
பகவத் கீதை — நங்கநல்லூர் J K SIVAN .
இன்று காலை மழை பெய்வதைப் பார்த்துக்கொண்டு என் அறையில் விடிகாலை உட்கார்ந்திருந்தபோது கோவில் மணி சப்தம் கேட்டது. கொட்டும் மழையிலும் வயதான அர்ச்சகர். முதுகு கவுத்துப்போட்ட ‘ட ‘ மாதிரி இருந்தும் தான் ஒருவராகவே சகல காரியங்களையும் கோவிலில் செய்து கொண்டு மணியடித்து எல்லோர் மனத்திலும் பக்தியை புகுத்துவது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. கீதாசார்யன் உபதேசித்தது கவனத்தில் வந்தது. கீதையைப் பற்றி சொல்வோமே என்று தோன்றியது.
மஹா பாரத யுத்தம் ஆரம்பிக்கும் சமயம் திடீரென்று அர்ஜுனனுக்கு மனம் உடைந்து விட்டது. எப்படி என் உறவினர்களை கொள்வது. என்னுடைய சொந்தங்களைக் கொன்று எனக்கு ராஜ்யம் வேண்டாம் என்று வில்லை கீழே போட்டு தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டான். எதிரே பலநூறு அக்ஷவ்ணி சைன்யங்கள் எந்த நேரமும் யுத்தத்தை ஆரம்பிக்க காத்திருக்கும் சமயம் அர்ஜுனனின் தேர்ப்பாகனாக இருந்த க்ருஷ்ண பரமாத்மா அவனுக்கு அவன் செய்யவேண்டிய க்ஷத்ரிய தர்மத்தை எடுத்து சொல்வது தான் கீதோபதேசம். இது நாள் கணக்கில் மணிக்கணக்கில் நடந்ததல்ல. மனதால் ஒரு சில க்ஷணங்களிலேயே அர்ஜுனனுக்கு புகுத்தியது என்று கொள்வோம். யுத்தகளத்தில் உபதேசிக்கவோ, கேட்கவோ நேரம் கிடையாதே.
கீதையில் 18 அத்தியாயங்கள். 700 ஸ்லோகங்கள். சின்ன குழந்தைகள் கூட மனப்பாடமாக ஓப்ப்பிக்கிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது .
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ‘யோகம்” யோகம் என்றால் இணைவது. பகவானோடு இணைவது. எடுத்த காரியத்தை பொறுப்பாக நிறைவேற்றுவது.
பதினெட்டு யோகங்கள்; 1. அர்ஜுன விஷாத யோகம். 2.சாங்கிய யோகம்.3. கர்ம யோகம். 4.ஞானயோகம்.5.கர்ம சந்யாச யோகம். 6.ஆத்ம சம்யமானயோகம், 7.விஞ்ஞான யோகம் ,8.அக்ஷர பரப்ரஹ்ம யோகம், 9. ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம். 10. விபூதி யோகம். 11. விஸ்வரூப யோகம். 12. பக்தி யோகம். 13. க்ஷேத்ர க்ஷேத்ஞ விபாக யோகம். 14. குணத்ரய விபாக யோகம். 15.புருஷோத்தம யோகம். 16. தைவாசுர சம்பத் விபாக யோகம். 17. ஷ்ரத்ராத்ரய விபாக யோகம். 18 மோக்ஷ சந்யாச யோகம். கீதை படிக்காவிட்டாலும் அத்தியாயங்கள் பெயர் தெரிந்து கொண்டாலே பாதி புண்யம்.
விரக்தியாக இருந்த அர்ஜுனனை கிருஷ்ண பரமாத்மா தேற்றி, ‘ நீ ஆத்மா வெறும் உடல் அல்ல. நீ அழிவில்லாதவன். உடல் எந்த காரணத்தாலாவது ஒருநாள் அழியும். உறவுகள், சொந்த பந்தம் வெறும் மாயை. தோன்றியதெல்லாம் மறைவது நியதி. ஆத்மா வேறு உடல் வேறு. ஆகவே உன் கடமையை நீ செய். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்வதர்மம் என்ற கடமை உண்டு. அதை முக்யமாக நிறைவேற்றவேண்டும். ஸ்வதர்மா என்பது ஆத்மாவிற்கானது. பர தர்மா என்பது உடலுக்கான கடமை. காரியத்தின், கர்மாவின் பலன் உனக்கு சொந்தமல்ல. நான் தான் சகலத்துக்கும் பொறுப்பானவன், காரணன். நீ வெறும் கருவி” என்று அர்ஜுனனுக்கு உபதேசித்து அவன் தெளிவடைந்து யுத்தம் ஆரம்பிக்கிறது.
