
பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN
பக்தி பரவசம்.
வங்காளிகள் சிறந்த தேவி உபாசகர்கள். காளி பக்தர்கள். வருஷா வருஷம் வசந்த காலத்தில் டோல் யாத்ரா என்று ஒரு ஊஞ்சல் விழா நடத்துவார்கள். நிறைய விக்ரஹங்கள் அலங்கரித்த மேடைகளில் ஊஞ்சலில் தீபாலங்கார ஒளியில் கண்ணை பறிக்கும். பக்தர்கள் இரவு பூரா பஜனை பாடல்கள் ஒலிப்பார்கள். ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கும். சில ஊர்களில் சொக்கப்பனை எரிப்பார்கள். அதன் ஒளியும் ஒரு கூடுதல் சந்தோஷம். அன்று ராக்ஷஸி ஹிரண்யகசிபு வின் சகோதரி ஹோலிகாவின் பொம்மைகளை எரிப்பார்கள் .
1882 ம் வருஷம் மார்ச் மாதம் அப்படி ஒரு டோல் யாத்ரா தினத்தன்று ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கலகத்தாவில் பலராம் போஸ் வீட்டுக்கு காலை எட்டு மணிக்கே சென்றுவிட்டார். அவருடன் சிஷ்யர்கள் ராம், மனமோஹன், ராகால் , நித்ய கோபால் ஆகியோரும் உடன் சென்றனர். M எனும் மொஹீந்தரநாத் தும் ”நீயும் வா என்று பரமஹம்ஸர் அழைத்து கூடவே சென்றதால் இந்த விஷயம் நமக்கு இன்று கிடைக்கிறது. பலராம் போஸ் வீட்டில் பஜனை நடந்தது. வழக்கம்போல் பரமஹம்ஸர் ஆடிப் பாடி க்கொண்டே சமாதி அடைந்துவிட்டார். நித்யகோபால் உணர்ச்சி வெள்ளத்தில் மூர்ச்சை போட்டு விழுந்தார். ராகால் தரையில் வெகுநேரம் உருண்டு புரண்டார். ராகால் மார்பில் பரமஹம்சர் கையை வைத்து தட்டி ”அமைதி சாந்தி” என்கிறார். அப்போது தான் ராகால் சுய நினைவுக்கு வருகிறார். அது ராகாலின் முதல் ஆனந்தானுபவம். ராகால் கல்கத்தாவில் பெற்றோருடன் வசித்தவர். அடிக்கடி தக்ஷேனேஸ்வர் சென்று பரமஹம்ஸரை தரிசிப்பார். பஜனை, ஹாரத்தி எல்லாம் முடிந்து எல்லோருக்கும் பலராம் போஸ் வீட்டில் பிரசாதம் வழங்கப்பட்டது. பலராம் போஸ் கையைக் கட்டிக்கொண்டு சுவரோரம் நின்றார்.
சில தினங்கள் கழித்து M தக்ஷிணேஸ்வரம் சென்றார். மாலை நாலரை ஐந்து மணி இருக்கும். சிவன்கோவில் வாசல் படிக்கட்டில் பரமஹம்சரும் M மும் உட்கார்ந்தார்கள். எதிரே ராதா காந்தன் கோவில் அதைப் பார்த்துக் கொண்டே இருந்த பரமஹம்ஸர் பரவச நிலை அடைந்தார். ராமகிருஷ்ணரின் மருமான் ஹ்ரிதய் ராதாகாந்தன் கோவில் உத்தியோகத்தை விட்டு நின்றுவிட்டதால், இப்போது அங்கே அர்ச்சகர் யாருமில்லை. ராமகிருஷ்ணரின் அடிக்கடி வரும் சமாதி நிலையால் அவரால் பூஜைகள் சரிவர செய்ய முடியாதே. அர்ச்சகர் இல்லாத குறை பரமஹம்சருக்கு வருத்தத்தை அளித்தது.
அன்று காளி பவதாரிணியிடம் ராமகிருஷ்ணர் பேசினார். ”அம்மா, எல்லோரும் அவரவர் வழிபாடே சரி என்கிறார்கள். ஹிந்துக்கள், முஸ்லீம், கிறிஸ்தவர் ப்ரம்மசமாஜ் பக்தர்கள் எல்லோருமே அவரவர் வழிபாடு தான் சிறந்தது, எங்கள் மதம், கொள்கை தான் சிறந்தது, உயர்ந்தது,உண்மையானது என்கிறார்களே. இதை யார் சரி என்று புரிந்து கொள்ளவோஒப்புக் கொள்ளவோ முடியும்? உன்னை ஒருவன் முழு மனதாக நேசித்து தாயாக பாவித்து வேண்டினால் உன்னை அடைய முடியும் என்று எனக்கு தெரியும். அது என் அனுபவம். கிருஸ்தவர்கள் எப்படி உன்னை அவர்கள் சர்ச்சில் வழிபடுகிறார்கள் என்று எனக்கு புரிய வை. நான் அங்கே சென்று வழிபட்டால் மக்கள் என்ன சொல்வார்கள்? உள்ளே அனுமதிக்கவே யோசிப்பார்களே . அங்கே போய் விட்டால், மீண்டும் இங்கே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இங்கே காளிகோவிலில் நுழையவே தடை செய்தாலும் அது ஒருவேளை நடக்கும். நான் அப்புறம் உன்னை எப்படி தரிசித்து மகிழ்வேன். வாசலில் இருந்தே கிருஸ்தவர்கள் வழிபாட்டை நான் காண நீ வகை செய்யேன்” என்று வேண்டினார்.
