
அடையபலம் தந்த அபூர்வர் – நங்கநல்லூர் J K SIVAN
சிறந்த சிவ பக்த யோகி, அப்பய்ய தீக்ஷிதர் சாக்ஷாத் பரமேஸ்வரன் அவதாரம். நிறைய ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் இயற்றியவர். மிகவும் பிரபலமான மார்க்க பந்து ஸ்தோத்ரம் அவர் எழுதியது. அதை முன்பே வெளியிட்டிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை வெளியிடட்டுமா?
அவரைப்பற்றி சில விஷயங்கள் பகிர்கிறேன். அதற்கு முன் அவரைப் பற்றி தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவேண்டாமா? சொல்கிறேன். தொண்டைமண்டலம் தான் வடமொழியில் துண்டீர மண்டலம். அதில் தான் காஞ்சிபுரம் அடக்கம். அங்கே ஸ்ரீ ஏகாம்ர நாதரும், ஸ்ரீ காமாக்ஷியும் நமக்கு அருள் புரிய கோயில் கொண்டிருக்கிறார்கள். காஞ்சியை அடுத்து இன்னொரு ஊர். ஆரணி. பட்டுக்கு பெயர் போனது. அங்கே ஒரு சின்ன கிராமம் தான் அடையபலம். அநேக பிராமணர்கள் ஆசாரம், அனுஷ்டானம்,அக்னிஹோத்ரம், இஷ்டி, யாகம், அதிதி ஸத்காரம் என்று பல புண்ணிய காரியங்களைச் சிரத்தையுடன் செய்து கொண்டு பல நூறு வருஷங்களுக்கு முன் அங்கே வாழ்ந்தார்கள். வேத, சாஸ்த்ர, புராண ,ஸமஸ்க்ரித ஞானம் உள்ள பண்டிதர்கள் வித்வான்கள் அவர்களில் பலர்.கிட்டத்தட்ட ஐநூறு வருஷங்களுக்கு முன் அப்பைய தீக்ஷிதர் எனும் ஒரு மஹான் அங்கே வாழ்ந்திருந்தார். ( 1520–1593) . அத்வைதி. யாக யஞங்கள் பண்ணுபவர். mini மினி வசிஷ்டர், விஸ்வாமித்ரர், பிருஹஸ்பதி என்றால் அது அடையபலம் அப்பைய தீக்ஷிதர் தான். இயற் பெயர் விநாயக சுப்ரமணியன். அப்பா பெயர் ரங்கராஜாத்வரி. ராமகவி என்ற குரு அவருக்கு சாஸ்திரங்கள் வேதங்கள் எல்லாம் கற்பித்தார். சிறு வயதிலேயே சகல வித்யைகளும் பாடமாகியது.
அடையபலத்தில் உள்ள விநாயகர் வக்ஷஸ்தல கணபதியை உபாசிக்கும் பாரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த ஆச்சார்ய தீக்ஷீதர் என்பவர் விஜயநகர ராஜா கிருஷ்ணதேவராயரின் ஆஸ்தான வித்வான். அவருக்கு எட்டு பிள்ளைகள். மூத்த பையன் ரங்கராஜாத்வரி. ‘அத்வைத வித்யா முகுர விவரணப்ரகாசம்’ தவிர இன்னும் பல கிரந்தங்கள் இயற்றியவர். அம்மா வழி தாத்தா ஸ்ரீ வைகுண்டாசார்யர். அப்போது பிராமணர்களுக்குள் ஸ்மார்த்த-வைஷ்ணவ பேதமில்லை.
தொண்டைநாட்டுக்கு அப்போது ராஜாவாக இருந்தவர் சின்னவீரப்ப நாயகரின் புத்ரர் சின்னபொம்ம ராஜா. சிற்றரசர்களான ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீவேங்கடகிரி, கார்வேடி முதலிய தேசத்து ராஜாக்கள் வித்வான்களை ஆதரித்து வந்தததால் ரங்க ராஜாத்வரி சமஸ்தானத்தால் ஆதரிக்கப்பட்டார். ஸ்ரீரங்கராஜாத்வரிக்கு குழந்தை இல்லை. விசனத்தோடு தம்பதிகள் தமது குல தெய்வமான விரிஞ்சிபுரம் ஆலயத்தில் ஸ்ரீ மரகதவல்லி ஸமேத ஸ்ரீமார்க்க ஸஹாய சிவ பெருமானை பிரார்த்தனை பண்ணினார்கள்.
