
கிருஷ்ணன் மனதிற்கினியன். நங்கநல்லூர் J K SIVAN
தேவர்களும் ரிஷிகளும், கடவுள் அம்சங்களும் எப்படி கிருஷ்ணாவதாரத்தில் பங்கு கொண்டார்கள் என்று ஒரு சில நிமிஷங்கள் யோசித்தேன். எப்போதோ ஒரு பழைய டைரியில் சில குறிப்புகள் எடுத்து வைத்து க் கொண்டதை பல வருஷங்களுக்குப் பிறகு இப்போது திரும்ப பார்க்கும்போது, அப்போது எனக்கு தோன்றாத சில அற்புத, ஆச்சர்ய, அதிசய விஷயங்கள் மனதில் படுகிறது.
பசு எப்போதோ சாப்பிட்ட புல்லை சுகமாக ஒரு மர நிழலில் அமர்ந்து அசை போட்டு இன்புறுவது போல நானும் அந்த பழைய சமாச்சாரங்களை இப்போது அசை போடுகிறேன். பசு தான் உண்டதை அசை போட்டு நமக்கு பாலை தருகிறது. நானும் பசுவைப் பின் பற்றி எனக்கு பிடித்த விஷயங்களை அசை போட்டு உங்களுக்கு அளிக்கிறேன். ஆனாலும் நான் பசு ஆகமாட்டேன்.
கிருஷ்ணனின் எட்டு மனைவிகளில் ஒருத்தி ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி, அவளுக்கு பிறந்தவன் ஸ்கந்தன். ஜாம்பவதி பாதி பார்வதி அம்சம் என்பார்கள். என் அம்மாவுக்கு தாத்தா ஜாம்பவதி என்கிற பேரை ஏன், எப்படி தேர்ந்தெடுத்தார்? இது இன்று வரை எனக்குத் தெரியாத ஒரு புதிர்.
மன்மதனும் ரதியும் எப்படி கிருஷ்ணன் வாழ்வில் பங்கு கொண்டார்கள்? கிருஷ்ணன் ருக்மிணிக்கு மகனாகப் பிறந்த ப்ரத்யும்னன் தான் மன்மதன். ரொம்ப அழகன். சம்பராசுரன் பெண்ணாக பிறந்தவள் ரதி.
பாரதி (சரஸ்வதி) பாணாசூரன் மகள்.
கிருஷ்ணனின் பேரன் (ப்ரத்யும்னன் மகன்) அநிருத்தனாக தோன்றியது ப்ரம்மா.
ஆதிசேஷன் தேவகியின் கர்பத்தில் உதித்து ரோகிணிக்கு மகனாக மாற்றப் பட்டு பலராமனாக பிறக் கிறான். ஒரு கர்பத்திலிருந்து மறு கர்ப்பத்திற்கு மாறியதால் அவனுடைய விசேஷ பெயர் சங்கர்ஷணன்.
சூர்யனின் குமாரி யமுனா காளிந்தியாக வந்து கிருஷ்ணன் மனைவியாகிறாள்.
லக்ஷ்மணை தான் துளசி. கிருஷ்ணன் சூட்டிக் கொள்கிறான். இன்றும் நான் விஷ்ணு, பெருமாள் கோயில்களுக்கு கை நிறைய கொண்டு போகிறோம்.
வசுதா தான் சத்யபாமா. சரஸ்வதி சாயாவாகிறாள். ஸ்வாஹா தேவி குசேலன் மனைவி சுசீலா .
ரத்னமாலா சூரியனின் மனைவி சஞ்சனாவாக தோன்றுகிறாள்.
தாமரை இதழ்கள் 16000 கோபியராக கிருஷ்ணனின் ஜோடிகளாகிறார்கள்.
தர்ம தேவதை யுதிஷ்டிரனாக உருவெடுக்கிறான்.
வாயு தேவன் பீமனாகிறான். கேட்கவே வேண்டாம். இந்திரனின் அம்சம் அர்ஜுனன்.
அஸ்வினி குமாரர்கள் நகுல சஹாதேவர்கள்.
