MAHABHARATHA . J K SIVAN

மஹா பாரத வெள்ளம்- நங்கநல்லூர் J K SIVAN
குருபத்னியின் விருப்பம்- 2
அந்தப்புரத்தில் நுழைந்த உதங்காவை பௌஷ்ய ராஜா வின் மனைவி, மஹாராணி புன்சிரிப்போடு வரவேற் றாள்.
”உனக்கென்னப்பா வேண்டும்? என்னைத்தேடி எதற்காக வந்திருக்கிறாய்?”
”அம்மா, நீங்கள் காதில் அணிந்திருக்கிற தோடுகளை எனது குருவின் பத்னி விரும்புகிறார். அதை உங்களிடம் யாசகமாகப்பேற்று என் குருவுக்கு நான் செலுத்த வேண் டிய குருதக்ஷணையாக அளிக்க ஆசைப்படுகி றேன் . நீங்கள் என் மீது கருணை கொண்டு உதவ வேண்டும்”
”மகனே, உன் குருபக்தியை மெச்சி உனக்கு மன மகிழ் வோடு உன் குரு பத்தினி விரும்பிய இந்த தோடுகளை கழற்றி தருகிறேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள . தக்ஷகன் என்கிற ஸர்ப்ப ராஜா இந்த தோடுகளை எப்படியாவது என்னி ட மிருந்து பெறுவதற்கு வெகு காலமாக முயல்கிறான். அவனிடமிருந்து இவற்றை ஜாக்கிரதையாக காப்பாற்றி உன் குரு பத்தினிடம் கொண்டு சேர்”
”மஹாராணி நீங்கள் எந்த கவலையும் படவேண்டாம். என்னிடமிருந்து என் உயிர் போனாலும் என்னிடமிருந்து தக்ஷகனோ வேறு எவரோ இந்த தோடுகளைத் தொட முடி யாது. அவற்றை ஜாக்கிரதையாக குரு பத்னியிடம் கொண்டு சேர்ப்பேன்” என்றான் உதங்கா. அவனை ஆசிர்வதித்து அனுப்பினாள் மஹாராணி. உதங்கா நேராக பௌஷ்ய ராஜாவிடம் சென்று வணங்கி ”அரசே உங்கள் கருணையால் நான் மகாராணியை சந்தித்து அவர்களை யாசித்து அவர்கள் தோடுகளை பெற்றுக் கொண்டு என் குருவிடம் செல்கிறேன்” என்றான்.
”இரு உனக்கு பிக்ஷை அளிக்கிறேன்” என்றான் ராஜா.
”’சுத்தமான ஆகாரத்தை என் குருநாதருக்கு மானசீக மாக அர்ப்பணித்துவிட்டு எடுத்துக் கொள்கிறேன்”
‘ராஜா அளித்த பிக்ஷையில் தலை மயிர் இருந்தது. ஆறிப் போய் பழைய உணவாக இருந்ததால் உதங்கா இது அசுத்தமான உணவு .இதை நான் சொல்லியும் கேளாமல் அளித்ததால் உங்கள் கண்கள் பார்வை இழக்கட்டும்” என ராஜாவை சபித்தான்.
” சுத்தமான பிக்ஷை அல்லவோ உனக்கு தந்திருக் கிறேன். அதை அசுத்தமானது என்று சொன்னதால் உனக்கு சந்ததி இல்லாமல் போகட்டும்” என்று ராஜா பதிலுக்கு சபித்தான்”
‘ உங்கள் சாபம் என்னை நெருங்காது. பாருங்கள் நீங்கள் அளித்த உணவை ” என்று அந்த அசுத்த ஆறிப்போன உணவை உதங்கா காட்டுகிறான். ராஜாவும் உணவு சுத்தமாக இல்லை என்று உணர்கிறான்.
ராஜாவுக்கு நன்றி தெரிவித்து விட்டு. உதங்கா புறப்பட் டான். போகும் வழியில் காட்டில் ஒரு நிர்வாண சாமி யார் தன்னை நெருங்கி வருவதை காண்கிறான். அந்த சாமியார் அப்பப்போ காணாமல் போகிறான்.