”குழந்தாய், சிதம்பரத்தில் உனக்கு அருள்புரிவேன் .நீ அங்கு வா ” என்று மார்க்க ஸஹாயன் அருளியதால் ஸ்ரீரங்கராஜாத்வரி தம்பதியர் சிதம்பரம் போய் தினமும் சிவகங்கையில் ஸ்நானம், மூன்று வேளையும் நடராஜ சிவதரிசனம் செய்தார்கள். இப்படியே ஐந்து வருஷம் ஓடியது.
“ஹே மஹேஸ்வரா, நடராஜ மஹா ப்ரபோ! எங்களிடம் எப்போது கருணைவைப்பீர்கள்?” தம்பதிகள் மனமுருகி வேண்டினார்கள்.
ஒருநாள் இப்படி வேண்டியபிறகு ஆகாசத்தில் ஒரு அசரீரி பேசியது அவர்களுக்கு மட்டும் கேட்டது.
“ஹே பக்த சிகாமணி, உன் தவத்தை மெச்சினேன். உனக்கு ரெண்டு பிள்ளைகள், ஒரு பெண் பிறப்பார்கள்”
நடராஜ பெருமான் அருளிய சில நிமிஷங்களில் சிதம்பரம் ஸ்ரீநடராஜரின் அர்ச்சகர் உருவில், நடராஜரின் அபிஷேக தீர்த்தம், பழரசம் பெற்று நடராஜப்பிரசாதம் உண்கிறார்கள்.
பிரமாதீச வருஷத்தில், (கி.பி 1554) புரட்டாசி மாதம், சோமவாரம், கிருஷ்ணபக்ஷம் பிரதமை உத்திரட்டாதி நக்ஷ்த்ரத்தில் ஸாத்விக வேளையில் கன்யா லக்னத்தில் அப்பைய தீக்ஷிதரின் அவதாரம் இப்படி நிகழ்ந்தது. அற்புதமான ஜாதகம். கன்யா லக்னத்தில், சூரியனும்-புதனும் இருக்க, மகரத்தில் மாந்தியும், மீனத்தில் சந்திரனும், விருஷபத்தில் சனியும்-ராஹுவும், தனுஸில் குருவும், மிதுனத்தில் செவ்வாயும், துலாவில், சுக்கிரனும், விருச்சிகத்தில் கேதுவும் கூடிய ஜாதகம்.
நடராஜ பிரசாதமாக கிடைத்த இப்படிப்பட்ட புத்ரனின் ஜனனத்தை கொண்டாட ஸ்ரீரங்கராஜாத்வரி கோதானம், பூதானம் செய்து, ஜாதகர்மா வைதிக முறையில் பண்ணி, பதினொன்றாம் நாளில் ‘விநாயக சுப்ரமணியன்’ என்று நாமகரணம் செய்தாலும் அம்மையப்பன் அருளால் பிறந்தால் ‘ அப்பையன் ‘ என்று அழைத்தார்கள். ரெண்டு வருஷம் கழித்து ஆச்சார்ய தீக்ஷிதர் என்ற ரெண்டாவது குழந்தை பிறந்தது. அப்புறம் இரண்டு வருடங்கள் கழித்து நடராஜன் அருளியபடி ஒரு பெண் குழந்தை. ஞானாம்பிகை.
ஸ்ரீரங்கராஜாத்வரி தானே அப்பைய தீக்ஷிதருக்கு அக்ஷராப்யாஸம் செய்து, காவ்யம்-நாடகம்-அலங்காரம்-ஸாஹித்யம் எல்லாம் கற்க குரு ராமகவி என்ற கவிச்ரேஷ்டரை நியமித்தார். ஐந்து வயதிலேயே அப்பையர் ஸகல எழுத்து பாஷா ஞானமும், ஸாஹித்யம் செய்யும் திறமையும் பெற்றார். ஏழாவது வயதில் உபநயனம், வேதாத்தியயனம்.
