VALLALAR J K SIVAN

வள்ளலார் –   நங்கநல்லூர்   J K  SIVAN
ஒரு ஆச்சர்ய மனிதர் 

அவரை மனிதர்  என்று  சொல்ல நா  கூசும், எழுத கை  தயங்கும்.  தெய்வம்  மானிடனாக  வந்த உரு என்பது தான் பொருத்தமாகும்.

அவர் எவரிடமும்  தீக்ஷை பெறவில்லை. ஆனால்  அவருக்கோ பல  சிஷ்யர்கள். ஒன்பது வயசிலேயே வித்யாசமின்றி  அனைவராலும்  ஏற்கப்பட்டவர்.  அவரது  ஒரு பார்வையிலேயே  மாமிசம்  உண்பவர்கள் கூட  அடியோடு அதை விட்டனர். அவர் பார்வை  எக்ஸ்ரே தன்மை கொண்டதோ  என்னவோ.  பிறர் மனத்தில் தோன்றும்  எண்ணங்களை  எல்லாம்  அவரால் உணர முடிந்தது.  எங்கிருக்கிறார்  என்று அறிய  முடியாதபடி  திடீரென்று  காணாமல்  போய்விடுவார்.  கலியுகத்தில் ப்ரத்யக்ஷமாக நம் கண்ணெதிரே  வாழ்ந்த  ஒரு பரம சித்தர். 

பார்ப்பதற்கு,  மாநிறம், ஒல்லி, நிமிர்ந்த உருவம், எலும்பெல்லாம் தெரியும்.   நீண்ட  மெல்லிய  மூக்கு. விசாலமான நெற்றி. கண்களில்  ஏதோ ஒரு காந்த  சக்தி. முகத்தில் ஏதோ  எதையோ பற்றி எப்போதும்  ஒரு  கவலைப் பட்டுக்கொண்டெ யிருக்கிற மாதிரி  ஒரு தோற்றம். நீண்ட  கூந்தல்  மாதிரி தலை முடி. காலில்  பாத ரக்ஷை. (அந்த காலத்தில்  ஆற்காடு ஜோடு என்று  அதற்குப் பெயர்)  உடம்பை மூட ஒரு  வெள்ளைத் துணி. வேட்டியோடு  சேர்ந்து  உடலின் மேலும்  போர்த்திக் கொள்வார்.  ஆகார விஷயம்  சொல்பம்.  ஒன்றிரண்டு கவளம்  அதுவும்  ரெண்டு மூன்று நாளைக்கொரு தரம்.  உபவாசம் என்று இருந்தால்  அது  ரெண்டு மூன்று மாசம் வரை கூட  தொடரும். வெந்நீரில் கொஞ்சம்  வெல்லம்  கலந்து அது தான்  ஆகாரம்.
சிறுவயதிலே குழந்தையாக  அப்பாவின்  தோளில்   இருந்தபோதே சிதம்பரத்தில்  ”ரகசியம்”  (ஆனந்த  வெளி, பரம ஆகாசம்)  புரிந்துவிட்டது.  பல  பாடல்களில்  அது  வெளிப்பட்டது.

சந்நியாசியாய் இருந்தும்  உலக  இயல்  பிடிக்கவில்லை,  பட  முடியவில்லையே  இந்த துயரம் என்று கதறல். போதும்  போதும் பட்டதெல்லாம்.

”படமுடியாதினித்  துயரம் பட முடியாதரசே
பட்டதெல்லாம்  போதும்  இந்த  பயம்  தீர்ந்து  இப்பொழுதே என்உடல்  உயிராகிய  எல்லாம்  நீ  எடுத்துக்கொண்டு  உன்
உடல் உயிராதிய எல்லாம்  உவந்தெனக்கே  அளிப்பாய்
வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய்  என்  கண்ணுள்
மணியே,  குரு  மணியே, மாணிக்க  மணியே
நடன சிகாமணியே  என்  நவமணியே,  ஞான
 நன் மணியே, பொன் மணியே,  நடராஜ மணியே  

