
சர்வேசா, உன்னை ஸ்வயம்பு என்கிறோமே. என்ன அர்த்தம்? தான்-தோன்றி — அப்படியென்றால் எப்படி?. உலகில் எதுவுமே ஒன்றிலிருந்து தானே மற்றொன்று உருவாகிறது. உலகமே பஞ்ச பூதங்களினால் தானே. மண்ணிலிருந்து தானே பானை. பானை மறைந்தால் மண்ணாகிறது. மண்? மற்றவற்றின் கலப்பு. இதெல் லாவற்றிற்கும் ஏதோ ஒன்று ஆதாரம் உண்டு அல்லவா. அது தான் ஸ்வயம்பு. அது எதையும் சார்ந்த தில்லை. அதைப் பிரித்தாலும் அதுவே தான். சிவா, நீ அதுவே. ஸ்வயம்பு. பரம மூலமான வஸ்து. கலப்பில்லாத நிர்மலம்.
உனது கைலாய பர்வதம் ஒரு ஓம் கார பனிமலையாக, பர்வதமாக இருப்பதாக அறிந்து நேராக போக முடியாவிட்டாலும் படத்திலாவது தத்ரூபமாக கண்டு களித்தேன். இருக்கும் இடத்திலேயே சகலமும் அறியும் விஞ்ஞான வளர்ச்சியை மனிதனின் மூளை வளர்ச்சியில் வைத்து வாழவைக்கும் தெய்வமே. பலரும் என்னைப்போல் உன்னுடைய இந்த ஓங்கார பர்வத அழகைக் கண்டு களிக்கவே தந்திருக்கிறேன்.பனி, ஐஸ் ஓம் வடிவத்தில் கைலாச மலைமேல் கண்ணுக்கு தெரிகிறது. என்ன ஆச்சர்யம்?
இதற்கு முந்தைய லிங்காஷ்டக செய்தியில் சதாசிவா, உனது கைலாச பர்வதம் ஒரு லிங்கம் போல் அமைந்திருந்தது கண்டு களித்தது போதவில்லை. இன்று உனது வாஸ ஸ்தலமே ஓம் என்ற ஸமஸ்க்ரித எழுத்து போல் பனி படர்ந்து காட்சியளிப்பதை ஆச்சர்யம் என்பதா, அல்ல, இதுவும் ஸ்வயம்புதானோ !!
த்ரிநேத்ரனான சதாசிவா, உனக்கு அபிஷேகப்ரியன் என்று பெயர் உண்டே. தாரா பாத்ரத்தில் சதா சர்வ காலமும் ஏற்கனவே கங்கையைத் தலையில் சூடிய பெருமானே, உனக்கு அபிஷேகம் நடைபெறுவதை எத்தனை கோவில்களில் கண்டு களித்திருக்கிறேன். உன் மனம் குளிர்ந்து நீ அருள இப்படி ஒரு வழியா? உனக்கு எதில் அபிஷேகம் செய்கிறார்கள் என்று அறிவேனே!தயிர், பால், தேன் , இளநீர், விபூதி, சந்தனம், பஞ்சாம்ருதம் (பால், சர்க்கரை, நெய், தேன், தயிர்) இத்தோடு நிறைய பழங்களும் சேர்ப்பதும் உண்டே.
வில்வ தளத்தில் மகிழும் விஸ்வநாதா, உலகில் பிறந்து பிறந்து துன்பத்தில் வாடும் எம்மை கருணை யோடு காத்து பிறவா வரம் தாரும் பெம்மானே என்று பாடியதும் உண்டல்லவா.
நீ எளிதில் திருப்தி அடைபவன் ஆயிற்றே. எளிய மலர்களே கூட உனக்கு போதுமே, தும்பை, அரளி, நாகலிங்கம், — மற்றவர்கள் தலையில் சூடாத பூக்கள் உன்னை அலங்கரிக்கின்ரனவே.
உனக்கு பிடித்த எட்டு மலர்கள் எது என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. சொல்கிறேன் நீயும் கேள். மற்ற சிவப் பிரியர்களும் கேட்கட்டுமே.
