KOUBEENA PANCHAKAM J K SIVAN

கௌபீன பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதிசங்கரர்

கோவணாண்டி, கௌபீன தாரி என்றால் ஏதோ ஒரு கெட்டவார்த்தை இல்லை. அநாகரீகம் என்று இகழ வேண்டாம். மிக உயர்ந்த ஞானிகள், சித்தர்கள், யோகிகள் மானத்தை மறைக்க ஒரு சிறு துணியையே கோவணமாக, ஆடையாக தரித்து லக்ஷக்கணக்கானோர் முன்னிலையில் தரிசனம் தந்திருக்கிறார்கள். மஹா பெரியவாவை நான் கௌபீன தாரியாக பார்த்திருக்கிறேன். ரமணர், பட்டினத்தார் ஆகியோர் முழுக்க முழுக்க கௌபீன தாரிகள் தான். பரமஹம்சர் சில நாட்களில் அப்படிதான் காட்சி அளித்தார். சதாசிவ ப்ரம்மேந்த்ரர் போன்றவர்கள் எதுவுமற்ற அவதூதர்கள். கௌபீனம் முற்றும் துறந்தவனின் அடையாளம். எளிமை, தியாகம், ஆத்ம ஞானம், பற்றற்ற தன்மை ஆகியவற்றின் குறி. கௌபீன தாரி/கோவணாண்டி, சந்நியாசி. உலகத்தோடு ஒட்டாதவன். வைராக்கியம் அடைந்தவன். மோக்ஷம் தேடுபவன். சித்தன்.
கைவலியோபநிஷத் கோவணாண்டியைப் பற்றி சொல்வது: “Yada sarve pramuchyante kamā ye’sya hridi sthitāḥ, atha martyo’mrto bhavatyatra brahma samashnute.” ஹ்ருதயத்தில் இருக்கும் சகல ஆசைகளும் விலகியபோது ஜீவன் அமரத்துவம் அடைகிறான் ப்ரம்மம் உணர்ந்த ப்ரம்ம ஞானியாகிறான்.பட்டினத்தார் பெருமையாக சொல்கிறாரே:

”உடை கோவணம்உண்டு உறங்கப் புறத்திண்ணை யுண்டு உணவிங்கு, அடை காய் இலையுண்டு அருந்தத் தண்ணீர்உண்டு அருந்துணைக்கே விடை யேறும் ஈசர் திருநாமம் உண்டு இந்த மேதினியில் வட கோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே !

‘ எனக்கு உடுத்துக் கொள்ள கோவணம் எனும் கௌபீனம் இருக்கிறது. படுத்து உறங்குவதற்கு ஏதோ ஒரு வீட்டின் வாசல் திண்ணை கண்ணில் படுகிறது. பசித்த போது மட்டும் கடித்து விழுங்க இலைகள், காய்கள் எங்கும் கிடைக்கிறது. தாக மெடுத்தபோது எங்காவது குளம் குட்டை, ஓடை தண்ணீர் இருக்கவே இருக்கிறது. நான் தனியன் இல்லை, எனக்கு சுற்றம் பந்தம் சொந்தம் எல்லாமே உண்டு. யார் தெரியுமா? ரிஷப வாகனம் மீது அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் சிவ பெரு மானின் ஐந்தெழுத்துத் திருமந்திரம் ”ஓம் நம சிவாய ” எனும் பஞ்சாக்ஷரம். அது என்னை பாதுகாக்கிறது அப்புறம் எனக்கு என்ன கவலை? அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனுடைய வடகோடு உயர்ந்தால் என்ன, தென்கோடு தாழ்ந்தால்தான் அது பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்? (மூன்றாம் பிறையின் வடகோடு உயர்ந்து, தென்கோடு தாழ்ந்திருந்தால் மழைக்கு அறிகுறி)

