SOUNDARYA LAHARI SLOKA 1 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்.

அழகான அலைகள்… ஆமாம் சமுத்திரம், யானை, குரங்கு இவற்றை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது. ஆதி சங்கரர் இயற்றிய இந்த அற்புத நூல் ரெண்டு பிரிவு கொண்டது. ஒன்று ஆனந்த லஹரி சந்தோஷம் தரும் சுகமான அலைகள் என்று ஒன்று, அதில் 41 ஸ்லோகங்கள்.
மற்றது ஸௌந்தர்ய லஹரி எனும் அழகிய ஸ்தோத்ர அலைகள் . இதில் 59 ஸ்லோகங்கள். மொத்தம் நூறு. மேரு பர்வதத்தில் விநாயகர் பாறைகளில் ஆனந்த லஹரியை செதுக்கினார் என்பார்கள். அது தப்பு, புஷ்பதந்தர் என்கிற ரிஷி செய்த வேலை அது என்கிறவர்களும் உண்டு. அதை ஆதிசங்கரரின் குரு கௌட பாதர் ஆனந்த லஹரி பாறை கல்வெட்டுகளை படித்துவிட்டு ஆதிசங்கரருக்கு உபதேசித்தார். மற்ற 59 சௌந்தர்ய லஹரி ஸ்லோகங்களை ஆதிசங்கரர் அதோடு சேர்த்து எழுதி நமக்கு மொத்தம் நூறு ஸ்லோகங்களும் கிடைத்திருக்கிறது.

மந்திரங்களில் அதி உன்னதமானது இந்த 100 ஸமஸ்க்ரித ஸ்லோகங்களும். சில ஸ்லோகங்களை, மந்த்ரங்களை யந்த்ர ரூபமாக்கி வழிபட்டால், அடையமுடியாத வஸ்துவே இந்த பூமியில் இல்லை எனலாம். இனி முதல் 41 ஸ்லோகங்களான ஆனந்த லஹரியை ஒவ்வொன்றாக ரசித்து ருசிப்போம்.

आनन्दलहरी 1
शिवः शक्त्या युक्तो यदि भवति शक्तः प्रभवितुं न चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि ।
अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपि प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥ १॥

śivaḥ śaktyā yukto yadi bhavati śaktaḥ prabhavituṃ na cedevaṃ devo na khalu kuśalaḥ spanditumapi .
atastvāmārādhyāṃ hariharaviriñcādibhirapi praṇantuṃ stotuṃ vā kathamakṛtapuṇyaḥ prabhavati .. 1..

ஶிவ ஶக்த்யா யுக்தோ யதி ஶக்த: ப்ரபவிதும் ந சேதேவம் தேவோ நகலு குஶ’ல ஸ்பந்திதுமபி
அதஸ்த்வா மாராத்த்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரபவதி: 1

பரமேஸ்வரனை மங்களமூர்த்தியாக வழிபடுகிறோம். எப்படி இந்த பரமேஸ்வரனுக்கு இவ்வளவு அற்புத சக்தி வந்தது என்று தெரியவேண்டுமானால் அதற்கு ஒரே மூலகாரணம் அம்பாள் சக்தி தேவி அவன் இடப்பாகத்தில் வாமரூபியாக அர்த்த நாரீஸ்வரியாக இருப்பது தான் காரணம். உமையொருபாகனாக பரம சக்தி கொண்டு இந்த ப்ரபஞ்சமே தோன்றி இயங்க காரணமாகிறார் மஹாதேவன். த்ரிமூர்த்திகளான விஷ்ணு, ருத்ரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்படும் அம்பா, உன்னை எவனாவது புண்யம் செய்யாதவன் வணங்குவதற்கோ துதிப்பதற்கோ எவ்வாறு, எப்படி தகுதி பெறமுடியும்?
எங்ஙனம் தகுதியுடையவனாவான் ? தேவி பாகவதம் சொல்வது ஞாபகம் இருக்கிறதா? குண்டலினி சக்தியினின்று பிரிந்தால் சிவமும் சவம் தான்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;