VAIRAGYA SATHAKAM.2 BARTHRUHARI J K SIVAN

ராக்கிய சதகம் 2 – நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி

உஜ்ஜயினிக்கு பழைய பெயர் அவந்திகா. மால்வா ராஜ்ஜிய தலைநகரம். செல்வ செழிப்புள்ளது. அதன் ராஜா விக்ரமாதித்தன். நமது சரித்திரத்தில் விக்ரமாதித்தன் என்ற பெயரில் ரெண்டு ஆசாமிகள். ஒருவர் சகாப்தமாக பெயர் பெற்றவர். பிரபல கெட்டிக்கார ராஜா. ” தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி…. என்று ஆரம்பித்து ஒவ்வொரு அருமையான சமயோசித கதையின் முடிவிலும் விக்ரமாதித்தன் சரியான விடையை சொன்னதும்……… ” விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளுமே அந்த ”வேதாளம்” சம்பந்தப்பட்டவர். முடிந்தபோது விக்ரமாதித்தன் கதைகளும் தொடர்கிறேன்.

இன்னொருவர் ரெண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்தன். அவருக்கு சகோதரராக இருந்தவர் தான் ராஜா பர்த்ருஹரி. பல மனைவிகள். அவர்களில் ஒருவள் அழகி பிங்களா. ராஜா பர்த்ருஹரி சமஸ்க்ரிதத்தில் மஹா பண்டிதன். அவன் எழுதிய 300 ஸ்லோகங்கள் த்ரிசதி. சுபாஷிதம், எனப்படும். நூறு நீதி சதகம். நூறு வைராக்கிய சதகம். இன்னும் நூறு ஸ்ருங்கார சதகம். முதலில் வைராக்ய சதகத்தை ரசிப்போம் .

பர்த்ருஹரி நீதிமான். அவன் அழகிய மனைவி அரண்மனை தேரோட்டி மீது காதல் கொண்டவள் என்று அறிந்து நாட்டை அரச போகத்தை எல்லாம் வெறுத்து துறந்து ராஜா பர்த்ருஹரி சன்யாசியாகிறான் என்று முந்தைய பதிவில் அறிந்தோம். பல வருஷம் காட்டில் தவம் புரிந்து சந்நியாசியாக ஊர் எல்லாம் சுற்றியவன் பர்த்ருஹரி. முதலில் கோரக்நாத் யோகியின் சிஷ்யன்.

2, भ्रान्तं देशमनेकदुर्गविषमं प्राप्तं न किञ्चित्फलं त्यक्त्वा जातिकुलाभिमानमखिलं सेवा कृता निष्फला । भुक्तं मानविवर्जितं परगृहेष्वाशंकया काकवत् तृष्णे जृंभसि पापकर्मनिरते नाद्यापि संतुष्यसि॥

Bhraantam desamanekadurgavishamam praaptam na kinchitphalam Tyaktwaa jaatikulaabhimaanamakhilam seva kritaa nishphalaa
Bhuktam maanavivarjitam paragriheshwaashankaya kaakavat Trishne jrimbhasi paapakarmanirate naadyaapi santushyasi

ப்⁴ராந்தம் தே³ஶமநேகது³ர்க³விஷமம் ப்ராப்தம் ந கிஞ்சித்ப²லம் த்யக்த்வா ஜாதிகுலாபி⁴மாநமுசிதம் ஸேவா க்ருʼதா நிஷ்ப²லா ।
பு⁴க்தம் மாநவிவர்ஜிதம் பரக்³ருʼஹேஷ்வாஶங்கயா காகவத் த்ருʼஷ்ணே ஜ்ருʼம்ப⁴ஸி பாபகர்மபிஶுநே நாத்³யாபி ஸந்துஷ்யஸி ॥ 2 ॥

”நான் சுற்றாத இடம் கிடையாது. எங்கெல்லாமோ அலைந்தேன். கல், முள், பள்ளம், மேடு, காடு, நாடு ஒன்று பாக்கி இல்லை. என்னத்தைக் கண்டேன்? என்ன பிரயோஜனம்? என்ன சொன்னாலும் தட்டாமல் இரவு பகல் பார்க்காமல் வீடு, மானம் மரியாதை எதுவும் பார்க்காமல் அடிமையாக ராஜாவுக்கு சேவை, முதலாளி, எஜமானன், பணக்காரர்களுக்கு எல்லாம் ஸலாம் போட்டுக்கொண்டு உழைத்தேன், சே, இதனால் என்ன பலன் அடைந்தேன்? தன்னை யாராவது ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தோடு காக்கை அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு பயந்து கொண்டு சாப்பிடுவது போல் சோற்றை உண்டேன். ”ஏ பேராசையே , என்னுள் இருந்து கொண்டு என்னை இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க ஆட்டுவிக்கிறாய். தப்பு தப்பாக ஒவ்வொன்றையும் செய்ய வைக்கிறாய். இன்னுமா உனக்கு திருப்தி இல்லை?”

