
ஆத்ம வித்யா விலாசம் 16-20 – நங்கநல்லூர் J K SIVAN
சதாசிவ ப்ரம்மேந்திரா
ஸதாசிவ ப்ரம்மேந்திரா இயற்றிய ஆத்ம வித்யா விலாச ஸ்லோகங்கள் அறுபதுக்கும் மேலே. அதில் 15 ஸ்லோகங்களை இதுவரை பார்த்தோம்.
சதாசிவ ப்ரம்மேந்திராவை அநேகருக்கு தெரியாமல் இருந்த நிலையில் அவரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் முதன்மையானவர் சிருங்கேரி சாரதா பீட மஹா சன்னிதானம் 32வது ஜகதகுரு ஸ்ரீ நரசிம்ம பாரதி (1817-1879) ஸ்வாமிகள் தான். நெரூரில் மகானின் சமாதியை சீர்படுத்தி பராமரிப்பு அவரால் ஆனது தான். 33வது மஹா சன்னிதானம் ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி (1879-1912) நெரூருக்கு விஜயம் செய்வார். அவர் இயற்றியது தான் சதாசிவேந்திரஸ்தவம் சதாசிவேந்திர பிரஞ்சரத்ன ஸ்தோத்திரங்கள். ப்ரம்மேந்திராவை வழிகாட்டியாக கொண்டாடியவர். ஒவ்வொரு நாளும் ஆத்ம வித்யா விலாச ஸ்லோகங்களை கேட்டு சிந்திப்பவர். அதன் பின் 34வது மஹா சன்னிதானம் ப்ரம்மேந்திராளை பின்பற்றி அவதூதராக விருப்பம் கொண்டவர். ஆத்மவித்யா விலாசத்தை ஆழ்ந்து படித்து உணர்ந்தவர்.
இனி அடுத்த ஐந்து ஸ்லோகங்களை அறிவோம்:
शान्त्या दृढोपगूढः शान्तसमस्तान्यवेदनोदारः । रमते रसज्ञ एको रम्ये स्वानन्दपर्यङ्के ॥ १६॥
shAntyA dR^iDhopagUDhaH shAntasamastAnyavedanodAraH |ramate rasaj~na eko ramye svAnandaparya~Nke || 16||
ஶாந்த்யா த்³ரு’டோ⁴பகூ³ட:⁴ ஶாந்தஸமஸ்தாந்யவேத³நோதா³ர: । ரமதே ரஸஜ்ஞ ஏகோ ரம்யே ஸ்வாநந்த³பர்யங்கே ॥ 16॥
16. ப்ரம்மஞானி தனி உலகத்தில் தனக்குள் தானே இருப்பவன். அருமையான சப்ரமஞ்ச கட்டிலில் ஆரோகணித்து அமைதியாக உலகத்திலிருந்து விலகி பற்றற்று ஆனந்தத்தில் மூழ்குபவன்.
17. उन्मूलितविषयारिः स्वीकृतवैराग्यसर्वस्वः । स्वात्मानन्दमहिम्नि स्वाराज्येऽस्मिन् विराजते यतिराट् ॥ १७॥
unmUlitaviShayAriH svIkR^itavairAgyasarvasvaH | svAtmAnandamahimni svArAjye.asmin virAjate yatirAT || 17||
உந்மூலிதவிஷயாரி: ஸ்வீக்ரு’தவைராக்³யஸர்வஸ்வ: । ஸ்வாத்மாநந்த³மஹிம்நி ஸ்வாராஜ்யேऽஸ்மிந் விராஜதே யதிராட் ॥ 17॥
ப்ரம்மஞானி தனிக்காட்டு ராஜா. எதிரிகளாகிய ஐம்புலன்களை வென்றவன், ஆசைகளை அழித்தவன், ஆத்மஞான பற்றற்ற செல்வத்துக்கு அதிபதி, சதானந்தத்தில் நிலைத்திருப்பவன்.
18. सवितर्यपि शीतरुचौ चन्द्रे तीक्ष्णेऽप्यधो वहत्यग्नौ । मायिकमिदमिति जानन्जीवन्मुक्तो न विस्मयी भवति ॥ १८॥
savitaryapi shItaruchau chandre tIkShNe.apyadho vahatyagnau | mAyikamidamiti jAnanjIvanmukto na vismayI bhavati || 18||
ஸவிதர்யபி ஶீதருசௌ சந்த்³ரே தீக்ஷ்ணேऽப்யதோ⁴ வஹத்யக்³நௌ । மாயிகமித³மிதி ஜாநந்ஜீவந்முக்தோ ந விஸ்மயீ ப⁴வதி ॥ 18॥
அட இதென்ன ஆச்சர்யம், சூர்யன் கதிர்கள் குளிர்ந்து வீசுகிறதே , சந்திரனின் கிரணங்கள் நெருப்பாக கொளுத்துகிறதே, அக்னி மேலெழும்பி பரவாமல் கீழ்நோக்கி பாய்கிறதே… இதெல்லாம் ஜீவன்முக்த ஆத்ம ஞானியை மயக்காது . எல்லாம் மாயையின் லீலை என்று உணர்ந்தவன் அவன்.
19. अज्ञानवैरिविजयी प्रज्ञामातङ्गमस्तकारूढः ।विहरति संयमिराजः समरससुखधाम्नि सर्वतो रम्ये ॥ १९॥
aj~nAnavairivijayI praj~nAmAta~NgamastakArUDhaH | viharati sa.nyamirAjaH samarasasukhadhAmni sarvato ramye || 19||
அஜ்ஞாநவைரிவிஜயீ ப்ரஜ்ஞாமாதங்க³மஸ்தகாரூட:⁴ । விஹரதி ஸம்யமிராஜ: ஸமரஸஸுக²தா⁴ம்நி ஸர்வதோ ரம்யே ॥ 19॥
ஆத்ம ஞானி, படு சமர்த்தன். சகல வித்யைகளும் கற்றவன். தன்னையே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எளிதல்ல. அதில் கை தேர்ந்தவன். அஞ்ஞானம் எனும் எதிரியை வென்று எதிர்க்க எவருமில்லாத சக்ரவர்த்தி. ஞானம் எனும் யானைமேல் பவனி வரும் ஆனந்தஸ்வரூபன்.
20. शान्ताहंकृतिदोषः सुसमाहितमानसः कोऽपि ।पूर्णेन्दुशिशिरभावो राजत्यानन्दसत्यचिद्रसिकः ॥ २०॥
shAntAha.nkR^itidoShaH susamAhitamAnasaH ko.api | pUrNendushishirabhAvo rAjatyAnandasatyachidrasikaH || 20|
ஶாந்தாஹங்க்ரு’திதோ³ஷ: ஸுஸமாஹிதமாநஸ: கோऽபி । பூர்ணேந்து³ஶிஶிரபா⁴வோ ராஜத்யாநந்த³ஸத்யசித்³ரஸிக: ॥ 20
20. ஆத்ம ஞானி ஒரு தனி ரகம். அவன் சதா தன்னுள் இருக்கும் ஆத்மாவில் லயித்து ஆனந்தமாக இருப்பவன். அவனை உலகத்தின் எந்த வஸ்துவும் ஈர்க்காது . எதன் மேலும் அவனுக்குப் பற்றுதல் கிடையாது. கர்வம், அகம்பாவம் அவனை நெருங்காதவை. பூர்ண சந்திரனின் குளுமையோடு உள்ளவன்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