யமதர்மன் விதுரன். கர்ணன் சூர்யனின் அம்சம்.
காளி தான் துர்யோதனன். சமுத்ரதேவன் தான் சந்தனு மகாராஜா.
சந்திரன் தான் அபிமன்யு.
அஷ்டவசுக்களில் எட்டாவது வாசு பிரபாசன் தான் பீஷ்மன்.
காச்யபர் தான் வசுதேவன். கிருஷ்ணனின் தந்தை ரோல் அவருக்கு. அதிதி அப்படி என்றால் தேவகி தானே. வசுவும் வசுபத்னியும் நந்தகோபன் யசோதா எனும் கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தையும் தாயும்.
தாமரையின் அம்சம் திரௌபதி. யாக குண்டத்தில் பிறக்கிறாள் .த்ருஷ்டத்யும்னனும் அவ்வாறே பிறக்கிறான்.
சுபத்ரா ஷதரூபா அம்சம்.
விட்டுப்போன அனைத்து தேவர்கள் தேவ பத்னிக்கள் எல்லோருமே கோப கோபியர்கள். எல்லாமே கிருஷ்ணன் ஏற்பாடு தானே.
கர்க ரிஷி தான் கிருஷ்ணனுக்கு அப்படி ”கிருஷ்ணன்” என்று நாமகரணம் செய்கிறார்.
”க” காரம் பிரம்ம வாசகம்.
”ரு” ‘கரம் அனந்த (சேஷ) வாசகம்.
”ஷ ”காரம் சிவன்
”ண” கரம் தர்ம வாசகம்
.”அ ”காரம் விஷ்ணுவாசகம்.
விஸர்கம் நர நாராயண அர்த்த போதகம் என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.எங்கோ படித்தேன்.
”கிருஷ்ணன்” என்கிற பெயர் இதனால் என்ன விளக்குகிறது? சர்வ ஸ்வரூபன். எல்லா(ரு )மே சேர்ந்தது என்று காட்டுகிறது. சர்வ ஆதாரம், சர்வ பீஜம். ”கிருஷ் ” சப்தமே நிர்வாண வாசகம். ”ண ” வாசகம் ஒரு மோக்ஷ போதகம். ஸர்வம் கிருஷ்ணமயம் ஜகத் புரிகிறதா?
கிருஷ்ணன் மோக்ஷம் (நிர்வாணம்) அளிப்பவன். ”கிரிஷ் ” என்ற சொல் நிஷ் சேஷ்ட (ஒன்றுமே பண்ணாமல் சும்மா இருப்பது ) என்றும் பொருள் படுகிறது. ”ண ” என்றால் பக்தி ‘ஆ” சேரும்போது பக்தி உண்டாக் குபவன் என்று அர்த்தம் கொடுக்கிறது. ஆகவே,கிருஷ்ணன் நிஷ்காம தாதா. அதாவது நாம் செயல்களை பலன் எதிர்பார்க்காமல் செய்ய அருள்பவன் என்று புரிகிறதல்லவா? நந்தகோபன் என்னென்ன பேர் எல்லாம் வைத்தான் கிருஷ்ணனுக்கு என்று உங்களுக்கு தெரியாவிட்டால் கீழே லிஸ்ட் தருகிறேன்.
கிருஷ்ணன், பீதாம்பரன், கம்ச த்வம்ஸி , தேவகி நந்தன் , யசோத நந்தன், ஹரி, சர்வேஷன், சர்வரூபன், சர்வாதாரன், சர்வ கதி, சர்வ காரணன். இன்னும் எத்தனையோ….
பலராமனுக்கு நந்தகோபன் இட்ட பெயர்களைப் பார்ப்போமா:
ஹலதாரி, சங்கர்ஷணன், அனந்தன், பலதேவன், நீலாம்பரன்,முசலி, ரேவதிரமணன், ரோஹிணீயன்.
கிருஷ்ணனை பற்றி எதை தெரிந்துகொண்டாலும் மனதுக்கு இனிக்கிறதல்லவா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

