KRISHNA THE MIRACLE – J K SIVAN

கரிகுண்டன் ஒரு அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN

ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால் இருந்தவர் களுக்கும் நமக்கும் வித்யாசம் குணாதிசயங்களில் கிடையவே கிடையாது, உடை உணவு வாழ்க்கை முறையில் தான் காலத்த்திற்கேற்ப வித்யாசம் மாறுதல் இருந்தது. இன்னும் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு அப்புறம் இருப்பவர்கள் நாம் வாட்டசாப்ப், முகநூல், வீடியோ யூட்யூப் பார்த்தவர்கள் என்று சொல்லி சிரிப்பார்கள். அப்போது என்னென்னவெல்லாம் புதுசு புதுசாக மாறுதல் இருக்குமோ, நாம் ஸ்கூட்டரில் காரில் போனோம் என்றால் நாம் இப்போது தேரில் போனவர் களை பற்றி பேசுவது போல் சிரித்து பேச வாய்ப்பு இருக்கிறதே. ஆகவே தான் எனக்கு பாரதம் பாகவதம் எல்லாம் படித்து எழுதும்போது ஆச்சர்யம் தாங்க வில்லை. ஒவ்வொரு முறை படிக்கும்போது ஒவ்வொரு மனநிலை, ஆச்சர்யம் என்னை ஆட்கொள்கிறது. இதோ பாருங்கள் பூதகி என்பவள் அழகிய பெண் ணாக வேஷம் கொண்டு முலையில் விஷம் தடவிக் கொண்டு முன்னேற்பாடோடு சிறு குழந்தை கிருஷ்ண னுக்கு பால் ஊட்டும் சாக்கில் கொல்ல வந்துவிட்டாள் . நிச்சயம் அவள் முயற்சியில் வெற்றி கொண்டிருப்பாள். ஆனால் அது சாதாரண குழந்தைகள் விஷயத்தில் தான் நடந்திருக்கும். கிருஷ்ணனுக்கு பூதகி பிறக்கும் முன்பே என்னவாக இருந்தாள் . அவள் மறு பிறவி எது என்று கூட தெரியுமே. ஆகவே வா உனக்கு இருக்கிறது சாப்பாடு என்று அவளுக்காக சின்னக் குழந்தையாகவே காத்திருந்தான்.

கிருஷ்ணனின் பால லீலைகளை சொல்லி மாளாது. ஆயிரம் நாக்கு படைத்த ஆதிசேஷன் கூட அதை சொல்ல திணறவேண்டும். ஒவ்வொரு சம்பவமும் அலாதி. அதில் ஒரு ரகசிய செய்தி புதைந்திருக்கும். பகவான் நம்மருகே இருக்கிறான் என்பதை உணர்த்தும். நம்மை நாம் புரிந்துகொண்டால் கிருஷ்ணனை நம்மில் உணரலாம்.
பூதனை கம்சனின் ராக்ஷச கூட்டத்தில் ஒரு சக்தி வாய்ந்த அரக்கி. ” பூதனா, உன்னைத்தான் நான் பொருத்தமானவள் என்று கருதினேன். நீ எப்படி செய்வாய் என்பது உன் திட்டம். கிருஷ்ணன் என்ற சிறுவன் உன்னால் மரணமடையவேண்டும். வெற்றி கரமாக இதை முடித்து என்னை வந்து சந்திக்கிறாயா?”

” இது எனக்கு ஒரு கொசுவை நசுக்கும் வேலை ” என்று விரல்களை சொடுக்கினாள் பூதனை.

” ஹாஹா என்று சிரித்தான் கம்சன், ‘
‘ பூதனா சென்று வா கிருஷ்ணனை கொன்று வா”
என்று அனுப்பினான். மதுராவிலிருந்து கிளம்பிய போதனா கிருஷ்ணனை பற்றிய செய்திகளை சேகரித்தாள். யமுனை ஆற்றை கடந்து கோகுலம் சென்றாள் . இப்போது அவள் ஒரு அரக்கி அல்ல. மிக அழகான ஒரு இளம் பெண். தாய். நந்த கோபனின் மாளிகையை பார்த்து பிரமித்துவிட்டு விஈட்டுக்குளே சென்றாள் . அப்புறம் அங்கே என்ன நடந்தது?

இதோ யமுனாநதியில் இரு கோபியர்கள் ஸ்னானம் செய்து கொண்டே பேசுவதிலிருந்து தெரிந்து கொள்வோம்.

”அடியே விசாலாக்ஷி இந்த ஆச்சர்யத்தை கேள்வி பட்டியோ?

”எதை சொல்றே நீ சத்யா, நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைபத்தி தானே?

