
உபநிஷத் விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN
உபநிஷத் என்பது வேதாந்த சாரம். பெரிய சமுத்திரத்தின் சிறிய குளம்,குட்டை வடிவம். பழத்தின் விதை. உபநிஷத் என்றால் ஏதோ நமக்கு புரியாதது, பேசாமல் தூரமாகவே நின்று கைகட்டி பார்த்துவிட்டு திரும்பி மறந்து போக வேண்டிய விஷயம் என தான் கருதுகிறோம். கொஞ்சம் யோசித்து ஆர்வமுடன் பார்த்தால் அடடா இத்தனைநாள் இதை கவனிக்காமல் போனோமே என்று தோன்றும். இதற்கு எல்லாம் நமது மனசே காரணம்.
பல உபநிஷதங்கள் உள்ளன. இஷோ பநிஷத் என்று ஒன்று. அதில் ஒரு விள்ளல். ருசி பாருங்கள்.
மொத்தம் 4 வேதம். (சாம , யஜுர், ரிக், அதர்வ)
ரிக் = தெய்வம், தேவதைகள் சம்பந்தப்பட்டது.
யஜுர் = நாம் செய்ய வேண்டிய கர்மா, பற்றியெல்லாம் சொல்வது
சாம = கடவுளோடு சம்பந்தபடுத்துவது, உபாசனை,
அதர்வ = உலக சம்பந்தப்பட்ட விஷயங்கள் , வாழ்க்கை குடும்பம் போன்றதில் ஈடுபட.
இஷோபநிஷத் என்ன சொல்கிறது;
முழு உலகுமே பகவானின் ஸ்ருஷ்டி . அவன் எங்குமிருப்பவன் சர்வ வியாபி.
பிரபஞ்சமே ஏதோ ஒரு வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒருநாள் எல்லாவற்றையும் நாம் உதறிவிட்டு உலகில் அனுபவித்தது போதும் என்று கிளம்ப போகிறோம். எதுவும் நம் சொந்தம் அல்ல.
பகவான் என்பவர் அணுவிலும் அணுவானவர், குட்டியிலும் குட்டியாக இந்த பிரபஞ்சத்தில் எதிலும் இருப்பவர்.
நாம் எதை நினைத்தாலும், செய்தாலும் எல்லாமே அவருக்கு தெரிகிறது. சகலத்தையும் பார்த்துக்கொண்டே , கேட்டுக்கொண்டே தான் இருக்கிறார். (ஜாக்ரதை!!)
பகவான் எதற்காக நம்மை உருவாக்கியிருக்கிறார் ?
உலகில் சொந்த பந்தம், வாழ்வு சாவு, எல்லாம் புரிந்துகொள். கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து மீண்டு, விடுபட்டு ஆனந்தமாக இரு. இது எல்லாம் நம்மை விட்டு போனால் தான் ஆனந்தம். சுற்றிலும் அவை நம்மை சூழ்ந்து கொண்டு இருக்கும்போது அல்ல.
இதை தான் திருமந்திரத்தில் அற்புதமாக திருமூலர் 4 வரிகளில் பாடுகிறார் ;
”ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்,
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்,
ஆசை படப்பட ஆய் வரும் துன்பம்,
ஆசை விட விட ஆனந்தமாமே ” .
அந்த ஆனந்த நிலை தான் மோக்ஷம், முக்தி எனப்படுவது.
நாம் வீட்டில் இருப்பதையே ஏதோ ரயில்வே ஸ்டேஷனில் அடுத்த ட்ரெய்னுக்கு காத்திருப்பது போல் நினைப்பு வரவேண்டும். (பட்னத்தார் சொன்னது ஞாபகத்துக்கு வரட்டும். காது அறுந்துபோன ஊசி கூட நம்மோடு கடைசியில் வரப்போவதில்லை)
இப்படி ஒரு எண்ணம் வந்தால் என்ன ஆகும்?
1. உலக இன்ப விஷயங்களில் கொஞ்சம் ஈடுபாடு குறையும்.
2 எது பார்த்தாலும் வேணும் என்பது குறைந்து போய் எது ரொம்ப ரொம்ப அத்யாவசியமோ அது மட்டும் போதுமே என்று தோன்றும் .
3. எது நடந்தாலும், ”அதக்கென்ன பண்றது ஏதோ நடந்துட்டுது என்ன பண்ண முடியும். எல்லாம் அது அது எப்படி நடக்க ணுமோ அப்படி தானே நடக்கும் ” என்கிற எண்ணம் அடிக்கடி வரும். வரணும்.
4. மரணத்தை பயம் இல்லாமல் எதிர்கொள்ள வைக்கும்.
5. வாழும்போது, நீர், காற்று, வீடு, வெளிச்சம், சக்தி, உடை, எல்லாம் தேவை தான். ஆனால் இதிலேயே உழலாமல் இன்னும் கொஞ்சமும் பார்க்கணும். நமக்கு உள்ளேயும் கொஞ்சம் நுழையணும். சின்ன குழந்தையாக இருக்கும்போது, மேச்பாக்ஸ் மேலே உள்ள லேபல் சேர்த்தேன், இதாலே நிறையப்பேர் பின்னாலே ஒடி எக்ஸ்சேன்ஜ் பண்ணேன். பலப்பம் சேர்த்தேன். ஸ்டாம்ப் எல்லாம் சேர்த்தேன். சினிமாக்காரர்கள் படங்களை ஒட்டி வைச்சேன். அவர்கள் கை எழுத்து வேட்டை ஆடினேன்.
(கோடம்பாக்கம் பிரிட்ஜ் அப்போ கிடையாது. ரெயில்வே கேட் ரொம்ப நேரம் சாத்தி ரெண்டு பக்கமும் நிறைய வண்டிகள் நிற்கும். அதில் எல்லாம் படப்பிடிப்புக்கு போகிற நடிகர் நடிகையர்கள் , இரவெல்லாம் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்புபவர்கள் கேட் திறக்க காத்திருக்கும்போது கூட்ட மாக ஒடி நடிகர்கள் கிட்டே கை எழுத்து வாங்கினது ஞாபகம் இருக்கிறது. ஒரு நடிகர் எனது நோட் புஸ்தகத்தையே கோபமாக கிழித்து கூட போட்டார். மீதி பேர் கையெழுத்து ஆசையாக வாங்கியது எல்லாமும் போச்சு)
பொம்மைகள் எல்லாம் நிறைய இருந்தது. யார் கிட்டயும் குடுக்க மாட்டேன். தொடவே விடமாட்டேன். இதெல்லாம் எங்கே இப்போ? அதுமாதிரி நாம் வயதாக வயதாக கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபாடுகளை குறைத்து உள் நோக்கி பிரயாணம் செய்யவேண்டும் .
பொதுவாக அதிக பட்ச வயசு 100 என்றிருந்தாலும் மரணத்தை பற்றிய எண்ணம் சிறிதும் இல்லை யென்றால், 300-400 வயசு கூட இருக்கலாம் என்கிறது உபநிஷத். இருக்கிறதைக்கூட குறைச்சுக்கவும் முடியுமாம். இயற்கையோட ஒட்டி வாழணும். அது தான் முக்கியம்.
உடம்பு எடுத்ததே நமது கர்மங்களை சரியாக செய்வதற்கு தான். செய்யவேண்டியதை தள்ளி போடுவதோ, செய்யாமல் விடுவதோ கூடாது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



