சாணக்ய​  நீதி ஸாஸ்த்ரம்


சாணக்ய​  நீதி ஸாஸ்த்ரம்  —  நங்கநல்லூர்  ஜே. கே.  சிவன்.

 
​माता   शत्रुः पिता वैरी याभ्यां बालो न पाठितः । न शोभते सभामध्ये हंसमध्ये बको यथा ॥
Mātā śatruḥ pitā vairī yābhyāṃ bālo na pāṭhitaḥ,na śobhate sabhāmadhye haṃsamadhye bako yathā.
மாதா ஶத்ருஃ பிதா வைரீ யாப்யாம் பாலோ ந பாடிதஃ,ந ஶோபதே ஸபாமத்யே ஹம்ஸமத்யே பகோ யதா.

​சாணக்யனின்  இந்த  சொற்கள் ஞாயமானவை. பிள்ளைக்குக் கல்வி கற்பிக்காத ​ அப்பனும்  அம்மையும்  அவனுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்க​ள். கல்வியறிவற்றவர் அறிஞர்கள் நிறைந்த அவையில் இருப்பது, அன்னங்கள் நிறைந்த இடத்தில் கொக்கு இருப்பதைப் போன்றது​ என்கிறான் சாணக்கியன்.  ஒளவையார்  அவன் ஒரு  உதவாக்கரை  நெடு  மரம் என்கிறாள். ‘

लालनाद्बहवो दोषास्ताडने बहवो गुणाः । तस्मात्पुत्रं च शिष्यं च ताडयेन्न तु लालयेत् ॥ १२ ॥
Lālanād bahavo doṣās tāḍane bahavo guṇāḥ,tasmāt putraṃ ca śiṣyaṃ ca tāḍayen na tu lālayet.
லாலநாத் பஹவோ தோஷாஃ, தாடநே பஹவோ குணாஃ,தஸ்மாத் புத்ரம் ச ஶிஷ்யம் ச தாடயேந்ந து லாலயேத்.

​பணக்கார, அதிகாரிகளின் பிள்ளைகள் படிப்பதில்லை, அவசியமில்லை.. அவன் படித்து எந்த வேலைக்கும் போகவேண்டாம். நாட்டை ஆளலாமே . நாம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.அளவுக்கு மீறிய செல்லம் பல குறைகளை உருவாக்கலாம்;
​அதே சமயம் ஏழையாக இருந்தாலும்  கடுமையான ஒழுக்கம் பல நல்ல பண்புகளை உருவாக்கலாம்​. சாணக்யன் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும் 
 
श्लोकेन वा तदर्धेन तदर्धार्धाक्षरेण वा । अबन्ध्यं दिवसं कुर्याद्दानाध्ययनकर्मभिः ॥ १३ ॥
Ślokena vā tadardhena tadardhārdhākṣareṇa vā,abandhyaṃ divasaṃ kuryād dānādhyayanakarmabhiḥ.
ஶ்லோகேந வா ததர்தேந ததர்தார்தாக்ஷரேண வா,அபந்த்யம் திவஸம் குர்யாத் தாநாத்யயநகர்மபிஃ.

ஒரு ஸ்லோகத்தையாவது, அதன் பாதியையாவது, ஒரு சிறிய பகுதியையாவது தினமும் கற்றுக்கொள்ள வேண்டும். தானம், கல்வி, நல்ல செயல்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு நாளையும் பயனற்றதாகக் கழிக்காமல் இருக்க வேண்டும்.​ ஸ்லோகம் கூட  அதிக பக்ஷம். தமிழில் எத்தனையோ இருக்கிறதே, தேவாரம், திருவாசகம், அருட்பா, தாயுமானவர், சிவவாக்கியர், திருமூலர்.  ஆழ்வார் பாசுரங்கள், …. தினமும் ஏதாவது நான்கு ஐந்து வரிகளாவது மனதில் ஏறட்டுமே. நானும் படித்து மற்றவர்களுக்கும் ஏதாவது தினமும் வழங்கி வருகிறேன். அதில் எனக்கு ரொம்ப ரொம்ப திருப்தி.


