VEMANA J K SIVAN

தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN

எந்த மொழியும் ஒன்று தான்.அனைத்திலும் அறிஞர்கள், மஹான்கள் யோகிகளின் அற்புத எண்ணங்கள் பதிந்திருக்கிறது. அந்தந்த மொழிகள் எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு பொது மொழியில் அவற்றை ஓரளவு ருசி இல்லாமல் கருத்தை மட்டும் அறியும்போது நாம் பாக்கியசாலிகள் தான். பயன் பெருகிறோமே! அப்படித்தான் வேமனா என்ற தெலுங்கு பட்டினத்தாரின் தத்துவங்கள் என்னை மகிழ வைத்ததால் அவ்வப்போது ஒவ்வொரு டீ ஸ்பூனாக உங்களுக்கு அளித்து வருகிறேன்.ருசிக்கிறாரா வேமனா? படிக்கும் உங்களுக்கு பிடிக்கிறாரா?
நம்மை விட வெள்ளைக்காரர்கள் கெட்டிக்காரர்கள், புத்தி சாலிகள். பல பாரத தேசத்தின் பல வித செல்வங்களை கொள்ளை அடித்துச் செல்லும்போது நமது மொழிகளைக் கற்று அவற்றில் உள்ள அறிவுப் பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டு போய் விட்டார்கள். அறிவை திருட முடியாதே. ஆகவே அவர்கள்ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததில் ஆங்காங்கே சிலவற்றை நாமும் ஆங்கிலம் தெரிந்திருப்பதால் படித்து மகிழ்கிறோம். வெட்கக்கேடு. நம் வீட்டு தோசை மாவை எடுத்து நமக்கு இட்டலி தோசை செய்து விற்கிறார்கள். அதை தின்னுப்புட்டு ஆஹா அற்புதம் என்று பாராட்டி கை தட்டுகிறோம்.

இன்று கொஞ்சம் வேமனா பரிமாறுகிறேன்.

Gangi govu paalu garitadainanu chaalu……..గంగి గోవు పాలు గరిటడైనను చాలు
Kadivedainanemi kharamu paalu……………………కడివెడైననేమి ఖరము పాలు
Bhakti kalugu koodu pattedainanu chaalu…..భక్తి కలుగు కూడు పట్టెడైనను చాలు
Viswadhaabhiraama, Vinura Vema………………………విశ్వధాభిరామ, వినుర వేమ

“ஒரு உத்ரணி சுத்தமான காராம்பசுவின் பாலுக்கு ஒரு குடம் கழுதையின் பால் ஈடாகுமா? . அன்பாக உபசரித்து உண்மையான பாசத்தோடு ஒரு கரண்டி சாதம் போதுமே, “இந்தா கொட்டிக்கோ” என்று மனதில் நினைத்துகொண்டு ஒரு வாழை இலை நிறைய விருந்து வைப்பதை விட. என்னடா வேமா நான் சொல்வது சரிதானே’

Atmasuddhi leni acharamadi ela……………….ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela……………….భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara……………………చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema…………….విశ్వధాభిరామ, వినుర వేమ

ஆத்மாவில் சுத்தமில்லாமல் ஆச்சாரமாக மடியாக இருந்து என்ன பயன்? பாத்திரத்தை சுத்தமாக துலக்காமல் பாயசம் அதில் பண்ணி என்ன புண்ணியம்? சித்தத்தை அவன் பாலே வைக்காத சிவன் பூஜையால் யாருக்கு பலன் ? சொல்லுடா வேமா இது கரெக்ட் தானே?”

Kaligi dharmam iiyan Kaanani vaaru nu Kaligi tinaka caala Kraagu vaaru Kalimin ecat`a cuud`an Kaanaka ced`uduru Vis`vada abhi raama Vinura Veema!

‘கலிகி தர்மம் லியன் காணனி வாறு னு களிக்க தினக சாலை கிராகு வாறு கலீமின் எக்கட்ட சூடான காணக சேடுரு விஸ்வாதாபி ராம வினுரா வேமா.’

கடவுள் அருளால் நிறைய செல்வம் இருந்தும் அதை எப்படி தர்மம் செய்ய வேண்டும் என்று தெரியவுமில்லை, அறியவும் இல்லை. செல்வம் எதற்காக தரப்பட்டுள்ளது? நாம் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும் எவரும் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்டவனிடம் செல்வம் இருந்து என்ன பயன்.? அவனுக்கே அது பயனில்லை. அது அவனை விட்டு வெகு சீக்கிரம் நீங்கிவிடும் என்றும் அவன் அறியமாட்டான்.பாவம் ஏதோ கனவில் இருக்கட்டுமே. இருக்கிறவரை சந்தோஷம் தானே. என்னடா சொல்கிறாய் வேமா, வாஸ்தவம் தானே ?

