
”லக்ஷ்மி மா” – நங்கநல்லூர் J K SIVAN
பசுக்களை நாம் கடவுளாக, லக்ஷ்மியாக, வணங்கி கோ பூஜை பண்ணுகிறோம். எல்லாப்பசுக்களுக்கும் அந்த பாக்யம் கிடைப்பதில்லை. சாதாரண பசு ஒன்று காமதேனு இல்லை, ரெட்டை வால் மூன்று கொம்பு அதிசயமில்லை, ஆனால் கோயில்கொண்டு வணங்கப்படுகிறது. எங்கே? ரமணாஸ்ரமத்தில் திருவண்ணாமலையில், அதன் பெயர் லக்ஷ்மி. ரமணா மஹரிஷி மனதில் இடம் பெற்ற ஞான ஆத்மாவான பசு.
திருவண்ணாமலை பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் அம்மாவை இழந்த தாயில்லா கன்றுக்குட்டியாக ரமணாஸ் ரமத்துக்கு வந்தவள் லக்ஷ்மி. அவளது சிறப்பு குணம் அசாதாரணமான அமைதி, பணிவு, புத்திசாலித்தனம். மகரிஷியை குருவாக ஏற்றவள். பக்தர்கள் தியானம், வேத பாராயணம் செய்யும்போது சத்தம் போடாமல் அமர்ந்திருப்பாள்.
‘சுவாமி, ரொம்ப ஆசை ஆசையாக உங்களுக்கு என் காணிக்கையாக இவற்றை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நிராகரிக்காதீர்கள். அதைவிட இங்கேயே என் கழுத்தை அறுத்துக்கொண்டு உங்கள் முன்னாடியே என் உயிரை விட்டுவிடுகிறேன்.” என்று அழுதார் விவசாயி பிள்ளை.
பகவான் ரமண மகரிஷியின் அருகே இருந்து இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு பக்தர், ராமநாத பிரம்மச்சாரி ”சுவாமி, இந்த அடிமைக்கு உத்தரவு தாருங்கள், இந்த பசுவையும் கன்றையும் பராமரிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும். . பகவானுக்கு நான் செய்யும் கைங்கர்யமாக இந்த பசுவையும் கன்றையும் ஏற்றுக்கொண்டு வளர்க்க எனக்கு அனுமதி அனுக்ரஹிக்க கெஞ்சுகிறேன் ”
பகவான் முகத்தில் புன்னகை அவர் பார்வை பசுவின் மேல் விழுந்தது. அதிர்ஷ்டகார பசு. அன்று வெள்ளிக்கிழமை . ஆகவே ஆஸ்ரமத்துக்கு வந்த அந்த பசுவுக்கு ”லக்ஷ்மி ” என்று பெயர் சூட்டினார் மஹரிஷி. அதன் முகத்தை கழுத்தை எல்லாம் தடவிக்கொடுத்து ”வா லக்ஷ்மி” என்று கூப்பிட்டார்.
சாந்தம்மா பக்கம் திரும்பிய மகரிஷி அவளிடம் :
”சாந்தம்மா, உனக்கு லக்ஷ்மி என்ன பண்ணுகிறாள் என்று தெரியுமா?”
”சொல்லுங்கோ குருநாதா”
”லக்ஷ்மி சமாதி நிலையில் இருக்கிறாள்”
லக்ஷ்மியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. கண்கள் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தன.
சிறிது நேரம் கழித்து மகரிஷி பசுவிடம் கேட்டார்.
”லக்ஷ்மி இப்போ எப்படி இருக்கு?”
லக்ஷ்மி தலையை மகிழ்ச்சியோடு ஆட்டியது. அவரைப்பார்த்து அம்மா என்று ஆசையாக மெல்லிய குரலில் கூவியது.
பின்பக்கமாகவே நகர்ந்தது. வாலை மகரிஷி பக்கம் காட்ட விரும்பவில்லை. அப்படியே ஹாலிலிருந்து வாசலுக்கு சென்று விட்டது.
அன்றிலிருந்து நாலாவது நாள் லக்ஷ்மி ப்ரசவித்தது. லக்ஷ்மி யை பராமரித்தவர் லட்சுமியையும் அதன் மூன்று கன்றுகளையும் ஆஸ்ரமத்துக்கு அழைத்து வந்தார். லக்ஷ்மி தனது மூன்று கன்றுகளோடு ஆஸ்ரமத்தில் ஹாலுக்குள் வந்தது. மகரிஷி சோபா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு விட்டது.
