
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
நம்பினால் நன்மை உண்டு.
எல்லா புத்தகங்களும் காகிதத்தில் மையால் அச்சடிக்கப்பட்டவை தான். ஆனால் அவற்றில் சில தெய்வங்கள்.இதை நீங்கள் நம்புகிறீர்களா? ஆமாம் என்று என்னோடு சேர்ந்து தலையாட்டுவீர்களா? கொஞ்சம் சந்தேகம் இருந்தால் இதோ ஒரு சம்பவம் சொல்கிறேன்.
ராமாயணம், கீதை, பாகவதம், பாரதம்,பக்தவிஜயம் போன்றவை நிச்சயம் தெய்வங்கள் தான். மனிதனுக்கு முதலில் இதில் நம்பிக்கை அவசியம்.
இது நான் சொல்லும் கதை அல்ல. பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் சொன்ன கதை இது. ஒரு முதியவர், தீக்ஷிதர் சொன்ன சுந்தரகாண்டம் பிரவசனத்தைக் கேட்டு பக்தியோடு அவரை வணங்கி ”ஆசீர்வாதம் பண்ணுங்கோ” என்றார்.
”இந்தாங்கோ, நான் எழுதின சுந்தர காண்டம். தினமும் முடிஞ்சா பாராயணம் பண்ணுங்கோ ஹனுமான் ரக்ஷிப்பான்” .புத்தகத்தை தந்து முதியவருக்கு ஆசிர்வாதம் பண்ணினார் தீக்ஷிதர். அளித்தார். முதியவர் அன்று முதல் விடாமல் தினமும் புத்தகத்தை விடாமல் பாராயணம் பண்ணிக் கொண்டு வந்தார்.
ஒருநாள் குடும்பத்தில் ஏதோ ஒரு கல்யாணம் என்று அவர் மனைவி, பிள்ளை மருமகள் எல்லோரும் அவரை வீட்டில் வீட்டில் விட்டுவிட்டு சென்றார்கள். இரவு தான் வருவார்கள். பேரனுக்கு பள்ளிக்கூடத்தில் ஏதோ டெஸ்ட் என்பதால் அவன் போகவில்லை.
காலை ஒன்பது மணி இருக்கும். முதியவர் அருகே இருக்கும் கோவிலுக்கு வழக்கம்போல் சென் றிருந்த சமயம் பத்து வயது பேரன் மட்டும் தனியே வீட்டிலிருந்தான்.
”டொக் டொக்’ என்று வாசலில் அப்போது யாரோ கதவை தட்டின சப்தம். பேரன் கதவை திறந்து அங்கே நின்ற ஒரு ஆளிடம் ”யார், என்ன வேண்டும்?”என்று கேட்டான்.
கதவை தட்டின ஆசாமி “பையா உங்கப்பா அர்ஜண்டா அலமாரியை திறந்து எல்லா பணத்தையும் நகையும் எடுத்துண்டு உன்னையும் கையோட கூட்டிவர சொன்னார். ஏதோ அவசரமாம். கிளம்பு” என்றான். பையன் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவன் வார்த்தையை நம்பிவிட்டான். முட்டாளாக, வீட்டில் இருந்த எல்லா பணத்தையும் நகையும் எடுத்துக்கொண்டு அந்த ஆசாமியுடன் கிளம்பினான். ஆசாமி பையனுடன் ஒரு ரயிலில் ஏறிவிட்டான்.
தாத்தா வீடு வந்தபோது பையனைக் காணோம். கதவு திறந்து இருந்தது. பொறுப்பில்லாமல் கதவை சார்த்தாமல், சொல்லிக்கொள்ளாமல் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறான் என்று நினைத்தார். சாயந்திரம் எப்போதும் லேட்டாக தான் வருவான். நண்பர்களோடு விளையாடினாள் இரவு கூட சிலசமயம் ஆகும் என்பதால் கவலைப் படவில்லை.
இரவு 8 மணிக்கும் பையன் வரவில்லை. பையனுடைய அப்பா அம்மா வீடு திரும்பியபோது பையனோ வீட்டில் பெட்டியில், பீரோவில், பணமோ நகையோ ஒன்றும் காணாமல் தவித்தனர். வேறு ஒரு வழியும் தோன்றவில்லை. தாத்தாவும் தவித்தார். அவர் பொறுப்பில்லாமல் பையனையும் நகைகள், பணத்தையும் கோட்டைவிட்டதாக அவர் மகன் மருமகள் ஆகியோர் நினைப்பதை உணர்ந்து கண்களில் தாரை தாரையாக கண்ணீர் ப்ரவாஹம் “ ஆஞ்சநேயா ஆபத் பாந்தவா நீயே கதி” என்று துடித்து கதறி தீக்ஷிதர் கொடுத்த சுந்தரகாண்டம் புத்தகத்தை இரவு பூரா பாராயணம் பண்ணினார். பெற்றோர்கள் எங்கெல்
லாமோ தேடி விட்டு அவன் நண்பர்கள் வீடுகளுக்கெல்லாம் தேடி பையனைப் பற்றி ஒரு விஷயமும் கிடைக்காமல் மறுநாள் காலை போலீஸ் உதவி நாட முடிவெடுத்தார். இரவெல்லாம் ஒரே அழுகை. யாரும் தூங்கவில்லை.