“வேறே என்ன விஷயம் இருக்கு இந்த ஊரிலே பேச?

“ஆமாம். கேள்விபட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு உள்ளே போய் யசோதையை கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்.

”என்ன நடந்ததாம்?”

”யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலையில் வந்தாளாம். வாசலில் யசோதா ஏதோ வேலையாக இருந்தாளாம்.அம்மா இங்கே ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கிறதாமே . அந்த வீடு தானே இது? என்றாளாம்

.”எந்த குழந்தையை சொல்றே ம்மா நீ?””கிருஷ்ணன் னு ஒரு அழகான பையன்.. ஊரே அவனைப் பார்க்க கூடுதாம். அந்த பையன்”

‘ அம்மா, எங்க வீட்டு குழந்தை தான் அம்மா கிருஷ்ணன்
என்று பெருமிதமாக சொன்னாள் யசோதா

”அழகா இருப்பானாமே அவனை நான் பார்க்கலாமா?” என்று அந்த பெண் கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தை கிருஷ்ணனைத் தூக்கிக் கொண்டு வந்து அவள் கையிலே தந்திருக்கிறது.

அந்த பெண் வீட்டில் நுழைந்து சப்பளிக்க உட்கார்ந்து கொண்டு மடியிலே கிருஷ்ணனைப் போட்டுக்கொண்டு அவனோடு விளையாடி கொஞ்சியிருக்கிறாள். அப்புறம் மெதுவா யசோதை கிட்டே…

”அம்மா நானும் ஒரு தாய். இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா’
பாவம் யசோதை அதை நம்பி சரின்னு தலையாட்டி
யிருக்கிறாள்.
”அப்புறம்?”
”விழுப்புரம். என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ”
”சரி சரி நீயே சொல்லு”
”என்ன ஆச்சோ தெரியல்லை.
”ஆ என்று ஒரு சப்தம் இடியோசை மாதிரி கேட்டது.

குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு பால் குடிக்க முயற்சித்த போதே அந்த பெண் அலறிண்டே அப்படியே சாஞ்சுட்டாளாம். அந்த பெண்ணை காணோம். அவள் இருந்த இடத்திலே ஒரு பெரிய ராக்ஷசி கோரமாக செத்து கிடந்தாளாம். குழந்தை கிருஷ்ணன் அவள் மேலே ஏறி விளையாடிக் கொண்டிருந்ததை பாத்துட்டு நந்தகோபனும் மற்ற கோபர்களும் ஓடி வந்து குழந்தையை அப்புறபடுத்திவிட்டு அந்த ராக்ஷசி யாருன்னு கண்டுபிடிச்சிருக்கிறார்கள். அவள் மதுராவிலிருந்து வந்தவள் என்று தெரிந்தது. அப்பறம் அவளை தூக்கிகொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாளாம். ”

” அந்த ராக்ஷஸி யாராம்?”
”பூதனை என்று பேராம். குழந்தை கிருஷ்ணனை கொல்ல வந்திருக்கலாம் என்று சொல்றா. அவள் மார்பகத்தில் கொடிய விஷம் இருந்ததாம். ஏதோ யசோதை பண்ணின புண்யம் கடவுள் குழந்தை கிருஷ்ணனை காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ ஆபத்து ஏற்பட்டிருக்கும்.”

”ஐயோ. குழந்தை இப்போ எப்படி இருக்கு?”

”அந்த கரி குண்டன் எப்போதும்போல சிரிச்சுண்டே தான் இருக்கான் எல்லாரையும் பார்த்து மயக்கறான்.
யசோதை கையை பிடிச்சுண்டு ”தூக்கு” என்கிறான்
.
”என்னமோ போடி அந்த பயலைப் பத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேதி வந்துண்டே இருக்கு.

”சரியா சொன்னே. கிருஷ்ணன் ஒரு அதிசய குழந்தை தான் சந்தேகமில்லை”.

தன்னைக் கொல்ல வந்த பூதனைக்கும் தன்னை விஷப் பால் ஊட்ட வந்தாலும் தாயாக வந்த ஒரு காரணத்தால் மோக்ஷம் கொடுத்தான் கிருஷ்ணன்…எவ்வளவு பாபம் செய்தவனையும் தன்னை நாடியவனை பரிசுத்தமாக் கும் தன்மை கொண்டவர் பரமாத்மா.நாம் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டி னால் நமக்கும் நற்கதி நிச்சயம் கொடுப்பாரில்லையா?

if you find my posts interesting and worth circulating to your contacts and friends for their benefit, please do so. I do this as a service VISHAYA DHANAM every day spending almost 18 hrs minimum writing about spiritual topics. thank you.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;