1. அஹிம்சை என்கிற புஷ்பம் பக்தர்களிடம் கண்டால் அதுவே உனக்கு பிடித்த முதல் மலர்
2. ஐம்புலன் அடக்கம் என்கிற புஷ்பம் இருந்தால் அது தான் ரெண்டாவதாக பிடித்த மலர்
3. சகல ஜீவராசிகளிடமும் காருண்யம் என்கிற புஷ்பம் என்பது உனக்குப் பிடித்த மூன்றாவது மலர் .
4. மன்னித்தல் என்கிற புஷ்பம் உனக்குப் பிடித்த விசேஷ நான்காவது மலர் .
5. .பொறுமை, அமைதி, சாந்தம் இது பக்தர்களிடம் இருந்தால் அந்த புஷ்பம் நீ அவர்களிடமிருந்து பெரும் ஐந்தாவது மலர் .
6. ஜப தபம் என்கிற புஷ்பம் அது உனக்கு பக்தர்கள் அளிக்கும் ஆறாவது மலர்.
7. தியானம் என்கிற அருமையான புஷ்பம் தான் உன்ன்னைகவரும் ஏழாவது மலர்.
8.சத்யம், என்கிற விசேஷ புஷ்பமே நீ விரும்பும் எட்டாவது மலர்.
இவற்றை பக்தர்கள் கொண்டிருந்தால் அந்த மலர்களாலேயே நீ அர்ச்சிக்கப்பட விரும்புவன் நீலகண்டா. யாரும் விரும்பாத அஞ்சும் விஷ நாகமே உனக்கு விரும்பி அணியும் மாலை அல்லவா. நாகேஸ்வரா. காடுடைய சுடலைப் பொடி பூசிய உனது திவ்ய சரீரம் சொல்லாமல் சொல்லுகிறதே வாழ்வு அநித்தியம் என்று. பரம சிவா உன்னை வணங்குகிறேன்.
अष्टदलोपरिवेष्टितलिङ्गं सर्वसमुद्भवकारणलिङ्गम् ।
अष्टदरिद्रविनाशितलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥७॥
Ashta Dalopari Veshtitha Lingam Sarva Samudbhava Kaarana Lingam
Ashta Daridra Vinaashaka Lingam Tat Pranamaami Sadaa Shiva Lingam
அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம் ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர வினாஶன லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 7 ||தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவனே. நீ எளியோர்க்கெளியவன். புராதனமானவன். அனாதிகாலத்தவன். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முந்தைய பழமனாதி. பராத்பரா, பரமேஸ்வரா. தந்தை தாய் இருந்தால் உலகில் உனக்கு இந்த அல்லல் வருமோ ஐயா என்று அருமை யான பாட்டை எத்தனை முறை கேட்டிருக்கிறேன். மகிழ்ந்திருக்கிறேன். பாடியுமிருக்கிறேன். எல்லோரும் அமிர்தம் தேடி அலையும்போது ஹால ஹால விஷத்தை அமுதாக உண்டவனே. சுருட்டப் பள்ளியில் பள்ளிகொண்ட ஈஸ்வரா உன்னை அங்கு காணும்போதெல்லாம் என் மனம் எத்தனை வேதனைப்படும் தெரியுமா. முகத்தில் கவலையோடு பார்வதி, தேவர்கள், முனிவர்கள் நந்தி அனைவரும் உன்னை, உன் வேதனையை, உணரும் உணர்ச்சியை முகத்தில் தேக்கி காட்டி என்னமாக அந்த சிற்பி கல்லில் வடித்தி ருக்கிறான். பிரதோஷ மகிமை அல்லவா அந்த க்ஷேத்ரத்துக்கு. (பார்க்காதவர்கள் இப்போதே உலகிலேயே பெரிய, படுத்துக்கொண்டிருக்கும் கோலத்தில் பள்ளிகொண்ட ஈஸ்வரனாக அந்த சிவனைச்சென்று தரிசியுங்கள். ஊத்துக்கோட்டையிலிருந்து கூப்பிடு தூரம் ஆந்திரா எல்லையில் உள்ளது சுருட்ட பள்ளி.
பொடி நடையாக 2 கி. மீ. தூரம் சென்றால் உலகில் எங்குமே இல்லாத சயன சிவனைப் பார்க்கலாம். 2000-3000 வருஷ கோவில். மஹா பெரியவா இங்கு வந்து த்யானம் செய்து ”ராமாயண கால கோவில்டா இது” என்றிருக்கிறார். எல்லா சிவன் கோவில்களிலும் சிவலிங்கமாக காட்சி தரும் பரமேஸ்வரன் இங்கு பார்வதி மடியில் (இங்கு அவள் பெயர் மரகத வல்லி) தலை வைத்து நெஞ்சில் கொடிய ஆலகால விஷம் தாங்கி அவஸ்தையோடு அருள் பாலிக்கும் சயன சிவன்.
