

சில வார்த்தைகள்…. நங்கநல்லூர் J K SIVAN
நான் யோகியோ, ஞானியோ அல்ல.வாழ்க்கையில் அடிபட்டு விழுந்து எழுந்து மறுபடியும் விழுந்து கொண்டு வரும் ஒரு சாதாரணன். சில எண்ணங்கள் மனதில் தோன்றியபோதெல்லாம் வெளிப்படையாக உங்களோடு பரிமாறிக் கொள்கிறேன். .அவ்வளவே. வாழ்க்கையில் சிலர் திடீர் பணக்காரர்கள், திடீர் பதவி பெறுபவர்கள், புது அந்தஸ்து, அதிகாரம் படைத்தவர்கள், அதிர்ஷ்டக்காரர்கள், சிலர் உயரத்தில் இருந்து சரிந்து விழுகிறார்கள், தோல்விகள் மாற்றி மாற்றி புரட்டி எடுக்கிறது. நன்றாக இருந்தவர்கள் திடீர் பாதாளத்தில்…. இதெல்லாம் ஏன்? புகழோடு இருந்தவர்கள் அவதூறுக்காளாகிறார்கள். எதனால்?
சில வார்த்தைகளை சொல்கிறோம். “வாய்ப்பு”, “சான்ஸ்”, “அவகாசம்”, “விண்ட்ஃபால் (windfall)” — இவை எல்லாம் ஒரே மாதிரி தோன்றினாலும், அர்த்தத்தில் கொஞ்சம் மாறுபடுபவை. .opportunity (வாய்ப்பு) என்பது நமக்கு எப்போதாவது நோட்டிஸ் இல்லாமல் திடீரென்று கிடைக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம். நம்மால் முயற்சி செய்தால் இதை பயனுள்ளதாக உபயோகித்துக் கொள்ள முடியும். உதாரணமாக திடீரென்று ஒரு நல்ல வேலை வாய்ப்பு, மேற்படிப்புக்கு யார் மூலமோ வாய்ப்பு கிடைக்கும்போது தவறவிடலாமா?
Chance (சான்ஸ்) என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அது மதில் மேல் பூனை. சற்றே சீரற்றது (random) பட்டா பாக்யம், படாவிட்டால் லேகியம். நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் அதிகம் இல்லாத சமாச்சாரம். வெளியே இருக்கும். உதாரணம். நாம் வாங்கிய ஒரு ரூபாய் சிக்கிம் லாட்டரி ஒரு லக்ஷம் பரிசு அடிப்பது.
அடுத்ததாக யோசிக்க வேண்டியது Occasion (அவகாசம் / நிகழ்வு). இது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை. இதற்கு சரியான உதாரணம் குடும்ப, நண்பர் வீட்டு திருமணம், பிறந்த நாள் விழா மாதிரி நிகழ்ச்சி. அதில் சில பேரை சந்திக்கிறோம், நண்பர்களாகிறோம், பலன் கிடைக்கலாம், பாதாளத்தில் தள்ளப்படலாம். நமது தேர்வைப் பொறுத்த விஷயம் இது. திடீரென்று ஒரு நல்ல திருப்பமாக அமைவது தான் Windfall (எதிர்பாராத லாபம்). நாம் யோசிக்காமலேயே, முயற்சிக்கா மலேயே, ஒரு லக்கி ப்ரைஸ் அடித்தால், அது, அந்த நன்மை, அல்லது கொட்டும் பணம் ஒரு சிறந்த உதாரணம்.
எந்த முயற்சியும் இல்லாமல் திடீரென கிடைக்கும் நன்மை அல்லது பணம். எங்கோ ஒரு தாத்தா இது வரை தெரியாமல் இருந்தவர் போவதற்கு முன்பு அவர் சொத்து நமக்கு தான் என்று எழுதி வைத்த உயில்…!! எழுதும்போதே சந்தோஷமாக இருக்கிறது. உண்மையில் எனக்கு ஒரு தாத்தா இப்படி கிடைப்பாரா???
யார் மேலே சொன்னதை எல்லாம் உருவாக்குகிறார்கள்?”
சில வாய்ப்புகள் நம்முடைய முயற்சியால் உருவாகின்றன (உழைப்பு, திறன், தொடர்புகள்).
சிலது வெளிப்புற சூழ்நிலைகளால் வருகிறது (சமூகம், பொருளாதாரம்).
சிலது காரணம் சொல்லமுடியாதபடி முற்றிலும் சீரற்றவை (chance, windfall) 777 திடீர் சாம்பார், திடீர் ரசம்..