இந்தப்பாட்டில்  கண்டபடி   தானே  இறைவனின்  உடல்  உயிர்  ஆவியானவர்   அந்த மா மனிதர். சித்தர். ஞானி.
ஒரு  ஆடு  மாடு,  பறவை, பூச்சி  கத்தினாலும்   ”ஆண்டவா,  அதற்கு  என்ன   துன்பமோ, என்னால்  அதைப்  போக்க முடியுமோ, என்று  கலங்குவார்,  பாவம்  அதற்கு  என்ன ஆச்சோ  என்று  பயந்து  போவார்.  என்  அப்பா,  இறைவனே  அவற்றின்  துன்பம்  உடனே  போக்கிடுவாய்.  இது கொடிய  விஷ நாகத்திற்கும்  கூட. அவருக்குத்தான்  எல்லா  உயிரும்  சமமாயிற்றே.  

” காக்கைகள் கூவக்  கலங்கினேன்  பருந்தின்
    கடுங்குரல்  கேட்டு உளம்  குலைந்தேன்
 தாக்கிய  ஆந்தை குரல் செயப் பயந்தேன்
    சாக்குரல்  பறவையால்  தளர்ந்தேன்
வீக்கிய  வேறு கொடுஞ் சகுனம் செய்
    வீக்களால் மயங்கினேன்  விடத்தில்
ஊக்கிய பாம்பைக்  கண்ட  போது உள்ளம்
    ஒடுங்கினேன்  நடுங்கினேன்  எந்தாய் ”

செடி  கொடி  தண்ணீரின்றி  எங்காவது  வாடி வதங்கி  தலை  சாய்ந்ததைப் பார்த்து  பதறுவார்.  ஐயோ  என்ன  துன்பம்  அதன்  பசியை  போக்க  யாருமில்லையா  என்று  உலகில்  எந்த  உயிரும் துன்பமுருவதைக்  காண  சகிக்காத ஜீவா காருண்யர் அவர். ”வாடிய  பயிரைக்கண்ட போதெல்லாம்  வாடிய  நெஞ்சம்” அவருக்கு.  நமக்கும்  கொஞ்சமாவது  அவர்  வழியில்  போக  கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?
 அந்த  மா மனிதர்   ஒரு   ம்ருது பாஷி .  உரக்கவே  பேசமாட்டார்.  நம்மை  மாதிரி   எதையாவது  சாப்பிட்டுவிட்டு   இடுப்பு  வேஷ்டியில்  துடைத்துக்கொள்ளும்  ரகமல்ல.  ஒரு  கைக்குட்டை  எப்போதும்  இடுப்பில்.   கைககளை  வீசி  நடக்கவே  மாட்டார்.  கைகளைத்  எனவே  எப்போது  கை கட்டியே  காணப்படுவார்.   காலும்  தலையும்  எப்போதும்  மறைத்தே வைத்திருக்க வேண்டும்  என்ற  கொள்கை.   ஒரே  துணி  உடம்பைச் சுற்றி  தலையையும்  சுற்றி  இருக்கும்.  அதுவும்  வெள்ளைத்துணி.  காலுக்கு  ஒரு செருப்பு.  இல்லாமல்  தொங்கவிட்டுக்கொண்டும்  நடக்க மாட்டார்.  எதிரே  வரும்  யாரையும்  முகமோ,  நிறமோ உருவமோ   எதையுமே பார்க்கமாட்டார்.  அப்படி அவர்கள்  உருவம்  கண்ணில்  பட்டுவிட்டால் என்னால்  அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து  விட்டதோ  என்ற  பயமும்  கவலையும்  அவரைத தின்று விடும்.  

அவர்  பற்றி  அவரே  சொல்வது:  

”கையற  வீசி  நடப்பதை  நாணிக்
   கைகளை  கட்டியே நடந்தேன்
மெய்யுற  காட்ட வெருவி    வெண்  துகிலால்
    மெய்யெலாம்  அய்யகோ  மறைத்தேன்.
வையமேல் பிறர்   தம்  கோலமும்  நடையும்
   வண்ணமும்  அண்ணலே  சிறிதும்
பைய நான்  ஊன்றிப்பார்த்ததே  இல்லை.
  பார்ப்பனேல்  பயமிகப் படைப்பேன்

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;