”இத்தனை நாளா, தினமும் சாயந்திரம் லக்ஷ்மி ஆஸ்ரமத்தில் இருந்து தள்ளி இருந்த அந்த பராமரிக்கும் மனிதரின் வீட்டுக்கு பிரசவத்துக்காக செல்ல வேண்டி இருந்தது. அதனால் கண்ணீர். இனிமேல் எங்கும் போகவேண்டாம். அவளுடைய மூன்று கன்றுகளோடு இங்கேயே இருக்கபோபோகிறாள் என்ற ஆனந்தம். இது தான் அவள் வீடு என்று லக்ஷ்மிக்கு நன்றாக தெரியும். நாம் அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். பாருங்கோ எவ்வளவு சந்தோஷமா,உரிமையோடு தன்னம்பிக்கையோடு அவள் உட்கார்ந்திருக்கிறாள்”என்றார் மகரிஷி.
யாராவது ஏதாவது குரல் உயர்த்தி பேசினால் நேரே பகவான் முன்னாலே வந்துவிடுவாள். நீங்கள் உங்கள் பயிர்களுக்கு வேலி போட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று பகவான் சொல்லிவிடுவார்.
ராமநாத ப்ரம்மச்சாரியை மற்ற ஆஸ்ரம வாசிகள் கோபித்து சண்டை இட்டார்கள். அவர்கள் தொல்லை தாங்காமல் பிரம்மச்சாரி ஊரில் இருந்த மாடு மேய்க்கும் பசுபதி என்பவரிடம் லக்ஷ்மியையும் , கன்றுக்குட்டியையும் ஜாக்கிரதையாக பராமரிக்க ஒப்படைத்தார்.
ஒருநாள் லக்ஷ்மி கன்றுக்குட்டியுடன் ஆஸ்ரமத்துக்கு அழைத்து வரப்பட்டு திரும்ப கூட்டிச் செல்லப்பட்டாள். அவ்வளவு தான், அன்றுமுதல் லக்ஷ்மிக்கு அவளை கவனித்து வரும் பசுபதி வீட்டிலிருந்து ஆஸ்ரமத்துக்கு வழி தெரிந்து விட்டதால் தினமும் ஆஸ்ரமத்துக்கு தானே கன்றுக் குட்டியுடன் வரத் தொடங்கினாள் . பகவான் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலி அருகேயே சுகமாக அமர்ந்து கொள்வாள். மஹரிஷி கையால் கொடுக்கும் ஆகாரத்தை தவிர வேறெதுவும் தொட மாட்டாள். அவர் கொடுக்கும் வாழைப்பழம் ஒன்று தான் ஆகாரம். ஒருவேளை கடிகாரத்தை முழுங்கி இருப்பாளோ? எப்படி சரியாக தினமும் சாப்பாட்டு நேரத்தில் டாண் என்று மஹரிஷி முன்னாலே வந்து நிற்பாள். சாப்பாடு மணி அடிக்கும் இடமில்லை யே அந்த ஆஸ்ரமம். தினமும் சாயந்திரம் அரை மனதுடன் பசுபதியின் வீட்டு தொழுவத்துக்கு திரும்புவாள் .
லக்ஷ்மிக்கு மூன்றாவது கர்பம். நிறைமாசம். லக்ஷ்மிக்கு ஸ்ரமம் தாங்கமுடியவில்லை. கண்களில் நீர் மல்க ஆஸ்ரமத்தி
அருகில் உள்ளவர்களைப் பார்த்தார்.
ஒருவழியாக சமாதானம் செய்து அனுப்பினார். அன்றிரவு பிரசவம். என்ன கஷ்டமோ, நிர்பந்தமோ, பசுபதிக்கு லக்ஷ்மியையும் அவள் மூன்று கன்றுக்குட்டிகளையும் சமாளிக்க முடியவில்லை. அந்த இரவே, அவள் குடும்பத்தை அழைத்துக் கொண்டு பசுபதி ஆஸ்ரமத்துக்கு வந்து விட்டார். பரம சந்தோஷத்தோடு லக்ஷ்மி மஹரிஷி காலடியில் அமர்ந்து விட்டாள். எழுந்திருக்கவே இல்லை. தனது வலக்கரத்தை அவள் தலையில் வைத்து அழுத்தினார் மகரிஷி.
”இனிமே இங்கேயே என்னோடு இருக்கியா?” என்று கேட்டார்.
லக்ஷ்மி கண்கள் ஏதோ மயக்கத்தில் இருப்பது போல் மூடி இருந்தது. அருகில் இருந்தவர்களிடம் பகவான் என்ன சொன்னார் தெரியுமா:
”லக்ஷ்மி கடமை முடிந்தது. அவள் 3 கன்றுகளையும் என்னிடம் ஒப்படைத்து விட்டதில் எவ்வளவு மகிழ்ச்சி பாருங்கள். முன் ஜென்மத்தில் நிறைய தபஸ் பண்ணி இருக்கிறாள். விட்டுப்போன தபசையும் இந்த ஜென்மத்தில் இங்கே முடித்து விட்டாள்’
ஒரு அதிசயம் என்ன தெரியுமா. லக்ஷ்மிக்கு மொத்தம் ஒன்பது பிரசவம். அதில் நான்கு மஹரிஷி ஜெயந்தி அன்று நடந்தது தான்! தினமும் மஹரிஷி கோசாலாவுக்கு போவார். அவளுக்கும் அவருக்கும் ரொம்ப நெருங்கிய தொடர்பு. நேராக கோசாலையிலிருந்து அவர் எங்கே தியான ஹாலில் இருக்கிறாரோ அங்கே போய் அவர் அருகே லக்ஷ்மி அமர்ந்து கொள்வாள். பக்தர்கள் கூட்டத்தைப் பற்றி அவளுக்கு லக்ஷியமே இல்லை.
