

ஒரு காதல் கீதம் – நங்கநல்லூர் J K SIVAN
அவன் ஒரு அற்புதமான மனிதன். அவன் மனதில் ஒரு காதல் கொழுந்து விட்டு எரிகிறது. யார் மேல் என்று எனக்கு தெரியவில்லையே. காதலின் உச்சியில் எதிராளியின் பெயர் மறந்து போய்விடும். கண்ணே, மணியே, கிளியே என்று தானே கூப்பிடுவோம். கண்ணம்மா என்று அவன் அவளை கெஞ்சுகிறான்,கொஞ்சுகிறான். அவன் குரல் மட்டும் அமிர்தமாக எனக்கு கேட்கிறது. அதை அப்படியே உங்களிடம் சொல்லிவிடமெண்டும் என்று என் மனது துடிக்கிறது. இது தான் நான் கேட்ட அந்த காதல் சங்கதி:
”கண்ணம்மா, இதை நான் உன்னிடம் சொல்லவில்லையே, இதோ சொல்கிறேன் கேள். இந்த தென்னண்டை காற்று அது தான் தென்றல், என் மீது வீசும்போது இன்னொரு வேலையும் செய்கிறது. என் மனதில் உன்னைப்பற்றிய மனோகரமான பிரேமையை வெளிப்படுத்தி என்னை மகிழ்விக்கிறது. அப்படி உன்னை நினைக்கும்போது என்னவெல்லாம் என் கண் முன் தோன்றுகிறது தெரியுமோ? உன் பால் நிலா முகத்தில் அழகிய இதழ்கள்..அமிர்தம் ஒரு ஊற்றாக சுரக்கும் உன் இதழ்கள் , உன் கண்ணிலிருந்து பெருகி வழியும் நிலவின் குளுமை, பத்தரை மாத்து தங்கம் போல் ஜொலிக்கின்ற உன் பொன்மேனி. என் கடைசி மூச்சு உள்ளவரை உன் இந்த அழகிய உருவம் என்னை ஆளுமை செய்து இந்த உலகையே எனக்கு தேவலோகமாக ஆக்கிவிடுகிறது.
எனக்கு உயிர் எங்கே என்று கேட்டால். நான் எங்கும் அதைத் தேட வேண்டிய அவசியமே இல்லை. இதோ நீ என்று உன்னை காட்டிவிடுவேன். சதா சர்வ காலமும் நேரமும் நீதானே என் மூச்சு. உன்னை ஒரு தரம் கண்டாலே போதும். என் எல்லா கவலைகள், துன்பங்கள், எத்தனையோ வலிகள் எல்லாமே காணமல் போய்விடுகிறதே. உன்னைக் கண்ணம்மா என்று தானே நான் எப்போதும் வாய் நிறைய கூப்பிடுவேன். அப்போது என் வாயில் ஊறுவது எச்சில் அல்ல அமிர்தம். என் உயிரையே தீயாக மூட்டி அதில் கொழுந்து விட்டு எரியும் அக்னியில் ஸ்புடம் போட்ட தங்கமடி நீ. ஒளிவீசும் திவ்ய ஜோதி. எனக்கென்று ஒரு எண்ணமோ சிந்தனையோ இருந்தால் அது கண்ணம்மா நீயன்றி வேறில்லை.”இந்த காதல் வசனம் ஒரு அற்புத பாட்டாகவே வெளிப்பட்டது அந்த அற்புத கவிஞனிடமிருந்து.அவன் கண்ணம்மா என்று அழைத்தது யாரோ ஒரு பெண் என்று நினைத்தால் என்னைப்போலவே நீங்களும் தப்பு . ZERO மார்க் தான். அவன் கண்ணம்மா என்று அழைத்தது சாக்ஷாத் ஸ்ரீ க்ரிஷ்ண பரமாத்மாவை. அவர் அவனுக்கு கண்ணம்மா. இன்னொரு செல்லம்மா.
பிரபல பாடலாக வெளிவந்து என்றும் பலர் நெஞ்சில் குடிகொண்ட இந்த பாரதி பாடலை கேட்கும்போது கண்ணனை கண்ணம்மாவாக கண்டு அனுபவிக்க கொடுத்து வைத்தவர்கள் புண்ய சாலிகள் தான் என்பதில் சந்தேகமே இல்லை.
” காற்று வெளியிடைக் கண்ணம்மா — நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; — அமு
தூற்றினை யொத்த இதழ்களும் — நில
வூறித் ததும்பும் விழிகளும் — பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் — இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே — இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே — இந்தக்(காற்று வெளி)1
நீயென தின்னுயிர் கண்ணம்மா — எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் — துயர்
போயின, போயின துன்பங்கள் — நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே — என்றன்
வாயினி லேயமு தூறுதே — கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே — உயிர்த்
தீயினி லேவளர் சோதியே — என்றன்
சிந்தனையே என்றன் சித்தமே! இந்தக்(காற்று வெளி)
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



