LINGASHTAKAM 8 – J K SIVAN

லிங்காஷ்டகம் ஸ்லோகம் 8 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

நண்பர்களே, இந்த பதிவுடன் ஆதி சங்கரரின் லிங்காஷ்டகம் ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது.

சகல சாஸ்திர வல்லுனர்களும் நரர்களும் சுரர்களும் பூஜிக்கும் பரமேஸ்வரா, காட்டில் காடாக அடர்ந்து காணும் வன புஷ்பமான தாழம்பூவை அர்ச்சித்து உன்னை வனங்குகிறார்களே ஏன், தாழை நாகத்துக்கு விருப்பமான வாசஸ்தலம். அதன் மணம் விஷ நாகத்தையே கவர்கிறது . நீயோ அந்த நாகத்தையே மாலையாகக் கொண்டவன். நாகேஸ்வரன், நாகலிங்கம். எனக்கு மிகவும் பிடித்தது நாகலிங்க புஷ்பம். ஆஹா என்ன அழகு. தலைகளை கவிழ்த்து படமெடுத்து தலைவிரித்த பாம்பு ஆவுடையார் மேல் சுற்றிக்கொண்டிருக்க நடுவே வெள்ளை வெளேர் என்று ஸ்படிக லிங்கம் போல் ஒரு மொட்டு. இயற்கையிலேயே இவ்வளவு ஒரு அழகான புஷபத்தை வேறெங்கும் பார்க்க முடியாது.

सुरगुरुसुरवरपूजितलिङ्गं सुरवनपुष्पसदार्चितलिङ्गम् ।
परात्परं परमात्मकलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥८॥

Suraguru Suravara Poojitha Lingam Suravana Pushpa Sadarchitha Lingam
Paraath Param Paramatmaka Lingam Tatpranamaami Sadaashiva Lingam (8)

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |
பராத்பரம் பரமாத்மக லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 8 ||

लिङ्गाष्टकमिदं पुण्यं यः पठेत् शिवसन्निधौ। शिवलोकमवाप्नोति शिवेन सह मोदते॥
Lingashtaka Midam Punyam Yah Pathet Sivasannidhau Sivaloka Mahaapnoti Sivehna Saha Modatheh
லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஶ்ஶிவ ஸன்னிதௌ | ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோததே |

கர்நாடகாவில் கோகர்ணம் என்று ஒரு ஸ்தலம். அங்கு சிவன் கோயில் போகும் வழியில் ஒரு சம்பக மரம் நிறைய பூத்துக் குலுங்கியது. நாரதன் அந்த வழியே போகும்போது அதன் அடர்த்தியில் அழகில் மயங்கினான். அவன் எதிரே ஒரு பிராமண வைதீகன் வந்தான். மரத்தில் பூத்துக்குலுங்கிய சம்பக புஷ்பங்களைப் பறிக்க வந்தவன் நாரதனைக் கண்டவுடன் பூப்பறிக்க தயங்கினான்.

”எதற்கு தயக்கம் உனக்கு, என்னைக்கண்டதும் ஏன் இந்த சம்பக புஷ்பங்கலைப் பறிக்கவந்தவன் நிறுத்திவிட்டாய்? என்றான் நாரதன்.

”இல்லை நான் அடுத்த ஊருக்குச் செல்பவன், வழியில் இந்த சம்பக மரத்தைப் பார்த்து அதன் அழகில் மயங்கி விட்டேன்”