பொழுது விடிந்தது. வாசலில் பையன் வந்து நின்றான். அவனுடன் ஒரு ரயில்வே அதிகாரி. பையன் கையில் ஒரு பை. அதில் எல்லா பணமும் நகையும்!!! பையன் என்ன நடந்தது என விவரித்தான்.
“அந்த ஆள் சொன்னதை நம்பி அப்பா தான் கேட்கிறார் என்று வீட்டில் இருந்த பணம், நகை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்த ஆளோடு சென்றேன். ரயில்வே ஸ்டேஷன் கூட்டிப்போய் ரயில் ஏறினோம். அந்த ஆள் மேல் திடீர்னு எனக்கு ஒரு மாதிரி சந்தேகம் வந்தது. அவன் “நீயும் படுத்து தூங்கு என்று சொல்லிவிட்டு ரயிலில் அவன் கீழே படுத்து தூங்கினான். நான் பெஞ்சில் ஓரமாக உட்கார்ந்திருந்தேன். எனக்குள்ளே விடாமல் யாரோ ” உடனே அந்த பணம் நகை இருக்கிற பையை எடுத்துண்டு அடுத்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கி போய் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லை போலிஸ்லே போய் நடந்ததை சொல்லு” என்று கட்டளை இடர மாதிரி தோணித்து. அவன் அந்த பையை தலைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்
தான். என் காதிலே யாரோ ”சீக்கிரம் சொன்னதை செய்” என்று விடாமல் கட்டளை இட்டுக்கொண்டே இருந்தது போல் தோணியது. ஆகவே தந்த பையை அவன் தாய்க்கு கீழே இருந்து இழுத்தேன். அவன் கவனிக்கவில்லை. நல்ல தூக்கம். வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றபோது பையை எடுத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கி ஸ்டேஷனில் ஓடினேன்.யாரையோ கேட்டேன் எங்கே ஸ்டேஷன் மாஸ்டர் இருப்பார் என்று. இடம் கட்டினார்கள் அங்கே அறைக்குள்ளே ஓடினேன்”
”குழந்தே, இனிமே நா சொல்றேன். நீ கொஞ்சம் பேசாம இரு” என்று பையனை அழைத்து வந்த ரயில்வே அதிகாரி தொடர்ந்தார்:
“இந்த பையன் சொன்னதை கேட்டு அவன் உண்மை தான் சொல்றான் என்று தெரிந்தது. நகையும் பணமும் வேறு இருப்பதால் அவன் கிட்ட உங்க வீட்டு அட்ரெஸ் வாங்கி நேரா இங்கே கொண்டு வந்து உங்களிடம் பையனையும் பணம், நகைகளையும் ஒப்படைக்க நானே பையனோடு வந்தேன். இந்தாங்கோ பை எல்லாம் சரியாக இருக்கா என்று பார்த்துச் சொல்லுங்கோ, நான் போகவேண்டும். ஒரு விஷயம். பையன் கம்பளைண்ட் கேட்டு ரயில்வே போலீஸ் அந்த திருட்டு சாமியை எழுப்பி கைது செய்துட்டாங்க”
இரவு பூரா சுந்தர காண்டம் படித்ததின் பலனே இது என்று தாத்தாவுக்கும், அவர் மகனுக்கும் மருமகளு க்கும் புரிந்துவிட்டது. பேச்சு வராமல் உணர்ச்சி பொங்க அந்த அதிகாரியை வணங்கி உணவு உண்ணும் படி உபசரித்தனர்.
அவர் அந்த ஊரில் தனக்கு அங்கு ஒரு உறவினர் இருப்பதாகவும் அங்கு செல்வதாகவும் சொன்னார். நன்றி பெருக்குடன் கண்ணீர் மல்க முதியவர் அந்த அதிகாரியை வணங்கி, “ஐயா தெய்வம் மாதிரி வந்து நீக்க தக்க சமயத்தில் எங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்தீங்க.. ஸார் , உங்கள் பெயர் என்ன” என்று கேட்டார். ” ஹனுமந்தராவ்”…… .
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