Taamu gad`ana seeyu Dhanamu tamadi ani Nammi umd`u verri Narulu bhuvi ni Taamu okarik iccu Dhanam imtiyee kaaka Kad`amadi tana keela Kalugu Veema!
தாமு கடனதமது சீயு தனமு தமதி அணி நம்மி உண்டுவெர்ரி நருலு புவி நீ தாமு ஒக்கரிக்கிச்சு தானம் இமடியே காக கடமடி தான கீழ கலுகு வேமா.

“அடே முட்டாளே , நன்றாக புரிந்துகொள். உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது. அதை நீ சம்பாதித்தது என்று மனப்பால் குடிக்காதே. வந்த வழியே அது செல்வதால் தான் அதற்கு ‘ செல்வம்’ என்று பெயர். கடைசியில் உன்னிடம் மிஞ்சப்போவது நீ செய்த ( எந்த ஜென்மத்திலாவது கொஞ்சம் செய்திருந்தால்!!) அந்த தர்மத்தின் பலன் மட்டுமே. புரிகிறதாடா வேமா நான் சொல்வது?

Aakal anna vaanik Annambu pet`t`ina Harunak arpitamu gan Aaaragimcu
Dhara vihiinunakunu Daanamu at`u vale Vis`vada abhi raama vinura Veema!

“பசி காதடைக்க வயிறு ஒட்டி கண் பஞ்சடைந்து நிற்கிறானே அவனுக்கு சோறு போடு. அவன் சந்தோஷமாக சாப்பிடுவ தைப்பார். உற்றுப்பார்த்தால் நீ அந்த பரம சிவனுக்கே அன்னமிட்டதை உணர்வாய். அதன் இணையற்ற பலனும் உன்னைச்சேரும். இது எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுடா வேமா?”

Taanu tinaka at`ula Dharmamu seeyaka Kod`ukulak ani dhanam Kuud`a pet`t`I
Teliya ceppa leeka Tiiri pooyina venka Sommu parula namdu Cuud`u Veema!

ராவும் பகலுமாக பணத்தைத் தேடி அலைவான். பணத்துக்காக எதையும் செய்வான். நிறைய பணம் சேர்ந்துவிட்டதே! அதில் ஏதாவது கொஞ்சமாவது பிறருக்கு உதவும் படி தானமும் இல்லை தர்மமும் இல்லை. கஞ்சப் பிரபு. இப்படி அந்த முட்டாள் சேர்த்த பணம், செல்வம், என்ன வாகும் தெரியுமா? ஒருநாள் எங்கோ ஒரு திருடனுக்கும் ராஜாவுக்கும் வரி கட்ட ஏமாற்ற நினைத்து க்கும் பயந்து சேமித்து ரகசியமாக புதைத்து வைத்திருப்பான். தனது பிள்ளை குட்டிக்கு பிற்காலத்தில் உதவட்டும் என்று. அந்த பிள்ளை குட்டிக்கு அவன் தனது செல்வம் எங்கே புதைத்து வைத்திருக்கிறேன் என்று சொல்வதற் குள் திடீர் என்று செத்தும் போவான். கடைசியில் யாருக்கோ ஒருவனுக்கு அது புதையலாக கிடைக்கும்! அப்படித் தானேடாஉலகத்தில் நடக்கிறது வேமா?

Daana dharmamulunu Daya yu satyamu niiti Vinaya dhairya s`aurya Vitaran`amulu Raaju paalit`iki ivi Raaja yogamulu Vis`vada abhi raama Vinura Veema.

ராஜா என்று பேருக்கோ அல்லது ராஜா என்ற பேரோடோ பணத்தை சுருட்டிக்கொண்டு ஒருவன் ஓடிவிட்டால்,மறைத்து வைத்தால்

இருந்தால் எத்தகைய ராஜா அவன்?. ஒரு ராஜா எப்படியிருக்க வேண்டும் என்றால் வினயத்தோடு, தர்ம சிந்தனை யோடு, தயையோடு, தானத்தில் ஈடுபட்டுக்கொண்டு, வீரத்தோடு, தைர்யத்தொடு, விதரணையோடு இருந்தானானால் அவனுக்கும் அவனால் அந்த ஊருக்கே பெரும் புகழ் சேரும். இல்லையாடா வேமா, நீ என்ன சொல்கிறாய்?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;