
தூய பக்தி தெய்வமாக்கும் – நங்கநல்லூர் J K SIVAN
எத்தனையோ ஆச்சர்யமான விஷயங்கள் அற்புத நிகழ்ச்சிகள் நமது ஆலயங்கள் சம்பந்தப்பட்டவை உள்ளன. அவைகளை நாம் முழுதும் அறிய வாழ்நாள் போதாது. சில விஷயங்கள் அதிகம் அறியப்படாமலேயே இருப்பதும் நமது துர்பாக்கியம் தான்.
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயம் பழமையும் சரித்திரபுகழும் வாய்ந்த க்ஷேத்ரம் லக்ஷோப லக்ஷம் மக்கள் சென்று தரிசிக்கும் ஸ்தலம். அதை பராமரிக்கும் கட்டுப்பாடுகள், நிர்வாக கோட்பாடுகள் கொண்டது கோயில் ஒழுகு. அதில் ஒரு அற்புத விஷயம் துலுக்க நாச்சியார் சம்பந்தமானது.
14ம் நூற்றாண்டில் முகலாய சுல்தான்கள் ஆட்சியில் எண்ணற்ற கோயில்கள் நாசமாயின. விகிரஹங்கள் உடைக்கப்பட்டன. தங்கம் வெள்ளி ஆபரணங்கள் சிலைகள் சூறையாடப்பட்டது. சுல்தான் படைகள் தெற்கே ஸ்ரீரங்கம் வந்துவிட்டன. ஸ்ரீரங்கநாதர் ஆலய உற்சவர் நம்பெருமாள் விகிரஹம் கொள்ளை போனது, பிறகு மீட்கப்பட்டது, ஆகிய விவரங்களை கோயில் ஒழுகு சரித்திரமாக சொல்கிறது.
கொள்ளை அடித்த பொருள்கள் அனைத்தும் டில்லி சுல்தான் முன் வைக்கப்பட்டது. சுல்தானோடு அப்போது அவன் செல்ல மகளும் இருந்தால், அந்த கொள்ளைப்பொருள்களில் அவள் மனதை மிகவும் கவர்ந்தது ஸ்ரீரங்க ஆலயத்தில் கைப்பற்றப்பட்ட நம்பெருமாள் விக்ரஹம். பூர்வ ஜென்ம புண்யத்தால் அவள் இந்த விகிரஹத்தில் அழகில் மயங்கி, ”இது எனக்கே, எனக்கு வேண்டும் கொடுக்க மாட்டேன்” என்று நம்பெருமாள் விக்ரஹத்தை தன்னோடு வைத்துக் கொண்டாள் . உடையாமல் சிதையாமல் அது இவ்வாறு பாதுகாக்கப்பட்டதும் நமது புண்யம் தான். புஷ்பங்கள் சார்த்தி, ஆடை அலங்காரம் எல்லாம் செய்து, அந்த விக்ரஹத்தை கொஞ்சி, அதோடு பேசி, சிரித்து விளையாடி அதை கண்ணுக்குள் இமையாக பாதுகாத்து அதைப் பிரியாமல் இருந்தாள். நம்பெருமாள் அவள் இதயம் பூரா அவள் கணவனாக ஆக்கிரமித்து விட்டார். அந்த பெண் இப்படி ஒரு ஆண்டாளாக, மீராவாக, ராதாவாக ரங்கன் மேல் பரிபூர்ண ப்ரேமையோடு இருந்தது ஆச்சர்யம்.
ஸ்ரீரங்கத்து ஆழ்வார்கள் மற்றும் வைஷ்ணவ ஆசாரியர்கள், முக்கியமாக ராமானுஜர் பெரும் சிரமத்துடன் நம் பெருமாளை மீட்டு தெற்கே கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது. ராமானுஜர் காலம் 1037-1137. சுல்தான் படைகள் வந்தது 700 -800 ஆண்டுகள் முன்பு என்றால் 300 வருஷ கால வித்யாச இடைவெளி எங்கோ நெருடுகிறது. நாம் அதற்குள் போகவேண்டாம். எப்படியோ நம்பெருமாள் டில்லியிலிருந்து ஸ்ரீரங்கததுக்கு ஜம்மென்று பல்லக்கில் கொண்டுவரப்
பட்டார். நம்பெருமாள் சுல்தான் மகளின் அறையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது அந்த பெண்ணுக்கு தெரியாது. அறிந்ததும் தானும் ஸ்ரீரங்கத்துக்கு புறப்பட்டாள். அவரை திரும்ப பெறமுடியாமல் துயரத்தோடு அவள் உயிர் வழியிலேயே பிரிந்தது.
அந்த சுல்தான் மகள் பெயர் என்னவென்று தெரியாவிட்டாலும் அவள் நமக்கு இன்றும் என்றும் பீபீ நாச்சியார், துலுக்க நாச்சியார், பச்சை நாச்சியார். அவளது மரணம் “நம்பெருமாளின் பிரிவுத் துயரால் வந்த தேவி நிலை” என கோவில் சரித்ரத்தில் பதிவாகியுள்ளது. ஸ்ரீரங்கநாதன் மேல் அந்த பெண் கொண்டு உயிரை விட்டதால் அவளது பரிபூர்ண பக்தி மெச்சப்பட்டது.
ஆலயத்தில் ஆரிய பட்டர் வாசல் பகுதியில் அவளுக்கு ஒரு தனி சந்நிதி. பூரண பக்தியால் அந்த பெண் தெய்வமானாள். இன்றுவரை ஹிந்து அல்லாத வேறு ஒரு மதம் சார்ந்த பெண், நாச்சியார் என, ஸ்ரீரங்க வைணவ ஆலயம் ஒன்றில் தெய்வமாக சந்நிதி பெற்றது இது ஒன்று தான் என்று சொல்லலாம். ஒரூ வெளியூர்ச்சாதி, வேறுநாட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட அதிசயமான தெய்வ மரியாதை எனச் சந்தர்ப்பமாக குறிப்பிடப்படுகிறது.
ரங்கநாதருக்கு இன்றும் சில குறிப்பிட்ட நாட்களில் வடக்கே உள்ள பழக்கமாக ரொட்டி, சப்பாத்தி, வெண்ணை, நெய் , அவர்கள் வழக்க இனிப்பு பண்டங்கள் நைவேத்தியம் சில உற்சவங்களில் நம்பெருமாளுக்கு வழங்கப்படும் அன்னதானங்கள் “துலுக்க நாச்சியார் அருளிச்செயல்” எனக் கூறி வழங்கப்படுகின்றன. பக்தி மதம் சாதி எல்லாம் கடந்த பொதுவான பிரேமை.இறைவன் மேல் நாம் கொள்ளும் பாசம். நம்பெருமாளின் கருணை எல்லா உயிர்களையும் தழுவும் என்பதற்கான எடுத்துக்காட்டு.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