லிங்காஷ்டகம் 8 – நங்கநல்லூர் JK SIVAN
ஆதிசங்கரர்
அஷ்டகம் என்றால் எட்டு. ஆதி சங்கரர் சிவன் மேல் லிங்காஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகங்கள் பாடியதைத்தான் இதுவரை நாம் அறிந்தோம்.
பரமேஸ்வரனை நேரில் பார்க்கமுடியாத நாம் அவனை லிங்க ஸ்வரூபத்தில் கண்டு வணங்குகிறோம். எண்ணற்ற கோவில்களில் அருள் பாலிக்கிறான்.மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜன்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கி கொள்ளமுடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.
நேற்று பிரதோஷம் எங்கள் வீட்டுக்கருகிலேயே திருமால்மருகன் ஆலயத்தில் சிவனை நந்தியை வேண்டிக்கொண்டேன். என்ன வேண்டுதல்? ”பகவானே, எனக்கு இன்னும் நிறைய உன்னைப் பற்றி படிக்க, எழுத எல்லோருடனும் அதை பகிர்ந்து கொள்ளவேண்டும்… அதற்கு ஒருநாளைக்கு 18 மணி நேரம் குறையாமல் உழைக்க தேவையான கண் பார்வை, உடல் சக்தி வேண்டும்…. ”
அகிலலோகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழும் பொருட்டு சிவபெருமான் ஹாலஹால
விஷத்தை உண்டு எல்லோரையும் காப்பாற்றினார். அந்த காலமே பிரதோஷ காலமாகும் . பரம்பொருளான சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரிய திருவுள்ளம் கொண்டு கயிலையில் அன்று மாலை பிரதோஷ வேளையில் தன் முன்னிருந்த ரிஷப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே நின்று, அம்பிகை காண, திருநடனம் செய்தருளினார். தேவர்கள் அதைக் கண்டு உளம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினர். அது முதல் திரியோதசி திதி அன்று மாலை நேரம் பிரதோஷகாலம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து லோக ஜீவராசிகளும் தேவர்களும் முப்பத்துமுக்கோடி தேவர்கள் அனைவரும் பிரம்மா, விஷ்ணு, ஒன்று சேர்ந்து விரதமிருந்த நாள்தான் பிரதோஷ நாளாகும்.
வளர்பிறை, தேய்பிறை இரண்டு காலங்களிலும் வரும் திரியோதசி திதி அன்று நீராடி அன்று மாலை 4-30 மணி முதல் 6-00 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபடவேண்டும். தேய்பிறையில் வரும் பிரதோஷ காலங்களில் சிவன் அம்பிகையுடன் நந்தியின் கொம்புகளுக்கிடையே நடனமாட திருமால் மட்டுமே கண்டுகளிக்கின்றார். ஆனால் பெளர்ணமிக்கு முன்னால் வரும் பிரதோஷத்தன்று திருமாலுடன் சேர்ந்து தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவனை வழிபட வருகின்றனர். அனறு மாலை 4-30 மணிமுதல் 6-00 மணிக்குள் சிவனை வழிபடும் மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
பிரதோஷமன்று உபவாசமிருந்து தரிசனம் முடிப்பது நற்பலன்களை தரும். ‘ப்ர’ என்பது பாவத்தையும் ‘தோஷம்’ என்பது போக்கும் நேரம் எனவும் பொருள்படும். பிரதோஷகாலத்தில் சிவபெருமான் எல்லாவற் றையும் தன்னிடம் அடக்கி கொள்கிறார். அதனால் பிரதோஷம் என்பது பரமேஸ்வரனை வழிபடுதலாகும். பொதுவாக பிரதோஷம் ஐந்து வகைப்படும்.
