
தங்க மழை ரஹஸ்யம்… நங்கநல்லூர் J K SIVAN
நீ எங்கே இருக்கிறாய்? என யாராவது கேட்டால் நாம் சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம் என்று பதில் சொல்கிறோம். அக்காலத்தில் தொண்டை நாடு என்பார்கள். நடு நாடு, மழநாடு, சேர, சோழ, பாண்டிய நாடு என்று பதில் வரும்.
தொண்டை நாடு, தொண்டைமண்டலம் தான் துண்டீர தேசம். மூக பஞ்சஸதி அப்படி சொல்கிறது. காஞ்சியில் காமாக்ஷி பொன்மழை பொழிய வைத்ததை மூகர் ‘பஞ்ச சதீ’யில் பாடியிருக்கிறார். (கண்டீக்ருத்ய – ஸ்துதிசதகம்). “துண்டீர தேசத்தில் ஸ்வர்ண வர்ஷத்தைப் பொழிந்தவள்” என்கிறார். காஞ்சியைச் சுற்றிய பிரதேசம் தான் தொண்டை மண்டலம். பொன் விளைந்த களத்தூர் என்றே ஒர் ஊர் இருக்கிறது.
ஆதி சங்கரர் ஒரு வீட்டில் பிக்ஷை எடுக்க போனபோது அந்த வீட்டில் வசித்த பரம ஏழை பிராமணனின் மனைவியிடம் ஒரு காய்ந்த நெல்லிக்காய் மட்டுமே இருந்தது. அதை சங்கரருக்கு பிக்ஷை இட்டாள் . அந்த ஏழையின் மனதை பாராட்டி அவள் வறுமை நீங்க சங்கரர் மஹா லக்ஷ்மியை துதிக்க தங்கமலை கொட்டோ கொட்டு என்று அந்த வீட்டுக்கு மட்டும் பெய்தது. கனக தாரா ஸ்தோத்ரம் எழுதியிருக்கிறேன் படியுங்கள். அதே போல் இன்னொரு பொன்மழையை மஹாலக்ஷ்மி ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்காகவும் பெய்ய வைத்தாள் . வேதாந்த தேசிகர், நிகமாந்த மஹா தேசிகர், சுவாமி தேசிகன், ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்’ என்ற பெயர்களும் உண்டு.
குதிரை முகம் கொண்ட மஹா விஷ்ணுவான ஹயக்ரீவர் ஸ்வாமி தேசிகனுக்கு ப்ரத்யக்ஷம் . வடகலை சம்பிரதாயத்திற்கு மூல புருஷர். பொன் பொருள் எதுவும் தொடாமல் பிக்ஷை எடுத்து ஜீவித்தவர். அப்படிப்பட்டவர்களுக்கும் பொறாமையின் காரணமாக எப்போதும் சில விரோதிகள் இருப்பார்களே . ஸ்வாமி தேசிகனை அவமானப் படுத்த சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.அந்த ஊரில் பரம ஏழையான ஒரு அசட்டுப் பிராம்மணப் பையன் கல்யாணமே ஆகாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். பணம், புத்தி இரண்டும் இல்லாத வனுக்கு, யார் பெண் கொடுப்பார்கள்? தேசிகரின் விரோதிகள் இந்தத் தடி மண்டு பிரம்மச் சாரியை க் கொண்டு, அவரை அவமானப்ப டுத்தி விடலாம் என்று நினைத்தார்கள். இந்தப் பைய\னிடம் ”போடா, தேசிக னிடம் கேள். எனக்கு கல்யாணம் ஆகணும். நீங்க எனக்காக பிரார்த்தனை பண்ணி பொன்னும் பணமும் வாங்கி தரணும்’ என்று கேள். என அனுப்பினார்கள். ஸர்வதந்திர ஸ்வதத்திர’ பட்டம் உடைய தேசிகனால் அந்த பையனுக்கு வேண்டிய தனத்தை வாங்கி தர முடியாவிட்டால் அவருடைய பட்டம் வெறும் ஏமாற்று வித்தை என எல்லோரிடமும் பறை சாற்றிவிடலாம் என்று அந்த கயவர்கள் திட்டம் போட்டார்கள்
.
அந்த ஏழைப் பையன் தேசிகனிடம் சென்று தன் கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்று யாசித் தான். (இதிலிருந்து நான் சொல்ல வந்த விஷயத் துக்கு சம்பந்தமில்லாவிட்டாலும், என் மனஸில் ரொம்பவும் முக்கியமாக உள்ள இன்னொரு விஷயத்துக்கும் ஆதரவு கிடைக்கிறது. அதாவது அவர் காலத்தில் – அதாவது எழுநூறு வருஷங்களுக்கு முந்தி – பிள்ளை வீட்டுக் காரன்தான் பெண் வீட்டுக்குப் பணம் கொடுத்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். வரதக்ஷிணை வாங்குகிற பழக்கம் இல்லை என்று நிரூபணமாகிறது.)
வேதாந்த தேசிகருக்கு இந்த பையன் ஒரு அம்பு. எய்தவர்கள் விரோதிகள். இது ஒரு சூழ்ச்சி என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும், அவர் தன்னை அவமானப் படுத்த வந்தவனிடமும் கருணை கொண்டார். “ஸ்ரீஸ்துதி” என்கிற உத்தமமான ஸ்தோத்திரத்தால் மஹாலக்ஷ்மியைப் பிரார்த்தித்தார். உடனே பொன் மழை பொழிந்தது. அதை பிரம்மச் சாரிக்குக் கொடுத்தார். விரோதிகளால் பெரியவர் களுக்குக் கடைசியில் மேலும் பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப் பெருமை உண்டாயிற்று. சங்கரர், தேசிகர் இவர்களின் கருணையிலிருந்து வாக்கு மட்டும் அல்ல, பொன்னும் மழையாகப் பொழிந்தது. அத்வைத ஆசார்யாள், பக்த அநுக்கிரகமாக லக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்தார் என்றால், விசிஷ்டாத்வைத ஆசார்யரோ, விரோதிகளின் ஆளாக வந்தவனுக்கும் அநுக்கிரகத்தோடு அதே லக்ஷ்மியை வேண்டினார்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


