CHATHRAPATHI SIVAJI J K SIVAN

‘ஹிந்து ஹ்ருதய சாம்ராட்’ –  நங்கநல்லூர்  J K SIVAN
நமது பாரத தேசம்  பல  அந்நிய  ஆக்கிரமிப்புகளை சந்தித்திருந்தாலும் அதிக  பக்ஷமாக சேதமும் நாசமும், உயிரிழப்பும் நேர்ந்தது முகலாயர்கள் ஆக்கிரமிப்பின் போது தான். அழிவு வடக்கே தான் அதிகம். தெற்கே  ஆக்கிரமிப்பு நேராமல் தடுத்த புண்யம் மராத்தா வீரர் சத்ரபதி சிவாஜியைச் சேரும். சிறு குதிரைப்படையை வைத்துக்கொண்டு மகாராஷ்டிரா மலைகள், குகைகளின்  மூலை  முடுக்குகள்  அனைத்தையும்   நன்றாக  தெரிந்து கொண்டு  முகலாய சாம்ராஜ்யத்தையும் அதன்  பீஜப்பூர் போன்ற சமஸ்தான பலத்தையும் நெருங்க விடாமல்  நொறுக்கியது சிவாஜியின் வீரமும் , சாமர்த்தியமும், தைரியமும்,  துணிவும்,  பவானி அம்பாள் மேல்  கொண்ட பக்தியும் தான் .  சிவாஜிக்கு மலை எலி என்ற பெயர்  ரொம்ப ரொம்ப பொருத்தம்.   ராஜ தந்திரம், படைகளின் மேல் கட்டுக்கோப்பு, கட்டுப்பாடு  இவற்றில் சிவாஜியைப் போல் வேறு அரசர்களிடம் காணமுடியாது.   ஒரு  ஹிந்து சாம்ராஜ்யத்தை  முதலில் உருவாக்கியவர் சிவாஜி மஹாராஜா.சிவாஜியைப் பற்றி நிறைய விஷயங்கள் இருந்தாலும்  ஒரு சிறு குறிப்பாக மட்டும் இங்கே தருகிறேன்.
19 பிப்ரவரி 1630  ஷிவ்னேரி கோட்டை (புனே அருகில்  லால் மஹாலில் )  ஷாஜி போன்ஸ்லேக்கும்  ஜீஜாபாய்க்கும்  பிறந்தவர் சிவாஜி. அம்மா ஜீஜா பாய்  ஆழ்ந்த பக்தியும், தெய்வீகத் தன்மையும் கொண்டவர். சிறு வயதிலேயே அம்மாவிடம் மகாபாரதம், இராமாயணம், புராணங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டவர். அப்பாவிடமிருந்து அரசியல் யுக்தி, போர் நுணுக்கம், மத பக்தி எல்லாம் கற்றுக்கொண்டார். சிவாஜி மஹா வீரன். தைரியசாலி. பயமே அறியாதவன். 15 வயதில்  முகலாய பேரரசின் சுல்தானிடமிருந்து தோர்ணா கோட்டை கைப்பற்றினார் (1645).அப்புறம் அடுத்தடுத்துராய்கட், கோந்தானா, சின்கட், புரந்தர் ஆகிய கோட்டைகள்  கைவசமானது.
சிறு படை மட்டுமே  இருந்தாலும்,  அதற்கு நல்ல பயிற்சி அளித்து முதன் முதலில்  கொரில்லா யுத்தம்  என்ற தனித்துவமான முறையால்  சுல்தான்களின் பெரிய படைகளை சிவாஜியால் தோற்கடிக்க முடிந்தது. பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான் ஆதில்ஷா சிவாஜியை எப்படியாவது பிடிக்க  முயன்ற போது  சிவாஜியின் படை சுல்தானின்  படைத்தலைவர்களை தோற்கடித்தது.   முகலாயர் சக்கரவர்த்தி ஒளரங்க சீப்புக்கு பெரும் எதிரியாகி இருந்தவர் சிவாஜி மஹாராஜா. பலமுறை முகலாயர்களின் கோட்டைகளைத் தாக்கியவர் சிவாஜி.