கீதையை ஏன் கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கோ, பீமனுக்கோ உபதேசிக்காமல் அர்ஜுனனுக்கு மட்டும் உபதேசித்தார் என்றால் அவன் ”மூவுலகும் பெறினும் வேண்டேன்” என்று கிருஷ்ணனைச் சரணடைந்தவன். பற்றற்றவன். மனதில் சதா கிருஷ்ணனையே நிரப்பிக்கொண்டவன்.
அர்ஜுனன் என்றாலே பரிசுத்தமானவன் என அர்த்தம். பார்த்தன்; ப்ரித்வி எனும் மண்ணின் மகன். பூமி ,மண் ,என்பது இங்கே நாம். மானிட வர்க்கம். ஆகவே அர்ஜுனனுக்கு உபதேசித்தது மானிட வர்க்கத்துக்கே உபதேசித்தது. கெளந்தேயன் என்றால் குந்தி புத்ரன் என்று மட்டும் அர்த்தம் இல்லை. தெய்வீக உபதேசத்தை முழு கவனத்துடன் கேட்பவன் எனவும் பொருள்படும்.
குடா கேசன் என்றால் புலன்களை வென்றவன். தனஞ்சயன்; ஆன்மீக ஞானத்தை பெற தகுதியானவன். ஆகவே தான் இந்த பெயர்களால் தான் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனை விளிக்கிறார் . குருவிடம் ஞானம் பெற தகுதியானவன் அர்ஜுனன். கீதோபதேசம் படம் பாருங்கள். எப்படி கைகூப்பி சிரத்தையோடு கீழே அமர்ந்து கிருஷ்ணனை வணங்கி உபதேசம் பெறுகிறான் என்று தெரியும். பகவானிடம் பக்தி அவசியம்.
கீதையின் முக்கிய அம்சங்கள் : கர்மயோகம், பக்தியோகம், ஞான யோகம், ராஜ யோகம், அதாவது, செய்யும் தொழிலே தெய்வம், கர்மம், பகவானை தொழும் பக்தி, அறிவு ஞானம், மனதை கட்டுப்படுத்துவது போன்ற தலைப்புகளில் உபதேசம்.
கர்மா விகர்மா, அகர்மா போன்ற வார்த்தைகளின் விளக்கம்;
ஒரு உதாரணம் சொன்னால் புரியும். தீபம் எரிகிறது. அதன் சுடர் தான் கர்மா. அதன் சுடர் காற்றிலாடுவதோ, அலைவதோ விகர்மா, அதாவது சுடர் சுருங்குவதோ விரிவதோ ஆடுவதோ, வெளி காரணங்களால் நிகழ்வது. தீபத்தின் ஒளி, பிரகாசம் தான் அகர்மா. திரி எண்ணெய் , விளக்கு எதனோடும் சம்பந்தமில்லாதது. ஆனால் தீபத்தோடு ஒன்றாக அதன் பாகமாக சேர்ந்து காணப்படுவது. அதுவே ஆத்மா பற்றற்றது. எதனோடும் ஒட்டாதது.
ஒரு ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்லி நிறுத்துகிறேன். மற்றவை அடுத்த பதிவில் அறிவோம்;
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन । मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ॥ கீதை 2.47.
karmaṇy-evādhikāras te mā phaleṣhu kadāchanamā karma-phala-hetur bhūr mā te saṅgo ’stvakarmaṇi
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன ; மா கர்மபலஹேதுர்பூர் மா தே சங்கோஸ்த்வ-அகர்மணி
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஒரு கடமை உள்ளது. உன் காரியத்தை மனப்பூர்வமாக செய். அதன் பலன் உனக்கு சொந்தமல்ல. அது உன்னுடையதல்ல, அதை எதிர்பார்க்காதே. எனக்கு பலன் கிடைக்காதபோது ஏன் செய்ய வேண்டும்? என்ற அறியாமையிலும் உழலாமல் உன் கடமையைச் செய். காரியத்தின் பலன் உனக்கில்லை என்றால் அதன்மேல் விருப்பு வெறுப்பு வேண்டாம் என்று பொருள். சுயநலத்தோடு செய்யாதே என்று கூறுவது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