ஒருநாள் ஹாலுக்கு வந்த லட்சுமி தனது தலையை மகரிஷி மடியில் வைத்து அழுதாள். தாயன்போடு தடவிக்கொடுத்தார்.
”யார் என்ன பண்ணா, உனக்கு சொல் ?அழுகையை நிறுத்து. நான் உன் சிநேகிதன் இருக்கேனே. என்கிட்டே சொல்லு”
அழுகை நின்றது. அவரை நாக்கால் முகத்தில் நக்கிவிட்டு நிம்மதியாக போனாள் .ஒவ்வொரு பிரசவம் ஆன பின்னும் ஹாலுக்கு நடந்து வருவாள். அவர் முன் சத்தமில்லாமல் அமர்வாள்.
”என்ன லக்ஷ்மி, உனக்கு இன்னொரு குழந்தை பிறந்ததை சொல்ல வந்தியா?. நான் கோசாலைக்கு வந்து அதை பாக்கறேன்.”
ஒரு தடவை லக்ஷ்மியைப் பற்றி பேசும்போது மஹரிஷி ”சின்ன பசுவா வந்தநாளிலிருந்து அவள் நடந்து கொண்ட முறை ரொம்ப விசித்திரம். தினமும் வந்து தலையை என் காலில் வைத்துவிட்டு தான் போவாள். கோசாலை கட்டும் ஆரம்ப நாள் அன்று அவளுக்கு ரொம்ப ஆனந்தம். என்னை அழைத்துக் கொண்டு அங்கே போனாள். க்ரிஹ ப்ரவேசம் பண்ணிய அன்றும் நேராக என்னிடம் வந்து என்னோடு தான் அங்கே சென்றாள். நிறைய சந்தர்ப்பங்களில் அவள் நடந்து கொண்டது ரொம்ப ஆச்சர்யம். அவளது அறிவு பாராட்டக்கூடியது. அவளை நான் ஒரு சாதாரண பசுவாக பார்க்கவில்லை.”
பக்தர்கள் லக்ஷ்மிக்கும் பகவானுக்கும் ஏதோ முன் தொடர்பு இருந்திருக்கிறது என்று வியந்தார் கள்.ஒருவேளை லக்ஷ்மி தான் பகவானுக்கு சாகும் வரையில் சமையல் பண்ணி கொண்டு வந்து உதவிய ”கீரை பாட்டியோ”? என்றார்கள்.
1948 ஜூன் 18. கோசாலையில் லக்ஷ்மி படுத்துக்கொண்டிருந்தாள் . அருகே மஹரிஷி அமர்ந்தார். இரு கரங்களாலும் அவள் தலையைத்தூக்கி ஒரு கரத்தால் அவள் முகத்தை, கழுத்தை , தொண்டை யை தடவினார். இடது கரத்தை தலையை வைத்து வலது கர விரல்களால் தொண்டையை மெதுவாக தடவினார். மார்பு வரை மெதுவாக அழுத்தி தொட்டார். சில நிமிஷங்கள் இப்படி நடந்தது.
”லக்ஷ்மி என்னம்மா சொல்றே. நான் இங்கேயே உன்னோடு இருக்கணுமா சொல்லு இருக்கேன். வேண்டாம் நான் போலாம் என்றால் சொல்லு ஹாலில் நிறைய பேர் எனக்காக காத்துண்டு இருக்கா. அங்கே போறேன். அங்கே இருந்தாலும் நான் உன்னோடே தான் இருப்பேன். கவலை வேண்டாம் உனக்கு”
அவள் கண்கள் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தன.
ஒருமணி நேரத்துக்கு மேலே மஹரிஷியும் லக்ஷ்மியும் மெளனமாக கண் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லக்ஷ்மியின் ஸ்வாசம் நிதானமானது.
”கவலைப் படாமல் இரு ”
மஹரிஷியின் செல்ல லக்ஷ்மி இனி பூலோகத்தில் இல்லை.
ரமணாஸ்ரமத்தில் நான் வெகுநேரம் லக்ஷ்மி சிலை முன் நின்று கண்மூடி தியானித்தது நினைவுக்கு வருகிறது. நாமும் பூர்வ ஜென்ம புண்ய கர்மபலன் இருந்தால் ஒரு லக்ஷ்மியாக பிறக்க முடியும் என்று தெரிகிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