ரங்கராஜாத்வரி அடையபலம் கிராமத்தில் சோம இத்யாதி யாகங்களைச் செய்து ஒரு நாள் தனது ரெண்டு புத்ரர்களையும் அழைத்து, ‘குழந்தைகளே! நீங்கள் வித்யா சம்பத்துடன் அஹங்காரமற்றவர்களாய் என்றும் சந்திரசேகரனான பரமேஸ்வரனைப் பூஜித்து அனவரதமும் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்தும், விபூதி ருத்ராக்ஷதாரணம் செய்பவர்களை சிவபிரானாகவே எண்ணி அவர்களை வணங்குங்கள். யக்ஞபதியான பரமேச்வரனை யாகங்களால் ஆராதியுங்கள்” என்று உபதேசம் செய்து சிவசாயுஜ்ய பதவி அடைந்தார். அப்போது அப்பையதீக்ஷிதருக்கு பதினாறு வயது. தந்தையாரின் கட்டளைப் படி நடந்து கொண்டு அடைய பலத்தில் வசித்து வந்தார்.
அப்போது வேலூருக்கு ராஜா சின்ன பொம்மன். ஸ்ரீ ரங்கராஜாத்வரி இல்லாமல் தனது சபையின் சோபை குறைந்து விடும் என்று ராஜாவுக்குத் தோன்றியதால் அப்பைய தீக்ஷிதரையும் அவர் தம்பியையும் தனது அரச சபை வித்வான்களாக்கினான். பதினாறே வயதான ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் வைணவ எதிர்ப்புகளை லக்ஷியம் செய்யாமல் சிவ பெருமானையும் சிவபக்தர்களையும் கொண்டாடி சாஸ்திர வாயிலாகச் சபையில் பிரகடனம் செய்தார்.
தஞ்சாவூர், ஸ்ரீகாளஹஸ்தி, வேங்கடகிரி, கார்வேட்டி நகர் போன்ற இடங்களில் உள்ள அரசர்களும் அப்பைய தீக்ஷிதரின் சிவபக்திப் பெருமையைக் கேட்டுத் தத்தம் நகர்களுக்கு அழைத்து அவரைப் பெருமைப்படுத்தித் தக்க சன்மானங்கள், பிருதுகள் போன்றவைகளால் கெளரவித்தனர். தீக்ஷிதர் சிவார்க்கமணி தீபிகா, நியாய ரக்ஷாமணி. பரிமளம் என்று பல நூலகள் 104 இயற்றியிருக்கிறார்.
வேலூர் ராஜா சின்னபொம்மன் சிவபக்தன். மிகவும் மன மகிழ்ந்து அப்பைய தீக்ஷிதற்கு தங்கத்தில் மலர்கள் செய்து அபிஷேகம் (கனகாபிஷேகம்) பண்ணினான். தீக்ஷிதர் நம்மைப் போல் இல்லை. ராஜா அளித்த பொன் அத்தனையும் உபயோகித்து அடையபலத்தில் விக்னேஸ்வரருக்கும், ஸ்ரீ காலகண்டேஸ்வரருக்கும் வரதராஜ பெருமாளுக்கும் கோவில்கள் கட்டினார் . இன்றும் அக்கோவில்கள் உள்ளன. இதைத்தவிர இன்னொரு அற்புத மான காரியம் செய்தார். 500 மாணவர்களுக்கு சாமவேத பயிற்சி அவரால் கிடைத்தது. அப்பைய தீக்ஷிதர் டிரஸ்ட் அநேக நல்ல காரியங்களை இன்றும் செய்து வருகிறது.
தீக்ஷிதர் எழுதிய ஸ்தோத்திரங்கள் காவியங்கள் 104 என்றாலும் இன்னும் அநேகம் இந்த எண்ணில் சேரா தவை. எல்லாமே மணிமணியானவை. மார்கபந்து ஸ்தோத்ரம் ரொம்ப பிரபலமானது. திருவண்ணாமலை அம்பாள் அபித அபீத ப்ரஹத் குஜாம்பாள் மேல் அபீத குஜாம்பாஸ் தவம் எனும் ஸ்தோத்ரம் புகழ் வாய்ந்தது. எல்லா வியாதிகளையும் போக்கும் கைவல்யம்.தீக்ஷிதர் ஒரு உதார குண புருஷர், உதாரண புருஷரும் கூட.
விஜயநகர ராஜா கிருஷ்ணதேவராயர் ராணியோடு காஞ்சிபுரம் வந்து வர்த்தராஜரை தரிசனம் செயகிறார். ஆச்சர்ய தீக்ஷிதர் ராஜாவை வரவேற்று நிற்கிறார்.
