SOUNDHARYA LAHARI HISTORY – J K SIVAN

இனி   ஸௌந்தர்ய லஹரி அனுபவம் –  நங்கநல்லூர்  J K SIVAN

இன்று முதல்  ஸௌந்தர்ய லஹரி 59 ஸ்லோகங்கள் துவங்குகிறது. அத்தனையும் ஆதி சங்கரரின் அற்புதமான ஸ்லோகங்கள். பலரால் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. ஸமஸ்க்ரித  அம்ருதம்.
ஸௌந்தர்ய லஹரி தோன்றியதைப் பற்றிய  ஒரு சின்ன  பூர்வ சரித்திரம். இதை  மஹா பெரியவா  சொல்லி இருக்கிறார்.
ஆதி சங்கரர் பல க்ஷேத்ரங்களுக்கு நடந்து சென்று  ஆங்காங்கே தெய்வ ஸாந்நித்யம் பலமாக ஸ்திரப்படுவதற்கு அம்பாள் சந்நிதிகளில் அவள் உக்ரம் குறைந்து கருணை பெருக  யந்திர ஸ்தாபனம் பண்ணிக்  கொண்டே கைலாஸம்  சென்றார்.  பார்வதி பரமேச்வரர்களை தரிசனம் பண்ணினார்.  பரமேஸ்வரன் ஆதி சங்கரருக்கு  ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு 100  ஸ்லோகங்கள் கொண்ட   ஒரு  அம்பாள் ஸ்தோத்ர  ஓலைச் சுவடிக் கட்டையும் கொடுத்தார். சுவடியை அம்பாள் கொடுத்ததாகவும் ஐதீகம். அந்த ஓலைச் சுவடியில்  பரமேஸ்வரனே  அம்பாளைப் பற்றி  எழுதிய  நூறு ஸ்லோகங்கள்.
‘லலிதா ஸஹஸ்ரநாம’த்தை வசின்யாதி வாக் தேவதைகள் எப்படி  ஸ்துதித்தார்களோ அப்படியே  இந்த நூறு ஸ்லோகங்களையும் வாக் தேவதைகளே செய்தன என்றும் இரண்டு விதமாகச் சொல்வதுண்டு.
ஸ்வாமியே ஒரு பக்தனின் பாவத்திலிருந்து கொண்டு அம்பாளைப் பாடியது என்று சொல்வதில்தான் ஜாஸ்தி மஹிமை ஏற்படுகிறது.  பஞ்ச லிங்கங்கள் ஈச்வர ஸ்வரூபமானவை. ஸ்வரூபம் என்று சொன்னாலும் கை, கால், தலை என்றில்லாததால் அருவமானவை.   ஓலைச் சுவடியிலிருந்த  ஸ்லோகங்களோ அம்பாள் ஸ்வரூபம். எப்படியென்றால் அம்பாளுக்கு இருக்கப்பட்ட பலவித ரூபங்களில் மந்த்ர மயமாகவும் அவளுக்கு ஒரு ரூபம் இருக்கிறது. அந்த நூறு ஸ்லோகங்களில் தேவியைக் குறித்த மந்திர சாஸ்திர விஷயங்கள்தான் முக்யமாக இருந்தன. ஆகையால், பஞ்சலிங்கம் எப்படி ஈச்வர ஸ்வரூபமோ, அப்படி இந்த ஸ்தோத்ரச் சுவடி அம்பாள் ஸ்வரூபமாயிற்று. ஆனபடியால் லிங்கங்களை ஈச்வரனே கொடுத்த மாதிரி, ஸ்தோத்திரத்தை அம்பாளே கொடுத்தாள் என்றால் பொருத்தமாயிருக்கிறது  என்கிறார் மஹா பெரியவா.
