
திருச்சாழல் பாடல்கள் 4 -7 – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர்
உலகத்தில் உயிருள்ள உயிரற்ற சகல வஸ்துக்களும் மூலமான ஒன்று உண்டு. உலகெமெல்லாம் அழியும் போது மிஞ்சுவது அந்த ஒன்றுதான். அது தான் சித் ஸ்வரூபம். பரமாத்ம ஸ்வரூபம்.
சிங்களத்திலே ஒரு ராஜா இருந்தான்.அவன் தீவிர பௌத்தன்.தமிழகத்தில் பௌத்த மதம் ஊடுருவ நேர்ந்த சமயம் அப்போது. சைவ மதத்தை உயர்த்தி நிலை நாட்ட மத போதகர்கள் இல்லாத நிலையில் தோன்றி யவர் மாணிக்கவாசக பெருமான். தமிழக சிவாலயங்களுக்கு க்ஷேத்ர யாத்திரை சென்று பதிகங்கள் பாடிக் கொண்டு சிதம்பரத்திற்கு வருகிறார். ஊருக்கு புறத்தே ஓரிடத்தில் தங்கினார். அப்போது தான் ஈழத்துராஜா சிதம்பரம் தீக்ஷிதர்களை வாதுக்கு அழைத்தான். தீக்ஷிதர்கள் வாதிடும் திறமையற்றவர்கள் என்பதால் நடராஜரை வேண்டுகிறார்கள். அசரீரி வாக்காக ” வாதவூரரை அழைத்து வெல்லுங்கள் ” என அறிவுரை கிடைத்து மணிவாசகரை வணங்கி விபரம் சொல்லி உதவி கேட்கிறார்கள். நடராஜனைப் போற்றி உடனே மணிவாசகர் வாதத்துக்கு சம்மதிக்கிறார்.
ஈழத்து பௌத்தர்களை வாதில் வென்று, ஈழ ராஜாவின் பிறவி ஊமை மகளைப் பேச வைக்கிறார். உங்கள் கேள்விகளை கேளுங்கள். இவளே பதில் சொல்வாள் என்று அவள் பதில் சொல்வதாக திருச் சாழல்” என்ற 20 பாடல்களை அருளிச் செய்தார்.
பரமேஸ்வரன் ப்ரபாவத்தை ஒரு இரு கோஷ்டி பெண்களாக ஒரு கோஷ்டி கேள்வி கேட்பதாகவும் மற்றொரு கோஷ்டி பதில் சொல்வதாகவும் அமைத்து அப்போது மணிவாசகர் பாடியது தான் திருச்சாழல் பாடல்கள்.
திருவாசகத்தின் ஒரு பகுதி இந்த திருச்சாழல் பாடல்கள். முதல் மூன்று பாடல்களை முந்தைய பதிவில் விட்டிருந்தேன். இதோ இன்னும் சில
பௌத்த மத பிரியை ஒருவள் பாடுகிறாள். ”அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனைவயனங்கண் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.”4.
” என்னடி ரொம்ப பெரிதாக உங்கள் பரம சிவனை ப்ரமாதப் படுத்துகிறீர்கள்?. அவன் எப்படிப்பட்டவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? பிரமனையும், மன்மதனையும், யமனையும் சந்திரனையும் கேளுங்கள் நிறைய சொல்வார்கள். ஒவ்வொரு சமயத்தில் சிவனால் காயப்பட்டு வடுப்படுத்தப்பட்டவர்கள் இவர்கள். இது தான் உங்கள் சிவனின் குணமோ தன்மையோ சொல்லடி?
”ஞான சூன்யங்களா? இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். பரம சிவன் த்ரிநேத்ர தாரி. முக்கண்ணன். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும் என்பார்களே. சிறியதோ பெரியதோ செய்த தவறுக்கு பொருத்தமாக எமது ஈசன், தேவாதி தேவன், பரம ஈஸ்வரன்,தலைவன், என்ற பொறுப்பில் தண்டித்தான் என்றால் , தேவர்களுக்கு அதுவும் ஒரு பெருமை,தானே. வெற்றி என்று தானே ஏற்றுக் கொள்ளவேண்டும். வைதாரையும் வாழவைப்பவன் பரமேஸ்வரன் என்ற விஷயம் புரியாமல் எதையோ பேசுகிறாய், கேட்கிறாய் நீ ”
”தக்கனையும் எச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ.
