
வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி
ஸ்லோகங்கள் 9-12
ராஜா பர்த்ருஹரி சொந்த வாழ்க்கையில் பேரிடி போல் துரோகம், ஏமாற்றங்களை சந்தித்து வெறுத்து, ராஜ்ஜியம், சொந்தம் பந்தம் எல்லாம் துறந்து சந்நியாசியாக ஊர் சுற்றி தெற்கே வந்தவன் அங்கே பட்டினத்தாரை குருவாக ஏற்று, தமிழில் பத்திரகிரியாராக வாழ்ந்தவன். பர்த்ருஹரியாக அவன் இயற்றிய ஸ்லோகங்களில் வைராக்கிய சதகம் எனும் நூறு ஸ்லோகங்களை நாம் ரசித்து வருகிறோம். இதுவரை அர்த்த புஷ்டியான அந்த 8 ஸ்லோகங்கள் அறிந்தோம்.
9. निवृत्ता भोगेच्छा पुरुषबहुमानोऽपि गलितः समानाः स्वर्याताः सपदि सुहृदो जीवितसमाः ।
शनैर्यष्ट्युत्थानं घनतिमिररुद्धे च नयने अहो मूढः कायस्तदपि मरणापायचकितः ॥ ९॥
nivrittaa bhogeecchaa purusha-bahu-maano’pi galita samaanausvar-yaatau sapadi suhrido jiivita-samaha|
s`anair yasht`y utthaanaa ghana-timira-ruddhee ca nayanee aho muud`haha kaayas tad api maran`aapaaya-cakitaha. 9
நிவ்ரு’த்தா போ⁴கே³ச்சா² புருஷப³ஹுமாநோऽபி க³லித: ஸமாநா: ஸ்வர்யாதா: ஸபதி³ ஸுஹ்ரு’தோ³ ஜீவிதஸமா: । ஶநைர்யஷ்ட்யுத்தா²நம் க⁴நதிமிரருத்³தே⁴ ச நயநே அஹோ மூட:⁴ காயஸ்தத³பி மரணாபாயசகித: ॥ 9
இந்த உலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற என்னமோ, ஆசையோ வெறுத்து விட்டது. அலுத்து விட்டது.சலித்து விட்டது. என் அகம்பாவம் என்னை விட்டொழிந்தது. என் சுய கௌரவம், தலைக்கனம் இப்போது காணோம். என்னுடைய நண்பர்கள் எங்கோ போய்விட்டார்கள். குச்சி,கம்பு ஊன்றாமல் எழுந்திருக்க முடியாதவன் நான். கண் பார்வை மங்கல். எதிரே எருமை மாடு நிற்பது புகைமண்டலமாக தெரிகிறது. கண்ணில் நீர் கோர்த்துக் கொள்கிறது. அப்படியும் மரணம் என்றால் எனோ இந்த தேகத்துக்கு ஒரு பயம். ஆச்சர்யம்…
10, आशा नाम नदी मनोरथजला तृष्णातरङ्गाकुला रागग्राहवती वितर्कविहगा धैर्यद्रुमध्वंसिनी । मोहावर्तसुदुस्तरातिगहना प्रोत्तुङ्गचिन्तातटी
तस्याः पारगता विशुद्धमनसो नन्दन्ति योगीश्वराः
Aaasa naama nadii manoratha-jalaa trishn`aa-taramgaakulaa raaga-graahavatii vitarka-vihagaa dhairya-druma-dhvaasinii |
mohaavarta-sudustaraatigahanaa prottumga-cintaa-tat`ii tasyaupara-gataa vis`uddham alaso nandanti yogiis`varau 10
ஆஶா நாம நதீ³ மநோரத²ஜலா த்ரு’ஷ்ணாதரங்கா³குலா ராக³க்³ராஹவதீ விதர்கவிஹகா³ தை⁴ர்யத்³ருமத்⁴வம்ஸிநீ । மோஹாவர்தஸுது³ஸ்தராதிக³ஹநா ப்ரோத்துங்க³சிந்தாதடீ தஸ்யா: பாரக³தா விஶுத்³த⁴மநஸோ நந்த³ந்தி யோகீ³ஶ்வரா: ॥ 10॥
என் எதிர்பார்ப்பு ஒரு நீளமான நதி. அதில் என் கற்பனை எண்ணங்கள் தான் ஜலம் .ஆசைகள் தான் அலைகள். ‘ஆசையே அலைபோல.”
எதெல்லாம் கண்ணில் படுகிறதோ அதன்மேல் எல்லாம் ஆசை. அதை உடனே துய்க்கவேண்டும் என்ற பசிக்கு ஆகாரம் தேடுகிறேன். என் எண்ணமலைகளைப் பார்த்தாயா? அதெல்லாம் பேராசையால் சேர்ந்தவை. அறியாமையில் மூழ்கி இருப்பவன் நான். ஆழமான சம்சார சாகரத்தை கடக்க முடியாதவன். உயரமான ஏறவே முடியாத கரைச்சுவர்கள். அவை தான் என் தாபங்கள். நான் யோகியாக இருந்தால் பற்றற்றவனாக இருந்தால் எப்போதோ இதெல்லாம் கடந்திருக்க முடியும். அதற்கு பகவான் அனுக்கிரஹம் வேண்டுமே நான் எங்கே போவேன்? அது இருந்தால் என் மனத்தை அடக்கி இருப்பேனே.
