TELLING LIES NO PAPA J K SIVAN

பொய், ஒரு வியாதி. – நங்கநல்லூர் J K SIVAN
பொய் என்பது சும்மா. ஏதோ ஒரு சின்ன, சாதாரண மான விஷயமாகத் தோன்றலாம்.. பொய் மனித மனத்தின் ஆழமான செயல்முறைகளுடன் தொடர்பு டையது.
பொய் சொல்லுவது எப்போது ஆரம்பமானது?
மனிதன் தனது உணர்ச்சிகளை மற்றவனுக்கு புரிய வைக்க பேசாத தெரிந்து கொண்ட காலத்திலிருந்து பொய் உருவானது என்று எடுத்துக் கொள்ளலாம். அதற்கு அவ்வளவு வயதாகி விட்டது.
குழந்தைகள் கூட ஐந்து வயதுக்கு மேல் செய்த தவறை மறைக்க சிறிய பொய்களைச் சொல்ல ஆரம்பிக்கிறார் கள்.
அதாவது, “பொய்” என்பது ஒரு கற்றுக் கொண்ட பழக் கம் அல்ல — அது மனதின் பாதுகாப்பு (defense mechanism) ஆக இயல்பாக உருவாகிறது.
விஞ்ஞான ரீதியாக, இது Cognitive Development அறிவாற் றல் வளர்ச்சியுடன் தொடர்புடையது.
மனோதத்துவ ரீதியாக (Psychologically) ஏன் பொய் சொல்கிறார்கள்?
முக்கிய காரணங்கள்:
1. தவறு செய்தபிறகு தான் பொய் சொல்ல தொடங்கு கிறான். காரணம். தான் செய்த செயல், சொன்ன சொல் தனக்கு தண்டனை வாங்கி தரும் என்ற பயம். ஆகவே
தப்பை செய்த பிறகு தண்டனை தவிர்க்க.
2. தங்களை நல்லவனாக காட்டிக்கொள்ள, அதாவது
சமூகத்தில் நல்ல image maintain பண்ண, மதிப்பு பெற, இல்லாததை இருப்பதாக, அல்லதை இருப்பதை இல்லாத தாக காட்டிக் கொள்ள.
3. லாபம் பெற, பணம், அதிகாரம், அல்லது personal advantage. சுய லாபம் பெற பொய் சொல்கிறான்.
4. பிறரைக் காப்பாற்ற, பிறர் செய்த தவறை, தப்ப மறைத்து ஆதரவளிக்க.
5. இந்த பொய் ரகங்களில் பிறருக்கு தொந்தரவில்லாத சக்தியற்ற பொய்கள், ஆங்கிலத்தில் “white lie” — யாரை யும் காயப்படுத்தாமல் இருக்கும் பொய்கள் எனப்படும்.
சிலருக்கு சர்வ சகஜமாக பொய் சொல்ல வரும். அது அவர்கள் தாழ்வு, உயர்வு மனப்பான்மை, inferiority /superioritycomplex . இப்படிப்பட்டவர்களை வழக்கமாக பொய்சொள்பவர்கள், புளுகர்கள் என்கிறோம்.
ஆங்கிலத்தில் Habitual lying. இது தற்காப்பு உணர்ச்சிக் காக அவர்கள் சொல்வது. மனக்கோளாறு காரணம். நல்ல மனநோய் மருத்துவரை அணுகி இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு.
சிலர் எந்த காரணமுமில்லாமல் கூட பொய் சொல்வது வழக்கமாகிவிடும். இது தற்பெருமைக்க்காக. சமூகத் தில் தம்மை பிறர் உயர்வாக கருதவேண்டும் என்ற
எதிர் பார்ப்பினால் இப்படி செய்வார்கள். அனால் அதே அவர்களை சமூகத்தில் மட்திப்பற்றவர்களாக, கேலிப் பொருளாக மாற்றிவிடும் என்று அறியாதவர்கள். பாவம். ஆங்கிலத்தில் இந்த குணத்தை Defensive mentaliy
மற்றும் hyper Self-esteem உடன் தொடர்புடையது.