நாம் ஆகாயத்தில் உள்ள நக்ஷத்திரங்களைப் போல, பாலைவனத்தில் உள்ள மணலைப் போல, எண்ணிக்கையில் அடங்காத ஆசைகளைக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு ஆசைகளையும் அடைவதென்பதோ அல்லது முழுமையாக்க முயற்சி செய்வதோ அஞ்ஞானம் எனப்படும். அதுவே அறியாமை. இந்த ஆசைகளே நம்மைக் குழப்பி விடுபவை. எந்த அளவுக்கு இந்த ஆசைகளை அடையத் தலைப்படுகிறோமோ அல்லது அனுபவிக்கிறோமோ அந்தளவுக்கு அவை அதிகமாகிக் கொண்டே இருக்கும். முடிவே இல்லை.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் குரு சமர்த்த ராமதாசரும் கோவண தாரியே . நாம் வணங்கும் முருகனே பழனியாண்டி கோவணதாரி. இனி ஆதி சங்கரரின் ஐந்து கௌபீன பஞ்சகம்:

1. वेदान्तवाक्येषु सदारमन्तो भिक्षान्नमात्रेण च तुष्टिमन्तः ।अशोकवन्तः करुणैकवन्तः कौपीनवन्तः खलुभाग्यवन्तः ॥१॥
Vedantha Vakhyeshu Sada ramantho, Bhikshannamathrena trishtimantha, Vishokamantha karane charantha, Kaupeenavantha Khalu bhaghyavantha . 1
வேதாந்த வாக்கியேஷு சதா ரமந்தோ பிஷான்ன மாத்ரேண த்ரிஷ்டிமந்த விசோகமந்த கரணே சரந்தா,கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா”

நான் ஒரு ஆண்டி. வேறெந்த சிந்தனையும் இன்றி வேதாந்த, சித்தாந்த வனத்தில் சஞ்சரிப்பவன். வேறென்ன வேண்டு மடா?. என் மனம் பூரா வேதாந்த விசாரங்கள் நிரம்பி இருக்கிறது. நான் என்ன பசியாலா வாடுகிறேன்? பசி நேரத்தில் கை நீட்டி எது என் கையில் உள்ள திருவோட்டிலோ, அல்லது நீட்டிய என் உள்ளங் கையில் விழுகிறதோ, அதுவே அன்றைய உடலைக் காக்கும் உணவு என்ற திருப்தி அடைகிறவன். ஓரு கவளம் அன்னம் என் கப்பரையில், விழுந்தால் அது போதுமே. கிடைத்ததை மகிழ்ச்சியோடு உண்பவனுக்கு தனியாக எது ருசி எதற்கு ருசி? எனக்கு ஒரு கவலையும் இல்லை, நான் சந்தோஷத்தில் மிதக்கிறேன், களிக்கிறேன். சுகம் துக்கம் எதையுமே சமமாக அனுபவிப்பதால் எப்போதும் ஆனந்த மானவன், சதானந்தன் வெளி உலகை கவனிக்க விருப்பமோ, நேரமோ, இல்லாமல் எனது ஆன்ம உலகிலே உள்ளேயே உலவுபவன், பகவானை சித்தத்தில் கொண்டு சதானந்தத்தில் ஆழ்ந்தவனுக்கு என்ன குறை?”.
இப்படிச் சொல்லும் இந்த கோவணதாரியல்லவோ ஈடிணையற்ற பாக்கியவான். பெரும் அதிருஷ்ட காரன், ,குபேரனும் கூட.
‘ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான். ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன். ”

2. मूलं तरोः केवलमाश्रयन्तः पाणिद्वये भोक्तुममत्रयन्तः। कन्थामपि स्त्रीमिव कुत्सयन्तः कौपीनवन्तः खलुभाग्यवन्तः॥२॥’
Moolam tharo kevalam ashrayantha, Panidhvayam bhokthuma manthrayantha, Kandhamiapi sthreemiva i kuthsayantha, Kaupeenavantha Khalu bhaghyavantha 2
மூலம் தரோ கேவலம் ஆஷ்ரயந்த பாணித் வயம் போக்தும மந்த்ரயந்த கந்தாமபி ஸ்த்ரீமிவ குத்சயந்த கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா.