3. उत्खातं निधिशङ्कया क्षितितलं ध्माता गिरेर्धातवो निस्तीर्णस्सरितांपतिर्नृपतयो यत्नेन संभाविताः ।
मन्त्राराधनतत्परेण मनसा नीताः श्मशाने निशाः प्राप्तः काणवराटकोऽपि न मया तृष्णेऽधुना मुञ्च माम् ॥

Utkhaatam nidhishankayaa kshititalam dhmaataa girerdhaatavo Nisteernah saritampatirnripatayo yatnena santoshitaah
Mantraaraadhanatatparena manasaa neetaah shmashaane nishaah Praaptah kaanavaraatako’pi na mayaa trishne ‘dhunaa muncha maam

உத்கா²தம் நிதி⁴ஶங்கயா க்ஷிதிதலம் த்⁴மாதா கி³ரேர்தா⁴தவோ நிஸ்தீர்ண: ஸரிதாம் பதிர்ந்ருʼபதயோ யத்நேந ஸந்தோஷிதா: ।
மந்த்ராராத⁴நதத்பரேண மநஸா நீதா: ஶ்மஶாநே நிஶா: ப்ராப்த: காணவராடகோঽபி ந மயா த்ருʼஷ்ணே ஸகாமா ப⁴வ ॥ 3 ॥

”ஆசை எவனை விட்டது? பூமியை முதுகு ஓடிய ஆழமாகத் தோண்டுகிறான். மலையைக் குடைகிறான். எதற்கு? அதற்குள் இருக்கும் விலையுயர்ந்த கனிம பொருள், வைரம், தங்கம் கிடைக்காதா? என்று தானே. அதையெல்லாம் எடுத்து அலசி, உருக்கி பாடுபடுகிறான் . கடல் கடந்து வெளிநாடுகளில் போய் ஆதாயம் தேடுகிறான். ராஜாக்களை வாழ்த்தி புகழ்ந்து ஆதரவு நாடுகிறான். இரவெல்லாம் ஸ்மசானத்தில் அமர்ந்து பூஜைகள் புரிந்து மந்திரங்கள் ஜெபித்து துர் தேவதைகள் உதவியையும் நாடுகிறான். தகரத்தைத் தங்கமாக்கும் வித்தை தெரிந்து கொள்ள துடிக்கிறான். நானும் இதெல்லாம் செய்தவன் தான். இதனால் என்ன பயன் பெற்றேன். செல்லாக்காசும் பெறவில்லை. வேண்டவே வேண்டாம். பேராசையே என்னைவிட்டு ஓடு.”

4. खलालापाः सोढाः कथमपि तदाराधनपरैः निगृह्यान्तर्बाष्पं हसितमपि शून्येन मनसा । कृतो वित्तस्तम्भप्रतिहतधियामञ्जलिरपि
त्वमाशे मोघाशे किमपरमतो नर्तयसि माम् ॥ ४॥

க²லாலாபா: ஸோடா:⁴ கத²மபி ததா³ராத⁴நபரை: நிக்³ரு’ஹ்யாந்தர்பா³ஷ்பம் ஹஸிதமபி ஶூந்யேந மநஸா । க்ரு’தோ வித்தஸ்தம்ப⁴ப்ரதிஹததி⁴யாமஞ்ஜலிரபி த்வமாஶே மோகா⁴ஶே கிமபரமதோ நர்தயஸி மாம் ॥ 4॥

மோசமான, தப்பான எஜமானனுக்கு சேவகம் செய்யும்போது அவர்களுடைய கேவலமான குணத்தையும், நடவடிக்கையையும் பொறுத்துக் கொண்டு தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பணி புரிகிறோம் , உள்ளூர அழுகை வந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரிக்கிறோம். எல்லாம் பணம் செய்யும் மாயை. அதன் மேல் நமக்குண்டான ஆசை. வெறுத்து ஒதுக்கும் வைராக்யம் எங்கே போயிற்று.?

5. अमीषां प्राणानां तुलितबिसिनीपत्रपयसां कृते किं नास्माभिर्विगलितविवेकैर्व्यवसितम् । यदाढ्यानामग्रे द्रविणमदनिःसंज्ञमनसां
कृतं वीतव्रीडैर्निजगुणकथापातकमपि ॥ ५॥

அமீஷாம் ப்ராணாநாம் துலிதபி³ஸிநீபத்ரபயஸாம் க்ருʼதே கிம் நாஸ்மாபி⁴ர்விக³லிதவிவேகைர்வ்யவஸிதம். யதா³ட்⁴யாநாமக்³ரே த்³ரவிணமத³நி:ஸம்ஜ்ஞமநஸாம் க்ருʼதம் வீதவ்ரீடை³ர் நிஜகு³ணகதா²பாதகமபி ॥ 5 ॥

நம்முடைய பலம், சக்தி வானளாவியது என்று மூட நம்பிக்கை தான் நமக்கு முதல் எதிரி. அடேய், அது தாமரை இலைத் தண்ணீரடா . எந்த கணமும் உன்னை விட்டு ஓடிவிடும். ஒட்டாத, என்று புரியவில்லையே! யோசிக்காமல், ஆற அமர்ந்து சிந்திக்காமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருந்து செத்து மடியுமிந்த விட்டில் பூச்சி வாழ்க்கையை யாரும் புரிந்து கொள்ளவில்லையே. ஏதோ கொஞ்சம் பணம் சொத்து இருக்கிறதென்ற கர்வத்தில், மமதையில், அதுவே என்றும் நிலைக்கும் என்ற தவறான எண்ணத்தில், மற்றவன் என்னை புகழ் பாட, நான் தான் ஏகாதிபத்திய சக்ரவர்த்தி, சர்வ சக்தி, இந்திரன் சந்திரன் என்று பகல் கனவில் காலம் கழித்து விட்டேனே.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;