SOCRATES J K SIVAN

வருவதை எதிர் கொள்ளடா – நங்கநல்லூர் J K SIVAN
கண்ணதாஸன் எழுதி, விஸ்வநாதன் மெட்டமைத்து, சீர்காழி கணீரென்று பாடி, NTR கிருஷ்ணனாக தோன்றி பெரிய திரையில் நாம் இருட்டில் உட்கார்ந்து பார்க்கும் போது, கேட்கும்போது நாம் மஹா பாரத யுத்தத்தில் குருக்ஷேத்ரத்தில் இருப்பதாக உணர்கிறோம். அப்படி நம்மை சுலபமாக பின்னோக்கி இழுத்துச் சென்ற ஒரு பாட்டு ”உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற ஆஹிர் பைரவி பாடல்.
கீதையின் சாரத்தை இப்படி உணர்ந்தவர்கள் நாம். கீதையைப் போல் பல நல்ல அறிவுரைகளை அடிக்கடி நினைவூட்ட நான் இது மாதிரி கட்டுரைகளை எழுதி உங்களின் கோபத்துக்கு ஆளாவது எனது வாடிக்கை.
ஒரு அருமையான கிரேக்க ஞானி சாக்ரடீஸ். என்ன செய்வது? பாவம் துரதிஷ்டசாலி, நம்மில் பலரைப் போல. ஊரே உலகமே அவர் சொல்வதை கேட்டது. ஆனால் அவர் மனைவியோ அவள் சொன்னதைத் தான் சாக்ரடீஸ் கேட்க வேண்டும் என்று வலியுறுருத்துபவள். இல்லை . வலிக்க வலிக்க உறுத்துபவள்.
ஒருநாள் ‘சாக்ரடீஸ், எழுந்து உடனே கடைக்கு போய் வெங்காயம் வாங்கி வா” என்றாள் . அவரோ சிஷ்யர் கள் புடைசூழ திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ”CAUSE & EFFECT ‘(காரணமும் காரியமும்) பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். உயர்ந்த வேதாந்த தத்துவம். அப்படியே அதில் தன்னை இழந்.து விட்டார். அவள் மூன்று முறை உள்ளே இருந்து ” இன்னுமா நீ கடைக்குப் போகவில்லை” என்று உரக்கக் கத்தியு
ம் அவர் காதில் அது ஏறவில்லை. அவள் வழக்கமாகவே கத்துபவள் என்பதால் பாவம் அவர் கொஞ்சம் அசிரத்தையாக இருந்துவிட்டார். தத்துவ விளக்கம் அவரை சாப்பிட்டு விட்டதே. திடீரென்று கடுங் கோபத்துடன் ஒரு குடம் தண்ணீரை கொண்டுவந்து அவர் தலையில் ஊற்றினாள் .
அப்போதும் அந்த ஞானி கோபப்படவில்லை. சிஷ்யர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா? காரண காரியத்தின் தத்துவத்தை இன்னும் அழகாக விளக்கினார்.
”சிஷ்யர்களே இப்போது நடந்தது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். காரணம் இல்லையென்றால் காரியம் இல்லை. இத்தனை நேரம் இடி இடித்தது. அதன் விளைவாக இப்போது ஜோ என்று மழை பொழிந்தது தெரிந்ததா. இடி இல்லாவிட்டால் மழை ஏது ?என்றார்.
நாம் எல்லோருமே இருக்கும் வரை, வாழ்க்கையை உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு அனுபவிக்க வேண்டும். பத்து குழந்தைகள் பெற்ற ஒரு நடுத்தர குடும்ப தகப்பன் போக்கு எப்படி இருக்கவேண்டும். அவன் எதிர்பார்ப்பு எத்தனை இருக்கும் ? எத்தனை தியாகம், கஷ்டம் எல்லாம் அவன் படவேண்டும். அவர்களைக் காப்பாற்றி வளர்க்க? இப்படி எல்லாம் ஒருவன் பத்து குழந்தைகளைப் பெற்று காப்பாற்றலாம். ஆனால் அந்த பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாக நம்மால் சொல்ல முடியுமா?
