
க்ஷேத்ர கீர்த்தனை பிதாமஹர் … நங்கநல்லூர் J K SIVAN
ஏறக்குறைய 250 வருஷங்களுக்கு முந்தி வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் திருவாருரில் வாழ்ந்த ராமஸ்வாமி தீக்ஷிதர் எனும் சங்கீத வித்வானுக்கும் சுப்பம்மாளுக்கும் வெகுகாலமாக புத்ர பாக்யம் இல்லாமல், வைத்தீஸ்வரன் கோயில் முருகன் முத்துகுமாரசாமியை வேண்டிக் கொண்டு விரதமிருக்க முருகன் அருளால் மகனாக பிறந்தவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் சகோதரர்கள் சின்னசுவாமி, பாலசுவாமி எனும் சங்கீத வித்வான்கள். எல்லோருக்கும் அப்பா ராமஸ்வாமி தீக்ஷிதர் தான் ஸமஸ்க்ரித, சங்கீத, வேத குரு.
சிறு வயதிலேயே முத்து சாமி தீக்ஷிதருக்கு கல்யாணம் ஆகி திருவாரூரில் வாழ்ந்திருந்த காலத்தில் மணலி எனும் ஊரின் ஜமீன்தார் தனவந்தர், முத்து கிருஷ்ண முதலியார் திருவாரூர் வந்தார். கலைகளில் ஆர்வம் கொண்டு ஆதரிப்பவர். திருவாரூரில் ராமஸ்வாமி தீக்ஷிதரின் பாட்டைக் கேட்டு ஆர்வத்தோடு அவரை மணலிக்கு வரும்படி அழைத்தார். தீக்ஷிதர் குடும்பம் திருவாரூரை விட்டு மனைவிக்கு இடம் பெயர்ந்தது. முத்துகிருஷ்ண முதலியார் காலத்துக்குப் பின் அவர் மகன் வேங்கடகிருஷ்ண முதலியார் எனும் சின்னய்யா முதலியார் ஜமீன்தார் ஆனார். கிழக்கிந்திய கம்பெனிக்கு துபாஷ் என்பதால் முதலியார் சென்னை கோட்டைக்கு அடிக்கடி செல்லும் போதெல்லாம் முத்துசாமி தீக்ஷிதரையும் சகோதரர்களையும் தன்னுடன் கூட்டி செல்வார். வெள்ளைக்காரர்களின் இசையை கேட்ட முத்து சாமி தீக்ஷிதரும் அவர் சகோதரர்களும் சமஸ்க்ரிதத்தில் அதற்கு ஸ்வரம் அமைத்து பாட்டியற்றினார்கள் . இங்கிலிஷ் நோட் ஸ்வர கீர்த்தனைகள் தயாரானது. தீக்ஷிதர் வீணையில் அந்த இங்கிலிஷ் நோட்டுகளை சங்கராபரண ராகத்தில் வாசித்துக் காட்டியபோது வெள்ளைக்காரர்கள் அதைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.
மணலியில் தீக்ஷிதர் குடும்பம் வாழ்ந்தபோது காசியிலிருந்து சிதம்பரநாத யோகி என்ற சந்நியாசி அவர்கள் வீட்டுக்கு வந்தார். முத்துசாமி தீக்ஷிதரைப் பார்த்தவுடனேயே அவருக்கு ஞானதிருஷ்டியில் முஹ்த்துஸ்வாமி தீக்ஷிதர் எதிர்காலம் தெரிந்துவிட்டது. ஆகவே அவரை தன்னோடு காசிக்கு அழைத்துச் சென்றார். ஸ்ரீ வித்யா உபாசகர் என்பதால் அந்த யோகி தீக்ஷிதருக்கும் தாந்த்ரீக வழிபாட்டு முறையை, ஷோடஸாக்ஷரி மந்த்ரம்,யோகம் வேதம். உபநிஷத் எல்லாம் உபதேசித் தார். ஆறு வருஷங்கள் முத்துசாமி தீக்ஷிதர் காசியில் இருந்தார். யோகி உதவியோடு யோகம், தத்வம், தந்திரம், ஹிந்துஸ்தானி சங்கீதம் (த்ருபத்) எல்லாம் கற்று தேர்ந்தார்.
