NARADHA MAHARISHI – J K SIVAN

நாரதர் கதை  –     நங்கநல்லூர்  J K   SIVAN
”எல்லாம்  அந்த  கோண்டு  பயலாலே. சரியான  நாரதர்  அவன்”.  நாரதர்  என்றாலே  கலகம்  செய்பவர்.  நட்பைக்  கலைத்து  விரோதம் மூட்டுபவர்  என்று தான் நம் காது பட பலர் சொல்கிறார்கள்.  நாரதர் திரிலோக சஞ்சாரி. வைகுண்டம்  கைலாசம், மற்றும்  விண்ணுலகத்தில்  ”சற்று முன் வெளியான”  செய்தி  அப்பப்போ சொல்பவர்.  சிறந்த  முதன்மையான  விஷ்ணு பக்தர். உண்மையில் நாரதர் பற்றி  என்னதான் விஷயம் என்று ஏன் நாம்  அறிய முற்படவில்லை. யார் நாரதர்?
நாரதர் அநேகமாக  எல்லா புராணங்களிலும்  பாரதம், ராமாயணம் போன்ற  இதிகாசங்களிலும், பாகவதத்தில் வருபவர். நீதி நெறிகளை  கதையாக  சொல்பவர். அவர் இல்லாத  இடமே கிடையாது. பகவானின் பல அவதாரங்களில் கூடவே இருப்பவர்.  ரிஷிகளில் முதன்மை ஸ்தானம் வகிப்பவர். கையில் மஹதி என்ற  வீணையை வைத்துக் கொண்டு   ஹரிநாமம் பாடும்   சங்கீத ஞானி.
”நாராயணா” என்று சதா சொல்லிக்கொண்டே  திரிபவர். சினிமாக்களில் கூட  தலையில் ஜடையை மேலே தூக்கிக் கட்டி முடித்துக்  கொண்டு  கையில் தம்புராவுடன் நெற்றியில் நாமத்துடன் ஹரிநாமம் பாடிக் கொண்டே விண்ணில் பறந்து வருவதாக தான்  நாரதரை நாம் பார்க்கிறோம்.  MSS  அம்மா கூட  ‘சகுந்தலை’ யில்  நாரதர்  வேடம் போட்டு படம் சக்கை போடு போட்டது.  பாலமுரளி கிருஷ்ணா  தெலுங்கு தமிழ் படம் பக்த ப்ரஹலாதாவில் நாரதராக  வந்து அருமையாக  பாடியிருக்கிறார்.
நாரதர்  சர்வஞர். சாதுர்யமாக  பேசுபவர்.சகல வேதம் உபநிஷத்துகள் கரைத்துக் குடித்தவர். மகரிஷி சனத் குமாரரிடம் ப்ரம்ம வித்யை கற்றவர்.
வால்மீகிக்கு ”மரா மரா”  என்று  சொல்லவைத்தே, ராமநாமம் சொல்லி  ராமாயணம் எழுத வைத்தவர் நாரதர்.
தக்க சமயத்தில் உண்மையை  போட்டுடைத்து ரஹஸ்யத்தை காலி  செய்து விடுவதில்  நாரதர் வல்லவர். அவரை  ஒரு வில்லனாக  தப்பாக  காட்டுவது தவறு.  நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்று எல்லோரும் சொல்வதுண்டு.  கட்டுரை ஆரம்பத்தில் சொன்ன  கோண்டு மாதிரி இல்லை நாரதர்.  அவன் விஷமி.
நாரதருக்கு என்று கோவில்கள் இல்லை. சிலையும் கோவில்களில் இல்லை. கர்நாடகாவில்  நாரத முனி கோவில் ஒன்று சிகதேரி என்ற ஊரில்  கர்நாடகாவில் இருக்கிறதாம். நான் சென்று  இன்னும்  தரிசிக்க வில்லைபாகவத  புராணம்  என்ன சொல்கிறது என்றால்:  நாரதர்  முற்பிறவியில் ஒரு கந்தர்வ பாடகர்.  பகவானைப் பாடாமல்  உபதேவதைகளைப் பாடியதால் சாபம் பெற்று    முனிவர்களுக்கு  பணிவிடை செய்யும்  பெண்மணி யின் மகனாக பிறந்து  அந்த முனிவர்கள் மகிழ்ந்து அளித்த விஷ்ணு ப்ரசாதத்திலும்  ஆசியிலும்  வளர்ந்தவர். நாராயணனைப் பற்றி அறிந்து மகிழ்ந்து தவம் இருந்தவர்.  விஷ்ணு ப்ரத்யக்ஷமாகி  ”அடுத்த பிறவியில் நீ என்னோடு” என்று வரமளித்தார்”. நாரதர்  விஷ்ணுவுக்கே  சாபம் இட்டிருக்கிறார் என்று ஒரு கதை.