பொய் சொல்லுவதில் உண்மையில் சந்தோஷம் / plea sure இருக்கிறதா? யோசித்து பார்த்தேன். சிலருக்கு இருக்கலாம். காரணம்:சமயோசிதமான வெற்றி உணர்வு: “நான் clever ஆக ஏமாத்திட்டேன்” என்ற feeling உணர்வு அவர்களை பெருமிதப் படுத்தும். மூளையில் dopamine release ஆகி ஒரு சிறிய thrill கிடைக்கும். அதில் கிடைக்கும் அல்ப ஆனந்தம். இது ரொம்ப அர்த்தமற் றது. தற்காலிக சுகம். — நீண்ட காலத்தில் guilt, stress அதிகரிக்கும். ஆபத்திலும் கொண்டு சேர்க்கும்.
பொய் சொல்லுவதின் விளைவுகள் (Effects) என்ன என்று யோசித்தேன். மனிதனின் மனநிலையில் மாறுதல். குற்ற உணர்வு. guilt (பாவ உணர்வு), காரணமில்லாத பயம், தன்னம்பிக்கை இல்லாமை. anxiety, பயம், பதற்றம் . மன அழுத்தம், stress .சமூகத்தில் நம்பிக்கை இல்லாமை . உறவுகள் இதனால் முறிந்துவிடும்.
உடல் ரீதியாக: heart beat rate அதிகரிக்கும். மார்பு துடிப்பு படபடக்கும். stress hormones (cortisol) அதிகரிக்கும் அழுத்தம். இவன் புளுகாண்டி என்ற பெயர், பட்டம், கிடைக்கும். யாரும் அவன் சொல்லை நம்பமாட்டார் கள். பொய் சொல்பவரின் image (Image of a liar) சமுகத் தில் அந்தஸ்தை இழப்பான். தொடர்ந்து பொய் சொன்னால்:”அவன் வார்த்தையை நம்பாதே” என்று மற்றவர்கள் உதாசீனப்படுத்துவார்கள். “trustworthy இல்லை” என்று நினைப்பார்கள். அவனுக்கு மதிப்பு மரியாதை எங்கிருந்து வரும்? respect குறையும். உண்மையையே அவன் திரும்ப திரும்ப சொன்னாலும் அது எடுபடாது.யாரும் நம்ப மாட்டார்கள்
சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு கதை. கோபால் என்பவன் ஆடு மேய்க்கும் சிறுவன். விளையாட்டுக்கு ஒருநாள் ‘ஐயோ புலி வருது வருது’ என்று கத்தினான். மற்றவர்கள் கொம்பு, கத்தி எல்லாம் தூக்கிக்கொண்டு கத்திக்கொண்டே அங்கே வந்ததில் அவனுக்கு வேடிக் கை. சிரிப்பு. உண்மையிலேயே ஒரு நாள் ஒரு சிறுத்தை வந்தபோது ஐயோ புலி புலி என்று அவன் உரக்க கத்தின போது யாரும் அதை லக்ஷியம் பண்ணவில்லை, அவனுக்கு உதவ வரவில்லை. இந்த கதை சின்ன வயதில் பொய் சொல்லக் கூடாது என்று வாத்யார்
சொல்லிக்கொடுத்த கதை. இன்னும் ஞாபகம் இருக்கிறது.
இப்போது யாரும் இது மாதிரி நல்ல போதனைகளை பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுப்பதில்லை. அவர்
களுக்கே தெரியாத போது குழந்தைகளுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பது?
