தாமிர சபேசன்

@followers தாமிர சபேசன்   – நங்கநல்லூர்    ஜே .கே.சிவன்  

திருநெல்வேலி  என்றால் உடனே என்ன நினைவுக்கு வருகிறது?  இருட்டுக்கடை அல்வா.. அப்படி என்றால் உங்களுக்கு வேணு நாதனைப் பற்றியோ,  புராதனமான  பிரமிக்க வைக்கும் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த ஆலயத்தை பற்றியோ தெரியாது என்று அர்த்தம்.

நான் இது வரை ஆறு தடவை  கண்டு பிரமித்து  இங்கேயே  இருந்து விடலாமா  என்று நினைக்க வைத்த  சில  அற்புத கோவில்களில்  ஒன்று   திருநெல்வேலி  நெல்லையப்பர் சிவாலயம்.    7ம்  நூற்றாண்டு  தேவாரங்களில் பாடல்  பெற்ற ஸ்தலம்.  பதினாலரை  ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது.   பாண்டிய ராஜாக்கள்,  சோழர்கள்,பல்லவர்கள், சேரன், மதுரை நாயக்கர்கள் இந்த  ஆலயத்தை அவ்வப்போது சீரமைத்து இருக்கி றார்கள்.    நாலு பக்கம் சுவர்கள்  கட்டியதால் ஆக்கிரமிப்பு இல்லை.!! 

மூலவர்  நெல்லையப்பர்,வேணுவன நாதர்,  அம்பாள்  காந்திமதி.  kanthimathi , நிறையபேர்  அவளை GANDHI வம்சமாக்கி  gandhiமதி என்று  சொல்லும்போது வருத்தமாகி நெளிவேன்.  

இது தா மிரபரணி வடகரை கோவில்களில் ஒன்று.
காந்திமதி ஆலய   கோபுரங்கள், கர்பகிரஹம் எல்லாம் நின்றசீர் நெடுமாற  பாண்டியன் 7ம் நூற்றாண்டிலேயே  கட்டிவிட்டான். ஆதிகாலத்தில்  எங்கும் மூங்கில் காடுகள் என்பதால் வேணுவனம். அதன் நடுவில் சிவன் வேணுவன நாதராக இருந்தார். இப்போது நெல்லையப்பர்.
                                 
அம்பாள் சிவன்  இரு கோவில்களையும்  சங்கிலி மண்டபம் என்று  ஒரு மண்டபம் கட்டி இணைத்தவர்   1647ல்  வடமலையப்ப பிள்ளையன் என்ற சிவபக் தர்.  வடமலையப்பன்    திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள  சோழபுர த்தில் பிறந்தவர். சிறிய தகப்பனாரின் பராமரிப்பில்  வளர்ந்து வந்து  கருத்து வேற்றுமை யினால் கோபித்து, வீட்டை விட்டுச் சென்றவர்.  கல்வி, கேள்விகளில்  தேர்ந்த  வடமலையப்பனை   ஸ்ரீ ரங்க த்தில்  கர்த்தாக்களின் ஆச்சாரியரான, தாத்தாச்சாரி யார்  “பிள்ளை” போல் வளர்த்து, நாயக்க மன்னரான, சொக்கநாத நாயக்கரிடம் நான் இவனை  என் “பிள்ளை” போல் வளர்த்து தங்களிடம் அனுப்புகிறேன் என்று   கூறிய மையால், இவர் வடமலையப்ப பிள்ளை என்றும், தாத்தாச்சாரி என்ற  ஐயனிடம் இருந்து வந்த பிள்ளை என்பதைக் குறிக்க ”பிள்ளையன்” என்றும்   பெயர் கொண்டார். “பிள்ளை” மார்கள்  சமூகப்பெயர்களில்  
பிள்ளையன்  என்ற  பெயரும் உண்டு .  புலவராற்று ப்படையில் சான்றுகள் இருக்கிறது என்று கேள்விப்பட் டேன்.   நாயக்க மன்னன்  வடமலையப்ப பிள்ளையை   திரு நெல்வேலிச் சீமைக்கு  தளபதியாக  நியமித்தான். அந்த சிவபக்தர்  மண்டபம்கட்டியதை
மேலே  சொல்லி இருக்கிறேன்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – அருள்தரும் காந்திமதியம்மை திருக்கோயில் (தாமிர சபை)  ஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற 204-வது பாண்டிய நாட்டுத் திருத்தலமாகும்.  சிவன் மற்றும் சக்தி ஆகிய இருவருக்கும் தனித்தனி ஆலயங்களைக் கொண்ட இரட்டைக் கோயில்..

