
ஆத்ம வித்யா விலாசம் 11-15 – நங்கநல்லூர் J K SIVAN
சதாசிவ ப்ரம்மேந்திரா
சரபோஜி மஹாராஜா தஞ்சாவூரை ஆண்ட காலத்தில் (1712-1728) வாழ்ந்தவர் ஸதாசிவ ப்ரம்மேந்திராள். காவிரி பாயும் நெரூரில் பிறந்தவர். இயற்பெயர் சிவராமன். ”மோக்ஷம்” என்பது அவரது தெலுங்கு நியோகி குலத்தில் எல்லோர் பெயருக்கும் சொந்தம். அப்பா சோமசுந்தர அவதானி. அம்மா பார்வதி. அந்த காலத்தில் திருவிசநல்லூருக்கு ஷஹாஜிபுரம் என பெயர். திருவிசநல்லூர் ஐயாவாள், போதேந்திர சரஸ்வதி பாஷ்யம் கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் எல்லோரும் உற்ற நண்பர்கள். பரமசிவேந்திர ஸரஸ்வதி அவர் குரு. தனது எல்லா க்ரிதிகளிலும் குரு வந்தனமாக ”பரம ஹம்ஸ” எனும் முத்திரையை ஸதாசிவ ப்ரம்மேந்த்ரா காட்டியுள்ளார்.
தனது குருவின் கட்டளையை நிறைவேற்ற வாய் திறந்து பேசாமல் காட்டிலும் மேட்டிலும் வெயிலிலும் மழையிலும் இருளிலும் பகலிலும் அவதூதராக மௌனியாக வாழ்ந்தவர் ஸதாசிவ ப்ரம்மேந்திராள். ப்ரம்ம ஞானி.
எண்ணற்ற அற்புத ஸ்தோத்திரங்கள் ஸ்லோகங்களை படைத்தவர். மிகப்பிரபலமாக பலரால் இன்றும் பாடப்பட்டு வரும் ராமர் மீது இயற்றப்பட்ட கிருதிகள்:
பிபரே ராமரசம், கேலதி மம ஹ்ருதயே, பஜரே ரகுவீரம், சேதக ஸ்ரீ ராமம். ப்ரதி வாரம் வாரம் மானஸ
ஸ்ரீ க்ரிஷ்ணன் மேல் அவர் பாடிய பிரபல பாடல்கள் :
ஸ்மரவாரம் நந்தகுமாரம், காயதி வனமாலி, பஜரே கோபாலம் மானஸ, பஜரே யாது நாதம் மானஸ ,க்ரீடதி வனமாலி, ப்ருஹி முகுந்தேதி,
பிரம்மத்தின் மேல் : ஸர்வம் ப்ரம்ம மயம் , கேலதி ப்ரஹ்மாண்ட பகவான், மானஸ சஞ்சரரே, தத்வத் ஜீவனம்.
இனி அவரது மிகச்சிறந்த ஆத்ம வித்யா விலாச ஸ்லோகத்தில் அடுத்து ஐந்து ஸ்லோகங்களை (11-15)அறிவோம்:
जनिविपरीतक्रमतो बुद्ध्या प्रविलाप्य पञ्चभूतानि । परिशिष्टमात्मतत्त्वं पश्यन्नास्ते मुनिः शान्तः ॥ ११॥
janiviparItakramato buddhyA pravilApya pa~nchabhUtAni | parishiShTamAtmatattvaM pashyannAste muniH shAntaH || 11||
ஜநிவிபரீதக்ரமதோ பு³த்³த்⁴யா ப்ரவிலாப்ய பஞ்சபூ⁴தாநி । பரிஶிஷ்டமாத்மதத்த்வம் பஶ்யந்நாஸ்தே முநி: ஶாந்த: ॥ 11॥
11. பஞ்ச பூதங்களில் ஆகாசம் ஆத்மா எனும் ப்ரஹ்மத்திலிருந்து தோன்றியது , ஆகாசத்திலிருந்து காற்று, , காற்றிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து ஜலம் , ஜலத்திலிருந்து நிலம். இதைச் சொல்வது தைத்ரிய உபநிஷத். காரியம் காரணத்தில் கலக்கிறது. நிலம் நீரில் மூழ்கிறது . நீரின்றிஅமையாதது உலகம். நீர் அதன் தாயான அக்னி, உஷ்ணத்தில் மறைகிறது. ஆவியாகிறது. அக்னி, தீயை காற்று விரட்டுகிறது. காற்றை ஆகாசம் விழுங்குகிறது. எல்லாமே பிரம்மத்தில் அடக்கம். ப்ரம்மம் ஒன்றே ஆகவே நிரந்தரம், சத்யம் என்கிறது இந்த ஸ்லோகம். குருவின் அருளால், ஜீவனுக்கு பரிபூர்ண ஆனந்தம் மட்டும் அல்ல அசைவற்ற ஆழ்ந்த அமைதி கிட்டுகிறது. அவனது ஹ்ருதயம் உலகியல் சம்பந்தப்பட்ட இன்ப துன்பங்கள் அறவே நீங்கி சம நிலையில் ஆத்மாவோடு ஒன்றிய இயல்பு ஏற்படுகிறது. ஹ்ருத்+அயம் (ஹ்ருதயம் ஆத்மாவே தான் ஆகிய நிலை) .என்னால் எழுத இயலாத முடியாத ஆனந்த பரவச நிலை.