நாரதன் நகர்ந்து அருகே இருந்த சிவன் கோவிலுக்குச் சென்றவுடன், அந்த பிராமணன் மரத்திலிருந்து சம்பக புஷ்பங்களைப் பறித்தான், தன கையில் இருந்த கூடையில் நிரப்பி மேல் துண்டால் மறைத்துக் கொண்டான். இதற்குள் நாரதன் திரும்பி வந்து விட்டான். என்ன இந்த பிராமணன் இங்கேயே சுற்றுகிறானே என்று
”என்னப்பா இன்னும் போகவில்லையா?” என்று கேட்டான்.
”இதோ போய்க்கொண்டே இருக்கிறேனே என்றான் பிராமணன்” வேகமாக நகர்ந்து விட்டான். நாரதனுக்கு அந்த ஆசாமியின் போக்கு பிடி படவில்லை. கொஞ்சம் நிழல் பேர்வழியாக இருக்கிறானே என்று மரத்தைப்பார்த்தான். முதலில் பார்த்த போது பூத்துக்குலுங்கிய பூக்களை இழந்து மரம் நின்றது. அந்த சம்பக மரத்தைப் பார்த்து நாரதன் கேட்டான்
”ஹே அழகிய சம்பக மரமே, உன் பூக்களை யாராவது பறித்து விட்டார்களா?’
”இல்லையே” என்றது மரம்.
நாரதனுக்கு புரியவில்லை. விடு விடென்று மீண்டும் கோவிலுக்குள் சென்றான். அங்கே மூலஸ்தானத்தில் சிவலிங்கம் முழுதும் சம்பக புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.

அருகே ஒரு பக்தன் த்யானம் பண்ணிக்கொண்டிருந்தான். நேராக அவனிடம் சென்ற நாரதன்
” சுவாமி இன்றைக்கு இங்கே யார் இப்படி நிறைய சம்பக புஷ்பங்களைச் சார்த்தி இருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தெரியுமா?”

”இந்த ஊர் அருகே ஒரு தீய குணம் படைத்த கெடு மதி கொண்ட ஒரு பிராமணன் இருக்கிறான், அவன் தான் தினமும் கூடைப்பூ ஒரு சம்பக மரத்திலிருந்து பறித்து இந்தச் சிவனுக்கு சாத்துகிரான். சிவனும் மனம் மகிழ்ந்து அருள் புரிய, அந்த மனிதன் இப்போது ஒரு பெரிய அதிகாரியாக ராஜாவிடம் பணி புரிகிறான். எல்லோரையும் வாட்டு வாட்டு என்று அதிகாரத்தை துஷ் பிரயோகம் பண்ணி ஊர்மக்களை வதைக்கிறான்.”
நாரதனால் பொறுக்க முடியவில்லை. ஓடினான் சிவனிடம்.
”கைலாசவாசா, நீ செய்தது உனக்கே நன்றாக இருக்கிறதா?எதற்காக இந்த ப்ராமணனுக்கு அருள் புரிந்தாய்.
”நாரதா, எனக்கு இன்ன இருக்கிறது சொல்ல? சம்பக புஷ்பங்களால் என்னை அர்ச்சிப்பவனுக்கு நான் உதவாமல் இருக்க முடியுமா நீயே சொல்?”
நாரதன் அன்று துர்வாசன் ஆனான். ரொம்ப கோபம் அவனுக்கு. மீண்டும் சம்பக மரத்திடம் வந்தான். ”ஹே சம்பக மரமே, என்னிடம் பொய் தானே சொன்னாய். யாரும் உன் பூவை பறிக்கவில்லை என்று . இன்று முதல் சம்பக புஷ்பம் சிவ பூஜையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு மலராகக் கடவது” என்று சாபம் இட்டான். அந்த பொய் சொன்ன பிராமணன் ஒரு ராக்ஷசனாகட்டும் . அவனுக்கு விமோசனம் ராமனாக நாராயணன் அவதாரம் எடுத்து பல ராக்ஷசர்களைக் கொல்லும்போது அவனும் மடிவானே அப்போது தான்”.
கேதகி, என்கிற குடைப்பூ ( அந்த மரத்திற்கு கியூரா என்று இந்தியில் பெயர்.) அன்று முதல் சிவ பூஜைக்கு உபயோகப்படுத்துவதில்லை.