வேதசர்மா (வேதபட்டர்) என்ற ஏழை அந்தணர், ஒருகானத்தில் இங்கே   தினமும் வீடு வீடாகச் சென்று நெல் யாசகம் பெற்று, அதனைச் சமைத்து இறைவ
னுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். ஒருநாள் சுவாமி சந்நிதி முன்பு நெல்லை உலரப் போட்டுவிட்டுத் தாமிரபரணி ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது திடீரெனப் பெருமழை பெய்தது. ”அடேடே, நெல் மழையில் நனைந்து  விடுமே ‘  எனப் பதறியடித்து ஓடிவந்த வேதசர்மா, நெல்லைச் சுற்றி மழைநீர் செல்லாமல் இறைவன் வேலியாக நின்று காத்த ருளியதையும், நடுவே நெல் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததையும் கண்டு மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு வேலியாக நின்றதால் இறைவன் ‘நெல்வேலிநாதர்’ (நெல்லையப்பர்) என்றும், இவ்வூர் ‘திருநெல்வேலி’ என்றும் பெயர் பெற்றது.

கயிலாயத்தில் சிவபெருமான் – பார்வதி திருமணத் தின்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததால், உலகைச் சமநிலைப்படுத்த அகத்திய முனிவரைத் தென்னாட்டிற்கு அனுப்பினார் சிவபெருமான். அகத்தியரின் வேண்டுகோளுக்கு இணங்க, இத்தலத்தில் அம்மையப்பனாகத் திருமணக் கோலம் காட்டி அருளினார்.
காந்திமதி அன்னை கம்பை நதிக்கரையில் கமலபீட நாயகியாகத் தவமிருந்து இறைவனை மணந்த திருவிளையாடல் இத்தலத்தில் நிகழ்ந்துள்ளது.   இந்த ஆலயம்  1,300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்பதைப் பல மன்னர்களின் கல்வெட்டுகள் சொல்கிறது. 
 கி.பி. 7-ஆம் நூற்றாண்டில்  நின்றசீர் நெடுமாறன் (கூன் பாண்டியன்) இக்கோயிலின் மூலவர் கருவறை, கோபுரங்கள் மற்றும் புகழ்பெற்ற இசைத்தூண்கள் கொண்ட மணிமண்டபத்தை அமைத்தார். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் குலசேகர பாண்டியன் சேர, சோழ, ஹொய்சாள மன்னர்களை வென்ற போர்ச் செல்வத்தைக் கொண்டு கோயிலின் வெளிப்புற மதில்களைக் கட்டினான் என்று  கல்வெட்டு சொல்கி றது.  கோயிலில் காணப்படும் மிகப் பழமையான கல்வெட்டு கி.பி. 950-ஆம் ஆண்டைச் சேர்ந்த வீரபாண்டி யனின் கல்வெட்டு.  முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோரின் கல் வெட்டு களும் உள்ளன. மாறவர்மன் சுந்தரபாண்டி யனின் கல்வெட்டில்  மூலவரை “உடையார்” (வொடையநாயனார்) என்றும், அம்பாளை “நாச்சியார்” என்றும் காட்டுகிறது.
சிவபெருமான் திருநடனம் ஆடும் ஐந்து முக்கிய சபைகளில் (பஞ்ச சபைகள்)   திருநெல்வேலிக்கு   தாமிர சபை (செப்பு அம்பலம்) எனப் பெயர். அழகிய மர வேலைப்பாடுகளும் செப்புத் தகடுகளும் வேயப்பட்ட இந்த சபையில் நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். தாமிர சபைக்கு பின்னால்  சந்தன சபாபதி சந்நிதி உள்ளது.தாமிரசபையிலிருந்து பார்க்கும்படியாக அமைந்துள்ளது.  இங்கே  பெரிய சபாபதியும் உள்ளார்.  

உமையைச் சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்தவர் திருமால் என்பதால், மூலவர் நெல்லை யப்பர் சந்நிதிக்கு அருகிலேயே கோவிந்த ராஜப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். ஐப்பசித் திருக்கல்யாண விழாவின்போது இன்றும் வைணவர்கள் வந்து தாரை வார்த்துக் கொடுக்க, சிவாச்சாரியார்கள் பெற்றுக்கொள்ளும் மரபு பின்பற்றப்படுகிறது.

