
தசரதன் பெண். 2 – நங்கநல்லூர் J K SIVAN
விபாண்டக மகரிஷி தினமும் ஆசிரமத்திலிருந்து காட்டின் உட்பகுதிக்கு சென்று தவம் இருந்துவிட்டு வருவார். அவர் மகன் ரிஷிய ஸ்ரிங்கர் தனியாக ஆஸ்ரமத்தை சுத்தம் செய்துவிட்டு, அப்பாவுக்கு ஹோமம் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்வார். அது தான் வழக்கம்.
விபாண்டகர் இல்லாத நேரம் அங்க தேசத்து நாட்டிய பெண்கள் ஆஸ்ரமம் வருகிறார்கள். ரிஷ்யஸ்ரிங்கருடன் விளையாடுகிறார்கள். அவர்களையும் தன்னைப் போல் ரிஷிகுமாரர்களாக நினைக்கிறார். அவர்கள் வித்யாசமாக இருக்கிறார்களே என்று வியந்து போகிறார். பெண்களையே பார்த்திராத அந்த ரிஷிகுமாரருக்கு அவர்கள் அழகு, பேச்சு, பாட்டு ஆட்டம் பாட்டம் புதிதாக இருந்தாலும் புது நண்பர்களாக ரொம்ப பிடிக்கிறது. அப்பா வந்தபோது புது நண்பர்களை பற்றி சொல்கிறார். ”அவர்கள் நண்பர்கள் எல்ல சத்ருக்கள், அவர்களோடு பழக வேண்டாம். விரட்டி விடு” என்று சொல்கிறார். ரிஷ்யஸ்ரிங்கருக்கு நண்பர்களை விட்டு விட மனமில்லை . அந்த நாட்டிய பெண்கள் ஒருநாள் விபாண்டகர் இல்லாதபோது மெதுவாக ரிஷ்ய ஸ்ரிங்கரை படகுக்கு அழைத்து வருகிறார்கள். படகு ரிஷ்யஸ்ரிங்கரோடு அங்க தேசம் செல்கிறது.அங்க தேசத்தில் ரிஷ்ய ஸ்ரிங்கர் காலடி பட்டதும் கொட்டோ கொட்டு என்று மழை விடாமல் பெய்கிறது.அங்க தேசத்து மக்களுக்கு பரம சந்தோஷம். ரோம பாதர் தன்னுடைய மகள் சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு மணமுடிக்கிறான்.கொஞ்சம் கொஞ்சமாக உலகம் புரிகிறது ரிஷ்ய ஸ்ரிங்கருக்கு . இதற்கிடையில் அப்பா விபாண்டகருக்கு நடந்ததெல்லாம் தெரிந்து விடுகிறது. ரோமபாதர் மேல் கோபமாக அங்க தேசம் வருகிறார்.
ஊருக்குள் நுழையும்போதே அவருக்கு உபச்சாரம், நிறைய பசுக்கள் தானம் எல்லாம் காத்திருக்கி றது. அரண்மனை வருவதற்குள் அவர் மனத்திலிருந்து கோபம் அகன்றுவிட்டது. தனது மகனை அரச குமாரனாக அறிவுள்ள, அழகிய பெண் சாந்தாவின் கணவனாக பார்க்கிறார். அவர்கள் அவர் காலடியில் விழுந்து வணங்கி ஆசி பெறுகிறார்கள். விபாண்டகர் ஆஸ்ரமத்துக்கு திரும்பி செல்கிறார்.
அயோத்தியில் நிம்மதி இல்லை. இருந்த ஒரே மகளும் சென்று விட்டாள் . இந்த சாம்ராஜ்யத்திற்கு அடுத்த வாரிசு யார்? என்ற கவலை தசரதனை வாட்ட சபையை கலந்தாலோசித்தான் .வாரிசு வேண்டுமா னால் புத்ர காமேஷ்டி யாகம் ஒன்று செய்ய வேண்டும் என்று முடிவாகி விட்டது.தசரதனுக்கு வலது கையாக இருந்தவன் சுமந்திரன். அவன் தான் ஆலோசகன், தவிர தேரோட்டியும் கூட. அவன் ”தசரத மஹாராஜா, அங்க தேசத்தில் ஒரு ரிஷி காட்டில் தனியாக ஆஸ்ரமத்தில் வாழ்கிறார். அவர் பெயர் ரிஷ்யஸ்ரிங்கர். அவரை அழைத்து வந்து அவர் யாகத்தை நடத்தினால் மழையும் கொட்டோ கொட்டு என்று பெய்யும். உங்கள் வம்ச வாரிசும் கிடைக்கும்” என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
”சுமந்திரா , ரிஷ்ய ஸ்ரிங்கரை நான் அறிவேன். அங்க தேசத்தில் பஞ்சம், வறட்சி உண்டானபோது அவரை ராஜா ரோமபாதர் அழைத்ததும் மழை விடாமல் பெய்து சுபிக்ஷம் நிலவியது என்று அறிந்திருக்கிறேன். ”ரிஷ்யஸ்ரிங்கர் விபாண்டக மஹரிஷியின் புத்ரன். ரிஷிகுமாரன். தமிழில் அவரை களைக் கோட்டு மாமுனி என்பார்கள்.தலையில் மான் கொம்பிருக்கும். பெண்களையே அறியாமல் வளர்ந்தவர். அங்க நாட்டில் வறட்சி ஏற்பட்டபோது விபாண்டகருக்கு தெரியாமல் அங்க தேசத்து ராஜா சில அழகிய பெண்களை ஒரு படகிலேற்றி தனியான தீவு போன்ற இடத்தில் வாழ்ந்திருந்த ரிஷியின் ஆஸ்ரமத்துக்கு அனுப்பி ரிஷ்ய ஸ்ரிங்கரோடு பழக வைத்தான். அவள் எப்படியோ ரிஷ்யஸ்ரிங்கரை அங்க தேசத்துக்கு அழைத்து வந்து விட்டாள் . அவர் காலடி எடுத்து வைத்த மறு வினாடியே மழை விடாமல் பெய்தது.
