
கருட புராணம். – நங்கநல்லூர் J K SIVAN
இதில் ஜீவன் யமனின் ராஜ்யத்தில் அவன் தூதர்கள் மூலம் அவஸ்தைப்படும் தண்டனைகளை பற்றி கவலைப் பட வேண்டாம். நாம் அதை இங்கே இப்போது உணரப்போவதில்லை, இறந்து போனவர்கள் அடுத்த பிறவி எடுக்கும்போது என்ன உருவம் கிடைக்கும் எங்கே பிறப்பார்கள் என்று சொல்ல முடியாது. சூக்ஷ்ம சரீரத்தில் செய்த கர்மங்களுக்கு அங்கே தண்டனை விதிக்கப்படுகிறது படிப்பதற்கு மட்டும் பயமாக இருக்கும். அதை அனுபவித்து சொன்னவர்கள் இதுவரை யாரும் இல்லை. தப்பு செய்தால் தப்ப முடியாது, தண்டனை கொடூரமாக, கடுமையாக இருக்கும் என்று சொல்வது எல்லாம், தப்பு பண்ணக்கூடாது என்று அறிவுறுத்தவே தான். அதோ அங்கே பேய் நிற்கிறது, மூணு கண்ணன் நிற்கிறான் சீக்கிரம் சாப்பிடு , பொய் சொல்லாதே உம்மாச்சி பாத்துண்டே இருக்கும். கண்ணைக் குத்தும் என்று குழந்தையை அம்மா பயமுறுத்துவது குழந்தை சாப்பிட்டு நன்றாக உடல் வளரவேண்டும்,நல்ல குணம் அமையவேண்டும் என்பதற்காகவே தான் அல்லவா? அப்படி எடுத்துக் கொள்வோம்.
கட்டை விரல் அளவு சூக்ஷ்ம சரீரம் என்னென்ன தண்டனைகளை எதற்காக பெறுகிறது என்று தொடர்ந்து பார்ப்போம். சிலவற்றை நான் சொல்லவில்லை. அவை எழுத முடியாத அளவு இந்த காலத்துக்கு பொருத்தமாக இல்லை. வேதகாலம் வேறு. விஞ்ஞான காலம் வேறு.
”கருடா, எமலோகத்தில் நீதி நகரத்திற்கு 4 வாசல். தெற்கு வாசல் தான் அநேககமாக நிறைய பேர் செல்வது. ரொம்ப கஷ்டமான பாதை. பசி தாகத்தோடு நடக்கவேண்டும்.” என்று சொல்கிறார் நாராயணன்.
”பகவானே, என்ன தண்டனை எமலோகத்தில் பாபிகளுக்கு கொடுக்கப்படுகிறது என்று சொல்லுங்கள்?”
”கருடா, கேட்பதற்கு கஷ்டமாகதான் இருக்கும் அதற்காக எ நடப்பதை சொல்லாமல் இருக்க முடியுமா?கதவைக் கடந்து உள்ளே போகும்போது எங்கும் ஓ ஓ என்று கதறல் சப்தம் கேட்கும். காவல்காரன் தர்மத்வஜன் அங்கே நிற்கிறான். அவன் உள்ளே சென்று சித்ரகுப்தனிடம் சென்று இந்த ஜீவன் செய்த நல்லகாரியங்கள், தீயவை என்னென்ன என்று விவரம் அறிவான்.
சித்ரகுப்தனுக்கு விஷயங்களை சேகரித்துக் கொடுப்பவர்கள் ஸ்ரவணர்கள். ப்ரம்மாவின் புத்ரர்கள். எங்கும் சுற்றிக்கொண்டே இருப்பவர்கள். அவர்கள் காதுகளும் கண்களும் பலமடங்கு சக்தி வாய்ந்தவை. மூடியிருந்தாரைக்குள் நடப்பதைக் கூட கேட்க முடியும். பார்க்க முடியும். போதுமா? இங்கி ருந்தே பல நூறு கி.மீ. தூரத்தில் பேசுவது எல்லாம் துல்லியமாக கேட்கும் காதுகள் கொண்டவர்கள். ஸ்ரவணம் என்றால் கேட்பது. அப்படி கேட்க முடிந்த வர்கள் என்பதால் அவர்களுக்கு ஸ்ரவணர்கள் என்ற பெயர். அவர்களுடைய மனைவிகள் ஸ்ரவணிகளும் விஷயம் சேகரிப்பவர்கள். அவர்கள் பெண்களை கண்காணிப்பவர்கள். யார் எப்போது,எங்கே என்ன பேசியது, என்ன செய்தது என்று சகல விஷயங்களும் சித்ரகுப்தனை அடைகிறது. மனதில் நினைத்ததும் கூட தெரியும் போல் இருக்கிறது.