பொய் என்பது எப்போதாவது ஒரு சில சமயம் மனிதனின் இயல்பான பாதுகாப்பு கருவியாக உபயோகப்படும். ரொம்ப ஜாக்கிரதையாக அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ரொம்ப யோசிக்க வேண்டும். அதை தொடர்ந்து பயன்படுத்தினால் அது ஒரு character flaw ஆக மாறிவிடும். ஒருவனின் குணத் தையே மாற்றிவிடும் கொடிய தன்மை கொண்டது பொய் சொல்வது. பொய் பழங்காலத்திலிருந்தே எல்லா தேசங்களிலும் எல்லா மொழிகள் பேசுவவர்களிட மும் உள்ளது தான். மேலே சொன்ன காரணங்களால் நமக்குள் புகுந்து கொள்வது.
”ஸார், நான் பொய் கிய் எல்லாம் பேசவே மாட்டேன். எனக்கு பிடிக்காது. பொய் பேசறவங்களோடயும் நான் பேசமாட்டேன், சேரமாட்டேன்” ”இப்படி நிறைய பேர் சொல்கிறார்களே உங்களுக்கு தெரியுமா?. சிலரை சந்தித்திருப்பீர்கள். உண்மையில் இதுதான் அண்டப் பொய். ஆகாஸப்புளுகு. நம்பவே நம்பாதீங்க அந்த ஆளை. பொய் பேசாதவனே கிடையாது. கொஞ்சூண் டாவது பொய் பேசாமல் எவனும் கிடையாது. எப்போ எதுக்கு,எப்படி, ஏன், பொய் பேசறோம்? காரணம் இருக்கு. அதை தான் மேலே விலாவாரியாக சொல்லி ட்டேனே. நம்மைப் பற்றி உயர்வாக மற்றவர் நினைப் பதற்கு. நம்மை நாமே சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கும்போது உண்மைக்கு மாறாக நாம் சொல்லும் வார்த்தைகள் தான் பொய் . நம்மை நாமே கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக்கொள்வோமா?
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்றனர் நமது முன்னோர். இது உண்மையா? நிச்சயம் என்று எல்லோரும் சொல்ல முடிகிறதா? பொய்யால் தான் வாழ்க்கையே நடக்கிறது என்று சிலரை, ஏன் பலரைப்பார்த்து வருந்துகிறோமே!
.உண்மை பொய்த்து விட்டதா? பொய் தான் புகழை யும் பெருமையையும் தருகிறதா? அப்படித்தானே நிறைய பேர் நம்புகிறோம். பொய் சொல்லாமல் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். ஒரு பொய் சொன்னதால் தர்மன் தேர் தரையில் அழுந்தியது. பொய் நம்மை உள்ளே உறுத்தும். துன்பப்படுத்தும் என்று இன்றும் வாழ்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஹரிச்சந்திரன் கடைசி வரை பொய் சொல்லவில்லை.
”குழந்தைகளே, பொய் சொல்லாதீர்கள், அது பாபம் என்று அடிக்கடி சொல்ல வேண்டும். .
” பொய் சொன்னாலும் பொருந்த சொல்” என்று ஒரு வாக்கியம் பற்றி ரொம்ப யோசித்தேன். புகழக்கூடிய தகுதியாக ஏன் சிலருக்கு பொய் சரளமாக நம்பும் படி யதாக வருகிறது ?.’வானத்தை வில்லாக வளைப்பேன்’ என்று எல்லாம் பொய் சொல்பவனை, அகட விகட சாமர்த்தியக்காரன் என்று ஏன் பாராட்டுகிறோம்?
.அவன் பொய் அவனை அசாதாரணமான ஒரு மனிதனாக காட்டுவதால்.”கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு” என்று கூட ஒரு வாக்கியம் இருக்கிறதே.
.ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
நிறைய பேர் வாழ்வில் காதலே பொய்யால் தான் உருவாகிறது. வாழ்க்கை கட்டிடமே பொய் என்கிற அஸ்திவாரத்தில் தான் ஸ்ட்ராங்காக நிற்கிறதே. அப்புறம் போகப்போக தான் அதன் சுய ரூபம் தெரிந் ததும் ரகளை, பரிதாபம், ஏமாற்றம், கோபம் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக பிறக்கிறது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு என்பது ரொம்ப ரொம்ப தவறான பரிக்ஷை. வாழ்க்கையோடு விளையா டவே கூடாது. நிறைய பேர் பணத்தாசையால் கல்யா ணத்தை பொய்களை சொல்லி நடத்தி விடுகிறார்கள். பின்னர் அது தெரியவந்ததும் பலர் வாழ்க்கை அதனால் பாழாகுகிறது.
கருப்பு கோட்டு போட்ட வக்கீலுக்கு மூலதனமே பொய் என்று எத்தனை பேர் தலையாட்டுகிறோம். அழகாக ஜோடித்து பொய் சொல்வோர் சிறந்த வழக்கறிஞர்களாமே. இந்த பொய்யை சொல்ல கீதை புத்தகம் மேல் எதற்கு சத்யம் செய்யவேண்டும்? கல்பூரத்தை கொளுத்தி எதற்கு கையால் அணைக்க வேண்டும்?
அரசியல்வாதி என்பவனுக்கு ஆதார சுருதியே பொய் என்று அநேகர் சொல்கிறார்களே. அது தெரியாதவன் பிழைக்க தெரியாதவனாமே? .
பெரிய நிர்வாகிக்கு வியாபாரத்தில் பொய் அழகாக அலங்கரிக்கப்பட்ட மூலதனம். சிரித்துக்கொண்டே நம்பிக்கை ஊட்டி நம் தலையை தின்பவர்கள் பெரிய வியாபாரிகள் ஆச்சே.
கல்யாணமாகாதவன் சொல்லும் பொய்யெல்லாம் தற் பெருமைக்காகவா? தன்னுடைய இமேஜ் உயரவேண் டும் என்ற ஆர்வத்தால் தானே, சின்ன சின்ன பொய் அன்றாட வாழ்வில் அவசியம் ஆகிறதே.
கவிஞன், கதை சொல்பவன் பொய்யை நம்பித்தானே வாழ்கிறான் . அது தானே அவன் ஜீவனம். அதை கற்பனா சக்தி மிக்கவன் என்று எல்லவா புகழ்கிறோம். கற்பனை உண்மையில் பொய் தானே. நடக்காததை நடப்பது போல் காட்டும் டிராமா தானே.
வேலைக்காரன் முதலாளியிடம் சொல்கிற பொய் அவனை வேலையில் நீடிக்க வைக்கிறதே.
அநேக குடும்பத்தில் கணவன் மனைவியிடம் காலம் தள்ளுவதே இந்த பொய் அஸ்த்ரப்ரயோகம் என்கிற ஜீவநோபா யத்தால் அல்லவா?
உண்மையாகவே சத்யமேவ ஜெயதே என்பதற்கு என்ன அர்த்தம். வாய்மை உண்மையில் வெல்லுமா. பழைய காலத்தில் மட்டும் வென்றதா? இன்னும் வெல்லுகிறதா என்று கவலையாக இருக்கிறதே?
பொய் அசிங்கம் என்றால் அதற்கு எதிர்மறையாக வாய்மைக்கு அடையாளம் மூன்று சிங்கம் மட்டும் தானா ?
”கிருஷ்ணா, நீ தான் சொல்ல வேண்டும். நீ பொய் சொன்னால் அதற்கு ஏதோ ஒரு நன்மை உள்ளே காரண மாக இருக்கும். பொய்யே உன்னைப் பொறுத்த வரை நன்மை புரியும் நிஜமாகி விடும். அந்த தெய்வீக சக்தி உனக்கு மட்டும் தான் இருக்கிறது. உன்னைப் பார்த்து நாங்களும் அப்படி செய்யலாமா. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை தான்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;