தசரதன் ரிஷ்ய ஸ்ரிங்கரை அயோத்திக்கு அழைத்து வந்தான். .புத்ர காமேஷ்டி யாகம் அற்புதமாக நடத்தி னார். தேவர்கள் அனைவரும் திருப்தி அடைந்து வாழ்த்தினார்கள்.
இந்திரன் ஓடிவந்தான்.”பிரபு மஹா விஷ்ணு, நீங்கள் தான் தேவர்களை காப்பாற்றவேண்டும். ராவணேஸ் வரன் மிகவும் தவ வலிமை கொண்டு பூலோகத்தையும் தேவலோகத்தையும் ஆக்கிரமித்து கொடுமைகளை புரிகிறான். அவன் கேட்ட வரத்தின் படி அவனுக்கு தேவர்களாலும், நாகர்களாலும், தானவர்களாலும், யக்ஷர்களாலும், கந்தர்வர்களாலும் ராக்ஷசர்களாலும் மரணம் இல்லை. மனிதர்கலால் என்று அவன் கேட்கவில்லை. ஆகவே நீங்கள் மனிதனாக பிறந்து அவனை மாயக்கவேண்டும் என்றான் இந்திரன். .மஹா விஷ்ணுவே ராவணாதி ராக்ஷஸர்களை அழிக்க ராமனாக அவதாரம் எடுக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தசரத சக்கரவர்த்திக்கு மகனாக பிறக்கிறேன் என்று வாக்களித்தார் மஹாவிஷ்ணு.
ரிஷ்யஸ்ஸ்ரிங்கரின் யாக முடிவில் அக்னியில் இருந்து ஒரு தேவதை ஒரு தங்க பாத்ரம் நிறைய பாயசம் கொண்டு வந்து தசரதனிடம் தந்தது. உன் மனைவிக்கு கொடு புத்ரன் பிறப்பான் என்றது” சந்தோஷமாக தசரதன் அதை மூத்தமனைவி கௌசல்யாவிடம் அளித்தான். ”நாம் இதை பங்கிட்டுக் கொள்வோம்” என்றாள் கௌசல்யா.கௌசல்யா, கைகேயி அருந்திவிட்டு சுமித்ரா விடம் மீதியை கொடுத்து விட்டார்கள். கௌசல்யாவுக்கு ராமன், கைகேயிக்கு பரதன், சுமித்ராவுக்கு லக்ஷ்மணன் சத்ருக்னன் என இருவர் பிறந்தார்கள்.ரிஷ்ய ஸ்ரிங்கரும் சாந்தாவும் காட்டுக்குச்சென்று தவம் செய்கிறார்கள்.
ரிஷ்யஸ்ரிங்கர் வாழ்ந்த காடுதான் ஸ்ரிங்க கிரி என்று பெயர் பெற்று ஸ்ரிங்கேரி ஆகிவிட்டது.. ரிஷ்ய ஸ்ரிங்கர் வழிபட்ட சிவலிங்கம் கிக்கா எனும் ஊரில் ஆலயத்தில் இருக்கிறதாம். ஸ்ரின்கேரியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. விபாண்டகர் வழிபட்ட லிங்கம் மலஹனிகாரேஸ்வரர் என்று அழைக்கப்படு கிறார். அந்த லிங்கத்தில் விபாண்டகர் ஐக்யமாகி விடுகிறார். ஒரு சிறு குன்றாக சிருங்கேரி நடுவில் இருக்கிறது.
சென்ஹி கோட்டை என்ற ஊரில், பஞ்ஜார் தாசில், குலு ஜில்லாவில், ஹிமாசல பிரதேசத்தில் ரிஷ்ய ஸ்ரிங்க ருக்கு ஒரு கோவிலிருக்கிறது. ஸ்ரிங்க ரிஷி என்று சொல்கிறார்கள். அம்பாளாக சாந்தா நிற்கிறாள்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