ராமக்ரிஷ்ணரைப் போல் ஒரு பரந்த மனது கொண்ட யோகியை நாம் காணவே முடியாது.
இன்னொரு நாள் நடந்த சம்பவம் இது. பரமஹம்ஸர் தன்னுடைய சிறிய அறையில் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். முகம் எப்போதும் போல் ஞான ஒளி வீசிக்கொண்டிருந்தது. அப்போது M உள்ளே வந்தார். அவரோடு காளி கிருஷ்ணா என்பவரும் வந்தார். அவருக்கு M தன்னை ராமக்ரிஷ்ணரிடம் கூட்டிக்கொண்டு போகிறார் என்றே தெரியாது. ”வா, உன்னை ஒரு அருமையான மதுக்கடைக்கு கூட்டிக் கொண்டுபோகிறேன். அங்கே ஒரு பெரிய ஜாடியில் ஆனந்தமான மது நிறைந்து இருக்கும்” என்று தான் சொன்னார். ராமகிருஷ்ணர் தான் அந்த மது என்று காளி கிருஷ்ணாவுக்கு எப்படி தெரியும்? ஆகவே காளி கிருஷ்ணா ராமகிருஷ்ணரை பார்த்ததும் பேந்த பேந்த விழித்தார். M பரமஹம்சரிடம் தான் என்ன சொல்லி அழைத்து வந்தார் என்று விளக்கினார். ராமக்ரிஷ்ணரும் சேர்ந்து சிரித்தார்.
”ஆமாம் மோஹிந்தர் நீங்கள் சொன்னது ரொம்பசரி. அம்மாவை வணங்கும் பேரானந்தம், அவளோடு அளவளாவும் ஆனந்தம் சாதாரண மதுவை விட எவ்வளவு உயர்ந்தது. அது தான் உண்மையான அம்ருத பானம் .ஆனந்த போதை தருவது. வாழ்க்கையின் லக்ஷியமே அது தானே. பகவான் அருளைப் பெற பக்தி ரொம்ப அவசியம். பகவானை ஞானம், கல்வி மூலம் அடைவது கஷ்டம்”
தன்னையறியாமல் ராமகிருஷ்ணர் பாட ஆரம்பித்து விட்டார்:
”அம்மா காளி , உன்னை எவர் அறிவார், புரிந்து கொள்வார் , ஷட் தரிசனங்கள் என்கிறார்களே அதற்கு கூட உன்னை அறியும் சக்தி இல்லையம்மா”……..
”வாழ்க்கையில் நாம் பிறந்து வாழ்வது பகவான் மேல் அன்பு செலுத்தவே தான். பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் மேல் அங்கிருந்த பால்காரர்கள், பசுமாட்டுக்காரர்கள், கோபியர், கோப சிறுவர்கள், எல்லோரும் அப்படித்தான் பேரன்புகொண்டவர்கள். அதனால் தான் கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டு மதுரா சென்றபோது அவர்களுடைய சோகம், துயரம் கணக்கிலடங்காமல் போனது. பிரிவை தாங்கமுடியவில்லை” என்றார் பரமஹம்சர். மீண்டும் கண்கள் பெருகின மேலே விழிகள் செருக கண்ணை மூடிக்கொண்டு பரவச நிலையில் ராமகிருஷ்ணர் பாடினார்:
இப்போது தான் ஒரு இடைச்சிறுவனை கண்டேன்.ஒரு கையில் இளம் கன்றுக்குட்டி மார்போடு அணைத்தவன் இன்னொரு கை மரக்கிளையின்மேல். மரத்தின்மேல் கிருஷ்ணன். ”கன்னையா…” என்று கூப்பிட சிறுவன் வாயசைத்தான். வார்த்தை வரவில்லை ”க” மட்டும் தான் ஒலித்தது.தம்பி எங்கேடா நீ இந்தா கன்றுக்குட்டி ” சிறுவன் கண்ணில் கண்ணீர்….”
உணர்ச்சி வசம் மேலிட்டு பரமஹம்சர் பாடும்போது M மற்றும் அனைவரின் கண்களிலும் நீர் மல்கியது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