இதனால் எல்லாம் பயன் உண்டா என்றால் நிச்சயம் நமக்கு அனுகூலமானவை இவை. வாழ்வில் முன்னேற்றம் காண வழி பிறக்கும், புதிய அனுபவங்கள் பெறலாம். TVK எதிர்பாராமல் புதிய அனுபவங்கள் பெறுவதை பார்க்கிறோம். நல்லது தானே? நல்லதே நடக்கட்டும். பொருளாதார நன்மை, சமூக சீர்திருத்தம் இதனால் உருவாகலாம். நம்முடைய இயற்கையான திறனை, திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் அல்லவா இது?“இவைகளைத் தேடாமல் இருக்க முடியுமா? என்றால் முடியும். ஆனால் அது வளர்ச்சியை குறைக்கலாம் வாய்ப்புகளை தேடாமல் இருந்தால் வாழ்க்கை அமைதியாக இருக்கலாம், ஆனால் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். அதற்கு பதிலாக, வாய்ப்புகளை கவனித்து, கண்ணில் பட்டபோது, கைக்கு எட்டியபோது கெட்டியாக பிடித்துக் கொண்டு பயன்படுத்தினால் வாழ்க்கையில் மாற்றங்கள் விரைவாக வரும்.
ஆனால் முக்கியமாக ஒரு விஷயம் மறக்கவே கூடாது. வாய்ப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவற்றை கவனித்து பயன்படுத்துவது நம் கையில் கையில் தான் இருக்கிறது.
“சந்தர்ப்பம் ” என்ற சொல்லும் “opportunity”க்கு நெருக்கமானது தான், ஆனால் சிறிய நுணுக்க வேறுபாடு இருக்கிறது. சந்தர்ப்பம் என்பது ஒரு சூழ்நிலை சரியாக அமைந்து, ஏதாவது செய்ய ஏற்ற தருணம் உருவாவது. அது நல்லதா கெட்டதா என்பதை சூழ்நிலை மட்டுமே, மனது மன நிலை மட்டுமே, தீர்மானிக்கும். அதைப் பயன் உள்ளதாக உபயோகப்படுத்தினால் அது “வாய்ப்பு” ஆக மாறும்.
உதாரணமாக நல்ல மனிதர் ஒருவரை சந்திக்க நேரம் கிடைத்தது என்றால் அது அரிய “சந்தர்ப்பம்”.அந்த சந்திப்பை பயன்படுத்தி வேலை பெற்றால் → அது “வாய்ப்பு” . ”நல்ல சமயமடா, நழுவ விடாதேடா… பாட்டு நினைவுக்கு வருகிறது.
“சந்தர்ப்பம்” என்பது கதவு திறந்திருக்கும் நிலை. “வாய்ப்பு” என்பது அந்த கதவின் வழியாக உள்ளே செல்வது.
வாய்ப்புகள் அத்தனையும் பயன் தருமா என்றால் மதில் மேல் பூனை என்று சொன்னேனே. நன்றாக யோசித்து, நேரம் வீணாக்காமல் முடிவு எடுப்பது நமது சாமர்த்தியம் அதற்கு மேல் கடவுள் விட்ட வழி. சரியான வாய்ப்புகளை மட்டும் அடையாளம் கண்டு பயன்படுத்துவது முக்கியம்
“அதிர்ஷ்டம் (Adhirshtam)” மற்ற சொற்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது.
அதிர்ஷ்டம் என்றால் என்ன?
நம்மால் கட்டுப்படுத்த முடியாத, எதிர்பாராத நல்ல விஷயம் நடப்பது
முயற்சி இல்லாமலோ அல்லது குறைந்த முயற்சியிலோ கிடைக்கும் நன்மை . குருட்டு அதிர்ஷ்டம் என்று ஒரு அழகான பெயரும் அதற்கு உண்டு.
உதாரணம் தான் மேலே சொல்லிவிட்டேன். சிக்கிம் லாட்டரி….சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது
அதற்காக கிடைத்த போதெல்லாம் சிக்கிம் லாட்டரி சீட்டு வாங்கினால் கிடைத்தும் கையை விட்டு போய்விடும். ஜாக்கிரதை.அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இருந்தால் ஒருவனுக்கு வாழ்வில் நிலையான முன்னேற்றம் கிடைகைது ஸார் ஆனால், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது வேறு, வாய்ப்புகளை தேடுவது வேறு..நான் எழுதியது புரிகிற மாதிரி இருந்தால் நான் ”அதிர்ஷ்டக்காரன்”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