நெல்லையப்பர் சுயம்பு லிங்கம். மேற்புறம் மூங்கில் வெட்டப்பட்ட அடையாளத்துடன் காட்சி தருகிறார். தற்போது நாம் வழிபடுவது 21-ஆவது ஆவுடையார் என்றும், இதற்கு அடியில் 20 ஆவுடையார்கள் பூமியில் புதைந்துள்ளதாக ஐதீகம். இவர் மிருத்யுஞ்சய மூர்த்தி யாக (எம பயம் நீக்குபவர்) போற்றப்படுகிறார்.
ஒரு சுவாரஸ்ய விஷயம்.  முற்காலத்தில் ஆற்காடு நவாப் (அன்வர்கான்)மனைவிக்கு  தீராத வயிற்று வலி,   நவாபின் மனைவி யாரோ  சொல்லி  இங்கே  வழிபாடு செய்ததால் குணமானதுடன்  ஒரு  ஆண் குழந்தையும் பிறந்தது. இதற்கு நன்றிக் கடனாக அவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் கோயிலின் தென்கிழக்குப் பிரகாரத்தில் ‘அனவரத லிங்கம்’ என்ற பெயரில் இன்றும் பூஜிக்கப்படுகிறது.

 தினமும் ஆறு கால பூஜைகள்.உச்சிக்கால பூஜையின் போது காந்திமதி அம்பிகையே நேரில் வந்து நெல்லையப்பரை வழிபடுகிறாள்.   

மணிமண்டபத்தில்  ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட பெரிய தூணைச் சுற்றி 48 சிறிய தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றைத் தட்டினால் சப்த ஸ்வரங்களின் இனிய இசை எழும்பும்.

உளியால் செதுக்கப்படாமல்  தானாகத் தோன்றிய விநாயகர். இந்த பொள்ளாப்பிள்ளையார்  சந்நிதியில் 12 துளைகள் கொண்ட அழகிய கல் ஜன்னல் உள்ளது.  
ஊஞ்சல் மண்டபம்96 நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட கற்தூண்களைக் கொண்ட மண்டபம்.
ஆனிப் பெருந்திருவிழாவில்  ஆசியாவின் மிகப் பெரிய தேர்களில் ஒன்றான நெல்லையப்பர் தேரோட்டம், ஐப்பசி திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), தைப்பூசம் இதெல்லாம் இங்கே ரொம்ப விசேஷம்.

1648ல்  டச்சுக்காரர்கள்  திருச்செந்தூரில் புகுந்து  சுப்ரம ண்யனையும், நடராஜனையும்  தங்கச் சிலை  என்று தூக்கிச் சென்றுவிட்டனர். கடல் கொந்தளித்து அவர்கள் கப்பல் கவிழும் நிலையில்  அந்த விக்ரஹங்களை
 கடலில் போட்ட பிறகு உயிர் தப்பினர்.  

திருச்செந்தூர் கோயிலில்  சாமியைக்  காணோம் என்ற  விஷயம் திருநெல்வேலியில்  வடமலையப்ப பிள்ளைக்கு சென்றதும் அவர்  உடனே  பஞ்சலோக சிலைகளை வார்ப்படம்  செய்யச்சொல்லிவிட்டார்.   அன்றே ஒரு கனவு.    எங்கே  கடலில் சிலைகள் இருக்கிறது என்று இடம் அடையாளம்  காட்டப்பட்டது . எங்கே ஒரு கழுகு வட்டமிடுகிறதோ அங்கே  கடலில்  ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும். அங்கே  அடியில் விக்ரஹங்கள்  இருப்பதை  சொல்லியது. பிள்ளை  உடனே  படகில்   நீர் மூழ்குபவர்களை அனுப்பி  அந்த இடம் அப்படியே  கனவில் வந்தது போல் கடலில் தோன்ற  விக்ரஹங்கள் மீட்கப்பட்டன.  1653ல்   புனருத்தாரணம்.  

வடமலைப் பிள்ளை  ஆர்டர் கொடுத்து செய்யப்பட்ட  சிலைகள் முருகன் குறிச்சி  என்கிற ஊரில், பாளையம் கோட்டையில்    திருப்பிரந்தீஸ்வரர் கோவில்,   (வெங்கு பச்சா கோவில் என்றும் சொல்வதுண்டாம் ). அங்கே  ஸ்தாபிதமாகியது.யாராவது பாளையம் கோட்டைக்
கார  பக்தர்கள் இந்த கோவில் பற்றி தெரிந்தால் படங்களும் விவரங்களும் எனக்கு அனுப்பலாம்.  ஜே.கே.சிவன் 9840279080   வாட்சாப் நம்பர்  

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2586

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;