EARLY MORNING PRAYER J K SIVAN

ப்ராதஸ் ஸ்மரண ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

விடிகாலை சொல்லும் ஸ்தோத்ரம்

ஆதி சங்கரருக்கு நம்மைப் பற்றி ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே நன்றாக தெரியும். எதற்கும் உதவாத அப்ராணிகள். இவர்களை நாம் தான் நன்றாக வழிநடத்த வேண்டும் என்று யோசித்து. விடிகாலையி லிருந்து இரவு படுக்கப்போகும் வரை நாம் என்னவெல் லாம் நினைக்கவேண்டும், சொல்லவேண்டும், செய்ய வேண்டும் என்று எண்ணற்ற ஸ்லோகங்கள் இயற்றி இருக்கிறார். எந்தெந்த ஸ்வாமிக்கு என்னென்ன ஸ்தோத்திரங்கள் பாடவேண்டும் என்றும் நிறைய தந்திருக்கிறார். நாம் தான் படிப்பதில்லை. இதோ ஒரு நாளே நாலு ஸ்லோகங்கள். ரொம்ப சின்னது தான்.

மிக புண்ய ஸ்லோகமான ”எவண்டி உன்னை பெத் தான், கையில கிடைச்சா செத்தான்” எனும் திரு மந்திரத்தை விட ரொம்ப சின்னது. அதையாவது உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.

ப்ராதஸ் காலம் விடிகாலை. அற்புதமான குளுமையான மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்யமான புத்துணர்ச்சி யை தரும் நேரம். சூரிய உதயத்துக்கு முன் அருணோ தயம் வரும் முன்பான வேளை . பொழுது புலர்வதற்கு முன் நாம் இறைவனை நினைத்து வேண்டும் ஸ்லோகம். மனம் வாக்கு காயம் மூன்றையும் பகவானுக்கு அர்ப்பணிக்கும் ஸ்லோகம்;

விடிகாலை நினைப்பது சொல்வது செய்வது நாள் பூரா நம்மை தொடர்ந்து இருப்பது. இந்த மூன்றே மூன்று
ஸ்லோகங்கள் அத்வைத ஸாரம் .

प्रातः स्मरामि हृदि संस्फुरदात्मतत्त्वं सच्चित्सुखं परमहंसगतिं तुरीयम् । यत्स्वप्नजागरसुषुप्तिमवैति नित्यं तद्ब्रह्म निष्कलमहं न च भूतसङ्घः ॥१॥

Prátah smarámi hrudi samsphuradátmatattvam saccitsukham paramahamsagatim turèyam yatsvapna jágarasussuptamavaiti nityam tadbrahma niskalamaham na cha bhutasañgha.

ப்ராத:ஸ்மராமி ஹ்ருதி ஸமஸ்புரதாத்மதத்வம் ஸச்சித்ஸுகம் பரமஹம்ஸ கதிம் துரீயம்! ய:ஸ்வப்ன
ஜாகர ஸுஷ§ப்த மவைதி நித்யம் தத் பிரம்ம நிஷ்களமஹம் ந ச பூதசங்கா:

இந்த விடிகாலை நேரத்தில் சத்யஸ்வரூபமான ஹ்ருதயத்த்தில் நிறைந்துள்ள ஒளிவீசும் பரமஹம்ஸ வழியில் பேரானந்தத்தை தரும் துரீயமான ஆத்மா வான உன்னை நினைத்து மனதால் ஸ்மரிக் கிறேன், உச்சரிக்கிறேன்.

प्रातर्भजामि मनसा वचसामगम्यं वाचो विभान्ति निखिला यदनुग्रहेण । यन्नेतिनेतिवचनैर्निगमा अवोचं_ स्तं देवदेवमजमच्युतमाहुरग्र्यम् ॥२॥

Pratarbhajámi manasá vacasámagamyam vacho vibhánti nikhilá yadanugrahena yanneti neti vacanair nigamá avocam- stam devadevamajam achyutam áhur agryam.