कान्तावियोगः स्वजनापमानं ऋणस्य शेषं कुनृपस्य सेवा । दरिद्रभावो विषमा सभा च विनाग्निना षट् प्रदहन्ति कायम् ॥ १४ ॥
Kāntāviyogaḥ svajanāpamānaṃ,​ ṛṇasya śeṣaṃ kunṛpasya sevā,​ daridrabhāvo viṣamā sabhā ca,​ vināgninā ṣaṭ pradahanti kāyam.
காந்தாவியோகஃ ஸ்வஜநாபமானம்,ருணஸ்ய ஶேஷம் குந்ருபஸ்ய ஸேவா,தரித்ரபாவோ விஷமா ஸபா ச,
விநாக்நிநா ஷட் ப்ரதஹந்தி காயம்.

​மனைவியோடு கூட  சேர்ந்து வாழ முடியாத நிலை.  சொந்த மக்களால் அவமதிக்கப்படுதல், தீராத கடன், தீய ஆட்சியாளரிடம் பணியாற்றுதல், வறுமை, முறையற்ற அல்லது அவமானகரமான சபையில் இருப்பது ஆகிய ஆறு நிலைகளும் நெருப்பில்லாமலேயே உடலையும் மனதையும் எரிப்பதைப் போன்ற துன்பத்தைத் தருகின்றன.​ எவ்வளவு கோடி பணம் இருந்து என்ன பிரயோஜனம். வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரிப்பதால் உள்ளே உள்ள எரிச்சல் வலி குறையுமா?


नदीतीरे च ये वृक्षाः परगेहेषु कामिनी । मन्त्रहीनाश्च राजानः शीघ्रं नश्यन्त्यसंशयम् ॥ १५ ॥
Nadītīre ca ye vṛkṣāḥ parageheṣu kāminī,​ mantrahīnāś ca rājānaḥ śīghraṃ naśyanty asaṃśayam.
நதீதீரே ச யே வ்ருக்ஷாஃ பரகேஹேஷு காமிநீ,மந்த்ரஹீநாஶ்ச ராஜாநஃ ஶீக்ரம் நஶ்யந்த்யஸம்ஶயம்.

நதிக்கரையில் வளரும் மரங்கள், பிறர் வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் பெண், ஆலோசகர்கள் இல்லாமல் ஆட்சி செய்யும் அரசன் ஆகியோர் விரைவில் அழிவைச் சந்திக்கக்கூடும்​.  சாணக்யா ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன் நீ சொன்னது இன்று பலிக்கிறதடா!.


विप्राणां भूषणं वेदाः शीलं भूषणमुत्तमम् । गुणाः भूषणं रूपं ज्ञानं भूषणमुत्तमम् ॥ १६ ॥
Viprāṇāṃ bhūṣaṇaṃ vedāḥ śīlaṃ bhūṣaṇam uttamam,guṇāḥ bhūṣaṇaṃ rūpaṃ jñānaṃ bhūṣaṇam uttamam.
விப்ராணாம் பூஷணம் வேதாஃ, ஶீலம் பூஷணமுத்தமம்,​ குணாஃ பூஷணம் ரூபம், ஞானம் பூஷணமுத்தமம்.

வேத அறிவு அறிஞர்களுக்கு அணிகலன்; நல்லொழுக்கம் உயர்ந்த ​ ஆபரணம்.  நல்ல குணங்கள் ஒருவருக்கு அழகு சேர்க்கின்றன; அறிவு மிகச் சிறந்த அணிகலனாக விளங்குகிறது.​  வெளிப்புற அழகைவிட அறிவும் நல்லொழுக்கமும் மனிதனின் மதிப்பை உயர்த்துகின்றன.

धनहीनो न च शोभते सभा मध्ये फलहीनो न च शोभते तरुः । सेवकहीनो नृपतिः न शोभते विद्याहीनो न च शोभते जनः ॥ १७ ॥
Dhanahīno na ca śobhate sabhāmadhye,phalahīno na ca śobhate taruḥ,sevakahīno nṛpatiḥ na śobhate,vidyāhīno na ca śobhate janaḥ.
தநஹீநோ ந ச ஶோபதே ஸபாமத்யே,பலஹீநோ ந ச ஶோபதே தருஃ,ஸேவகஹீநோ ந்ருபதிஃ ந ஶோபதே,
வித்யாஹீநோ ந ச ஶோபதே ஜநஃ.

