
தாயும் நீயே தந்தையும் நீயே… நங்கநல்லூர் J K SIVAN
யோசனைக்கு இடமே இல்லை. பகவான் தான் நம் எல்லோரையும் விட பெரியவர். சக்தி மான். இந்த ப்ரபஞ்சத்துக்கே அம்மையும் அப்பனும் ஆனவர். அப்பா அம்மா நமக்காக எந்த தியாகத்தையும் செய்பவர்கள். அதைவிட அதிகமாக தன்னலமின்றி நம்மை பாதுகாப்பவர் பகவான். நமது நலம் சுகம் க்ஷேமம் ஒன்றே அவ லக்ஷியம். நாம் நமது தாய் தந்தையை தெய்வம் போல் மதித்து அவர்களை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்.
அன்னையும் பிதாவும் தான் நாம் முதலில் அறிகிற முன்னறி தெய்வம். அதற்கு அடுத்தது தான் ஆலய வழிபாடு. அங்கேயும் பகவானை நாம் அம்மா அப்பாவாக தான் தொழவேண்டும்.
பகவான் எங்கும் எதிலும் இருப்பதால் நம்மைப் போல் உருவமாக அவரை தேட வேண்டாம். உருவம் இல்லாத அவரை எப்படி நினைவில் வைப்பது, வழிபடுவது என்பதற்காகத்தான் அவரை அம்மா அப்பாவாக நினைத்து தொழுவது. அம்மா அப்பா அன்புக்கு கருணைக்கு ஈடு இணை இல்லை. ஆகவே நாம் திருப்பி பகவானுக்குத் தருவது பக்தி. யாவும் நீயே, அவரே கதி என்று சரணடைவது. ஆகவே பார்வதி தாய் பரமேஸ்வரன் அப்பா. அதேபோல் மஹாலக்ஷ்மி தாய், மஹா விஷ்ணு அப்பா.
மனசுலே அன்பும் சந்தோஷமும் இருந்தால் புத்தி தெளிவாக இருக்கும். புத்தி தெளிவாக இருந்தால் கல்வி ஞானம் பெற முடியும். கோபம் தாபம், பொறாமை, கர்வம், இருந்தால் புத்தி கொந்தளித்து தவறாக செயல்படும். நிலை தடுமாறி தவறுகள் பாபங்கள் புரிவோம்.
இன்று சின்ன செடி நாளை பெரிய விருக்ஷம். அநேகருக்கு நிழல், கனிகள் தருவது போல் இன்றிய இளம் தலைமுறை நாளைக்கு அநேகருக்கு பயன் தரும் விருக்ஷங்களாக அமைய பக்தியும் பண்பும், அன்பும் கட்டாயம் இப்போதே அளிக்கப்படவேண்டும். அதற்கு பெற்றோரிடம், பெரியவர்களிடம் பணிவு, மரியாதை, பகவானிடம் பக்தி அவசியம். இப்போது சிறுவர்கள் சிறுமிகள் மாணவ மாணவிகளாக நம்மிடம் வளர்க்கிறார்கள் அவர்கள் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தவேண்டியது நமது கடமை. தவறினால் அவஸ்தை நமக்கு தான் அசலும் வட்டியுமாக .
பிறர்க்கு உதவுவதன் மூலம் தான் நாம் உதவி பெறமுடியும். ஜன சேவை தான் ஜனார்த்தன சேவை. மக்கள் சேவை தான் மகேசன் சேவை. பகவான் தான் சர்வ ஜீவராசிகளுமாக இருக்கிறான் என்பதால் கடவுள் பக்தி தானாகவே பிறர்க்குதவும் மனதை நற்பண்பை, அன்பை நமக்குள் வளர்க்கும்.
காற்று பலமாக வீசும்போது நாம் கெட்டியாக ஒரு மரத்தையோ, தூணையோ பிடித்துக் கொள்வது போல கோபம், பொறாமை அகம்பாவம் நம்மை ஆட்கொள்லாமல் நாம் எப்போதும் பகவானையே செய்தால் உய்வோம். சிறுவயதில் குழந்தைகளுக்கு ஒரே கடமை கல்வி கற்பது. கறப்பதை கசடறக் கற்க வேண் டும்.அப்புறம் அதன்படி, அது சொல்வது போல், பிழறாமல் நடக்கவேண்டும். வள்ளுவர் சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன். அதற்கு பக்தி, பண்பு, நல்லொழுக்கம் இன்றியமையாதது. பிறருக்கு உதவுவதில் சமூக சேவையில் ஈர்ப்பு அவசியம். அப்பர் மணிவாசகர் இருவரின் சின்ன தேவாரங்களோடு இதை நிறைவு செய்கிறேன்.
“அப்பனே! அம்மனே! அருள்புரி ஆனந்தமே!
எப்பொழுதும் என்னுள் இருப்பவனே!
தப்பிலா தரணிதனில் தங்கிய நாயகனே!
உப்பிலா அமுதமே! உன்னையே நம்பினேன்.”-
மணிவாசகர் திருவாசகத்தில் ‘நீ தான் அப்பா, அம்மா, எனக்கு ஆனந்தம் தருபவன், ஆனந்த ஸ்வரூபன், எப்போதும் என்னுள்ளேயே இருப்பவன், நீயே இணையற்ற, குறையற்ற அமிர்தம். லோக சம்ரக்ஷகன். நான் உன்னையே முழுதுமாக நம்பி சரணடைபவன்.” என்கிறார்.
அப்பர் பாடுவது; ”அம்மையப்பன் அவனன்றி மற்றோர் தெய்வம் இல்லை;
எம்மையாள் உடையான் இறைவன் அவனே;
தம்மை யாரறிவார்? தாளிணை சேர்வார்க்கே
செம்மை யாகும் திருச்சிற்றம்பலம்.” அர்த்தமே தேவையில்லையே. அழகாக புரிகிறதல்லவா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