அடி முடி காணா பேரொளியாக சிவன் தோன்றியபோது பிரம்ம முடியைத்தேடி ஆகாய மார்கமாக சென்றபோது வழியில் எதிர்ப்பட்ட தாழம்பூ அவருக்கு உதவுவதாக சமரசம் செய்து கொண்டது. அடி தேடி வராகமாக சென்ற விஷ்ணு என்னால் சிவன் என்கிற ஒளிப்பிழம்பின் அடி காண முடியவில்லை என்று ஒப்புக்கொண்டபோது, ப்ரம்மா , ”நான் ஏற்கனவே முடியைப் பார்த்தாச்சு இதோ இந்த தாழம்பூ சாட்சி” சொன்னபோது ”ஆமாம்” என்று பொய் சாட்சி சொல்லிற்று தாழம்பூ.

யார் பெரியவர் என்ற சர்ச்சை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஏற்பட்டு அதற்கு மத்யஸ்தம் செய்ய தான் ஒரு ஒளி ஸ்தம்பமாக என் அடியையோ, முடியையோ முதலில் கண்டவர் தான் பெரியவர் என்று தீர்ப்பு சொல்லப்போய், இவ்வாறு பிரம்மன் தவறு செய்ய, மகாதேவனுக்கு சினம் பொங்கியது. பொய் சொன்னதற்காக பிரம்மா சபிக்கப்பட்டு பூமியில் எங்கும் கோவிலில் வழிபாட்டு தெய்வமாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. கூடவே பொய்யில் துணை நின்ற தாழம்பூ அன்று முதல் பூஜைக்கு உகந்த தாகாமல் விலக்கப்பட்டது.

ஒரு நன்மை பயக்குமெனில் பொய் ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் மற்ற விஷயங்களில் பொய் கூடவே கூடாது என்று உணர்த்தவே மஹா தேவன் மூலம் இந்தக் கதை உலவுகிறது.
சிவனே, நீ யார் — திருமூலர் சொல்வது காதில் விழுகிறது.

”சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடை முடித் தாமரையானே !!”

அக்னி நிற ஒளி மயமான பரம சிவா, உனக்கு உவமையாகவோ, உயர்ந்தவரோ ஒருவரையும் காணோமே என்கிறார் திருமூலர். மேலே சொன்ன ஒளிப் பிழம்பு கதையும் இழையோடுகிறதே.

இந்த லிங்காஷ்டகம் அறிந்து, படித்து, ஸ்மரணை செய்பவர் அடையும் பலன்களைச் சொல்லவும் வேணுமோ. உன் சந்நிதியை அடைந்து ச்மரிப்பவர்க்கு சிவலோகப்ராப்தி எளிதில் கிட்டும் ஏணிப் படி அல்லவோ லிங்காஷ்டகம்.

காலனுக்கும் காலனான முக்கண்ணா, உன்னை வணங்கும் பக்தர்க்கு மனம் ;இனிக்கும், உலக பந்தம் பற்று எல்லாம் பழுத்த வெள்ளரிப்பழம் கொடியினின்று தானே அகல்வதைப் போன்று விலகும்.பேரின்பமடைவர். மரணமற்ற பரிபூர்ண அம்ருதம் காத்திருக்கும்.

மகா ம்ருத்யுஞ்சய மந்த்ரம் என்பது இது தான்:

த்ரயம்பகம் யஜாமஹெ சுகந்திம் புஷ்டிவர்தனம் ஊர்வாருக மேவ பந்தனாத்
ம்ருத்யோர் மோக்ஷீய மாம்ருதாத்:

THRAYAMBAKAM YAJAMAHE SUGANTHIM PUSHTI VARTHANAM, OORVAARUKAMEVA BANDHANAATH
MRUTHOYOR MOKSHEEYA MAAMRUTAATH:

இதை நான் மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் எழுதுவதை விட 1914ல் ஆர்தர் பெர்ரீடேல் கெய்த் எப்படி அனுபவித்து சொன்னார் என்பது ச்லாகியமாகிறதே :

