KHALEEL GIBRAN – J K SIVAN

ஞானம்.    –    நங்கநல்லூர்   J K  SIVAN
லெபனான்  என்று  ஒரு  தேசம். அதில் ஒரு  தத்துவ கவிஞன்  பிறந்தான். அவன் பெயர்  கலீல் கிப்ரான். அவன் கவிதைகள் உலகப்பிரசித்தி பெற்றவை.  ஆங்கிலத்தில் அவற்றை படித்து ரசிப்பேன். அதில் ஒன்றை சொல்கிறேன்.
ஒரு  நதி. கங்கோத்ரி என்ற  மலைச்சிகரத்தில் பிறந்து  கங்கை என்று பெயர் கொண்டது… எங்கோ மலை உச்சியில் சிறிதாக பிறந்து, கொஞ்சம் கொஞ்சமாக  பெரிதாக வளர்ந்து , வளைந்து நெளிந்து அதன் பரிமாணத்தில் பெரிதாகி  வேகத்தோடு  எத்தனையோ மைல்கள்  பல பிரதேசங்களை கடந்து மெதுவாகவும்  வேகமாக  தலை தெறிக்கவும்  ஓடி, பல மொழி பேசும் மக்களைக் கண்டு, அவர்களுக்கு உபயோகமாகி, எண்ணற்ற தாவரங்கள் உயிரினங்கள்  வாழ உதவி கடைசியில்  கடலை தூரத்தில் இருக்கும்போதே  எதிரே  பார்க்கிறது. அதற்கு நடுக்கம். ஆஹா  என் எதிரே  எவ்வளவு பெரிய ஒரு நீர் நிலை. கண்ணுக்  கெட்டிய தூரம் வரை நீல நிறம். நான் அதை நெருங்கிக்கொண்டே  போகிறேன். நிற்கலாம். திரும்பலாம்  என்றால்  முடியவில்லையே.  இனி திரும்ப முடியாது. நான் வந்த வழி எப்படிப்  பட்டது? எவ்வளவு மலைகள், குன்றுகள், அடர்ந்த  காடுகள்,  குட்டி கிராமங்கள்,  ஊர்கள், வளைந்து வளைந்து அல்லவா  நான்  வந்தவன்? இதோ இப்போது எதிரே …இதில் நான் கலந்தால்… அப்புறம் நான்  இல்லை.. மறைந்து விடுவேன்.இதுவரை எனக்கு என்னென்னவோ  பெயர், கங்கை,  பாகீரதி, ஜானவி, அலக்நந்தா…..இன்னும் எத்தனையோ என்று கங்கை நினைத்துப் பார்க்கிறது.இந்த  சமுத்திரத்தில் நான் கலந்தால், இணைந்தால்..அப்புறம் நான்  கங்கையோ,யமுனையோ, கோதாவரியோ, ப்ரம்ம புத்ராவோ இனிமேல் இல்லை.. என் அடையாளமே காலி.இதுவரை எத்தனையோ வழிகளில் வந்த எனக்கு இனி வேறு வழி இல்லை. நோ என்ட்ரி பாதையில் வந்திருக்கிறேன். திரும்பிப் போக முடியாது.
இதை கவனித்த  ஒவ்வொருவனும் ஞானியாக இருந்தால் அதில் உள்ளடங்கிய  உண்மையஹே சட்டென்று புரிந்து கொள்வான்.வாழ்க்கை ஒற்றை  வழிப்பாதை. ஒரே வழி.  நேராக செல்.  முடிவை நோக்கி செல். எல்லையில்லாத, கரை காணாத முடிவான  பிரமத்தை  நோக்கி பயணம் செய். உன்  வாழ்க்கை எத்தனையோ ஆரவாரத்தோடு துவங்கி, நடந்து கோபமாக, வேகமாக, பலத்தோடு, உணர்வுகளோடு, செயல்பட்டிருக்கலாம். ஆனால் அமைதி உனக்காக எப்போதும்  காத்திருக்கிறது.அழைக்கிறது. அதோடு கலந்து நான்   என்ற உன் பெயரை,  உடல் அடையாளத்தை மற, கடந்து போ.  அதற்காக பயம் வேண்டாம். வந்தவர் யாரும் திரும்ப முடியாத பயணம் உலக  வாழ்க்கை. அர்த்த மற்ற பயம் எதற்கு.  தெரிந்த விஷயம் தானே! பல்லாயிர வருஷங்களாக பலரும் அனுபவித்தது தானே.  சிறியதிலிருந்து பெரியதாகிவிட்டோம் என்ற ஆனந்தம் அல்லவா முக்கியம்.

It is said that before entering the sea
a river trembles with fear.

She looks back at the path she has traveled,
from the peaks of the mountains,
the long winding road crossing forests and villages.

And in front of her,
she sees an ocean so vast,
that to enter
there seems nothing more than to disappear forever.

But there is no other way.
The river can not go back.

Nobody can go back.
To go back is impossible in existence.

The river needs to take the risk
of entering the ocean
because only then will fear disappear,
because that’s where the river will know
it’s not about disappearing into the ocean,
but of becoming the ocean.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2571

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;