

திருப்பதி- திருப்தி – நங்கநல்லூர் ஜே .கே. சிவன்
திருப்பதி வெங்கடேசனை தரிசனம் செய்வது எளிதல்ல. பல மணி நேரம் காத்திருந்த பிறகுதான் ரெண்டு மூன்று வினாடி அவன் முன்னே (கிட்டே அல்ல. ரொம்ப தூரத்திலிருந்து) நிற்க முடியும். மேற்கொண்டு நின்றால் ஜருகண்டி, ஏன் இப்படி, இவ்வளவு கெடுபிடி அவனைப் பார்க்க? இன்றும் என்றும் அவன் கலியுக வரதன். கண்கண்ட தெய்வம் எனும் ஒரே காரணம் தான். எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் இதற்கு நிதர்சனமான அனுபவம் சொல்லப்படுகிறது. குறைகள் நீங்கி, துன்பம் இன்பமாக மாறிய அதிசயங்கள் பலர் வாழ்க்கையில் சொல்லப்படுகிறது.
திருப்பதியும் லட்டுவும் பிரிக்க முடியாத வார்த்தைகள். ஸ்ரீவாரி பிரசாதம் என்று பெயர் கொண்ட திருப்பதி லட்டைத் தயாரிப்பதற்குப் பிரத்யேகமான ஒரு மடப்பள்ளியே திருமலையில் இயங்கி வருகிறது. ‘பொடு’ என அதற்கு பெயர்.. பிரசாதமாக விலைக்குத் தரப்படும் லட்டு தவிர, பெருமாள் தரிசனம் முடிந்து வரும் லக்ஷக்கணக்கான பக்தர்களுக்கு, சிறிய லட்டு ஒன்று தேவஸ்தானத்தால் இலவசமாக வழங்கப் படுகிறது.
விற்பனைக்குச் செல்லும் லட்டுகள் தயாரான பின், அதன் எடை தேவஸ்தான ஊழியர்களால் பரிசோதிக்கப்
படுகிறது. காசு கொடுத்து தாங்கள் வாங்கும் லட்டின் எடை சரியாக இருக்கின்றதா என்பதை பக்தர்களே சோதித்து அறிவதற்கு, லட்டுகள் விற்பனை செய்யப்படும் மையத்துக்கு அருகில் மின்னணுத் தராசும் உள்ளது. இதையும் மீறி லட்டின் தரம் குறித்தும், எடை குறித்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது
லட்டு விற்பனை மூலம் TTD தேவஸ்தானத்துக்கு வருஷா வருஷம் பல கோடி ரூபாய் வருமானம். 2007ஆம் ஆண்டு 103 கோடி, 2009ஆம் ஆண்டு 125 கோடி ரூபாய் லட்டு வியாபாரம். திருப்பதி தேவஸ்தானம் எத்தனை லட்டுகள் தயாரித்தாலும் போதவில்லை. டிமாண்ட் இன்னும் இருக்கிறது.
திருமலையில் லட்டு தயாரிப்பதற்குப் பயன்படும் கடலைப் பருப்பு, நெய், சர்க்கரை, முந்திரிப் பருப்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை டெண்டர் மூலமாக ஆரம்பத்தில் வாங்கி வந்தார்கள். அதில் ஊழல் தலைகாட்டவே, லட்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களைத் தகுந்த அதிகாரிகளை வைத்து பரிசோதனை செய்த பின், நேரடியாகவே கொள்முதல் செய்வதென்று TTD தேவஸ்தானத்தால் தீர்மானிக்கப்பட்டது. மும்பையில் இருக்கிற ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்திடம் இருந்து ஏலக்காய் மற்றும் முந்திரிப் பருப்பும், ஆந்திர மாநில அரசு நிறுவனமான விஜயா டைரியில் இருந்து நெய்யும் வாங்கப்படுகிறது.
உலகத்தையே தன் பக்கம் திருப்பி இருக்கும் திருப்பதி லட்டுக்கு இப்போது காப்புரிமையும் வழங்கப்பட்டு விட்டது. இதைப் பெறும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள ‘உற்பத்தி இட அடையாளக் குறியீட்டுப் பதிவக’த்திடம் விண்ணப்பித்த திருப்பதி தேவஸ்தானம், ‘எங்கள் ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை’ என்று பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டது. குறுக்கு வழியில் வேறு யாரும் பணம் பார்க்க முடியாது.