ஏதோ ஒரு காரியம் செய்கிறோம். நடந்த பின் தனது காரியத்தின் விளைவு பற்றி அதிகம் யோசித்து என்ன பயன்?. அந்த காரியம் நடக்கும் முன்பு அல்லவோ விளைவு என்ன ஆகும் என்று யோசித்து இருக்கவேண்டும். இதை எப்படி எடுத்துக் கொள்வது? தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு மரணம் நிச்சயம் தானே!
இந்த உலகத்தில் ஒருவன் வாழும் கடைசி நிமிஷம் வரை அவனுக்கு பணம் தேவைப்படுகிறது. ”இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள், செல்லாது அவன் வாயில் சொல் ” என்று அவ்வைக் கிழவி அனுபவ பூரவமாக சொல்லி இருக்கிறாளே. ஆங்கிலத்தில் ஒரு அழகான வாசகம் உண்டு. ” MAN SEES WHAT YOU HAVE, GOD SEES WHAT YOU ARE” என்று. பணம் வந்தால் நமக்கு தலை கால் புரிவதில்லை. பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்குமே உன்னைத் தெரியாது.! என்பது தான் நியதி.
வாழ்க்கையில் வெற்றிக்கு ஆதார காரணம் விடா முயற்சி, கடின உழைப்பு. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல,தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!
சமய சந்தர்ப்பங்களை தக்கவாறு பயன் படுத்திக் கொள்ளவேண்டும். தெளிவான சிந்தனை இதற்கு தேவை. அலை பாயும் மனதால் ஆக்க பூர்வமாக சிந்திக்க முடியாது.
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது என்பது வாஸ்தவமானது. ஆனால்,நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு நிற்கிறோம். திறக்கப்பட்ட கதவை அணுகாமல் தவற விடுகிறோம்.!
ஊருக்கு உபதேசம் செய்வது சுலபமாக இருக்கிறது. உபதேசிப்பவர் தனது பிரச்சினைகளை சரியாக அணுகுவதில்லை. பல்லி மற்றவருக்கு சகுனம், பலன் எல்லாம் சொல்லும், தான் கழுநீர்ப் பானையில் விழுந்து இறந்து மிதக்கும் என்பார்கள். மனிதன் தான் செய்த பெரிய தவறுகளைக் கூட பூசி மெழுகும் வக்கீலாகவும் ,பிறர் செய்த சின்னூண்டு தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுவது ஒரு சிறந்த நகைச் சுவை.!
சிலர் தம்மையே தாழ்த்திக் கொள்பவர்கள் ”அவனுக் கென்னப்பா ராஜாவாட்டமா இருக்கிறான்.இங்க்ளிஷ்லே பேசுவான். செக்கச் செவேல் கலர். என்பார்கள் . தாம் அப்படி இல்லையே என்று வருந்துவார்கள். வெள்ளைக்காரனிலும் பிச்சைக் காரன் உண்டு என்பது மறந்து போகிறது. வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல ..மொழி !
சிலர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து மறைந்தவர்கள். வெளியே தங்கள் சிறப்பை தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவர்கள். அப்படிப்பட்ட குடத்தில் உள்ள விளக்குகளை உலகம் என்றோ ஒருநாள் பின்னால் உணரும். அப்துல் கலாம் இருந்தவரை சரியாக பயன் படுத்திக் கொள்ளாத நாம் இப்போது ஒவ்வொரு நிமிஷமும் அவரைப் பற்றி கதை கதையாகப் பேசுகிறோம். வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காதஉலகம்……வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது ! பாரதியாரே இதற்கு தகுந்த உதாரணம். அறிவில் சிறந்த மாமனிதர்கள் எளிமையாக வாழ்வார்கள். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று புரிந்து கொண்டவர்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதவர்கள். நம்பிக்கை நிறைந்த ஒருவர், எவரிடமும் மண்டியிடுவது மில்லை…கையேந்துவதுமில்லை….!!
இந்த வரியோடு இந்த வறட்டு வேதாந்தத்தை முடிக்கிறேன்.வாழ்க்கை நிலையில்லாதது. முடிவு ஒரு பரம ரகசியம். இருக்கும் வரை அன்பாக நேர்மையாக நல்லவனாக இரு. எல்லோரையும் நேசி. நாம் நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து இருப்பவர்கள் இல்லை. இயற்கை அப்படி நிலைத்து இருக்க விட்டால்…!!! நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்…!!! சரிதானே.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2565

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;