பரமேஸ்வரன் ஒருமுறை  ” நாரதா, நீ  தபோவனம் செல். அங்கே  யார் இடையூறும் இல்லாமல் நீ தவம் செய்யலாம்” என்று அனுப்பினார்.  நாரதர் தவவலிமை தன்னை பாதிக்குமோ என்று அஞ்சி இந்திரன்  வருணன் அக்னி, வாயு ஆகியோரை நாரதர்   தவத்தைக் கலைக்க அனுப்பி  அவர்கள் தோற்று, மன்மதனை அனுப்பினான். தவம் வெற்றிகரமாக முடித்த பின் நாரதர்  கைலாசம் சென்று சிவனிடம் தான் எப்படி இந்திரன் அனுப்பிய  தேவர்களை தோற்கச் செய்தார் என்று சொல்கிறார்.  ”நாரதா இதெல்லாம் போய் நீ விஷ்ணுவிடம் சொல்லவேண்டாம்” என்று பரமேஸ்வரன் அறிவுறுத்துகிறார்.அதையும் மீறி  விஷ்ணுவிடம் தன் தவவலிமை பற்றி நாரதர் சொல்ல, ”நாரதா  ரொம்ப  பெருமைப்படாதே.கவனமாக இரு. தியானத்தை தொடர்வாய் ” என்று சொல்கிறார் விஷ்ணு.
திரும்பி வரும் வழியில் ராஜா  ஷீலாநிதி அரண்மனையில் ஒரே கோலாகலம். என்ன என்று உள்ளே நுழைகிறார்.  இளவரசி  ஸ்ரீமதிக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது.  அவள் அழகில்  நாரதர் மயங்கி அவளை கல்யாணம் செய்துகொள்ள ஆசை பிறக்கிறது. அவளைப்பார்த்த  உடனேயே அவருக்கு ஞான திருஷ்டியில் அவளை  மணப்பவன்  திரிலோக சக்ரவர்த்தி என்று அறிகிறார். நேராக விஷ்ணுவிடம் செல்கிறார்.  ”ஹரி, என்னையும் உன் போல் அழகானவனாக ”ஹரி”அவதாரமாக  மாற்று” என்று வேண்டுகிறார்.  விஷ்ணு சரியென்று தலையாட்ட, நாரதர்  ஸ்வயம்வரத்துக்கு செல்கிறார்.
ஸ்வயம்வரத்தில்  அந்த இளவரசி  நாரதன் முகத்தைப் பார்த்துவிட்டு சிரிக்கிறாள். மாலையிடவில்லை. ”நான் அழகானவன்  என்னை ஏன் நீ தேர்வுசெயது மாலையிடவில்லை? என்று நாரதர் கேட்க,”உனக்கு ராஜகுமாரி கேட்கிறதா  போய் உன்  முகத்தை கண்ணாடியில் பார்” என்று அவள் தோழிகளும் மற்றவர்களும் சொல்லி சிரிக்க கண்ணாடியில் தன் முகத்தை பார்த்த நாரதர் அது ஒரு குரங்கின் முகத்தைக்   காட்டுகிறது.கடும் கோபத்தோடு நாரதர்  விஷ்ணு விடம்  சென்று ” நீ செய்த  வேலையால்,  நான் விரும்பிய இளவரசியை இழந்தேன். அழகானவனாக மாற்று என்று கேட்டதற்கு இப்படி செய்துவிட்டாயே, ஞாயமா?”நாரதா, நீ  தானே ‘ஹரி’ போல் இருக்கவேண்டும் என்று கேட்டாய்.  ஹரி என்றால் குரங்கு என்று ஒரு அர்த்தம் என்பது மறந்து விட்டதா உனக்கு?” என்கிறார் விஷ்ணு.”உன் சாமர்த்தியத்தை அறிந்தேன்.  மகா விஷ்ணு, நீ  மனிதனாக பிறப்பாய், மஹாலக்ஷ்மி உன் மனைவியாக  பிறந்து  ஸ்வயம்வரத்தில் உன்னை அடைவாள். ஆனாலும்  உன் ஆசை மனைவியை நீ  பிரிந்து பலகாலம் தவிப்பாய்.  குரங்குகள் உனக்கு உதவி  உன் மனைவியை மீண்டும் பெறுவாய்”  நாரதன் சாபத்தால் ராமாயணம் நடந்தது. இது என்னுடைய  உடான்ஸ் இல்லை.  ராமசரித மனஸ்  ஸ்லோகங்களில் துளசிதாசர்  பாடி இருக்கிறார்.
அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் சொல்கிறேன். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;