little drops make an ocean – J K SIVAN

தீபாவளி பதிவு 5 – நங்கநல்லூர் J K SIVAN  

”பழைய கதையே பேசுகிறாயே , அதில் உனக்கு என்ன லாபம்? ‘
”’சந்தோஷம் கிடைக்கறதே அதுவே லாபம் தானே”’
‘போனது வரப்போவதில்லையே அதைப் பற்றி நினைக் கறதாலே என்ன லாபம்னு கேட்டேன்”
‘எது போனது? இருக்கிறது தானே போகிறது. இப்போது இருக்கிறது என்ன சாஸ்வதமா? அதுவும் போகப் போறது தானே, போய்க்கொண்டே இருப்பது தானே. அதனாலே எது பழசுன்னு நீ சொல்றியோ அது நீ நினைக்கும்போது புதுசா உன் மனசிலே நிக்கிறதே.அது அப்போ பழசில்லையே. ஒவ்வொரு கணமும் புதுசு மாதிரி தோன்றினாலும் அடுத்த கணமே பழசா மாறிவிடுகிறது.
நாம் பழசிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புதுசு எப்போதும் தங்கறதில்லே”
மாற்றம் தான் புதுசை பழசா பண்ணிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றம் உலகத்தில் மனித வாழ்க்கைக்கு அவசியம்.
ஸ்விட்சை தட்டி விட்டால் ரெண்டே நிமிஷத்தில் குழாயில் வெந்நீர் வரும். அப்போ எல்லாம் ஒவ்வொரு வீட்டிலேயும் பாய்லர் boiler னு ஒண்ணு நிக்கும். அதுக்கு ஒரு பெரிய வாய். அதில் சாணி வைக்கோல், கூளம் எல்லாம் போட்டு உருட்டின உருண்டை, லீகோ கரி, சுள்ளி, மரத்துண்டு, உலர்ந்த தேங்கா மட்டை எல்லாம் போடுவோம். அது எரியும்போது அந்த பாய்ல்ர்லே இருக்கிற தண்ணீர் சூடாகி குழாய் வழியா பக்கெட்லே ரொம்பும். பாய்லர் செம்புல, அதான், தாமிரத்திலே, பளபளன்னு இருக்கும். டீக்கடைகளில் அதற்கு விபூதி மஞ்சள் குங்குமம் எல்லாம் பட்டை பட்டையா பூசி இருப்பதை பார்த்திருக்கிறேன். அப்புறம் பாய்லர்லே கரி போடறது நின்னு போய் கரண்ட்லே சூடாகி உபயோகித் திருக்கிறேன்.
வெந்நீரிலே தான் தீபாவளி கங்கா ஸ்னானம் எல்லோ ருக்கும்.
இதோ விடிந்தால் தீபாவளி. நரக சதுர்த்தசி. நம்மால் யாருக்கு என்ன பயன் பிரயோஜனம் என்று நினைக்க வே கூடாது. நம்மால் நிறைய காரியங்கள் செய்ய முடியும். சின்ன சின்ன காரியங்கள் நாம் செய்தாலே போதும். இந்த பாரத தேசத்தில் கோடானு கோடி மக்கள் இருக்கிறோம். ஒவ்வொருவரும் சிறிது சிறிதாக இது மாதிரி நல்ல காரியங்கள் செய்தால், சிறுதுளி பெரு வெள்ளமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சுபிக்ஷம் தருமே. என்ன அந்த சின்ன காரியங்கள்?
ஒளவையாரின் பாடின ஒரு சின்ன நாலு வரியை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்வோம் :
”வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும்,குடியுயரக் கோலுயரும்,கோலுயரக் கோனுயர்வான்”–
என்ன ஸார் அர்த்தம்னு கேக்கறியா?