2.ப்ராதர்பஜாமி மனஸாம் வசஸாமகம்யம்வாசோ விபாந்தி நிகிலா யதனுக்ரஹேண!
யம் நேதி நேதிவாஸனை:நிகமா அவோசன் தம் தேவதேவம் ஜமச்யுதமாஹ§ரக்ர்யம்!!

மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத தேவதேவா, உன்னால் அல்லவோ பிரபஞ்சம் இயங்குகிறது. பிறப்பு பிறப்பற்ற, இதல்ல இதல்ல என ஒவ்வொன்றாக விலக்கி உன்னை அடையாளம் காட்டும் சர்வ வேதங்களும் போற்றும் உன்னை, இந்த விடியற்காலை நேரம் துதிக்கிறேன்.
-இதுவுமில்லை என்றும் வேதங்களில் கூறப்படுபவராக உள்ளார். அவர் அநுக்ரஹத்தால்தான் எல்லா மொழி களும் விளங்குகின்றன.

प्रातर्नमामि तमसः परमर्कवर्णं पूर्णं सनातनपदं पुरुषोत्तमाख्यम् । यस्मिन्निदं जगदशेषमशेषमूर्तौ रज्ज्वां भुजङ्गम इव प्रतिभासितं वै ॥३॥

Prátarnamami tamasah paramarkavarnam pürnam sanátanapadam purushottamaakhyam yasminnidam jagadaseshamaseshamurtau rajjvaam bhujamgama iva pratibhasitam vai.

3. ப்ராதர்நமாமி தமஸபரமர்கவர்ணம்பூர்ணம் ஸநாதனபதம் புருஷோத்தமாக்யம்!
யஸ்மின் இதம் ஜகதசேஷ மசேஷ மூர்த்தௌ ரஜ்வாம் புஜங்கம் இவ ப்ரதிபாஸிதம் வை !!

அஜ்ஞான இருளுக்கு அப்பால் கோடி சூர்ய ப்ரகாசம் போல் இருப்பதும், பூர்ணமாகவும், ஸநாதனம் என்ற சொல்லிற்கிடமாயும், புருஷோத்தமன் என்ற பெயருள்ளதாயுமுள்ள தெய்வமே, உன்னை வணங்குகின்றேன்.அண்ட பகிரண்ட சராசர மூர்த்தியாயுள்ள தேவாதி தேவா, இந்த உலகமே மாயையால் கயிற்றில் ஸர்ப்பம் போல என்னை மதி மயங்கச்செய்கிறதே. அஞ்ஞான இருளகற்றி, நற்கதி அடைய வழிகாட்டு.

श्लोकत्रयमिदं पुण्यं लोकत्रयविभूषणम् । प्रातःकाले पठेद्यस्तु स गच्छेत्परमं पदम् ॥४॥
Slokatrayamidam punyam lokatrayavibhusanam pratahkale pathedyastu sa gacchetparamam padam.

4.ச்லோதத்ரயமிதம் புண்யம் லோகத்ரய விபூஷணம்!ப்ராத:காலே படேத்யஸ்து ஸகச்சேத் பரமம் பதம் !!

அதிகாலையில் இந்த மூனறு ஸ்லோகங்களை படிப்பவர் காலகிரமத்தில் மோக் ஷபதவியையடைவர். ஏனெனில் இவை புண்யமானவை. மூன்று உலகத்திற்கும் சிறப்பா னவை. உடனே மனப்பாடம் செயது விடுங்கள்… மூன்று நான்கு ;தடவை சொல்லிப்பார்த்தாலே மனதில் பதிந்து விடும். அப்புறம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங் கள். வாழ்க்கையில் நல்ல பலனளிக்கும்.

எங்கப்பா ஒவ்வொரு நாள் காலையிலும் சொல்வதை கேட்டு எனக்கு 77-78 வருஷம் முன்பே பாடமாகிவிட்டது

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;