இந்தப் பஞ்ச லிங்கங்களில் ஒன்றுதான் [ஸ்ரீ காஞ்சி காமகோடி] மடத்துப் பூஜையிலிருக்கிற சந்திரமௌலீச்வரர். இதற்கு யோக லிங்கம் என்று பெயர். பாக்கி நாலு  லிங்கங்களில் முக்தி லிங்கம் கேதாரிநாத்திலும், வரலிங்கம் நேபாளத்தில் நீலகண்ட க்ஷேத்ரத்திலும், போகலிங்கம் ஸ்ருங்கேரியிலும், மோக்ஷலிங்கம் சிதம்பரத்திலும்  ஆதிசங்கரரால்   ப்ரதிஷ்டை பண்ணப்பட்டன.
பஞ்ச லிங்கங்களையும், ஸ்தோத்ரச் சுவடியையும் பெற்றுக் கொண்டு கைலாசத்திலிருந்து சங்கரர் புறப்பட்டார்.  அப்போது   கைலாசத்தில் வாசலில் காவலில் இருந்த நந்திகேஸ்வரர் ஆசார்யாள் கையிலிருந்த  ஓலைச் சுவடிக் கட்டைப் பார்த்தார். ஸ்வாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுப்பதில்லையே .  நந்திகேச்வரருக்கு  எதற்கு இங்கிருந்து ஓலைச் சுவடி ஸ்தோத்ரம் வெளியே போகவேண்டும்? என்று தோன்றியது. ‘மஹா பெரிய ஸொத்தான மந்திர சாஸ்திர சுவடி கைலாஸத்தை விட்டுப் போக விடக்கூடாது ’ என்ற தாபம்  கோபமாகியது. சங்கரரை  தடுத்து நிறுத்தி அவர்  கையிலிருந்த சுவடியைப் பிடித்து இழுத்தார். ஆசார்யாள் சுவடியை கெட்டியாக இறுக்கி  பிடித்துக் கொண்டபோதிலும்  நந்திகேஸ்வரர் பலம் கொண்டு இழுத்ததில்  சுவடி ரெண்டாக பிளந்து பிரிந்து   பாதிக்கு மேலே  நந்திகேஸ்வரர்  கையில் சிக்கியது.
இதனால் 100 ஸ்லோகங்களில் 59 நந்தியிடமும்  மீதி 41 ஆதி சங்கரரிடமும்  இருந்தது. அந்த 41 தான் ஆனந்த லஹரி என்று இதுவரை அம்பாளை பற்றி எழுதிய ஸ்லோகங்கள்.  அம்பாளின்  மந்த்ர, யந்த்ர  குண்டலினி ஸ்ரீ சக்ர ஸ்வரூபம் பற்றிய  விவரம்.
‘அம்பாள் அநுக்ரஹம் பண்ணிக் கொடுத்ததில் பாதிக்கு மேலே  59 ஸ்லோகங்களை  கோட்டை விட்டு விட்டோமே” என்று ஆதி சங்கரர் வருந்தினார். அம்பாள்  இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாளா?
”சங்கரா,   உன்னிடம் இல்லாத  ஐம்பத்தொன்பது ஸ்லோகங்களையும் நீயே  என்னைப்பற்றி எழுதி  பூர்த்தி பண்ணிவிடு. அது தான் என் ஸங்கல்பம். அதுதான் எனக்கு  திருப்தி,  ப்ரீதி அளிக்கும்.  இதற்காகவே தான் நந்திகேஸ்வரன் மூலம் நீ அதைத் தவற விடும்படிப் பண்ணியது” என்று அம்பாள்  சொல்லி  சிரித்தாள்.
உடனே கடல் மடை திறந்ததுபோல   ஆதி சங்கர ஆசார்யாள் அம்பாளை சிரஸிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்துப் பாடி   59 ஸ்லோகங்கள் ஸ்துதித்து  மொத்தம் 100  ஸ்லோகமாகப் பூர்த்தி பண்ணி விட்டார்.  அம்பாளின் அற்புத கருணா சமுத்ர  அழகு அலைகள் தான்  ஸௌந்தர்ய  லஹரி.