நல்லதே நினைத்து நல்லதே பேசி, நல்லதே புரிந்தவர்கள் ஸ்ரவணர்கள், ஸ்ரவணிகளால் விஷயங்கள் அறியப்பட்டு சித்ரகுப்தனை அடைந்து நல்ல ஜீவன்கள் ஸ்வர்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
மற்றவர்கள் கதி நம் கதி. சூரியன், சந்திரன், பஞ்ச பூதங்கள், யமன், சகலரும் நமது எண்ணங்கள், செயல்கள் , சொற்களுக்கு ஸாக்ஷி . மோசமானவர்கள் முன் அப்புறம் யமதர்மராஜன் கோரமான வடிவத் தோடு தோன்றுகிறான். அவனைக்கண்டால் யமதூதர்களும் சித்ரகுப்தன் ஸ்ரவண, ஸ்ரவணிகளுமே நடுங்குவார்கள். அப்படிப்பட்ட கோரமான தோற்றம் கொண்டவன்.அவனைக் கண்டதும் தான் மேலே சொன்ன ஓ ஓ என்ற பயத்தால் ஏற்படும் சப்தம் ஜீவர்க ளிடமிருந்து கிளம்புகிறது. எமனின் முன், சித்ரகுப்தன், ஜீவன்கள் செய்த பாப காரியங்கள் பட்டியலை வாசித்து ஏன் இப்படி பாபத்தை செய்தீர்கள் என்று காரணம் கேட்பான். பதில் சொல்ல முடியாமல் ஜீவர்கள் திணறுவார்கள். ”எல்லாம் உங்கள் சந்தோஷத்துக் காகத்தானே புரிந்தீர்கள்” அதற்கு தான் இப்போது தண்டனை. யமனின் நீதியில் வித்யாசம் பார பக்ஷம் எவரிடமும் கிடையாது. எல்லோரும் எங்கே சமம்.
குற்றங்களுக்கு பாபங்களுக்கு ஏற்றவாறு என்ன தண்டனை, எந்தெந்த நரகத்தில் எப்படி எல்லாம்” என்று யமன் கூறுகிறான். அப்புறம் எமதூதர்கள் ஜீவன்களை அடித்து அந்தந்த இடங்களுக்கு கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்கிறார்கள். எம தண்டனையை நிறைவேற்றுபவர்களில் முக்கியமான அதிகாரிகள் பிரசாந்தன், சண்டகன், ஆகியோர். இங்கு தான் முன்பு சொன்ன ராக்ஷச அத்தி மரம் உள்ளது. அதில் சங்கிலி,கயிற்றால் தலைகீழாக கட்டி ஜீவர்கள் தொங்கவிடப்படுவார்கள். அடி தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கும். அதிக உஷ்ணத்தோடு ஜ்வாலை வீசிக்கொண்டு அனல் உடலை துளைக்க நெருப்பு காற்று அந்த மரத்திலிருந்து வீசும். பசி தாகம் எதற்கும் ஒன்றும் கொடுக்கப்பட மாட்டாது. ”என்னை மன்னித்து விடுங்கள்” என்ற கதறல் அநேக ஜீவன்களி டமிருந்து கேட்கும். எமதூதர்கள் கைகளில் உள்ள இரும்பு கம்பிகள், இரும்பு சுத்திகள், கடப்பாறை கள் ஜீவர்கள் உடலை பதம் பார்க்கும். மயக்கம டைந்து ஜீவர்கள் விழுவார்கள். ‘ஓ பாபிகளே , ஏன் இப்படிப்பட்ட பாபங்களை செய்துவிட்டு தப்பிக் கலாமென்று கனவு கண்டீர்கள் இப்போது அனுபவி யுங்கள். பிறர் பசிக்கு அன்ன தானம் செய்வது இருக்கட்டும். நாய்,காகத்துக்கு கூட ஒரு பருக்கை தராதவர்கள் இப்போது பசியோடு தாகத்தோடு தண்டனை அனுபவியுங்கள்” அப்போது தான் அடுத்த பிறவியிலாவது பாபங்களை செய்யமாட்டீர்கள்”ஒரு நாளைக்கு கூட யமன் என்று ஒருவன் இருக்கிறான், அவனிடம் சித்ர குப்தன் இருக்கிறான் என்ற எண்ணமே இல்லையே உங்களுக்கு. பகவானிடம் மன்னிப்பு கேட்டிருந்தாலாவது கொஞ்சம் எங்கள் தண்டனை குறைந்திருக்கும் அதுவும் பல ஜென்மங்களில் செய்யாதவர்கள் இங்கே தண்டனை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிரவர்கள் உள்ளார்கள்”என்கிறார்கள் எம தூதர்கள்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


