SOUNDHARYA LAHARI 62-65/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 62-65/103 – நங்கநல்லூர் J K SIVAN

62   प्रकृत्या रक्तायास्तव सुदति दन्तच्छदरुचेः प्रवक्ष्ये सादृश्यं जनयतु फलं विद्रुमलता ।
न बिम्बं तद्बिम्बप्रतिफलनरागादरुणितं तुलामध्यारोढुं कथमिव विलज्जेत कलया ॥ 62॥

Prakrithya’rakthayas thava sudhati dantha-cchada-ruchaih Pravakshye saadrisyam janayathu phalam vidhruma-latha; Na bimbam tad-bimba-prathiphalana-raagad arunitham Thulam adhya’rodhum katham iva bhilajjetha kalaya.62

ப்ரக்ருத்யா ஆரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசேப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா Iந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலன-ராகா-தருணிதம் துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேதகலயா II

62 தாயே, ஜெகதீஸ்வரி, வெண்மையான முத்துக்களை போன்ற அழகிய பற்களைக் கொண்டவளே ! எப்போதுமே இயற்கையாகவே செக்கச் செவேலென்று சிவந்திருக்கிற உன்னுடைய உதடுகளின் அழகுக்கு ஒரு உபமானம் சொல்லட்டுமா? அவற்றைப் பார்க்கும் போது எனக்கு பவழக்கொடி பழமோ என்று தோன்றும். ஒரு வேளை இது கோவைப் பழமோ? இந்த பழங்கள் வெட்கத்தால் நாணி, உன் அதரத்தின் சிவந்த நிறத்தைத் தம்மிடம் பிரதிபலிக்கச் செய்து கொண்டதால் சிவப்பாக இருக்கின்றதோ?

63. स्मितज्योत्स्नाजालं तव वदनचन्द्रस्य पिबतां चकोराणामासीदतिरसतया चञ्चुजडिमा ।
अतस्ते शीतांशोरमृतलहरीमम्लरुचयः पिबन्ति स्वच्छन्दं निशि निशि भृशं काञ्जिकधिया ॥ 63॥

Smitha-jyothsna-jalam thava vadana-chandrasya pibatham Chakoranam asid athi-rasataya chanchu-jadima;
Athas the sithamsor amrtha-laharim amla-ruchayah Pibanthi svacchhandam nisi nisi bhrusam kaanjika-dhiya.

63. ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் தவ வத்ஹன-சந்த்ரச்ய பிபதாம்சகோரணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா I
அதஸ்தே சீதாம்சோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய:பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிகதியா II

63 . அம்மா, உன் அழகிய வதனம். சந்திரபிம்பம். அதில் புன் சிரிப்புக்கு எதை ஈடு சொல்வேன்? அம்ருதம் போல குளுமையான கிரணங்களை பொழியும் நிலவு, சந்திரனி லிருந்து சொட்டும் அம்ருதத்தைப் பருகும் சகோரபக்ஷிகளுக்கு அந்த அம்ருதத்தின் அதிகமான இனிப்புத் சுவையால், தித்திப்பால், அதைப் பருகிய நாக்கு உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டது. மரத்துப் போயிற்று. அளவுக்கு மிஞ்சினால் அம்ருதமும் திகட்டுமே. ஆகவே அந்த சகோர பக்ஷிகள் புளிப்பாக எதையாவது சாப்பிடவேண்டும் என்று ஆசைகொண்டு குளிர்ந்த கிரணம் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப்பெருக்கை புளித்துப்போன கஞ்சி என்றெண்ணி வயிறு முட்ட ஒவ்வொரு ராத்திரியும் நிறைய பருகுகின்றன.

64. अविश्रान्तं पत्युर्गुणगणकथाम्रेडनजपा जपापुष्पच्छाया तव जननि जिह्वा जयति सा ।
यदग्रासीनायाः स्फटिकदृषदच्छच्छविमयी सरस्वत्या मूर्तिः परिणमति माणिक्यवपुषा ॥ 64॥

Avishrantam pathyur guna-gana-katha’mridana-japa Japa-pushpasc-chaya thava janani jihva jayathi saa;
Yad-agrasinayah sphatika-drishad-acchac-chavi mayi Sarasvathya murthih parinamati manikya-vapusha.

64. அவிச்ராந்தம் பத்யுர்குணகண-கதாம்ரேடனஜபா ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா I
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருச-தச்சச்சவி-மயீ ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா II

64 அம்பா, சாம்பவி, உன்னுடைய பிரசித்தமான நாக்கு இடைவிடாமல் உன் மனங்கவர் நாதன் பரமசிவனுடைய பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபமாகக் கொண்டு செம்பருத்திப் புஷ்பம் போல் சிவந்து சிறப்புடன் காணப்படுகிறது. அந்த நாக்கின் நுனியில் வசிக்கும் ஸரஸ்வதி தேவியின் ஸ்படிகம் போன்ற தெளிவான காந்தியுடன் கூடிய வடிவம் செக்கச் செவேலென்று கண்ணைப்பறிக்கும் மாணிக்கம் போல் மாறிவிடுகிறது.

रणे जित्वा दैत्यानपहृतशिरस्त्रैः कवचिभिर्- निवृत्तैश्चण्डांशत्रिपुरहरनिर्माल्यविमुखैः ।
विशाखेन्द्रोपेन्द्रैः शशिविशदकर्पूरशकला विलीयन्ते मातस्तव वदनताम्बूलकबलाः ॥ 65॥

Rane jithva’daithyan apahrutha-sirastraih kavachibhir Nivrittais Chandamsa-Tripurahara-nirmalva-vimukhaih;
Visakh’endr’opendraih sasi-visadha-karpura-sakala Viliyanthe maatas tava vadana-tambula-kabalah.

65.ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி: நிவ்ருத்தைச்-சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்யா-விமுகை:I
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத-கர்பூரசகலா விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா:II

65 தாயே ! தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த கடும் போரில், தேவாசுர யுத்தத்தில், அசுரர்களை வென்று வெற்றி வீரர்களாக திரும்பியவ இந்திராதி தேவர்கள் உன்னை அடைந்து அளவற்ற மரியாதை, பக்தியால் தலைப்பாகையை நீக்கியவர்களாக, கவசம் பூண்டதைக்கூட கழற்றாமல் கைகூப்பி நிற்கின்றார்கள். வெற்றிச் செய்தி சொன்ன
தேவஸேனாபதியான ஸுப்ரஹ்மண்யர், தேவர்களின் அரசனான இந்திரன், உபேந்திர னாகிய விஷ்ணு ஆகியோர் எல்லோருக்கும் சந்திரனைப் போல் வெண்மையான பச்சைக் கற்பூரத்தூளுடன் கூடிய உன்னுடைய வாயில் மெல்லப்பட்ட தாம்பூலக் கவளங்கள் பிரசாதமாக, வெற்றிப்பரிசாக வழங்கிய தாயே, உன்னைத் சரணடைகிறேன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;