11 न संसारोत्पन्नं चरितमनुपश्यामि कुशलं विपाकः पुण्यानां जनयति भयं मे विमृशतः ।
महद्भिः पुण्यौघैश्चिरपरिगृहीताश्च विषया महान्तो जायन्ते व्यसनमिव दातुं विषयिणाम् ॥ ११॥
ந ஸம்ஸாரோத்பந்நம் சரிதமநுபஶ்யாமி குஶலம் விபாக: புண்யாநாம் ஜநயதி ப⁴யம் மே விம்ரு’ஶத: । மஹத்³பி:⁴ புண்யௌகை⁴ஶ்சிரபரிக்³ரு’ஹீதாஶ்ச விஷயா மஹாந்தோ ஜாயந்தே வ்யஸநமிவ தா³தும் விஷயிணாம் ॥ 11॥
இதுவரை எத்தனை பிறவிகள் கடந்துவிட்டதோ?. ஒவ்வொன்றிலும் பெற்ற கர்மபலன் புண்யம் ஒன்றும் எனக்கு சேரப்போவதில்லை. நான் செய்த பாபம் தான் கூடுமோ என்ற பயம் மன வியாகூலம் அகலவில்லை. இதனால் உலக இன்பங்கள்,சுக துக்கங்களிலேயே ஈடுபட்டு உழன்று ஈடுபட்டு மேலும் மேலும் துன்பம் தான் அதிகரிக்கிறது. சம்சார சுழலிலிருந்து தப்ப மனம் வைராக்கியம் பெறவேண்டும்.பற்று ஈர்ப்பு விடுபட வேண்டும்
12. अवश्यं यातारश्चिरतरमुषित्वापि विषयाः वियोगे कोभेदस्त्यजति न मनो यत्स्वयममून् ।व्रजन्तः स्वातन्त्र्यादतुलपरितापाय मनसः स्वयं त्यक्त्वाह्येते शमसुखमनन्तं विदधति॥
Avashyam yaataarah chirataramushitwaapi vishayaah Viyoge ko bhedastyajati na mano yatswayamamoon
Vrajantah swaatantryaadatulaparitaapaaya manasah Swayam tyaktwaa hyete shamasukhamanantam vidadhati
அவஶ்யம் யாதாரஶ்சிரதரமுஷித்வாபி விஷயா வியோகே³ கோ பே⁴த³ஸ்த்யஜதி ந ஜநோ யத்ஸ்வயமமூந் ।
வ்ரஜந்த: ஸ்வாதந்த்ர்யாத³துலபரிதாபாய மநஸ: ஸ்வயம் த்யக்தா ஹ்யேதே ஶமஸுக²மநந்தம் வித³த⁴தி ॥ 12
இந்த புலன் இன்பம் என்றோ ஒருநாள் என்னை விட்டு போகத்தான் போகிறது. அது தானாக போகும் வரை துன்பம் தான் மிச்சம். அதற்குள் எண்ணற்ற துன்பங்களை நான் அனுபவிக்க வேண்டும். ஏன் நானாகவே அதை சீக்கிரமாகவே விலக்கக்கூடாது? மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் அது சாத்தியம். சுய கட்டுப்பாட்டுக்கு நான் எங்கே போவேன்? நான் தான் புலன்களின் அடிமையாயிற்றே. ஸ்வதந்திரமாக
செயல் படும் திட மனம், ஞானம் கிட்டவில்லையே. ஒன்றா இரண்டா, எத்தனை வருஷங்களாக இந்த இந்திரிய சுகங்களை அடிமையாக இருந்தேன்!. உலகமே இது தான் என்று மயங்கிக் கிடந்தேன். இந்த ஐம்புலன்கள் தந்த, அதன் மூலம் நான் அனுபவித்த சுகம் இன்பம் எல்லாம் சாஸ்வதமாக, நிரந்தரமாக இல்லையே. பஞ்சாக பறந்து விட்டதே! போகும்போது கை நிறைய, பை நிறைய துன்பம் துயரத்தை தான் ”இந்தா என் பரிசு” என்று தந்துவிட்டு போகும் என்று தெரியாமல் போய்விட்டதே. கொஞ்சம் கெட்டிக்காரத்தனமாக நாமாகவே ”இதெல்லாம் எனக்கு வேண்டாம்” என அதை தவிர்த்தால் ஆஹா அதன் சுகமே தனி என்பது புரியாமல் போனதே.
இதில் என்ன கஷ்டம் என்றால் இந்த குரங்கு மனம் நம்மை அப்படி போக விடாதே. திரும்ப திரும்ப புலனின்பத்தை அல்லவோ தேடுகிறது. அந்த சுகம் கிடைக்காவிட்டால் மனம் படும் பாடு, துன்பம், ஏக்கம் இருக்கிறதே. அப்பப்பா சொல்லில் எழுத்தில் அடங்காது. சீ சீ, நீ வேண்டாம் போ என்று நாமாக உதறிவிட்டால் அப்போது விளையும் நிரந்தர சுகம், மன அமைதிக்கு ஈடு இணை உண்டா?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