12. जगदखिलमिदमसारं मायिकमेवेति मनसि मन्वानः । पर्यटति पाटिताशः प्रगलितमदमानमत्सरः कोऽपि ॥ १२॥
jagadakhilamidamasAraM mAyikameveti manasi manvAnaH | paryaTati pATitAshaH pragalitamadamAnamatsaraH ko.api || 12||
ஜக³த³கி²லமித³மஸாரம் மாயிகமேவேதி மநஸி மந்வாந: । பர்யடதி பாடிதாஶ: ப்ரக³லிதமத³மாநமத்ஸர: கோऽபி ॥ 12
இந்த உலகமே மாயத்தோற்றம், கனவு, அழிவது. ஸாஸ்வதம் இல்லாதது. அதன் ஈர்ப்புகளை, ஆசைகளை விலக்கி, செருக்கு, பொறாமை ஆகியவைகளைக் களைந்து ஆனந்தம் தரும் பிரம்மத்தில் சுகித்திருக்க எல்லாராலும் முடியுமா? அப்படிப்பட்ட ஞானி பாக்கியசாலி. ஸதாசிவ ப்ரம்மேந்திரா அப்படித்தான் எல்லோரையும் தம்மைப்போலவே ப்ரம்மஸ்வரூபமாக அனுபவித்து எங்கும் சுற்றிவந்தவர்.
13. नात्मनि किञ्चिन्माया तत्कार्यं वाऽस्ति वस्तुतो विमले । इति निश्चयवानन्तः हृष्यत्यानन्दनिर्भरो योगी ॥ १३॥
nAtmani ki~nchinmAyA tatkAryaM vA.asti vastuto vimale | iti nishchayavAnantaH hR^iShyatyAnandanirbharo yogI || 13||
॥ நாத்மநி கிஞ்சிந்மாயா தத்கார்யம் வாऽஸ்தி வஸ்துதோ விமலே । இதி நிஶ்சயவாநந்த: ஹ்ரு’ஷ்யத்யாநந்த³நிர்ப⁴ரோ யோகீ³ ॥ 13॥
ஆத்மா பரமன் வாழும் மாசற்ற மெய்ப்பொருள் என உணர்ந்த ஞானி அது மாயையினாலோ அதன் காரியங்களினாலோ எந்தவொரு பாதிப்பும் இல்லாதது என்பதை சந்தேகமற நிச்சயமாகத் தெரிந்துகொண்டு, தனக்குள் இருக்கும் அந்த ப்ரம்மானந்தத்தில் மகிழ்பவன். பற்றற்றவன்.
14. त्वमहमभिमानहीनो मोदितनानाजनाचारः । विहरति बालवदेको विमलसुखाम्भोनिधौ मग्नः ॥ १४॥
tvamahamabhimAnahIno moditanAnAjanAchAraH | viharati bAlavadeko vimalasukhAmbhonidhau magnaH || 14||
த்வமஹமபி⁴மாநஹீநோ மோதி³தநாநாஜநாசார: । விஹரதி பா³லவதே³கோ விமலஸுகா²ம்போ⁴நிதௌ⁴ மக்³ந: ॥ 14॥
பிரம்மத்தில் ஆழ்ந்த ஞானி நான் என்ற அபிமானமற்று, நான் நீ என்ற பேதம் எதுவும் இல்லாமல், மாசற்ற ஆனந்தத்தில் மூழ்கி, ஜனங்கள் மேற்கொள்ளும் பலவித செயல்களை ஒரு பாலகனைப் போல ரசித்துக் கொண்டு சுற்றி உலவுகின்றார்.
15. अवधूतकर्मजालो जडबधिरान्धोपमः कोऽपि । आत्मारामो यतिराडटवीकोणेष्वटन्नास्ते ॥ १५॥
avadhUtakarmajAlo jaDabadhirAndhopamaH ko.api |AtmArAmo yatirADaTavIkoNeShvaTannAste || 15||
அவதூ⁴தகர்மஜாலோ ஜட³ப³தி⁴ராந்தோ⁴பம: கோऽபி । ஆத்மாராமோ யதிராட³டவீகோணேஷ்வடந்நாஸ்தே ॥ 15॥
தன் உள்ளே ஆத்மாவில் கலந்து மூழ்கிய ஞானி, வெளிப்பார்வைக்கு மற்றவர் கண்களுக்கு முட்டாளாகவோ, பைத்தியமாகவோ, செவிடாகவோ, ஊமையாகவோ, உன்மத்தமாகவோ தான் தெரிகிறான். கர்மவினையை அறவே தூற்றிவிட்டு, ஆத்மாராமராகிய (தன் ஆத்மாவொன்றிலேயே ரமிப்பவராகிய) யதிசாம்ராட், பிறர்பார்வையில் அப்படி தென்படுவது ஆச்சர்யமில்லை. ஆத்மாவெனும் ஆரண்யத்தில் அவர் மூலைமுடுக்குகளில் சுற்றித் திரிகின்றார்.
உலகத்துக்கே சம்பந்தமில்லாத ஒரு மனிதனாகத் தான் தெரிவார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