”ஓஹோ நீ அப்படி தட்டுக்குள் நுழைகிறாயா, நான் கோலத்தில் நுழைகிறேன் பார். இதற்கு இப்போது பதில் சொல் பார்க்கலாம்?”தக்ஷன் நடத்திய மாபெரும் யாகத்தின் போது தக்ஷனையும், யாக அதி தேவதையையும் அழித்தது நியாயமா, என்ன தர்மம், என்ன காரியம் என்று உன்னால் சொல்ல முடிந்தால் சொல்லேன்”
”நிறுத்தடி உன் அர்த்தமில்லாத கேள்வியை. அழிப்பது என்கிறாயே. யார் வேண்டுமானாலும் அதை செய்யலாம் என்று எடுத்துக் கொண்டாலும் மற்றொன்றை நீ புரிந்துகொள்ளவில்லை. தேவர்களோ எவரோ, அவர்களை அழித்தாலும் மறுபடியும் அவர்களை உயிர் பெறச் செய்யவில்லையா? மற்றவரால் முடியுமா? , யாகத்தினை நடத்தியவனாகிய தக்ஷனுக்குத் தக்கவாறு ஆட்டின் தலையை அருள் செய்தான்” என்பதை அறியாமல் பேசுகிறாயே”, அரக்கனை அழிக்காமல் அவனுக்கு ஏதோ ஒரு வாழ்வினைக் கொடுத்தது கருணையில் சேர்ந்ததில்லையா? கருணை என்றால் என்ன என்று உனக்கு ஒருவேளை தெரியாதோ?”
”அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ.
”எதற்காக உங்கள் ஈஸ்வரன் ப்ரம்மாவாலும் விஷ்ணுவாலும் அறியமுடியாவண்ணம் ஒளிக்கற்றையாக நின்றான்? என்ன காரணம் இதற்கு? இந்த கேள்விக்கு நீ தப்பவே முடியாது. பதில் சொல்லேன் பார்க்கலாம்?”
”பாவம் நீ. யோசிக்காமல் கேட்டுவிட்டாய். பரம சிவன் ஏன் அப்படி அடிமுடி காணமுடியாமல் நின்றான் என்று நீயே யோசித்திருக்கலாம். உன்னால் அது முடியவில்லை. நான் சொல்கிறேன். அதையாவது புரிந்து கொள் . சிவன் அப்படி ஒளிக்கம்பமாக நிற்காமல் இருந்தால், அவ்விருவரும் தமது ஆங்காரத்தை அகம்பாவத்தை விட்டிருப்பார்களா? சொல்.?
”மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ.
”சரி அது போகட்டும், இது என்ன வேடிக்கை. இதற்கு காரணம் சொல். ஏன் உங்கள் சிவன் பார்வதியை உடலின் இடது பாகத்தில் அமைத்துக் கொண்டான். அதே நேரம் கங்காதேவி என்பவளை நீருருவாக, தலைமுடி சடையில் உறைந்து பாயச்செய்தான்? காரணம் சொல்ல முடியுமா உன்னால்?”
`”உலகில் சக்தியின்றி சிவனில்லை. அசையும் அசையா பொருளுக்கு காரணம் சக்தி தேவி என்று விளக்கவே பரமேஸ்வரன் உமை யொருபாகனாக காட்சி தருபவன், தனது சடையில் கங்கையை இறங்கி பூமியில் பாய விடாமல் விட்டிருந்தால் இப்போது கேள்வி கேட்கவோ, பதில் சொல்லவோ நாம் ஒருவருமே இருக்கமாட்டோம். பூமி கங்கையின் வேகமான பலமான சக்தியை தாங்காது பாதாளத்தில் ஆகாச கங்கை வேகமாக இறங்கிவிடும் என்பதற்காக தான் ஆக்ரோஷமாக ஹோ என்ற பேரிரைச்சலுடன் கீழ் இறங்கிய ஆகாய கங்கையைத் தன் தலையில் சுமந்தான், ஹர் த்வார் என்ற வார்த்தையோ அதன் மகிமையோ உனக்கெங்கே இதெல்லாம் புரியும்? என்கிறாள் பதில் சொல்பவள்.
மணிவாசகர் எழுத்துத் திறனை அடுத்த பாடல்களிலும் அனுபவிக்கலாம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