வழியில் ஒரு நீர் நிலையைக் கண்ட உதங்கா தனது கை யிலிருந்த மூட்டையைக் கீழே வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி நீர் குடிக்கிறான். அந்த சமயம் பார்த்து அந்த சாமியார் வேஷதாரி வேகமாக ஓடி வந்து ராணி கொடுத்த காதணிகள் இருந்த உதங்காவின் பையை ஆற்றங்கரையிலிருந்து திருடி எடுத்துக் கொண்டு ஓடுகிறான். உதங்கா இதை அறிந்ததும் தனது குருவை த்யானித்து கிடைத்த சக்தியில் வேகமாக ஓடி அந்தத் திருட்டு சாமியாரைப் பிடித்து விட்டான். பிடிபட்ட திருடன் தனது சுய உருவான தக்ஷகன் எனும் ராஜ நாக மாக உருவெடுத்து அருகே இருந்த ஒரு பொந்தில் நுழைந்து மறைந்து தான் வாசம் செய்யும் நாகலோகம் சென்றுவிட்டான்.
உதங்காவுக்கு பௌஷ்ய மஹாராணி சொன்னது ஞாபகம் வந்தது. தக்ஷகன் நுழைந்த சிறிய பாம்பு புற்றை தான் கையில் வைத்திருந்த ஒரு கோலினால் அகலமும் ஆழமும் படுத்தினான் உதங்கா. குருவைத் தியானித்து வேகமாக பள்ளம் தோண்டிய உதங்கா வுக்கு இந்திரன் தனது வஜ்ராயுதம் கொடுத்து உதவி னான். அதனால் புற்றை பெரிதாக்கி ஆழமான அந்த பள்ளத்தில் இறங்கி உதங்கா நாக லோக மடைந் தான். அனேக மாட மாளிகை கோபுரங்களை கடந்து சென்ற அவனை நாகப்படை சூழ்ந்து கொண்டது.
”நாகங்களே , நீங்கள் ஐராவத மகாராஜாவின் குடிமக்கள். மஹா வீரர்களே, காதில் குண்டலங் களோடு ஜொலிப்பவர்களே. கங்கையின் வடகரையில் அநேக நாகங்கள் உள்ளன. மஹாராஜா ஐராவதம் வெயிலில் எங்கும் திரிவார். அவர் சகோத ரன் த்ரித ராஷ்ட்ரன் (கௌரவர்கள் ராஜ, துரியோதனன் அப்பா இவர் இல்லை) வெளியே பவனி வரும் போதெல்லாம் 28008 நாகங்கள் அவருக்கு உதவ .கூடவே செல்லும். ஐராவதத்தை மூத்த சகோதரனாகக் கொண்ட உங்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். தக்ஷகா, நீ குருக்ஷேத்ரத்தில், காண்டவ வனத்தில் வசித்தவன். அஸ்வசேனனோடு இக்ஷுமதி நதிக்கரையில் வசித்த வன். மஹாத்யும்னன் எனும் இடத்தில் வசித்த உன் இளைய சகோதரன் சூரசேனனுக்கும் என் வாழ்த் துக்கள். என்னிடம் மீண்டும் தக்ஷகன் எடுத்த தோடுகள் திரும்ப வரட்டும் ” என்று உரைத்தான் உதங்கா.
அப்படியும் தக்ஷகன் திருடிய தோடுகளை திருப்பி தர வில்லை. உதங்க மகரிஷி இந்திரனை உபாசிக்கிறார். அங்கு அக்னி உருவாக்கி பெரும் தீ நாகலோகத்தை சூழ்ந்து கொள்கிறது. இதை உணர்ந்த தக்ஷகன் ஓடி வருகிறான். ”உதங்க மகரிஷி, இந்தாருங்கள் உங்கள் குண்டலங்கள்” என்று உதங்கரிடம் தான் திருடிய தோடுகளை திரும்ப தருகிறான்..உதங்கர் மீண்டும் ப்ரார்த்திக்கிறார்.
”நான் நாகலோகத்தில் இருக்கிறேனே. எப்படி என் பத்னியிடம் சென்று இந்த குண்டலங்களை குரு பத்னியிடம் காணிக்கையாக அளிப்பேன்” என்று வேண்டியதும் அவர் எதிரில் குதிரை ஒன்று நிற்கிறது. அசரீரி ”மகரிஷி இந்த குதிரை மீது ஏறிக்கொள்ளுங்கள், அடுத்த கணமே உங்கள் குருவின் ஆஸ்ரமத்திற்கு உங்களை தூக்கிச் செல்லும்” என்று சொல்கிறது குருபத்னியிடம் குறித்த நேரத்துக்குள் தோடுகளை சமர்ப்பித்து ஆசி பெறுகிறார் உதங்க மகரிஷி.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;