THIRUVEMBAVAI 15 J K SIVAN

திருவெம்பாவை –  நங்கநல்லூர்   J K  SIVAN
மாணிக்க வாசகர்
மார்கழி 15ம் நாள்        —    உள்ளும் புறமும் ஈரம்

 ”ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்”

 இப்படி  புரியாமல்  எழுதுவது தான்  திருவாசகமா என்ற திகைப்பே  தேவைஇல்லை. இது அக்கால தமிழ். இப்படி தான் பேசுவார்கள், எழுதுவார்கள். இன்றும்  இலங்கை வாழ் தமிழர்கள் பேசும் தமிழ் நமது போல் இல்லையே.. அழகான  தமிழ் பண் ,யாப்பு திகழ்ந்ததாக வழக்கத்த்தில் இருந்ததால்  மெட்ராஸ் பாஷை பேசும் நமக்கு கஷ்டமாக தெரிகிறது. புரியும்.  கல்வெட்டில் இருப்பதும் தமிழ் தான். படித்தால் ஏதாவது புரிகிறதா? ஆகவே தான் இந்த பாட்டில்  மணிவாசகர் என்ன சொல்கிறார் என்று அரத்தம் தேடுகிறோம்.

ஆஹா இந்த  புனித  திருவண்ணாமலையைச்  சேர்ந்த  அழகிய பெண்களே!    இதோ இந்த  அதிசய பெண்ணை  பாருங்கள்…. பித்தா பிறை சூடி  பெம்மானே, என்று சதா   ஆடிப் பாடி  ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான்,   என் பெருமான்  என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினால்  உச்சரிப்பதை  விடாதவளாக மன மகிழ்ச்சி  கொண்டவளாக இருக்கிறாள்.  பித்தன் மேல் பிச்சியாக  அலைகிறாள்.  அவளது விழிகளினின்றும்,   ஒருபொழுதும் அவன்   நீங்காதவனாக ,   பொய்கையில்  நீராடிய  நீர் உடலில் சொட்டச் சொட்ட ,  அதைவிட  கண்களில் பக்தியால்  கண்ணீர் பிரவாஹமாக  நீண்ட தாரை தாரையாக ஒழுக,  பூமியின்மேல்  வீழ்ந்து  பரம சிவனை   வணங்குகிறாள்.  என் சிவனே போதும் வேறொன்றும் நான் அறியேன் பராபரமே  என்கிறாள்.

மஹா தேவனான பரமேஸ்வரன் பால்  ஒருவர்  இப்படி  பித்தராக  மாறுவது  சுலபமா?  நான்  ஏன்  நீர் சொட்ட  சொட்ட  ஈரமாக  குளித்து விட்டு  வந்து நிற்கிறேன். அதோ என் சிவன் சிரத்தில் கங்கை ஆறாக பெருகி அவன் உடல் வழியாக ஓடுவது தெரியவில்லையா?.  அவன் மீது வைத்த அன்பினால் தானே  ஈரத்தோடு  நானும்,  ஈரமான அவனை என் நெஞ்சிலும்  பக்திநீர்  ஈரத்தோடு, அதாவது  பக்தி ப்ரவாஹத்தோடு,  ”அன்பே சிவமாக  அமர்ந்திருக் கிறேன்”.   பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திரு வடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில்  குதித்து  ஆனந்தமாக  நீராடுவோம்  வாருங்கள்” என்கிறாள் ஒரு பெண்..

சிவபெருமான்,எம்  பரமேஸ்வரன்  எப்படி   தடுத்தாட்கொள்பவர்?  எப்படி கருணை உள்ளம் கொண்டவர்?  இதற்கு விடை தேடினால்  சுந்தரரைக்  கேளுங்கள்.   கதை கதையாக தன் அனுபவத்தைச்  சொல்வார்.  சேக்கிழார்  தான் அதையெல்லாம்  கேட்டு  பெரிய  புஸ்தகமாக  ”பெரிய”  புராணமாக   எழுதி வைத்திருக்கிறாரே.

மணிவாசகரின்  அழகு தமிழில் அற்புத  பாடலை  ரசிக்கிறோமே . நமக்கு  இப்படிப்பட்ட அரிய  அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும் சைவ சமய சிவனடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை.

பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே வாழ்வின் பெரும்பகுதி பண்பட்டுவிடும் . வேறொன்றும் கற்க தேவையில்லை எனலாம். முதலாவது  நமது  வாழ்வின்  நீளம் இதெல்லாம் முழுதும் கற்க  போதுமா?  என்பது தான் கேள்வி.

இறைவன்  அருளால்  எதுவும்  நிகழும்  என்பதை  ஆழ்வார்களும்  சிவனடியார்களும்  வாழ்வில்  அனுபவித்து உணர்ந்ததைப் பற்றி நாம் நிறைய  கேள்விப்  பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம்.   பரமேஸ்வரன் அடியார்களுக்கு இவ்வாறு அருள் புரிந்ததை  திரு விளையாடல் என்கிறோம். 63  நாயன்மார்கள், பன்னிரு வாழ்வார்கள் வாழ்க்கை சரித்திரமே  பகவான் திருவிளையாடல் தானே.

 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;