”நீங்கள் சிறந்த கவித்வம் வாய்ந்தவர்கள் என்கிறார்களே. எங்கே ஒரு பத்யம் ஸ்லோகம் பாடுங்கள்?” என்கிறார்.
ஆச்சார்ய தீக்ஷிதர் வரதராஜரை வணங்கி ஒரு ஸ்லோகம் பாடுகிறார்.
काञ्चित् काञ्चनगौराङ्गीं वीक्ष्य साक्षादिव श्रियम् | वरदस्संशयापन्नो वक्षस्थलमुदीक्षते ||
”காஞ்சித் காஞ்சன கௌராங்கீம் வீக்ஷ்ய சாக்ஷாதிவ ஸ்ரியம் வரதஸ் ஸம்சயாபந்ந; வக்ஷஸ்தல மவேக்ஷதே”
உடனே பாடிவிட்டார் ஆச்சார்ய தீக்ஷிதர். என்ன அர்த்தம்?
”வரதராஜ ஸ்வாமிக்கு ஒரு அதிர்ச்சி. சந்தேகம். எதிரே இருக்கும் மைசூர் ராணியை பார்க்கிறார். அட, நமது மார்பில் அல்லவா இருக்கிறாள் என்று நினைத்தேன். மஹா லக்ஷ்மி இதோ என் எதிரில் ராஜ உடையில் வந்து எப்படி நிற்க முடிந்தது? உடனே வேக வேகமாக தனது மார்பை தொட்டு பார்க்கிறார். மஹா லக்ஷ்மி அங்கே இருக்கிறாள். ஓஹோ ஒரு வினாடி அசந்து போய் விட்டேன். என் லக்ஷ்மிக்கு சமம் யாரும் இல்லை என்று நினைத்தது ரொம்ப தப்பு. இதோ இந்த ராஜ பத்னிக்கு ஒருவேளை என் மார்பில் இடம் கொடுக்கலாம் என்றால் எங்கே இடம்?’இந்த அபாரமான கற்பனை ஸ்லோகத்தை கேட்ட கிருஷ்ணதேவராயர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்!.புளகாங்கிதம் அடைந்து பரிசு மழை பொழிந்ததில் என்ன ஆச்சர்யம்? ராஜா ஆச்சர்ய தீக்ஷிதருக்கு ஒரு விருது வழங்கி வாழ்த்தினார். ”வக்ஷஸ்தலாச்சார்யார்”.
அக்காலத்தில் ”ரத்னகேட தீக்ஷிதர்” என்ற ஒரு காமாக்ஷி தாசர் பிரபலமானவர். மஹா வித்வான். அவரை சூரப்ப நாயக்கன் என்ற குறுநில மன்னன் ஒருவன் ஆதரித்து அவனது சபையில் ஆஸ்தான வித்வானாக கௌரவித்தான் .ரத்நகேட தீக்ஷிதர் என்பது விருது, பட்டப்பெயர், அவர் உண்மைப்பெயர் ஸ்ரீனிவாச தீக்ஷிதர்.
மராத்தி தேசத்தில் பூனாவில் மைதிலோட்ரம் என்ற ஊருக்கு ஒரு ராஜா, சந்திரசேகர பூபாலன் என்று அவன் பெயர். ஒருநாள் அவன் தீக்ஷிதரைப் பார்த்து
”சுவாமி என்று என்ன திதி?” என்று கேட்டான்.
தீக்ஷிதர் ஏதோ அம்பாள் மேல் கவனமாக இருந்ததால் ‘இன்றைக்கு பௌர்ணமி” என்று மெஷின் மாதிரி பதிலளித்தார். அருகில் இருந்தார்கள் விடுவார்களா? எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் தீக்ஷிதரைக் கவிழ்க்கலாம் என்று திட்டம் போடுபவர்களாயிற்றே.
”ராஜா, பார்த்தீர்களா, இந்த தீக்ஷிதர் ஒரு பித்தலாட்ட பேர்வழி, இன்று வகையாக உங்களிடம் சிக்கிக் கொண்டு விட்டார். இன்று அமாவாசை, எப்படி தைர்யமாக உங்களிடம் பௌர்ணமி என்று பொய் சொல்லி இருக்கிறார் பாருங்கள்” என்று கோபமூட்டினார்கள்.
ராஜாவுக்கு மூக்கு மேல் கோபம்.