விவசாய நிலத்தின் கொள் அளவு அதன் வரப்பு. அதை கொஞ்சம் உயரமாக அமைத்தால், மழை நீர், ஆற்று படுகை நீர் வயலுக்குள் பாயும்போது அதிக நீர் வரப்பு வேலியாக, கரையாக, அமைந்த அந்த வயலில் நீர் ஓடாமல் தங்கும். நீர் அதிகமாக கிடைப்பதால், வயலில் நெல் சுகமாக அதைக் குடித்து விளைச்சல் உயரும், அதிகமாகும்.. நெல் விளைச்சல் அதிகமானால் அறு வடை நல்ல பலன் தரும். அதனால் விவசாய மக்களின் வாழ்வு சுகமாகி, வறுமை ஒழியும். நாட்டில் அநேகருக் கு இவ்வாறு வறுமை ஒழிந்தால் அரசுக்கு செலவில்லை. சிறப்பாக இருக்கும். வரி வசூல் தேவையில்லை, வரியில்லாத அரசின் பெருமை எங்கும் போற்றப்படும். எல்லாம் கொஞ்சம் வரப்பின் அளவை உயர்த்தியதால் தானே.
ஆகவே நாமும் சில சின்ன சின்ன காரியங்கள் பண்ணலாம்.
1. அனாவசியமாக ஆள் இல்லாமல் மின் விசிறி சுற்றினால், விளக்கு எரிந்தால் சுவிட்ச் அணைக்கலாம். மின் சேமிப்பு அவசியம். எல்லோரும் சிக்கனமாக இருந்தால் மின் தட்டுப்பாடு அதன் விலை குறையு மல்லவா?
2. சொட்டு சொட்டாக குழாய்கள் நீரை வீணாக்காமல் கவனித்து மூடலாம். தண்ணீரை அவசியத்துக்கு மட்டும் சிக்கனமாக உபயோகிக்கலாம். குட்டி குட்டி தொட்டிக ளில் வீட்டுக்கு தேவையான கிச்சன் தோட்டம் அமைத் துக் கொள்ளலாம். பூச்செடிகள் வளர்த்து பூக்கள் தொடுத் து படங்களுக்கும் விக்ரஹங்களுக்கும் போட லாம். பெண்களும் குழந்தைகளும் சூடலாம் . பூ ஒரு முழம் 50-60 ரூபாய் விற்கிறதே. நறுமணம் கமழ வாழலாம்.
3. வெளியில் செல்லும்போது, முடிந்தவரை முன்பாகவே புறப்பட்டு பொது வாகனங்களில், போகுமிடத்துக்கு செல்ல முடிந்தால் உபயோகிக்கலாம். கார் வாடகை, பெட்ரோல் செலவு, கார் ரிப்பர் செலவு மிச்சமாகும். ஜாக்கிரதையாகவும் போகலாம். இப்படி எல்லோரும் பொது வாகனங்களை உபயோகப்படுத்தினால் தெருக்களில் வாகனங்கள் குறையும், விபத்துகள் குறையும், பெட்ரோல் டீசல் டிமாண்ட் இருக்காது, விலை குறையலாம். புகை மூட்டம் POLLUTION குறையும். சிங்கப்பூரில் இப்படி மக்கள் வாழ்வதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
4. தீபாவளி போன்ற பண்டிகைகளில் விளக்குகள் ஏற்று வது தான் முக்கியம். பட்டாசுகள் சப்தத்தால் பிற உயிர்களுக்கு அவஸ்தை, தொந்தறவு, இடைஞ்சல். மிருகங்கள் பக்ஷிகள் பயந்து ஓடும். வயதானவர்கள், குழந்தைகள், தெருவில் பட்டாசு வெடிக்கும் போது அது வெடிப்பதை அறியாமல் விபத்துக்குட்படலாம். குப்பை கூளங்கள் தெருவில் சேராமலும் இருக்கும். பொது இடங்களில் சில வெடிகள் மேலே வேகமாக தாறு மாறாக எகிறி சிதறி தீ விபத்தும் வருஷா வருஷம் நிறைய நேர்கிறது. தவிர்க்கலாமே. தீபாவளி என்றால் தீப வழிபாடு தான். மனதில் வெளியில் அமைதி அவசியம் இல்லையா?சப்தம் எதற்கு?