1666 இல், சிவாஜி மற்றும் அவரது மகன் சாம்பாஜியை சாமர்த்தியமாக  ஒளரங்கசீப் அழைத்து சிறைப்படுத்த எண்ணினார். சிவாஜியும் சாம்பாஜியும் ஆக்ரா அரண்மனைக்கு சென்றனர்.சிறையில் அடைக்கப்பட்டனர். இதை எதிர்பார்த்த  சிவாஜி  தினமும் விநியோகிக்கப்படும் மிட்டாய், பழங்கள் அடங்கிய கூடை கள்  ஒன்றில் மறைந்து கொண்டு கோட்டையிலிருந்து வெளியேறி தப்பினார்.
1674, ஜூன் 6 அன்று, ராய்கட் கோட்டையில் சிவாஜி “சத்ரபதி” யானார். கங்கா ஜலத்தில் அபிஷேகம் . குரு காகபுஜண்டி சம்பார்  மற்றும் காசியிலிருந்து வந்த கங்காபதிக சங்கராசார்யா  பட்டாபிஷேகம் பண்ணி வைத்தவர்கள். ”ஹிந்து ஹ்ருதய சாம்ராட்”   என பட்டம் சூட்டப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக வலுவான கடற்படை அமைத்தவர் சிவாஜி.  சிந்துதுர்க், விஜயதுர்க், ஜஞ்சிரா போன்ற கடற்கோட்டைகள் கட்டி ஆங்கிலேயர், போர்ச்சுகீசர், டச்சு எல்லோருக்கும் எதிராக தன்னை பாதுகாத்துக் கொண்டார்.
சிவாஜி மகாராஜ் தனி அரசியல் முறையுடன் ஆண்ட ஒரு மஹாராஜா. அஷ்ட  ப்ரதான் என்ற  எட்டு   மண்டல ஆலோசகர்கள்  சிவாஜியின்  சாம்ராஜ்ய நிர்வாகிகள். மதம், சாதி பாகுபாடு இல்லாத அரசாட்சி. பெண்களை ஒருபோதும் களவாடவில்லை – படை வீரர்களுக்கும் அதனைத் தடை விதித்தார். பெண்கள் ஜாக்கிரதையாக இருந்த ஒரு காலம் சிவாஜி சாம்ராஜ்யத்தில்.   சுல்தான்களிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தை மக்களுக்கே திருப்பி வழங்கினார்.
இவ்வளவு நல்ல ஹிந்து சக்கரவர்த்தி  50 வயசுக்கு மேல் ஏன் வாழவில்லை.? நமது துரதிர்ஷ்டம் தான் காரணம். 1680 ஏப்ரல் 3 அன்று, ராய்கட்டில் சிவாஜி இறந்தார்.எப்படி?  ஜுரம்  காய்ச்சலால் இயல்பான மரணமா? விஷம் வைத்து  கொல்லப்பட்டாரா ? நல்ல  வலிமையான ஆரோக்யமான மனிதர்  ஏன் அல்பாயுசில் திடீரென மரணமடையவேண்டும்?

சிவாஜியின் சாம்ராஜ்யத்தில்  ஹிந்து, முஸ்லிம்  பிரஜைகள் சரிசமமாக  பயமின்றி வாழ்ந்தார்கள்.பல முஸ்லிம் படைத்தலைவர்கள் அவரது  படையில்  நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர்கள். மத ஆலயங்கள், புனித இடங்களை ஒருபோதும் சேதப்படுத்தவில்லை – மாறாக பாதுகாத்தார். சிவாஜிக்குப்  பிறகு  அவரைப் போல் சிறந்த ஆளுமை கொண்ட ராஜா எவரும் உருவாகவில்லை. சிவாஜியின் மகன் சாம்பாஜி அவரது இடத்தை பிடித்தார், ஆனால் கொடூரமாக முகலாயர்களால் கொல்லப்பட்டார்.சிவாஜி மஹாராஜா  இந்தியாவில் தேசிய சுதந்திரத்தின் முன்னோடி எனக் கருதப்படுகிறார்.
இன்றும் மகாராஷ்டிரா முழுவதும் அவர்  “ சத்ரபதி ராஜா, தெய்வம், வழிகாட்டி” என மதிக்கப்படுகிறார்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;