

ஸௌந்தர்ய லஹரி – நங்கநல்லூர் J K SIVAN
20 அம்ருதேஸ்வரி.
किरन्तीमङ्गेभ्यः किरणनिकुरम्बामृतरसं हृदि त्वामाधत्ते हिमकरशिलामूर्तिमिव यः ।
स सर्पाणां दर्पं शमयति शकुन्ताधिप इव ज्वरप्लुष्टान् दृष्ट्या सुखयति सुधाधारसिरया ॥ २०॥
kirantīmaṅgēbhyaḥ kiraṇanikurambāmṛtarasaṃ hṛdi tvāmādhattē himakaraśilāmūrtimiva yaḥ ।
sa sarpāṇāṃ darpaṃ śamayati śakuntādhipa iva jvarapluṣṭān dṛṣṭyā sukhayati sudhādhārasirayā ॥ 20 ॥
சந்திரகாந்தப் பிரதமை போன்ற வடிவம்
ஸர்வ விஷ ஸர்வ ஜ்வர நிவாரணம்
கிரந்தீ மங்கேப்ப்ய: கிரன நிகுரும்பாம்ருதரஸம் ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர ஶிலா மூர்த்திமிவ ய:
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஶமயதி ஶகுந்தாதிப இவ ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்டா ஸுகயதி ஸுதாதாரஸிரயா 20
சந்திர காந்தக் கல் சில்லென்று குளுமையானது. ஸ்படிகம் போன்று ஊடுருவி பார்க்க முடிவது. மொத்தத்தில் ஸர்வேஸ்வரனைப் போன்றது. ஸர்வ தோஷ, ரோஹ நிவாரணி. சிவனுக்கு ப்ரீதியானது. இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் பக்தர்களை லலிதாம்பாவை சந்திர காந்தக் கல் சிலையாக வடித்த உருவமாக பிரார்த்திக்க,தியானிக்கச்சொல்கிறார்.
அம்பாள் ஹிமகரசிலா மூர்த்தி எனப்படுகிறாள் இந்த ஸ்லோகத்தில். சந்திரனின் பால் நிலவொளியில் அம்ருதத்தை ஊறச் செய்வது அம்பாளின் சந்திரகாந்தக் கற் சிலா ரூபம். அப்படி அம்பாளை வழிபடும் உபாசகன் எந்த உஷ்ணத்தையும் சமனப்படுத்துவான். கொதிக்கும் ஜுர நோயாளியும் ஜுரம் நீங்கி, குணமாவான்.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது 3 விஷயம். எந்த உபாசகன் தியானிக்கிறான், எதை உபாசிக்கிறான், எப்படிப்பட்ட உபாசனை என்பது தான் அது. உபாசகன் தன்னை இழந்து அம்பாளோடு கலந்து தியானமாகிவிடுகிறான். மூன்று ஒன்றாகிவிடுகிறது .
அப்படி தியானிக்கும் உபாசகன் கண் பார்வை பட்டாலே போதும், எந்த நோயும் குணமாகிவிடும் என்கிறார். எப்படி கருடனின் பார்வையிலேயே பாம்புகள் கதிகலங்கி கர்வம் இழந்து உயிர் தப்பி ஓடுமோ அதுபோல் வியாதியஸ்தனிடமிருந்து வியாதி விலகி ஓடும் என்கிறார்.
அம்பாளின் தேஹ காந்திலிருந்து தான் சந்திரனும் சூரியனும் ஒளி பெறுகிறது. அவளது தீவிர உபாசகனுக்கு அவள் சக்தி சேர்ந்து விடுவதால் அவன் பார்வையிலேயே சர்வ ரோஹ நிவாரணம் கிடைக்கிறது.
குண்டலினி சக்தி சக்ரங்களை கடந்து மேலேறி சிரசில் சஹஸ்ராரத்தை அடைந்து அம்ருத தாரை கொட்டுவதை உணர்த்தும் ஸ்லோகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை பாராயணம் பண்ணி நிவர்த்தி பெறுகிறார்கள். சிறந்த வேதாகம பண்டிதர், மஹா பெரியவா பக்தர் காலம் சென்ற தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள் சொல்வது:
“இந்த ஸௌந்தர்யலஹரி சுலோகத்தைப் பதினாறு ஆவிருத்திக்குக் குறையாமல் அம்பிகா தியானத்துடன் சொல்லிக்கொண்டு விபூதியையோ தீர்த்தத்தையோ அபிமந்த்ரணம் செய்து நோயாளிகளிடம் அதைக் கொடுத்து, விபூதியானால் தரித்துக் கொள்ளும்படிக்கும், தீர்த்தமானால் உட்கொள்ளும் படிக்கும் செய்வதாலேயே இந்தப் பிரயோகத்தைப் பரீக்ஷித் துப் பார்த்து விடலாம். ஸகலரோக நிவ்ருத்தி என்பதில் சந்தேகமில்லை. உபாஸகர் களுடைய திருஷ்டிக்கே ரோகாதிகளை நிவிருத்தி செய்து வைக்கும்படியான வைபவம் சித்திக்கிறது”.
இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