இதுவரை நீங்கள் அனுபவித்த  முதல் 41 ஸ்லோகங்கள்  மந்திர சாஸ்திரம். அதைக் கொஞ்சம் பேர்தான் ரொம்பவும் கடுமையான நியமங்களோடு அநுஸந்தானம் பண்ணி அநுபவிக்க முடியும். மந்திரயோகம், குண்டலினி யோகம் பற்றியவை.  எங்காவது இதில் கொஞ்சம் தப்பு வந்தாலும் விபரீதமாகும். தாயின் உபாஸனையில்  அஸ்ரத்தையோ,குறையோ, தப்போ கூடாது. அவளுடைய லீலை பல விதம். அதனால் ஸுலபமான, ஸெளக்யமான ஸாதனா மார்க்கம் போலவே, கடுமையாக உக்ரமாக உள்ள மார்க்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறாள். அததை அப்படி அப்படித்தான் அநுஷ்டானம் பண்ண வேண்டும். ஆலய தரிசனம், ஸ்தோத்ர பாராயணம், கீர்த்தனம் பாடுவது, பஜனை பண்ணுவது, கதை புராணம் கேட்பது என்ற ஸுலபமான வழிகள் வேறு வகை நம் போன்றவர்களுக்காக  அளிக்கப்பட்டுள்ளதே.
ஜபம், யோகம், ஸ்ரீ சக்ர பூஜை ஆகியவற்றை  நியமம் இல்லாமல் பண்ணக்கூடாது.  சில  புண்யசாலிகளால் தான் அது முடியும்.
இப்படிப்பட்ட சில பேரிடம் மட்டுமின்றி ஆசார்யாளோ ஸமஸ்த ஜனங்களிடமும் பரம கருணை கொண்டவர். ‘பாபியையும் பரமாத்மா ஆக்கியவர்’ என்று கன்னடத்தில் அவரைப் பற்றிய பாட்டில் வருகிறது . அதனால் அவர் அம்பிகையை மந்திர ஸ்வரூபமாக இல்லாமல், ஸுந்தர ஸ்வரூபமாக கேசாதி பாதம் [கூந்தலிலிருந்து திருவடி வரை] ஸகல ஜனங்களும் கல்பித்துப் பார்த்து ஸந்தோஷப்படும்படியாக ஒரே வர்ணனை மயமாக மீதி ஐம்பத்தியொன்பது ஸ்லோகங்களையும் பாடி  அநுக்ரஹம் பண்ணிவிட்டார். அம்பாளுடைய ஸெளந்தர்ய ஸ்வரூபமே அவருடைய கவிதா வாக்காக அவதாரம் பண்ணிவிட்டது. இவை இன்றுமுதல் தினம் ஒன்றாக  வெளிவரும்.
இந்த  59  ஸ்லோகங்களை மட்டுமே ‘ஸெளந்தர்ய லஹரி’ என்று முதல் 41லிருந்து பிரித்து சொல்வதுண்டு. முதல் 41  ஸ்லோ கங்களுக்கு ‘ஆனந்தலஹரி’ என்று பெயர்.
ரெண்டும்  சேர்த்து மொத்தம் 100  ஸ்லோக  அம்பாள் ஸ்தோத்ரமாக பாராயணம் செய்வது தான் வழக்கம்.  இப்படி ஒரே ஸ்தோத்ரமாக முதல் பாகத்துக்கு ‘ஆனந்த லஹரி’ என்றும், இரண்டாம் பாகத்துக்கு ‘ஸௌந்தர்ய லஹரி’ என்றும் பெயர் கொடுத்தாலும் மொத்தத்தில் இந்த ஸ்தோத்ர நூலுக்கு  ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றுதான் பெயர்.
ஆசார்யாள் கைலாஸத்துக்குப் போய் பார்வதீ பரமேச்வராளிடமிருந்து பஞ்ச லிங்கமும் ஸெளந்தர்ய லஹரிச் சுவடிக் கட்டும் பெற்றுக்கொண்டு வந்தாரென்று நான் சொன்ன கதை ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’யில் வருகிறது.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;