”தீக்ஷிதரே, என்னை அவமானப்படுத்த, கேவலப்படுத்த பொய் சொன்னீர்களா?” என்று ராஜா கேட்டான்”
ஸ்ரீனிவாச தீக்ஷிதர் ”மஹாராஜா, பிறர் பேச்சை கேட்காதீர்கள், இன்று பௌர்ணமி தான்” என்கிறார்
”எப்போது அம்மாவாசையா பௌர்ணமியா என்பதை தெளிவாக அறியமுடியும்?”
”சூரிய அஸ்தமனம் ஆனபின் ஆகாயத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்”
தீக்ஷிதருக்கு தன்னை அறியாமல் ஏதோ ஒரு சக்தி இவ்வாறு சொல்ல வைத்தது என்று புரிந்து விட்டது. சாயங்காலம் அஸ்தமன நேரம் காயத்ரி, சந்தியாவந் தனம் பண்ணி அம்பாளுக்கு அர்க்யம் கொடுத்தார்.
”ஜகன்மாதா, காமாக்ஷி, என்னை ஏன் இப்படி சொல்ல வைத்தாய். ராஜா என் தலையை இன்னும் கொஞ்ச நேரத்தில் சீவப் போகிறான் என்னை உன் திருவடியில் சேர்த்துக் கொள்” என்று பிரார்த்தனை செய்தார்.
அம்பாள் காமாக்ஷி தீக்ஷிதர் முன் ப்ரசன்னமானாள் .
”குழந்தாய், எல்லாம் நன்மைக்காகவே நடந்துள்ளது. ”இந்தா” என்று தனது காதில் இருந்த தாடங்கத்தை எடுத்து தீக்ஷிதர் கையில் கொடுத்தாள் .
”ஸ்ரீநிவாஸா, உன் வாக்கு பொய்க்காது. தைரியமாக இரு. ராஜா வந்ததும் இதை ஆகாயத்தில் வீசு”.
சூர்ய அஸ்தமனமானது. எங்கும் இருள் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ந்தது. ராஜ சந்திர சேகர பூபாலன் மட்டும் தனியாக வரவில்லை பெரிய படையே அவனு டன் வந்தது. இனிமேல் தீக்ஷிதர் தப்ப முடியாது. உடை வாளுடன் சேனாபதி அவர் தலையை எல்லோர் முன்னாலும் சீவ காத்திருந்தான்.
”தீக்ஷிதரே, நன்றாக இருட்டிவிட்டதே. எங்கே வானத்தில் நிலாவைக் காணோம் காட்டுங்கள்” என்றான் ராஜா.
”ராஜா, இதோ பாருங்கள் . தீக்ஷிதர் அம்பாள் தந்த தாடங்கத்தை வானில் வீசினார்..
‘
”இது அம்பாள் பக்தர் ஸ்ரீனிவாச தீக்ஷிதர் மஹிமை தான்”என்று அவர் காலில் விழுந்து வணங்கினான். ஒரு ரத்னமயமான சிம்மாசனத்தில் அவரை அமர்த்தி ரத்னகேடம் என்ற விலையுயர்ந்த ஆபரணத்தை அவருக்குசூட்டி மகிழ்ந்தான். அன்று முதல் தான் ஸ்ரீனிவாச தீக்ஷிதர் என்ற பெயர் மறைந்து ரத்னகேட ஸ்ரீனிவாச தீக்ஷிதர் என்ற பெயர் நிலைத்தது.
இந்த சம்பவம் எதை ஞாபகப்படுத்துகிறது? திருக்கடையூரில் தஞ்சாவூர் ராஜா முதலாம் சரபோஜிக்கு அபிராமி பட்டர் தை அமாவாசை அன்று பௌர்ணமி யை வானில் காட்டிய சம்பவத்தை தான். அந்த நிகழ்விலும் அம்பாள் தான் தனது தாடங்கத்தை பௌர்ணமி சந்திரனாக்கினாள் .
சில விஷயங்கள் இப்படி ஒரே டைப்பாக இருந்தாலும், காப்பி அடிப்பது போல் தோன்றினாலும் ரெண்டு சம்ப வங் கள் ஒரே மாதிரி நடக்காது என்று சொல்ல வழி இல்லையே. அம்பாள் அருளால் எதுவும் எப்போதும் நடக்கும்.
இன்னும் அப்பய்ய தீக்ஷிதர் சரித்திரம் சொல்கிறேன்…
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