வீடு, மனைவி, சமைக்க அடுப்பு, வெளியே சாப்பிட ஓட்டல் எதுவுமே எதுவும் எனக்கு வேண்டாமய்யா. தொப்பென்று மரத்திலிருந்து விழும் காய் கனி, பூமியில் கிடைக்கும் கிழங்கு வகைகள், இலைகள், கொடிகள் இதுவே போதும். ஆடு மாடு மாதிரி உணவு தான் எனக்கும் . இரு கை குவித்து அதில் என்ன விழுகிறதோ, கிடைக்குமோ அதுவே வயிறு நிரம்ப போதுமானது. ஒரு கையகல கிழிசல் துணி ஒன்றே கால்களுக்கு இடையில் என் வஸ்திரம். இதற்கு மேல் செல்வம் உண்மையாகவே எதற்கு?”
ஆஹா, இந்த மரத்தடி வேர் ஆசனம் எவ்வளவு சுகம் தருகிறது. மணம் கமழ் நிழல். கிழங்குகள், வேர்கள், இலைகள், ரெண்டு கவளம் எந்த சோறு கிடைத்ததோ அது கை நிரம்பி விட்டதே. இனி வயிரை நிரப்பிவிடுமே. கிழிசலை ஓட்டுப்போட்ட துணி தான் இந்த உலகத்தில் என் சொத்து,செல்வம் எல்லாம். உடுத்த கோவணம் இணையற்ற செல்வம் என்ற நினைப்பு ஸ்வர்கத் துக்கே தூக்கி சென்று விடுகிறது.
”ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான்.ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.”

3. स्वानन्दभावे परितुष्टिमन्तः सुशान्तसर्वेन्द्रियवृत्तिमन्तः । अहर्निशं ब्रह्मसुखे रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ ३॥
Swanandha bhave pari thushti mantha,Sushantha sarvendriya vruthi mantha, Aharnisam brahma sukhe ramantha, Kaupeenavantha Khalu bhaghyavantha 3
ஸ்வானந்த பாவே வ பரி துஷ்டி மந்த சுஷாந்த சர்வேந்திரிய வ்ருத்தி மந்த அஹர்ணிசம் பிரம்ம சுகே ரமந்த கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா.

எனக்கு யார் கூடவும் பேசவேண்டாம். அவசியமே இல்லை ஐயா. என்னைத் தனியாக இருக்க விட்டால் அதுவே மஹா சந்தோஷம். எனக்குள்ளேயே எனக்கு ஆனந்தம் இருக்கும்போது வெளியே எங்கே யாரிடம் அதை தேடவேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறது? என்னை எதுவும் அணுகாது. நானும் எதையும் நெருங்காது என்னை அடக்கி ஆள்கிறேன் . எனக்கு நானே ராஜா. இல்லையா? இப்படிப் பட்ட ப்ரம்மானந்தத்தில் யார் என்னைப் போல் திளைக்க முடியும் ?

எண்ணமே எங்கே ஓடுகிறாய், வெளியே?, போ திரும்பி உள்ளேயே , அங்கே இல்லாத சுகமா வெளியே? என்று எண்ணங்கள் மற்றும் ஐந்து புலன்களையும் கட்டுப்பாட்டில் கொண்டவன், ஜிதேந்த்ரியன், புலனடக்கிய சக்ரவர்த்தி, இரவு பகல் என்று இல்லாமல் சதா சர்வ காலமும் பிரமத்தில் ஐக்யமாகி சுகிப்பவன்,
”ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான்.ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன். ‘

4. देहादिभावं परिवर्तयन्तः स्वात्मानमात्मन्यवलोकयन्तः ।नान्तं न मध्यं न बहिः स्मरन्तःकौपीनवन्तः खलु भाग्यवन्तः
Dehadhi bhavam parivarthayantha,Swathmana athmanyavalokayantha,Naantha na Madhyam na bahi smarantha, Kaupeenavantha Khalu bhaghyavantha 4
தேஹாதி பாவம் பரிவர்தயந்த ஸ்வாத்மனா ஆத்மன்யவலோக யந்த நாந்தன மத்யம் ந பஹி ஸ்மரந்த கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா”