யோகி அவரிடம் ”முத்துசாமி காசி அன்னபூர்ணேஸ்வரி உன் ஆசையை எல்லாம் இந்த ஜென்மத்தில் பூர்த்தி பண்ணி வைப்பதோடு மறுமையில் மோக்ஷமும் தரப் போகிறாள். அவளை விடாமல் உபாசி. திருத்தணிக்கு போ இது அவள் கட்டளை.”அடுத்தநாள் கங்கைக்கு ஸ்னானம் பண்ண யோகியும் முத்துசாமி தீக்ஷிதரும் சென்றபோது ”முத்துசாமி, ஜலத்தில் இன்னும் மூணு அடி எடுத்து முன்னாலே வச்சிட்டு என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றார் .
என்ன ஆச்சர்யம் நீரின் அடியில் ஒரு வீணை கிடைத்தது. அதன் மேல் ”ராமா” என்று பெயர் இருந்தது. ”இது உனக்கு கங்காதேவி பிரசாதம். நீ பெரிய வைணிக வித்வானாக, வாக்கேயக்காரனாகப் போகிறாய்” என்ற யோகி சிதம்பரநாத யோகி சிறிது காலத்தில் சித்தி அடைந்துவிட்டார்.காசி ”ஹனுமான் காட்” டில் யோகியின் சமாதி இருக்கிறது. தீக்ஷிதர் மணலி திரும்பினார்
.மணலியில் இருக்கும்போது தம்பி சின்னசாமிக்கு திடீர் என்று பார்வை போய்விட்டது. அப்பா ராமஸ்வாமி தீக்ஷிதர் சின்னசாமியை திருப்பதிக்கு அழைத்துக் கொண்டு போய் ஒரு மண்டலம் விரதம் இருந்தார். 48 நாளும் ஒவ்வொரு நாளும் ஒரு க்ரிதி, ஒரு ராகத்தில். அந்த பாடல் தொகுப்பு ”மனஸா வேரு தருள சகா ” ஹே மனசே, எதற்கு உனக்கு சஞ்சலம்” என்று தொடங்கும். இன்னொரு பாட்டில் ‘இஙகிதய ராகுன்னனு” என்று வரும். என் பிள்ளைக்கு கண் பார்வை வருமோ வராதோ, தெரியவில்லை, நான் காளஹஸ்தி நடந்து போகப்போகிறேன், என்று சொல்லி கிளம்பிவிட்டார். சந்நிதியில் தரிசனம் முடித்து வெளியே வரும்போது யாரோ ரெண்டு வைஷ்ணவர்கள் பேர் பேசிக்கொண்டு போவது காதில் விழுந்தது… ”எல்லாமே நன்னா பளிச்சுனு தெரியும் பாரு” வீட்டுக்கு இதைநினைத்துக் கொண்டே போன ராமசாமி தீக்ஷிதரை அவர் மகன் சின்னசாமி வரவேற்றான். அவன் பார்வை திருப்பதி வேங்கடேசன் அருளால் திரும்பிவிட்டது.
தீக்ஷிதரின் கமலாம்பா நவாவரண கீர்த்தனைகள் ரொம்ப ரொம்ப அற்புதம். தீக்ஷிதர் ஸ்ரீ வித்யா உபாசகர். இசை + தந்திரம் + வேதம் மூன்றும் கலந்த கிருதிகள். தீக்ஷிதர் பல க்ஷேத்ரங்களுக்கு சென்று தரிசனம் செய்து ஆங்காங்கே கீர்த்தனைகள் இயற்றியவர். எனவே அவரை “க்ஷேத்திர கீர்த்தன பிதாமஹர்” என சொல்வதுண்டு. வீணை வித்வான். 72 மேளகர்த்தா ராகங்களில் கீர்த்தனை இயற்றியதோடு எத்தனையோ மறந்து போன ராகங்களை மீட்டவர்.சுமார் 500 கீர்த்தனைகள் இயற்றியவர். எல்லா கச்சேரிகளிலும் முதலில் கணபதி மேல் தியானம் செய்யும் பாடலான ”வாதாபி கணபதிம்” என்ற கீர்த்தனை தீக்ஷிதர் இயற்றியது.
தீக்ஷிதர் சுமார் வாழ்ந்தது அறுபது வருஷங்கள். அவருடைய சமாதி இருக்கும் எட்டைய புரத்தில் சங்கீத வித்துவான்கள் பத்தர்கள் தரிசனம் செய்து ஆராதனை விழா வருஷா வருஷம் நடக்கிறது. அதிர்ஷ்ட வசமாக சங்கீத மும்மூர்த்திகள் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், தீக்ஷிதர், சாமா சாஸ்திரிகள் மூவருமே சம காலத்தில் வாழ்ந்தவர்கள். சங்கீதத்தின் பொற்காலம்.
இன்னும் சொல்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