5. பொது இடங்களை சுத்தமாக நமது வீடுபோல் வைத்துக் கொள்வோம், அது பொது சுகாதாரத்துக்கு அவசியம் இல்லையா? ஒவ்வொரு நாளும் நாயை நடத்தி அழைத்துக் கொண்டு போகிறவர்கள் சில வீட்டு வாசல்களில் நாய் அசிங்கம் பண்ண அனுமதிக்கிறார்கள். எவ்வளவு பெரிய தவறு அது? ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அது பரவுகிறது. தெருக்களில் நடக்கும் இடங்களில் இப்படி அசிங்கம் பண்ணினால் அமெரிக்காவில், சிங்கப்பூரில் கடும் தண்டனை உண்டு. இங்கே எவரும் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை. பாவம் நாய்களுக்கு என்ன தெரியும். ஒதுக்குப்புறமாக எவருக்கும் தொந்தரவு இல்லாமல் அவை இயற்கை உபாதிகளை கழிக்க உதவலாமே.
6. வறுமையில் பிழைக்க வியாபாரம் செய்யும் சிறு சிறு வியாபாரிகளிடம், வயதான படிக்காதவர்களிடம் பேரம் பேசவேண்டாம். no bargain. பாவம் கேட்பதை விட கொஞ்சம் கூடவே கூட கொடுத்து உதவலாம். அவர்கள் பிச்சை எடுக்காமல் எதையோ தெருத்தெருவாக சுமந்து விற்று பிழைக்கிறார்களே .
7.வேகமாக வாகனங்களில் செல்லவேண்டாம். வேகம் விவேகம் அல்ல. நடைபாதையில் நடக்கும்போது கவனம் வேண்டும். வண்டி ஓட்டும்போது மொபைல் பேசவேண்டாம். சாலை விதிமுறைகளை தவறாமல், மீறாமல் கடைபிடிக்க வேண்டும். உயிருக்கும் உடலுக்கும் சேதமில்லை, ஆஸ்பத்ரி மன உளைச்சல் .செலவு மிச்சம்.
8 கூடுமானவரை வெளியே சென்று வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி வீட்டிலேயே அவரவர்க்கு தெரிந்த சுகாதார மான,சுத்தமான உடலுக்கு புஷ்டியாக உதவும் நல்ல உணவாக சமைத்து உண்ணலாம். முடிந்தவரை பச்சை காய் கனிகள், கீரைகள் அதிகம் உபயோகிக்கலாம். வாழ்வுக்கு உதவும். வியாதியை விரட்டும். வைத்திய செலவை மட்டுப்படுத்தும். கொரோனா சமயத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக ஒழுக்கமாக இருதோம். அதை கொஞ்சமாவது விடாமல் கடைபிடிப்போம்.
9.பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக் கும் பாதுகாப்பு அவசியம். முடிந்தவரை வலியச் சென்று நாம் உதவ வேண்டும். அவர்கள் சமூக விரோதி களால் பாதிக்கப்படுபவர்கள் அல்லவா? நாமே போலிஸ் பாதுகாப்பை கொடுக்க லாமே. நாமும் கூட போலீஸ் தான். காக்கி சட்டை,தொப்பி இல்லாத போலீஸ்.
10. முடிந்தவரை குடும்பத்தை, குழந்தைகளை விடு முறை நாட்களில் மலை, சிறு குன்றுகள், வயல்கள், சோலைகள் மரங்கள் நிறைந்த இடங்களுக்கு அழைத் து சென்று சுத்தமான காற்றை சுவாசிக்க வைப்பதன் மூலம் உடல் நலம், உள்ள நலம் அதிகரிக்கும். ஒற்றுமை,
குடும்ப நலம் ரெண்டுமே சிறக்கும்.
11. எல்லோருடனும் ஒற்றுமையாக, சிரித்து வாழ்வோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
12. கடைசியாக அடிக்கடி சொல்லுவது. கோவில்களுக் கு சென்று தியானம் பண்ணவேண்டும். மற்ற உயிர்க ளுக்கு உதவ வேண்டும். மக்கள் சேவை மகேசன் சேவை. ஜன சேவை ஜனார்த்தன சேவை

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;