நான் வேடிக்கை பார்க்க எதற்கும் எங்கும் போவதில்லை. நிறைய வேடிக்கைகள், ஆட்டங்கள் பாட்ட ங்கள் என் உடம்பிலேயே நிகழ்ச்சிகள் மாற்றங்களாக நிறைய நடக்கின்றனவே. அவற்றை பார்த்து ரசிக்கவே எனக்கு நேரம் போதவில்லையே. எங்கோ கடையில் ஷோ கேஸில் அடுக்கி வைத்திருக்கும் பொம்மையைப் பார்ப்பது போல் ஆர்வமாக என் உடம்பையும் , அதன் மாறுதல்களையும் வேடிக்கை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப வினோதமாக உள்ளது. இந்த உடம்பு நம்மை கேட்காமலேயே எப்படியெல்லாம் மாறுதல்களை அடைகிறது!. நரை, திரை, மூப்பு! அட, அதற்குள் ஏன் தலையில் முடியையே காணோம்? எப்படி யாரைக் கேட்டு மறைந்தது? சில பற்கள் எப்போது விழுந்தது?, ஏன் கொஞ்சமும் காது கேட்கவில்லை. உலகமே அமைதியாகிவிட்டதோ? ஆடி விழாமல் நடக்க எதற்கு ஒரு மூங்கில் கம்ப தேவைப்படுகிறது. கால்களே என்னை புறக்கணித்து ஏமாற்றுகிறீர்களா? எப்போது என் முதுகு தானாகவே வளைந்தது? தெரியவில்லையே. இத்தனை மாற்றங்கள் என் உடம்பில் ஏற்பட்டும் இந்த மனத்தில் ஏன் ஆசை மட்டும் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருக்கிறதே.இல்லை இல்லை இன்னமும் அதிகரித்து வளர்ந்து கொண்டே வருகிறதே. என்ன ஆச்சர்யம்!

சே. நான் ஏன் என் உடம்பை பற்றி கவலைப்பட வேண்டும்? நான் தான் இந்த உடம்பில்லையே, பரிபூரண ஆனந்தமயன் ஆச்சே. ஆரம்பமோ, நடுவோ முடிவோ எதுவும் இல்லாதது ‘நான்’ என்கிற ஆத்மா. இப்படிப் பட்ட சுகம் வேறே எங்கே ஐயா கிடைக்கும்? தேகமில்லாத ஆத்மாவாக என்னை கண்டு கொண்டன். முடிவோ, நடுவோ, எதுவுமே லக்ஷ்யமில்லாதவன்.
‘ஏ கோவண தாரியே , நீ தானடா பாக்யசாலியடா.. .ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.’

5. ब्रह्माक्षरं पावनमुच्चरन्तो ब्रह्माहमस्मीति विभावयन्तः । भिक्षाशिनो दिक्षु परिभ्रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥
Brahmaksharam pavanamucharantho, Brahmahamasmeethi vibhavayantha, Bhikshashano dikshu paribramayantha, Kaupeenavantha Khalu bhaghyavantha 5
ப்ரம்மா க்ஷரம் பாவன முச்சரந்தோ ப்ரம்மாஹ மஸ்மீதி விபாவயந்தா பிக்ஷா ஷனோ திக்ஷு பரிப்ரமயந்த கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா

வாயைத் திறந்தாலும், திறக்காமல் இருந்தாலும் , மனதில் எப்போதும் எனக்கு ப்ரம்ம ஸ்மரணை தானே. ஸர்வம் பிரம்மமயம் என்று ஆடிப் பாடுபவன் ”நானே தானடா அந்த ப்ரம்மம்” என்ற நினைப்பில் களிப்பவன், எங்கே, எதற்கு, ஏன், என்றே தெரியாமல், கால் போனபடி சுற்றும் சுதந்திரப் பறவை. விழிப்பிலும் உறக்கத்திலும் கூட. ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் அலைந்து கொண்டே இருப்பது தான் என் வேலை, எங்கு எது கிடைக்கிறதோ அதுவே உணவு. அதைத் தேடி அலைவதில்லை ஐயா. இதற்குமேல் ஒருவனுக்கு எது அதிருஷ்டம்? நீங்களே சொல்லுங்கள்?”ஏ கோவணதாரியே , நீ தானடா பாக்யசாலி. ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.’

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;