்கும் பக்தர்கள் ஒருபக்கம் உடையவரும்,  கீழே விழுந்து எண்சாண் கிடையாக  விழுபவர்கள்  ஒருபுறமும் காணப்படுகிறார்களே . எல்லோருக்கும் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வீராக.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;