”OM. We worship and adore you, O three-eyed one, O Shiva. You are sweet gladness, the fragrance of life, who nourishes us, restores our health, and causes us to thrive. As, in due time, the stem of the cucumber weakens, and the gourd is freed from the vine, so free us from attachment and death, and do not withhold immortality.”- ARTHUR BERRIEDALE KEITH (1914
++

எல்லையில்லா இந்த நீல துல்லிய வானத்துக்கு அடியில், வெண்ணிற மேகங்கள் உனது சிவ கணங்களாக உலவிக்கொண்டிருக்க, அமைதியும்,நிம்மதியும் சூழ்ந்த இந்த பனிமலையில் காட்சி தரும் எம்பெருமானே. மகாதேவா உனக்கு நமஸ்காரம்.

பசுபதி நாதா, நீ உறையும் பனிமலையே உன்னை நாங்கள் வணங்கும் சிவலிங்கமாக காட்சியளிக் கும் அதிசயம் தான் என்ன. ஆஹா அற்புதம். உனது எண்ணற்ற திருவிலையாடல்களில் இதுவும் ஒன்றோ?

பவளம் போல் மேனியில் பால் போல் வெண்ணீர் அணிந்த பரமனே. சூரியனையும் எரிக்கும் தகிக்கும் நெற்றிக் கண்ணின் மேல் சிரசில் குளிர்ந்த சந்திரனை அணிந்த சந்திரசேகரா,

அக்னியில் ஸ்புடம் போட்டது போல் மின்னும் பொன்னார் மேனியனே, தாமிர வண்ணனே, எவராலும் வெல்ல முடியாத திரிசூல பாணியே . புலித்தோல் அணிந்த பரிசுத்தனே,

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய முழு முதற் கடவுளே, காலனுக்குக் காலனே, நெஞ்சில் பயம் நீக்கி உரம் தரும் உமாபதி.

என்ன சொல்லி முடிப்பேன்.?அடுத்த ஸ்லோகத்தில் உன்னைச் சந்திக்கும் போது ஒரு அதிசயம் சொல்லுகிறேன். சிவன் உறையும் பனி மலையும் மேலே இருந்து பார்த்த போது ஓம் என்று வட மொழியில் எழுதியது போல் பனியில் உறைந்து காண்பதை நேரிலோ படத்திலோ கூட பார்த்தவர் களுக்கு இனி அடுத்த பிறவியேது.

குழந்தைகளே, (பெரியவர்கள் இதைப் படித்து உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லுங்கள்)

கீழே கொடுத்திருப்பது என் வாக்கியங்கள் அல்ல. மகா பெரியவா குழந்தைகளுக்கு (வளர்ந்த குழந்தைகள் நமக்கும் கூடத்தான்) அழகாகச்சொன்ன முத்துக்கள்:

” மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிற போது தான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி வெளிவாக இருக்கிறபோது படித்தால் பாடம் நன்றாக ஏறுகிறது. கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப் போகிறது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது. தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியை பார்வதி – பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி- மஹா விஷ்ணு வாகவோ நினைத்து கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும். புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாக வரும். நன்றாக பாஸ் பண்ணிடலாம். ரொம்ப புத்திசாலியாக இருந்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணினால் கூட நல்லவன் என்ற பெயரெடுக்கா விட்டால் பிரயோஜனம் இல்லை.
நல்ல பெயர் இல்லாவிட்டால் பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது.நல்லவனாக இருந்து விட்டால் அது நமக்கும் சந்தோஷம். மற்றவர்களுக்கும் சந்தோஷம். பெரியவனான பின் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும் அது தான் உதவும். நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாக இரண்டுமே ஆகவும் செய்வது ஸ்வாமியிடம் நாம் வைக்கிற பக்தி தான்.”

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;