லட்டு தயாராகிற மடைப்பள்ளி மிகவும் பெரியது. இதில் லட்டு மட்டும் இல்லை. அநேக வேறு வித பிரசாதங்களும் தயாராகிறது. பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி இப்படி எண்ணற்ற நிவேத்தியங்கள். அனால் முதல் இடம் லட்டுவுக்கு மட்டும்.
ஆதிகாலத்தில் ‘மனோகரம்’ என்கிற பிரசாதம் ரொம்ப பிரபலமாக இருந்தது. திருப்பதி தேவஸ்தானத்தின் பழைய கல்வெட்டுகளும் இந்தத் தகவலை ஊர்ஜிதம் செய்கின்றன. ஆந்திராவில் மனோகரம் ரொம்ப ஃபேமஸ். மனோகரமா அப்படி என்றால் என்னவா? சொல்கிறேன். கிட்டத்தட்ட ‘இனிப்பு முறுக்கு’ . அரிசி மாவையும் வெல்லப் பாகையும் ஒன்றாகக் கலந்து, கலவையை எண்ணெயில் போட்டு முறுக்குபோல் பொறித்து எடுத்தால் அதுதான் மனோகரம். கரகரவென பல்லால் கடித்து உண்ணக்கூடிய ஒரு உணவு அயிட்டம் இது. இந்த மனோகரம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை, பக்தர்களே ஆலயத்துக்கு தானமாகக் கொடுத்த தகவல்களையும் கல்வெட்டுக்கள் சொல்கிறதாம். நம்மால் படிக்க முடியவில்லை. கு மனோகரம் பல நாட்கள் கெடாமல் இருக்கும் பக்ஷணம். எனவேதான், மலை ஏறி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மனோகரம் கொடுக்கப்பட்டதாக 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு சொல்கிறது.
தீபாவளி காலங்களில் இனிப்புகள் தயார் செய்வதற்கு கடலை மாவு, ரவா, சர்க்கரை, நெய், முந்திரி என்று ஏகப்பட்ட பொருட்கள் வேண்டும். இதை வாங்க முன்பெல்லாம் நாம் ஒரு பெரிய லிஸ்ட் எடுத்துக்கொண்டு மளிகைக்கடை வாசலில் வரிசையாக நிற்போம். .
திருமலை மடைப்பள்ளியில் தினமும் பல லக்ஷம் லட்டுகள் தயாராகின்றன. அதற்கு, பல ஆயிரம் கிலோ கடலை மாவு, சர்க்கரை, நெய் ஏராளமான முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு எண்ணெய் , பாதம் பருப்பு எல்லாம் வேண்டுமே. தேவஸ்தானம் எல்லாவற்றிக்கும் இடம், சப்ளையர்கள் , சமையல் காரர்களை வைத்திருக்கிறது.
கி.பி. 1250ஆம் சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டுக்களில், திருப்பதி ஆலயத்தில் வழங்கப்பட்ட பிரசாதங்கள் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அதில் தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை இடம்பெறுகின்றன.
13-14ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களில் பாசிப் பருப்பு, அரிசி, உப்பு, மிளகு, நெய் இவை சேர்ந்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு, ஏழுமலையானுக்கு நிவேதனம் பண்ணியதாக தகவல் உள்ளது. மேலே சொன்னதை எல்லாம் சேர்த்தால் வெண்பொங்கல் நமக்கு ரெடியாக கிடைக்கும். கல்வெட்டுக்கு ”பொங்கல்” என்ற பெயர் தெரியவில்லை. வேறு ஏதோ பெயர் சொல்கிறது.
நம்மைப்போல வேங்கடேசன் தூங்குவதில்லை. அவன் சயன நேரம் ரெண்டுமணிக்கும் குறைவு தான்.
‘ஏகாந்த சேவை’ முடிந்த கையோடு திரையிட்டுவிடுவார்கள். அதன்பின் அதிகாலை – அதாவது ஒண்ணரை மணி நேரம் கழித்து ‘சுப்ரபாத சேவை’க்காகத் திருப்பள்ளி எழுச்சி பாடி, துயில் களைப்பர்.அவ்வளவு தான் அவருக்கு தூக்கம்.
ராம பக்தர், சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜ ஸ்வாமிகள் ஒரு தடவை திருப்பதி தரிசனத்துக்கு மலை ஏறி போனார்.சன்னிதியை அடையும்போது நடு ராத்திரி ள்ளிரவு. அதுவரை பெருமாளின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர் போன நேரம் சந்நிதி மூடி திரை போட்டாகிவிட்டது. அடாடா நடக்க முடியாமல் இவ்வளவு நேரம் இவ்வளவு தூரம் மலை ஏறி வந்து அவன் தரிசனம் கிடைக்க வில்லையே…..கண்ணீர் மல்க, திரைக்கு வெளியே, வேங்கடேச பெருமாளை பிரார்த்தித் தார் . அப்போது அங்கே இருந்த அர்ச்சகர்களுக்கு தியாகராஜ ஸ்வாமிகளை தெரியாதே.