செல்வமற்றவர் சபையில் சிறப்பிக்கப்படுவதில்லை; பழமற்ற மரம் பயனற்றதாகக் கருதப்படுகிறது; உதவியாளர்கள் இல்லாத அரசன் சிறப்பாக ஆட்சி செய்ய முடியாது; கல்வியற்றவர் அறிவின் அவையில் சிறப்பிக்கப்படுவதில்லை​.  (இப்போது இந்த விதி செல்லாது சாணக்யா). அவர்கள் தான் நாடாள்வர்.

​वेश्या निर्धनं प्राज्ञं प्रजाः पराजितं नृपम् । खगा वीतफलं वृक्षं भुक्त्वा चाभ्यागतो गृहम् ॥
Veśyā nirdhanaṃ prājñaṃ prajāḥ parājitaṃ nṛpam,khagā vītaphalaṃ vṛkṣaṃ bhuktvā cābhyāgato gṛham.
வேஶ்யா நிர்தனம் ப்ராஜ்ஞம், ப்ரஜாஃ பராஜிதம் ந்ருபம்,ககா வீதபலம் வ்ருக்ஷம், புக்த்வா சாப்யாகதோ க்ருஹம்.

 சிலர் தங்களுடைய தேவைகள்​, காரியம்  நிறைவேறியதும் ​கழன்று போவார்கள். பழமில்லாத மரத்தைப் பறவைகள் விட்டுச் செல்வதைப் போலவும், உணவருந்திய விருந்தினர் தம் வீட்டிற்குத் திரும்புவதைப் போலவும் உறவுகள் மாறலாம்.
சுயநலத்தின் அடிப்படையில் அமைந்த உறவு​ எது,  உண்மையான அன்பின் அடிப்படையில் அமைந்த உறவு​ எது என்கிற வித்யாசம் தெரிந்து பழக வேண்டும்.  

ब्राह्मणा यान्ति यजमानं छात्राः यान्ति गुरोर्गृहम् । पशवस्तृणपूर्णानि वनानि च परित्यजेत् ॥
Brāhmaṇā yānti yajamānaṃ chātrā yānti guror gṛham,​ paśavas tṛṇapūrṇāni vanāni ca parityajet.
ப்ராஹ்மணா யாந்தி யஜமானம், சாத்ரா யாந்தி குரோர்க்ருஹம்,​ பஶவஸ்த்ருணபூர்ணாநி வநாநி ச பரித்யஜேத்.

​முன்பு  சடங்குகளைச் செய்யும் புரோகிதர்கள் தங்கள் யஜமானர்களிடம் செல்​வார்கள். மாணவர்கள் குருவின் இல்லத்திற்குச் செல்​வார்கள்,  விலங்குகள் உணவு கிடைக்கும் இடங்களுக்குச் செல்​லும் .இது போல  பசையுள்ள குடத்தில் உறவுகள் நெருங்கும். 

 
प्रीतिः साधुषु जनेषु नृपसेवा च शोभते । वाणिज्यं व्यवहारेषु दिव्या स्त्री गृहमेधिनाम् ॥
Prītiḥ sādhuṣu janeṣu nṛpasevā ca śobhate,vāṇijyaṃ vyavahāreṣu divyā strī gṛhamedhinām.
ப்ரீதிஃ ஸாதுஷு ஜனேஷு, ந்ருபஸேவா ச ஶோபதே,வாணிஜ்யம் வ்யவஹாரேஷு, திவ்யா ஸ்த்ரீ க்ருஹமேதிநாம்.

நல்லவர்களுடன் ​உண்மையான உறவு, அரசுப் பணியில் ஒழுங்கான சேவை, வணிகத்தில் நேர்மையான பரிவர்த்தனை ஆகியவை சிறப்புடையவை​. குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் ​அவசியம். நமது உறவுகள், தொழில், குடும்ப வாழ்க்கை ஆகிய அனைத்திலும் நேர்மை, பொறுப்பு, பரஸ்பர மரியாதை ஆகியவை ​ இருக்கவேண்டும். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;