ஒவ்வொரு பிரதோஷத்திலும் இறைவனை பூஜிப்பதற்கு முன் நந்தி தேவரை பூஜிப்பது நன்மை பயக்கும் . எல்லோருக்கும் எல்லா நலன்களையும் பக்தியையும் வளர்க்க என்னிடமிருக்கும் நந்தி தேவன் எனக்கு இணையான பெருமையுடையவன் ஆதலால் நான் இரண்டாம் சிவவேடம் தரித்து பூவுலகில் கர்மத்தை பரவ செய்கிறேன் என்று சிவ பெருமான் கூறியுள்ளார்.
நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையணிவித்து நெய் விளக்கிட்டு வெல்லம் கலந்த அரிசி நிவேதனம் செய்யவேண்டும். பால், தயிர், தேன், பழங்கள், பஞ்சாமிர்தம், நெய், இளநீர், சர்க்கரை, எண்ணை, சந்தனம், ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது உசிதம். வில்வம், மல்லிகை, செந்தாமரை, வென்தாமரை, எலுமிச்சை, துளசி போன்றவற்றில் மாலை தொடுத்து நந்திக்கு சார்த்தவேண்டும். நந்தி தேவருக்கு தீபாராதணை முடிந்தபிறகு மூலவருக்கு தீபாராதனை நடைபெறும். நந்தி தேவரின் சிலையின் பின்பக்கத்திலிருநது இரண்டு கொம்புகளிடையே உள்ள இடைவெளி வழியாக சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனை யைப் பார்த்தால் சகலதோஷமும் துன்பமும் நீங்கும். மலடு நீங்கி மகப் பேறு உண்டாகும். கடன் நீங்கி செல்வம் பெறலாம். நோய் நீங்கி நலமாகலாம். அறியாமை நீங்கி ஞானம் செளபாக்கியங்களையும்
மோக்ஷத்தை, சொர்க்கத்தை கொடுக்கிறார் சிவன். பிரதோஷ நாளில் விரதமிருந்து வழிபட்டு வருபவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பதை ஓலைச்சுவடிகள் சொல்கிறது.
எனக்கென்னவோ இந்த உருத்ராக்ஷ சிவ லிங்கம் கண்ணை விட்டு அகலவில்லை. அழகுக்கு அழகு செய்தது போல் மஹா பெரியவா என்கிற மனத்தில் நடமாடும் (உருவில் நடமாடிய) சங்கரன் அவதாரம். .
சிவலிங்கத்தின் மேலே ருத்ராக்ஷ நாகம். இந்த சிவனைப் பாடிப் புகழ ஆசை. எனக்கோ பாட்டு எழுத வராது. அருமையான பாடல்கள் சில இருக்கிறபோது அதையும் இதோடு சேர்த்தால் சர்க்கரைப்பந்தலில் தேன் மாரி தான் அல்லவா? சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார். சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் என்று நாம் பாடுகிறோம். சிவன் முழுமுதற் கடவுள். அவனை நெக்குருகி பாடிய ஞானிகள் சிலரின் பாடல்களிலிருந்து பக்தி பாவபூர்வ சிறந்த பொருட் செறிவு, சொற் செறிவு கொண்ட சில வரிகளைப் படிப்போம், ஆனந்திப்போம், அருள் வேண்டி சிவானுபவத்தில் கரைவோம்.
ஓம் என்ற சப்தத்திலே அஞ்சு கோடி மந்திர சக்தி இருக்கிறது. நெஞ்சு அதை விடாது சப்திக்க வேண்டும். நம சிவாய என்ற அஞ்செழுத்தில் சகல சக்தி மட்டுமல்ல. பாப விமோசனமும் உள்ளது.
அஞ்சு கோடி மந்திரமு நெஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும் முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே
நமசிவாய என்று சொல்லும் அக்ஷரம் சிவனே இருக்கும் இடம். சகல அபாயத்திலிருந்து தப்ப உதவும் உபாயம். பிராணனை பாபத்திலிருந்து மீட்டு நற்கதி தர உதவும் மந்திரம் நமசிவாயம்
சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே
அடே பரம சிவா, நீ இருக்க எனக்கு எவரிடமும் பயம் இல்லை. எனக்கு நீ கொடுத்த பலம் எது தெரியுமா? என்னிரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி சிரமேல் கரம் குவித்து ”ஹர ஹர மஹா தேவா, ஓம் நமசிவாயா” என்று கண்ணில் நீர் பெருக நெஞ்சுருக உன்னை நினைத்து கூப்பிடுவது ஒன்று தானே.
பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே.
பராத்பரா, ஒன்றே ஒன்று அது நீ ஒன்று தான். பலவாகத் தோன்றும் எல்லாமே நீ ஒன்றே தான். அழுக்காறு கயமை, வஞ்சகம், காழ்ப்பு போன்ற என்னுள்ளே களிம்புகள் நிறைய இருந்தாலும் அவற்றை நீக்கி நானாகிய இந்த களிம்பேறிய தாமிரப் பாத்திரத்தை மும் மலமகற்றி , பளபளக்கச் செய்வதும் நமசிவாயா எனும் உன் நாமந்தான். அது தான் என்னுள்ளேயே நிலையாக நிற்கிறதே.
ஒன்று மொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம்உம்முளே அறிந்ததே சிவாயமே.
கடைசியாக ஒன்று சொல்கிறேன். சிவா, நீ ஆதி, அந்தம் மூல விந்து, நாதம், பஞ்ச பூதம். நீயே நமசிவாய என்கிற பஞ்சாக்ஷரம். வேறு என்ன இருக்கிறது சொல்ல?
ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே.
மேலே சொன்னது அத்தனையும் நானல்ல. சிவவாக்கியர் எனும் மஹான். பெரிய சித்தர் பிரான்.
இப்படிப்பட்ட பிறவி, மனிதப்பிறவி நமக்கு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்ட பிறகு கிடைத்திருக்கிறது தெரியுமா? அதெல்லாம் கடந்து உன் நாமம் பற்றி கடைத்தேற வழி வகுத்த விமலா, சிவபெருமானே, உன்னையே நான் ”சிக்” க்கெனப்பிடித்தேன். என்கிறார் மணி வாசகர். நாமும் பிடித்துக் கொள்வோமா?
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற, இத்தாவர சங்கமந்துள்
எல்லாப் பிறப்பும், பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள், கண்டுஇன்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
கண்டுஇன்று வீடுற்றேன் – மாணிக்க வாசகர்
ஒரு ஆச்சர்யமான சம்பவம். சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த சிங் ஒரு நாலு வரி மந்திரத்தை அவரது சிஷ்ய கோடிகளுக்கு உபதேசித்தார். இந்த மந்திரத்தை பிற்காலத்தில் சீக்கியர்கள் பிரிவினைக்கு உபயோகித்தனர். அதன் விளைவு எந்த சீக்கியனும் பாகிஸ்தானோடு இணையவில்லை. அப்படி என்ன அந்த மந்திஅத்துக்கு சக்தி என்றால் அந்த 4 வரி எம்பெருமான் சாக்ஷாத் பரமசிவனைப் போற்றிய ஸ்லோகமாக அமைந்திருந்தது எனலாம். சீக்கியர்கள் கொள்கைக்காக தம் உயிரையே திரணமாக மதிக்கும் தன்மையினர். யுத்த களத்தில் இதை உச்சரித்து தைர்யமாகப் போராடினர்.
இந்த 4 வரி சீக்கியரது ”சண்டி சரிதர் உக்தி பிலாஸ்” என்கிற பாடலில் இடம் பெறுகிறது. இது முழுக்க முழுக்க தேவி பராசக்தி யின் சக்தி உபாசனை எனலாம். அவளது காம்பிர்யம், வீரம், தைர்யம், அருமை பெருமையைப் பாடுகிறது. தசம க்ரந்தம் என்ற சீக்கியர் வேதத்தில் 4வது அத்தியாயத்தில் வருகிறது. அதைப் பார்ப்போமா?
”Deh shiva bar mohe ehai, subh karman te kabhu na taro.
Na daro ari soun jab jaye laro, nischey kar apni jeet karo.
Aru sikh ho apne ho mann ko, eh laalach hou gun tau uchro.
Jab aav ki audh (avadhi) nidan bane ati hee rann me tabh joojh maro.”
Translation:
” O Lord Shiva, grant me the boon, that I may never deviate from doing a good deed.
That I shall not fear when I go into combat. And with determination I will be victorious.
That I may teach myself this greed alone, to learn only Thy praises.
And when the last days of my life come, I may die in the might of the battlefield.||231||
— Guru Gobind Singh
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




Om Nama Shivaya. Good one Detailed message on lord shiva & Prodhasam.
Thanks