”ஏகாந்த சேவை நேரம் முடிஞ்சுடுத்து. போய்ட்டு நாளைக்கு வாங்கோ”என்று எல்லோரையும் வெளியே அனுப்பினார்கள்.
தியாகராஜரின் சீடர்கள் அர்ச்சகர்களிடம் ”இவர் எங்கள் குருநாதர் திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் ”
”அதெலாம் எங்களுக்கு தெரியாது. நாளைக்கு வாங்கோ”. அதே பதில் தான்.
தியாகராஜஸ்வாமிகள் ஒன்றும் பேசவில்லை. சந்நிதிக்கு வெளியே வந்து கண்மூடி அமர்ந்தார். மனதில் ஒரு ஒரு கீர்த்தனை பிறந்தது. அநேக கச்சேரிகளில் ஆனந்தமாக நாம் ரசித்து மகிழும் கீர்த்தனை இது.
”தெர தீயக ராதா?” எனும் கௌளிபந்து (Gowlipantu) ராக பாடல்.
తెర తీయగరాదా! లోని తెర తీయగరాదా! నాలోని తిరుపతి వేంకట రమణ – మత్సరమను
పరమ పురుష ధర్మాది మోక్షముల పారద్రోలుచున్నది – నాలోని ఇరవొందగ భుజియించు సమయమున ఈగ తగులు రీతి యున్నది
హరి ధ్యానము చేయు వేళ – చిత్తము అంత్యజు వాడకు పోయినట్లున్నది మత్స్యము ఆకలిగొని గాలముచే మగ్నమైన రీతి యున్నది అచ్చమైన దీప సన్నిధిని మరు- గడ్డి పడి చెరచిన యట్లున్నది
వాగురమని తెలియక – మృగ గణములు వచ్చి తగులు రీతి యున్నది వేగమే నీ మతమును అనుసరించిన
త్యాగరాజ నుత – మద మత్సరమను
தெர தீயகராதா! லோனி தெர தீயகராதா! நாலோனி திருபதி வேங்கட ரமணா – மத்ஸரமனு!
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல பாரத்ரோலுசுன்னதி – நாலோனி!
இரவொந்தக புஜியிஞ்சு சமயமுன ஈக தகுலு ரீதி யுன்னதி
ஹரி த்யானமு சேயு வேள – சித்தமு அந்த்யஜு வாடகு போயினட்டுலுன்னதி!
மத்ஸ்யமு ஆகலி கொனி காலமுசே மக்னமைன ரீதி யுன்னதி
அச்சமைன தீப சந்நிதினி மரு கட்டி படி செரசின யட்டுலுன்னதி!
வாகுரமனி தெலியக – ம்ருக கணமுலு வச்சி தகுலு ரீதி யுன்னதி
வேகமே நீ மதமுனு அனுசரிஞ்சின த்யாகராஜ நுத – மத மத்ஸரமனு!
பசியால் தவிக்கும் மீன், தூண்டிலில் இருக்கும் இரையைப் பார்த்து ஆசைப்பட்டு, அதில் சிக்கிக் கொள்வதைப் போல என் மனமும் மாயையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.தூய்மையாக எரியும் விளக்கின் அருகில் குப்பைகள் விழுந்து அதன் ஒளியை மறைப்பதைப் போல, என் உள்ளத்தில் இருக்கும் தீய குணங்கள் ஞான ஒளியை மறைக்கின்றன.
வேடன் விரித்திருக்கும் வலையை அறியாத மான்கள் கூட்டம், அந்த வலையில் வந்து சிக்கிக் கொள்வதைப் போல, அறியாமையால் மனிதனும் பொறாமை, அகங்காரம், தற்பெருமை ஆகியவற்றில் சிக்கிக் கொள்கிறான். இறைவா! உன்னுடைய வழியைப் பின்பற்ற விரும்பும் உன் பக்தனான தியாகராஜன் வேண்டுகிறான்.என்னிடமுள்ள இந்த மதம், மத்ஸரம் என்னும் அகங்காரத்தையும் பொறாமையையும் உடனடியாக நீக்கி அருள்வாயாக!
இந்தக் கீர்த்தனையின் உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பகவானுக்கும் நமக்கும் நடுவே, திரையாக இருப்பது நம்முடைய மனமே தான்…
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


